Advertisement
விளம்பர பேனர்களால் வில்லங்கம்: முற்றுப்புள்ளி வைத்து முதல்வர் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2012,23:22 IST
மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012,00:26 IST

சென்னை: அ.தி.மு.க., விளம்பரங்கள், பேனர்கள், சுவரொட்டிகளில் பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்களின் புகைப் படங்களைப் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.


இதுகுறித்து, அ.தி.மு.க., தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., தொடங்கப்பட்ட காலம் முதல், கட்சியின் விளம்பரங்கள், சுவரொட்டிகள், வரவேற்பு பேனர்கள் போன்றவற்றில், பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. முதல்வர் ஜெயலலிதா, கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின், அவரது புகைப்படம் சேர்க்கப்பட்டது.


தவிர்ப்பு: ஆனால், இந்த நடைமுறைக்கு மாறாக சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வருகை தரும் அமைச்சரின் புகைப்படத்தை விளம்பர பேனர்களில் போட்டுவிட்டு, மற்ற நிர்வாகிகளின் படங்களைத் தவிர்க்கின்றனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களின் புகைப்படங்களைப் போட்டு விட்டு, அமைச்சரின் புகைப்படத்தை பேனரில் தவிர்க்கின்றனர். இந்த மோதல் போக்கால், விளம்பர பேனர்களை கிழித்துக் கொள்கின்றனர். இச்செயல்கள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. கட்சியின் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள், பேனர்கள், சுவரொட்டிகளில், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்த கட்சி அனுமதிப்பதில்லை. அதுபோன்ற பழக்கம் இதுவரை இல்லை. எனவே, இனி வரும் காலங்களில், கட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்களில் பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் பொறுப்புகளை எழுத்துக்களில் குறிப்பிட்டுக் கொள்ளலாம். கட்சியின் இந்த நெறிமுறைக்கு மாறாக மற்றவர்களுடைய புகைப்படங்களை போட்டுக் கொண்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (32)
MAHE - CHENNAI,இந்தியா
06-ஆக-201200:02:11 IST Report Abuse
MAHE புரட்சி தலைவர் மற்றும் அம்மா அவர்களின் படம் மட்டும் போட்டால் போதும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
umarfarook - dindigul,இந்தியா
05-ஆக-201214:26:25 IST Report Abuse
umarfarook நாங்க ஓட்டு போட்ட எம் எல் ஏ யாருன்னு ப்ளெக்ஸ் போர்ட பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கு ப்ளெக்ஸ் போர்டிலே போட்டோ இல்லைன்னா , அந்த மூஞ்சி மறந்து போய் மறுபடியும் அந்த பூஜ்ஜியங்களுக்கே ஓட்டு போட வாய்ப்புண்டு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
muthu Rajendran - chennai,இந்தியா
05-ஆக-201213:17:50 IST Report Abuse
muthu Rajendran சதுர அடிக்கு ஆறு ரூபாய் தான் என்றதும் யார் வேண்டுமானால் யாருக்கு வேண்டுமானாலும் படத்துடன் விளம்பரதட்டி வைக்கிறார்கள். பலரின் விஸ்வரூப படங்கள் குழந்தைகளுக்கு அச்சம் ஏற்படுத்து கிறது. மேலும் விளம்பர தட்டி பெரிதாக பெரிதாக சரியாக கம்பி வைத்து கட்டப்பட விட்டால் அது விபத்தை ஏற்படுத்தும் எனவே விளம்பரதட்டிக்கு அதிகபட்ச அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sar Bar - chennai,இந்தியா
05-ஆக-201213:17:14 IST Report Abuse
Sar Bar பேனர் வைப்பதுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், அதிகபட்ச மாக 2 நாட்களுக்கு மேல் பேனர் இருந்தால் நாள் ஒன்றுக்கு 1000 அபராதம் விதிக்க வேண்டும். பேனர் வைப்பதற்கென்று தனியார் விளம்பரம் போல தனியாக இடம் ஒடுக்க வேண்டும், கண்ட இடத்தில போஸ்டர் ஒட்டி நகரையும், பொதுமக்களின் வீட்டு செவுரையும், வீணாக்கும், இந்த செயலை அடியோடு நிறுத்தவேண்டும்,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
05-ஆக-201212:26:26 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar அரசியல் பிரமுகர் பெறும்பாலும் விளம்பரங்கள் சலுகைகள் பெறவே. அவற்றே ஊழலுக்கு அட்சாரம். இப்போது உறுதியாக அறிவித்து இருபது மிகவும் வரவேற்க தகுந்தது பாராட்டுவோம் பூபதியார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Indiya Tamilan - Madurai,இந்தியா
05-ஆக-201210:24:26 IST Report Abuse
Indiya Tamilan ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புகள் எல்லாமே ஊரை ஏமாற்றும் அறிவிப்புகள்.இதன் பின்னணியில் ஏதாவது வில்லங்கம் இருக்கும்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GURU.INDIAN - beiruth,லெபனான்
05-ஆக-201206:53:39 IST Report Abuse
GURU.INDIAN ஏமாறும் ஏமாளி தமிழன் இருக்கும் வரை உங்களுக்கு கொண்டாட்டம்தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GURU.INDIAN - beiruth,லெபனான்
05-ஆக-201206:53:03 IST Report Abuse
GURU.INDIAN இந்த தொண்டனும் அமைச்சரும் இல்லாமல் நீங்க வந்தீ்ங்களா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kuppan - nigeria,தென் ஆப்ரிக்கா
05-ஆக-201215:12:10 IST Report Abuse
kuppanசரியாய் சொன்னேங்க.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
05-ஆக-201206:52:58 IST Report Abuse
ஆரூர் ரங இதுபோலத்தான் மாநிலங்களில் உறுதியான கட்சித்தலைமை உருவாகாமல் பார்த்த்துக் கொண்டார் இந்திரா. எல்லா ஊடகங்களிலும் தன படம் பெயர் மட்டுமே வருமாறு பார்த்துக் கொண்டார். இப்போது கட்சிக்குத் தொண்டர்களே இல்லாமல் 28.ஆண்டாக தனி மெஜாரிட்டி பெற முடியாத நிலை அதேபோல்தான். காசைப்போட்டு ப்ளேக்ஸ் பானர் வைப்பவனுக்கு தனது அழகு முகமும் அதில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனைத் தடுத்தல் தமிழக காங்கிரஸ் அடைந்த அதே நிலைக்கு அதிமுகவையும் கொண்டுபோய்விடும்.திமுக கோஷ்டி சண்டையிலும் அண்ணன் ஆதரவாளர்கள் தம்பி படத்தைத் தவிர்ப்பதில்லையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GURU.INDIAN - beiruth,லெபனான்
05-ஆக-201206:52:28 IST Report Abuse
GURU.INDIAN தமிழன் காலில் விளுவதர்க்குத்தான் லாயக்கு என்று சொல்லாமல் சொல்லுகிறார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.