"டெசோ மாநாட்டில் தனி ஈழ தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என்ற இலங்கை தமிழர் அமைப்புகளின் கோரிக்கையை நிறைவேற்றலாமா என்பது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில், "திடீர்' ஆலோசனை நடந்து வருகிறது. மத்திய அரசை பகைத்துக் கொள்ளாத வகையில், வார்த்தை ஜாலங்களுடன் கூடிய, "தனி ஈழ தீர்மானம்' தயாரிப்பது குறித்து, தி.மு.க., மேல் மட்ட தலைவர்கள் மத்தியில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.
வரும் 12ம்தேதி, சென்னையில் நடக்கவுள்ள டெசோ மாநாட்டை, வெற்றிகரமாக நடத்தி, உலகத் தமிழர்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்ற வேகத்தில் தி.மு.க.,வினர் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். தனது உடல் நலத்தை பொருட்படுத்தாமல், காலை, மாலை, இரவு என நேரம் பார்க்காமல், டெசோ மாநாடு பணிகளை மேற்பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கி வருகிறார் கருணாநிதி.
பச்சைக்கொடி: ஆரம்பத்தில் மிக வேகமாக துவங்கிய டெசோ மாநாட்டு பணிகள், "தனித்தமிழ் ஈழ தீர்மானத்தை நிறைவேற்றமாட்டோம்' என கருணாநிதியின் பல்டியால் சுருதி குறைந்தது. உலகத் தமிழர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், புலம் பெயர்ந்த தமிழ் ஈழ அமைப்புகளின் ஆதரவாளர்கள் மாநாட்டிற்கு வரும் எண்ணத்தை கைவிட்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும், தமிழ் கட்சிகளின் தலைவர்களும் டெசோ மாநாட்டிற்கு வருவது குறித்து கேள்வியை எழுப்பினர். ஏற்கனவே, இலங்கை தமிழர் விவகாரத்தில், ராஜபக்ஷேவுக்கு இணையாக, கருணாநிதியை குற்றவாளி கூண்டில் வைத்து, தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த விமர்சனங்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், தமிழ் ஈழ விவகாரத்தில், அடித்த பல்டியால், டெசோ மாநாடு தோல்வியடைந்து விடும் என்று முன்னணி நிர்வாகிகள் தி.மு.க., தலைவரை உசுப்பேற்ற' தனி ஈழம் கொள்கையை நான் கைவிட வில்லை. அந்த கோரிக்தை நிறைவேற பாடுபடுவது தான் தன்னுடைய ஒரே கனவு' என தனது, "வழக்கமான' பாணியில், தடம் மாறினார் கருணாநிதி.
கருணாநிதி உற்சாகம்: அடுத்ததாக, அழைப்பு விடுத்தவர்களில் யார், யார் வருவார்கள் என்பதை உறுதி செய்யுமாறு மாநாட்டு குழுவினருக்கு கருணாநிதி நெருக்கடி கொடுத்துள்ளார். மாநாடு குழுவில் இடம் பெற்றுள்ள வக்கீல் ராதாகிருஷ்ணன், தனது நண்பர் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி., சேனாதிராஜாவை சமீபத்தில் சென்னைக்கு வரவழைத்து கருணாநிதியை சந்திக்க வைத்தார். அப்போது கருணாநிதியிடம், சேனாதிராஜா, "டெசோ மாநாட்டில் நான் பங்கேற்பேன்' என, உறுதியளித்தார். அதே கட்சியின் எம்.பி., க்களான சுமந்திரன், யோகேஸ்வரன், சரவணபவன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திர குமார், பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், வழக்கறிஞர் விஸ்வலிங்கம், மணிவண்ணன், எம்.பி., செல்வம் அடைக்கலநாதன், நவசமா சமாஜா கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கர்ணரத்தினே ஆகியோரும் மாநாட்டிற்கு வருவதாக ஒப்புதல் அளித்தது, கருணாநிதிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
கடைசி நேர திருப்பம்? இது குறித்து தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது: டெசோ மாநாட்டிற்கு வரக் கூடாது என, பரூக் அப்துல்லா, சரத்பவார், சரத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்களிடம், சில கட்சித் தலைவர்கள் கங்கணம் கட்டி பணியாற்றினர். ஆனால், அவர்கள் கண்டிப்பாக வருவோம் என, கருணாநிதியிடம் வாக்குறுதி அளித்துள்ளனர். அதேபோல மாநாட்டில் தனி ஈழம் கேட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை கடைசி நேரத்தில், நிறைவேறவும் வாய்ப்புள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளும், கட்சி வட்டாரத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டெசோ மாநாட்டை கருணாநிதி அவர்கள் உண்மையாக இலங்கைவாழ் தமிழர்களுக்காக நடத்துகிறார் என்பதைவிட வரபோகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவுக்கு அடித்தளம் அமைக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்.இலங்கை உச்சக்கட்ட போரின் போது கையாலகாத மத்திய அரசைகொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு இப்போது ஓலமிட்டு என்ன நடக்கபோகிறது குறைந்தபட்சம் திமுக தங்கள் மூன்று காபினெட்மந்திரிகளை ராஜினாமாசெய்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால் இலங்கையின் நிலைமேயே வேராக ஆகியிருக்கும் அல்லது அப்பாவி மக்களையாவது காப்பாத்தியிருக்கலாம்.தமிழ்நாட்டில் இவர்களை போல இலங்கை தமிழர்களுக்காக அறிக்கைவிடும் தலைவர்களால் ஒன்றும் நடக்க போவதில்லை என்பதுதான் உண்மை.இவர்கள் போடும் கூப்பாடுகளுக்கு ராஜபக்சே தமிழர்களுக்காக ஒன்றும் செய்யபோவதில்லை.
அரசியல் ஆர்வலர்கள், கருத்து பகுதியில் தங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும், அல்லது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தன்னிலை விளக்கம் அளிக்கலாம், இங்கே கருத்து சொல்பவர்களில் பலர் கருத்து சொல்லிமுடித்தவுடன் களைத்து போகாமல் அடுத்த செய்திக்காக காத்திருப்பது, அவர்களின் படிக்கும் ஆர்வத்தை அவர்களை அறியாமலே தினமலர் செய்கிறது நன்றி

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.