ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ. 14 ஆயிரம் கோடி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான குறைந்தபட்ச ஏலத் தொகையை, 14 ஆயிரம் கோடி ரூபாயாக, மத்திய அமைச்சரவை நிர்ணயித்து உள்ளது. கடந்த 2008ல், தொலை தொடர்புத் துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து, இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்தது. ஆகஸ்ட் 31க்குள் (இந்தாண்டு) ஸ்பெக்ட்ரம் ஏலம் புதிதாக நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), குறைந்தபட்ச ஏலத் தொகையை, 18 ஆயிரம் கோடி ரூபாயாக (ஐந்து மெகாஹெட்ஜ்க்கு), நிர்ணயிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தது. இந்த தொகை, மிகவும் அதிகமாக இருப்பதாக, தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்தன. இதையடுத்து, அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழு, இதுகுறித்து ஆலோசனை நடத்தி, குறைந்தபட்ச ஏலத் தொகை, 15 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கலாம் என்றும், இதுகுறித்த இறுதி முடிவை, மத்திய அமைச்சரவை எடுக்கும் என்றும் அறிவித்தது.


இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து அமைச்சரவை வட்டாரங்கள் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான குறைந்தபட்ச ஏலத் தொகையாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் (ஐந்து மெகாஹெட்ஜ்க்கு) நிர்ணயிப்பது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பயன்பாட்டு கட்டணத்தை பொறுத்தவரை, சம்பந்தபட்ட தொலை தொடர்பு நிறுவனங்களின் வருமானத்தின் அடிப்படையில், ஓர் ஆண்டுக்கு, இரண்டு சதவீதத்தில் இருந்து எட்டு சதவீதம் வரை செலுத்த வேண்டும். வரும் 31ம் தேதிக்குள் ஏலம் விடுவதில், சிரமம் இருப்பதால், ஏலத்துக்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான குறைந்தபட்ச ஏலத் தொகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, அதிருப்தி தெரிவித்துள்ள தொலை தொடர்பு நிறுவனங்கள், இதன் விளைவால், மொபைல் போன் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தெரிவித்து உள்ளன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஆக-201219:28:42 IST Report Abuse
periya gundoosi இவங்களெல்லாம் முட்டுன பிறகு குனிபவர்கள், நஷ்டமடைந்த பிறகு திருந்துபவர்கள், &39&39பட்டபின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது&39&39 இது ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்,மக்களுக்கும் பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel
makeshan - Nellore,இந்தியா
04-ஆக-201212:26:47 IST Report Abuse
makeshan இந்த குறைந்த பட்ச ஏலத்தில் ராஜா கலந்து கொள்வாரா
Rate this:
Share this comment
Cancel
Avis Siva - Muscat,ஓமன்
04-ஆக-201210:51:16 IST Report Abuse
Avis Siva வெட்டியா பேசுறவங்களுக்கு நல்ல ஆப்பு சந்தோசம் சிவா muscat
Rate this:
Share this comment
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
04-ஆக-201206:52:33 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN ஏலத்தொகையை நான்காயிரம் கோடி வரை குறைத்தது ஏன்? தாமதப்படுத்தி கட்டணம் செலுத்தும் முறை ஏன்? மக்களிடம் வசூலித்து செலுத்தவா? நீங்கள் அடித்த கொள்ளையை மக்கள் கட்ட கட்ட, அதை கம்பனிகள் செலுத்தவா இந்த முறை. கேவலம்.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
04-ஆக-201205:23:51 IST Report Abuse
NavaMayam ஏங்க , ஏலம் விடாம நீங்கள் எல்லாம் கம்மியான கட்டணத்தில் பேசணும்னு வச்சா ஊழல் , நாட்டுக்கு இதனை லட்சம் கோடி கொள்ளைன்னு கத்துனீங்க ... இப்ப நாட்டுக்கு வருமானம் வர்றமாதிரி ஏலம் விட்டா , கட்டணத்தை எத்தி கொள்ளை அடிக்க போறாங்கன்னு கத்துறிங்க... ஒரு ரூபாய்க்கு அரிசிபோட்டா கலைஞர் கமிசன் அடிக்கிறார் என்கிறீங்க .. போடாத மோடியை நிர்வாக் புலிங்கிறீங்க.. கலைங்கர்தான் லஞ்சம் ஊழல் என்கிறீங்க , இப்போ நடந்தா அம்மாவுக்கு தெரியாமல் நடக்குதுன்னு சொல்லுரிங்க...கலைஞர் இலவசம் கொடுத்து கெடுத்துட்டார் என்கிரிங்க , அம்மா கொடுத்தா தாயன்பு என்கிறீங்க... பெட்ரோல் விலை கூடினா கத்துறிங்க, பஸ்கட்டணம் ,பால் விலை, மின்சாரகட்டினத்தை கூட்டின மூச்சு கூட விடமாட்டேங்கிறீங்க ..ஆயிரம் கோடியில ஒரு கட்டடம் கட்டினா அதில நூறுகோடி அடிச்சிட்டார என்கிறீங்க ... அந்த ஆயிரம் கோடியும் நாசமா போனா கம்முன்னு இருக்கீங்க...மதுரை ஆஸ்பத்திரியா கட்டினதை திறக்காம இருக்கீங்க , வேறெதுக்கு கட்டினதை இடிச்சு ஆஸ்பத்திரியா மாத்த போறேன்கிறீங்க...
Rate this:
Share this comment
04-ஆக-201207:00:06 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் காலங்காலையில் ஏன்தான் இப்படி ஒருபுலம்பலோ? நீதிபதி சர்க்காரியா இந்த மஞ்சதுண்டின் குண விசேஷங்கள். விஞ்ஞான ஊழல் முறைகள் பற்றி விரிவா எழுதியிருப்பதைப் படித்திருக்கிறீர்களா? அப்படிப்பட்டவர் ஆதாயாமிலாமல் எந்த கட்டிடமும் கட்டமாட்டார். என்பது புரியவில்லையா? எதிர்கால ஸ்பெக்ட்ரம் கொள்ளைக்காக தொதொ மந்திரி பதவிக்கு அந்தப் பெண்மணியிடம் பேரம் நடந்ததும்.வெறும் துணி மந்திரி பதவி பெற சொந்த பாட்டியிடம் 600 கோடி கப்பம் கட்டி பதவி வாங்கிய வரலாறும் , ஸ்பெக்ட்ரம் ஊழல் வெகு காலத்துக்கு முன்பே திட்டம்போட்டு நடத்தபப்ட்டது என்பதற்கு ஆதாரம்தானே? சும்மா ஒரு கிரிமினல் குடும்பத்தை ஆதரிக்கக் கூடாது. அது தேசத்துரோகத்துக்கு சமானம்.(பின் குறிப்பு ..அந்த கட்டிட காண்ட்ராக்டர் ம மற்றும் காப்புறுதித் திலகம் இப்போ அம்மாவிடம் அடைக்கலம். அவர்தான் இப்போது அம்மா டிவி க்கு நட்சத்திர விளம்பரதாரர். . இதுதான் அரசியலின் கீழ்த்தரம்)...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
04-ஆக-201207:43:25 IST Report Abuse
Pannadai Pandianஅந்த அளவுக்கு தலைவர் மேல மக்களுக்கு நம்பிக்கை. எல்லாம் ட்ரேக் ரெகார்ட், கேஸ் ஹிஸ்டரியாள வர்ற விளைவு, என்ன செய்ய ???...
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
04-ஆக-201202:54:42 IST Report Abuse
Thangairaja மக்களே.....கண்ட பலன் ஏதுமுண்டா....? உங்கள் தலையில் மொபைல் கட்டணத்தை ஏற்றி மிளகாய் அரைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை தகிடுதித்தங்களும், இப்போதாவது உச்ச நீதிமன்றம் மக்களுக்கு சேவை செய்கிறதா....அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்கிறதா என்று புரிந்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
sriram - chennai ,இந்தியா
04-ஆக-201204:21:52 IST Report Abuse
sriramசவுதியில் எல்லா இன்கமிங் காலும் பிரீயாமே..நேத்து என் பிரண்டு கிட்ட பேசினேன், அவனுக்கு சார்ஜே குரயலன்னு ரொம்ப சந்தோஷப்பட்டான் .. ஆமா எனக்கு புரியவே இல்ல,, உச்ச நீதிமன்றம் மக்களுக்கு சேவை செய்கிறதா?....மத்திய அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்கிறதா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்..ஏன்னா மூக்கு வெடப்பா இருந்தா இந்த மாதிரி கேள்வி எல்லாம் மக்களை கேக்க சொல்லும்.......
Rate this:
Share this comment
nagainalluran - Salem,இந்தியா
04-ஆக-201206:09:23 IST Report Abuse
nagainalluranஅங்க குறைவா ஏலத்துக்கு எடுத்த கம்பனி சேவை குடுக்குது அதனால பிரீ. இங்க குறைவா ஏலத்துக்கு எடுத்தது போனே பாக்காத பொரி கடலை கம்பனி. அவங்க ஏகப்பட்ட விலைக்கு வெளி மார்கெட்டுல பங்கு வித்துட்டாங்க, அதுலதான் கருணா குடும்பத்துக்கு லாபம். அப்படி ஏகப்பட்ட விலைக்கு வாங்கின கம்பனிதான் இப்ப சேவை தர்றாங்க. இதுல குறைந்த விலைக்கு சேவை என்பதெல்லாம் பொய். ராஜா விற்ற விலைக்கு வாங்கிய கம்பனி போன் சேவை கொடுக்கும் கம்பனியா இருந்திருந்தா நாமெல்லாம் ரெண்ட் கட்ட வேண்டியதும் இல்லை. போன் சார்ஜும் குடுக்க வேண்டியதில்லை அரசுக்கும் நஷ்டம் மக்களுக்கும் நஷ்டம். குடும்பத்துக்கு மட்டும் சுப்ரீம் கோர்டுக்கே தலை சுத்தர மாதிரி லாபம்....
Rate this:
Share this comment
Cancel
nagainalluran - Salem,இந்தியா
04-ஆக-201201:39:46 IST Report Abuse
nagainalluran கேள்வி ஒண்ணு. பா ஜ க ஆட்சியில பன்னதைதான் இப்பவும் பண்றோம்னு இப்ப ஏன் பீலா விடலை. கேள்வி ரெண்டு. அதே விலைக்கு வித்தால் போதும்னா இப்ப ஏன் 14000 கோடி நிர்ணய விலை. கேள்வி மூணு.இந்த விலைக்கு எடுக்க கூடாது கம்மி விலைக்கு எடுத்து அப்ப மாதிரியே வெளி மார்க்கெட்ல பங்கு வித்து காசு பாக்கலாம்னு தொலை பேசி நிறுவனங்களுக்கு உத்தரவாமே. கேள்வி நாலு. வர்ற பங்குல கட்டுமர குடும்பத்துக்கு எவ்வளவு அதுல கனி பிராஞ்சுக்கு எவ்வளவு. இப்ப இந்த விலையில குடுக்கறதால தொலை பேசி கட்டணம் எல்லாம் தாறுமாறா எகிறாதா. அப்படி எகிரலைனா, இதுக்கு முன்னால ராசா வுட்டதெல்லாம் பீலா இல்லையா. கேள்வி நம்பரே மறந்து போச்சு நாசமா போ.
Rate this:
Share this comment
meekannan - Chennai,இந்தியா
04-ஆக-201204:03:16 IST Report Abuse
meekannanபதில் ஒன்னு: பாஜக ஆட்சியில் ஆடுன ஆட்டம் எல்லாம் அவுட் 122 license ரத்து இப்ப புது ஆட்டம் ஆனா ராஜா இல்லை பதில் ரெண்டு: இப்ப வேறு 14000 kodi கோடி மட்டும் தான் 176000 kodi கோடி இல்லை பதில் மூணு: T20 ennaannu என்னன்னு தெரியாதப்பா world கப் ஜெயிக்கலையா அது போல ஸ்பெக்ட்ரம் என்னன்னு தெரியாத பொது குறைந்த விலைக்கு வாங்கி அதில் வருமானம் வரும் நேரத்தில் அதிக விலைக்கு வேறு நிறுவனத்திற்கு விற்று லாபம் சம்பாதிக்க தான் அது தொழில் லாபம் இதில் ஒரு லைசென்சில் எடுத்து வேறு லைசென்சில் உள்ள மற்ற நிறுவனத்திற்கு விற்றது நாம் யாரென்று தெரியாது முதல் ஒன்றும் போடவேண்டாம் தினமலரில் கருத்து எழுதும் நேரத்தில் பல கோடிகள் சம்பாதிக்கு ஆண்லைன் வர்த்தகம் மாதிரி அல்ல பதில் நாலு: இதில் கற்றுமதிர்க்கு பங்கு போகாது கணிக்கும் கிட்டிங் கிடையாது ஆனா பால் கட்டணம், பஸ் கட்டணம் மின் கட்டணம் போல் இந்த ஏலம் மூலம் கட்டண உயர்வால் உன் பாக்கெட்டில் கிட்டிங் விழும் இந்த கட்டணம் எல்லாம் கொடுத்ததும் நாசமா போகாத நாம் எப்படி இதுக்கு நாசமா போகபோரம். விடுங்க பாஸ் உங்க பீலிங் எனக்கு புரியுது வெளியிலே போற ஓணானை வேட்டியில் போட்டுட்டு இப்போ இப்ப அவஸ்தையாக இருக்குன்னு சொன்னா. நம்ப தலை ஏழுத்தை நாம்ப தான் ஏழுதிறோம்.....
Rate this:
Share this comment
sriram - chennai ,இந்தியா
04-ஆக-201205:15:00 IST Report Abuse
sriramகேள்வி ஒன்னு ,,ராசா இருந்தப்ப இதே மாதிரி ஏன் அமைச்சரவை குழு, இதுகுறித்து ஆலோசனை செய்யவில்லை? கேள்வி ரெண்டு : ராசா இருந்தப்ப குறைந்தபட்ச ஏலத் தொகை எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டது, கேள்வி மூணு: 2ஜி&39 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து.... யார் புகார் கொடுத்தா? மத்திய அரசே அவங்க அமைச்சர்மீது புகார் கொடுத்தா? இல்ல வேற யாராவது கொடுத்தா?அப்பட்டீன்னா அவர் யார்? அப்ப ராசாவ மட்டும் கைது பண்ணியது ஏன்? கேள்வி நான்கு:ஐந்து MHz க்கு மட்டும் குறைந்த பட்ச ஏலத்தொகை 14,000 கோடின்னா ,மொத்த MHz எவ்வளவு? ராசா இருந்தப்ப எவ்வளவு? கேள்வி ஐந்து :122 லைசன்ஸ் அப்பவே கேன்சல் பண்ணியாச்சுன்னா இப்ப இந்த விலைல இவ்வளவு நாளா எப்படி கட்டணம் வாங்கறாங்க?கேள்வி ஆறு: இப்பவும் எந்த டுபாகூர் கம்பனி வேன்னாலும் ஏலம் எடுக்கலாமா ? இல்ல அதுக்கு குறைந்த பட்சம் ஏதாவது தரச்சான்றிதழ் வேணுமா?அப்படி வேணும்னா அத ஏன் முன்னாடியே மத்திய அரசு(ராசா மட்டும் இல்லை) இத கேட்கவில்லை?இப்ப மட்டும் கேக்குது? கேள்வி ஏழு: ஏலம் எடுத்த கம்பெனி ,வேற யாருக்கு வேண்ணாலும் வித்துக்கலாமா? இல்ல அவுங்களே வெச்சுக்கணுமா? அதுக்கு கால கெடு ஏதாவது உண்டா?கேள்வி எட்டு: ஏலம் எடுக்குற கம்பனிகள் ஏலத்தொகய எப்ப செலுத்த வேண்டும்? எப்படி செலுத்த வேண்டும்? ராசா ஏலம் விட்டப்ப சில கம்பெனிகள் முன்னதாகவே டிமான்ட் டிராப்ட் ரெடியா வெச்சு இருந்தது எப்படி? ஏலத்தொகை முன்னாடியே அவங்களுக்கு எப்படி தெரியும்? கேள்வி ஒன்பது: வர்ற 31 ஆம் தேதியில் ஏலம் நடத்துவது கஷ்டம் என்பதால் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகுவது என்பது சரியென்றால், யாரை கேட்டு ராசா முகூட்டியே அறிவித்திருந்த ஏலத்தேதியை குறிப்பிட நாட்களுக்கு முன்பாகவே திடீரென்று மாற்றினார். கேள்வி பத்து: இந்த கேள்விக்கெல்லாம் பதில் எப்ப சொல்லபோறீங்க? இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் இன்னும் சில சந்தேகங்கள் உள்ளது,,அப்புறம் அதுக்கான கேள்விய கேட்டுக்குறேன்..உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் ...ஸ்ரீராம்,...
Rate this:
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
04-ஆக-201207:31:15 IST Report Abuse
Samy Chinnathambiஸ்ரீராம் ரொம்ப நல்ல கேள்விகள். இந்த கேள்விகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு தான் ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டு அதில் முறைகேடுகள் தாறுமாறாக அரங்கேறி இருக்கின்றன. இந்த கேள்விகள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் விற்பதற்கு முன்பே பிரதமரால் கேட்கப்பட்டு இருந்தால் நமது அரசுக்கு S-Band யையும் சேர்த்து சில லட்சம் கோடிகள் வருவாய் கிடைத்து இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.