Police hunt on for man who sent parcel bomb | மதுரையில் ரியல் எஸ்டேட் ஆபீசுக்கு வந்த பார்சலில் மர்ம குண்டு: மோடிக்கு குறி வைக்கப்பட்டதா| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (16)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மதுரை: மதுரையில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு வந்த பார்சலில், "டைம்பாம்'கள் கண்டுபிடிக்கப் பட்டன. அவை வெடிப்பதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன், போலீசார் செயலிழக்க செய்தனர். மதுரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வர இருந்த, குஜராத் முதல்வர் மோடிக்கு குறி வைக்கப்பட்டதா என, விசாரணை நடக்கிறது. மதுரை, புது ராமநாதபுரம் சாலையைச் சேர்ந்தவர்கள், உமர் பரூக், 35, ஜமால் மைதீன், 65; ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். தெற்கு வாசல், கிருஷ்ணன் கோவில் அருகே, இவர்கள் அலுவலகம் உள்ளது. நேற்று முன் தினம் இரவு, 8:30 மணிக்கு, 25 வயதுடைய ஒருவர், பாலித்தீன் பையில் சுற்றப்பட்ட, இரண்டு பார்சல்களைக் கொண்டு வந்தார். ரியல் எஸ்டேட் அலுவலகம் பூட்டியிருந்ததால், எதிரிலுள்ள நகை பட்டறை உரிமையாளர், ஆறுமுகத்திடம், கொடுத்து, உமர் பரூக், ஜமால் மைதீனிடம் கொடுக்கும்படிக் கூறிச் சென்றார். அவற்றை, கடையில் வைத்திருந்த ஆறுமுகம், அன்றிரவே, 10:30 மணிக்கு, பக்கத்து வீட்டில் இருந்த, குரு பாலாஜி யிடம் 14, கொடுத்து, மறுநாள் காலை, உமர் பரூக், ஜமால் மைதீனிடம்

தரும்படி கூறினார். மறு நாளான நேற்று காலை, 10:30 மணிக்கு அலுவலகம் வந்த உமர் பரூக், ஜமால் மைதீனிடம், பார்சல்களை, குரு பாலாஜி கொடுத்தார். அவற்றை பிரித்து பார்த்தபோது, ஒன்றில், "அசெம்பிள்' செய்யப்பட்ட டைம் பாம், மற்றொன்றில், "அசெம்பிள்' செய்யப்படாத, "டைம்பாம்'க்கான பொருட்கள் இருந்தன. இதையடுத்து சிறப்பு புலனாய்வு, டி.எஸ்.பி., மாரி ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார், "டைம்பாம்'களை, காலை, 11:30 மணிக்கு செயலிழக்கச் செய்தனர். ஒரு"டைம்பாம்' நேற்று பகல், 12:30 மணிக்கு வெடிக்கும் வகையில், "செட்' செய்யப்பட்டிருந்தது. தாமதித்திருந்தால் பெரியளவில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். நகை பட்டறை உரிமையாளர் ஆறுமுகம், ரியல் எஸ்டேட் ஊழியர், முகமது இஸ்மாயில், கடை உரிமையாளர்கள் உமர்பரூக், ஜமால் மைதீன் ஆகியோரை, போலீசார், விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்தை, துணை கமிஷனர் திருநாவுக்கரசு பார்வையிட்டார். நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பா? மதுரை சவுராஷ்டிரா முன்னேற்ற சங்க மாநாடு

Advertisement

மதுரையில் நேற்று நடந்தது. இதில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்பதாக இருந்தது. சங்க தலைவர் ராமதாசுக்கு, "மதுரைக்கு நரேந்திர மோடி வரக்கூடாது. வந்தால், உன்னை (ராமதாஸ்) குண்டு வைத்து கொல்வோம். நரேந்திர மோடிக்கும் குண்டு வைப்போம்' என, மர்ம நபர்களால் மிரட்டல் விடப்பட்டது. இது குறித்து அவர், போலீசில் புகார் செய்தார். ஆனால், மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டது. நேற்றைய சம்பவம், மோடிக்கு வைக்கப்பட்ட குறியா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilaa thamila - chennai,இந்தியா
05-ஆக-201214:13:38 IST Report Abuse
tamilaa thamila மதுரைக்கு நரேந்திர மோடி வரக்கூடாது. வந்தால், உன்னை (ராமதாஸ்) குண்டு வைத்து கொல்வோம். நரேந்திர மோடிக்கும் குண்டு வைப்போம்&39 என, மர்ம நபர்களால் மிரட்டல் விடப்பட்டது.????? என்ன ஆதாரம். போலீஸ் விசாரிக்குமா.
Rate this:
Share this comment
Cancel
tamilaa thamila - chennai,இந்தியா
05-ஆக-201214:10:54 IST Report Abuse
tamilaa thamila மோடிக்கு மிகவும் தூய்மை ஆனவர்கள். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
Diviya Rathi - jeddah,சவுதி அரேபியா
05-ஆக-201214:00:29 IST Report Abuse
Diviya Rathi மலேகான் சோதனையை மதுரையில் நடத்த இது ஒரு முன்னோட்டம் இது எல்லாம் தமிழக உளவு துறைக்கு தெரியாமல் இருக்குமா என்ன ..?
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஆக-201213:17:19 IST Report Abuse
periya gundoosi காவல் துறையினர் விரைவில் குற்றவாளிகளை கண்டு பிடித்து விடுவார்கள். இவர்களை இரும்புக் கரம் கொண்டு அம்மா அடக்க வேண்டும். இது போன்ற செயல்களை யார் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவை, இவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
henry - chennai,இந்தியா
05-ஆக-201211:38:02 IST Report Abuse
henry மோடிக்கு குண்டு வைக்குறவன் எதுக்கு ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு பார்சல்ல குண்டு அனுப்பனும்? அதுவும் ஒரு நாளைக்கு முன்னாடி செட் பண்ண டைம் பாம்? பார்செல பிரரிச்சவொடனே கண்டுபுடிசுருவாங்கன்னு யோசிக்கமலா பண்ணுவான்? மோடி எங்க பங்கேற்குராரோ அங்க திருட்டுத்தனமா குண்ட வச்சுட்டு ஓடிப்போயிருந்தா யோசிக்கலாம். இதென்னமோ வியாபார பிரச்சனையா இருக்கும்ன்னு நெனக்குறேன். இப்போ தான் ரியல் எஸ்டேட்ல கோடி கோடியா பொறழுதே.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
05-ஆக-201206:14:27 IST Report Abuse
N.Purushothaman கூரியர்ல குண்டு அனுப்பராணுக ......வித விதமா யோசிக்கிராணுக....ஐயா கூரியர் நடத்துறவங்களே பார்சல் அனுப்ப வரவங்களை உங்க அலுவலகதில் உங்கள் கண் முன்னே பார்சல் பண்ணசொல்லுங்க..... இல்லைன்னா எல்லா பார்சலையும் வெளியூருக்கு அனுப்பவதற்கு முன்னாடி மெட்டல் டேடக்டர் மூலமா பரிசோதனை பண்ணுங்க......உங்களுக்கு புண்ணியமா போகும்.....
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
05-ஆக-201205:01:52 IST Report Abuse
Thangairaja அதென்னவோ தெரியலீங்க.....தமிழ் நாட்டுல எத்தனையோ தலைவர்கள் ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி உட்பட நடமாடும் போது அத்வானி, மோடி வர்றதா சொல்லி கேன்சல் பண்ணப்பரம் கூட வெடிகுண்டைத் தூக்கிட்டு அலையறானுங்க, இவக ரெண்டு பேரும் அவ்வளவு மோசமான ஆளுங்களா இல்லே விளம்பர உத்தில இது ஒரு ரகமா ....? என்னமோங்க கோவை கலவரத்துக்கு அப்பறம் மீண்டும் ஒருமுறை மதப்பிரச்சினையை கசப்புணர்வாக்கி லாபம் சம்பாதிக்க அலையற மாதிரி தோணுது. ஜெயா அரசு இடம் அதுக்கு கொடுக்காம பாதுகாக்கணும்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
05-ஆக-201206:08:52 IST Report Abuse
மதுரை விருமாண்டிஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே ?...
Rate this:
Share this comment
sriram - chennai ,இந்தியா
05-ஆக-201212:35:03 IST Report Abuse
sriramமுத்தமிழ் வித்தவர் ஆட்சியில் இல்லையே?...
Rate this:
Share this comment
Cancel
cooltest70 test - chennai,இந்தியா
05-ஆக-201200:59:05 IST Report Abuse
cooltest70 test பூனே இந்துத்துவா குண்டுவெடிப்பின் சதியை மறைக்க இந்துதுவா .......களால் நடத்தப்படும் இன்னொரு நாடகம்
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
05-ஆக-201202:46:50 IST Report Abuse
jaganநம்பிட்டோம் தலைவரே..........
Rate this:
Share this comment
chellam - Dammam,சவுதி அரேபியா
05-ஆக-201205:12:05 IST Report Abuse
chellamநம்பித்தான் ஆகணும் நண்பரே.,...
Rate this:
Share this comment
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
05-ஆக-201206:04:00 IST Report Abuse
N.Purushothamanஅதெப்பிடி போலீஸ் இன்னும் தடுமாறி கொண்டு இருக்கும் நிலையில் ....... பின்னனி கொண்டவர்கள் குண்டு வைதார்கள்ன்னு நீங்களே முடிவு பண்ணிடீங்க.........
Rate this:
Share this comment
Murugan Kesavan - cbe,இந்தியா
05-ஆக-201210:54:16 IST Report Abuse
Murugan Kesavanவச்சதே இவனுங்கதானே...
Rate this:
Share this comment
tamilanda - khandahar,ஆப்கானிஸ்தான்
05-ஆக-201212:02:06 IST Report Abuse
tamilandaஏன்டா நீங்க திருந்தவே மாட்டீங்கலடா ?...
Rate this:
Share this comment
sriram - chennai ,இந்தியா
05-ஆக-201212:36:32 IST Report Abuse
sriramபாம்பின் கால் பாம்பறியும்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.