மதுரை: ""நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதாவும் கைலாச யாத்திரை சென்றது எனக்கு தெரியாது. ஆதீன சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்க நான் யாரையும் கேட்கத் தேவையில்லை,'' என மதுரை ஆதீனம் தெரிவித்தார்
மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா 32க்கும் மேற்பட்ட சீடர்களுடன் கைலாச யாத்திரை சென்றுள்ளார். அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சென்றிருப்பது குறித்து மதுரை ஆதீனம் கூறியதாவது: கைலாச யாத்திரை சென்ற வேளையில், நடந்த நிகழ்வுகள் வேதனை தருவதாக உள்ளன. நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதாவும் சென்றிருப்பது குறித்து எந்த தகவலும் எனக்கு தெரியாது. அதை முறைப்படி அவர் எனக்கு தெரிவித்து இருக்க வேண்டும். மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தஞ்சை, திருவாரூர், கும்பகோணத்தில் உள்ளன. நான் அப்பகுதியில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கணக்குகளை சரிபார்க்க உள்ளேன். இந்தச் சொத்துக்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. எனவே, அங்கு செல்வதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை,'' என்றார்.
விரைவில் முடிவு: மதுரை ஆதீனத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து மடத்தை சேர்ந்த சிலர் கூறியதாவது: மதுரை ஆதீனம் 40 ஆண்டுகளாக சைவ சித்தாந்த முறைகளை கடைபிடித்து, பாரம்பரியத்தை காப்பாற்றுகிறார். நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தபின், மடத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மடம் குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்பட்டது. மூத்த ஆதீனம் துணிந்தவர். திருஞானசம்பந்தரின் புகழ் பாடுவதுதான் அவரது மரபு. ஆனால், தற்போது நித்யானந்தா புகழை பாடுகின்றனர். இதனால், மூத்த ஆதீனம் மனவேதனையில் உள்ளார். விரைவில் அவர் நல்ல முடிவு எடுப்பார், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.