Nearly 72 Indian bodies brought from Gulf to Trichy in 6 months | கனவை சுமந்து சென்ற 72 பேர் பிணமாக திரும்பிய பரிதாபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனவை சுமந்து சென்ற 72 பேர் பிணமாக திரும்பிய பரிதாபம்

Updated : ஆக 05, 2012 | Added : ஆக 04, 2012 | கருத்துகள் (49)
Advertisement

திருச்சி: ஆயிரம் கனவுகளுடன் வெளிநாடு சென்றவர்களில், ஆறு மாதத்தில், 72 பேர் சடலமாக விமானத்தில் திருச்சிக்கு திரும்பியுள்ளனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், அன்றாடங் காய்ச்சிகளின் ஒரே கனவு வெளிநாட்டில் வேலை. சினிமாவில் ஒரே பாடலில் கதாநாயகன் கோடீஸ்வரனாகி விடுவதை போல அதில் அதீத நம்பிக்கை. மிச்ச, சொச்சம் இருக்கும் நிலம், வீடு, நகைகளை விற்று வெளிநாடுகளுக்கு விமானம் ஏறுகின்றனர். வானில் பறக்கும்போதே அவர்கள் கொஞ்சம் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். நாம் இதே விமானத்தில் பிணமாக திரும்புவோம் என்பதை. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து, திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய பிணங்களின் எண்ணிக்கை, 72 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தொடரும் சோகம்: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுதா, அரபு நாட்டில் வீட்டு வேலைக்கு சென்றிருந்தார். சில நாளில், தன் கணவரை தொடர்பு கொண்டு, "என்னை பாலியல் தொந்தரவு செய்கின்றனர். உடனே நாடு திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்' என்று போனில் கதறினார். அதற்கடுத்து இரண்டு நாட்களில் அங்கிருந்து பேசிய டிரைவர் ஒருவர், சுதா இறந்துவிட்டதாக செல்வராஜுக்கு தெரிவித்துள்ளார். நான்கு மாத அலைச்சலுக்கு பிறகு, சுதாவின் உடல் திருச்சி விமான நிலையம் வழியாக அவரது சொந்த ஊருக்குச் சென்றது.

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து, 24, கட்டுமானப் பணியின் போது இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையுடன் உடல் திருச்சி விமானநிலையம் வந்தது. துபாய் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் சேகரின் உடல், கடந்த மாதம் 26ம் தேதி, திருச்சி விமானநிலையம் வழியாக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி வருவது ஏன்? திருச்சி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நன்றாக படித்துவிட்டு குறிப்பாக வெல்டர், பிட்டர், இன்ஜினியர் போன்ற தொழிற்கல்வி படித்தவர்களுக்கு வெளிநாடுகளில் ஏராளமான நல்ல வேலைகள் உள்ளன. படிக்காதவர்களுக்குதான் சிக்கல். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் என்ன வேலை? என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அரபு போன்ற தெரியாத மொழியில் இருக்கும் விசாவை தகுந்த நபர்களிடம் கொடுத்து, வேலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இது தெரியாத குக்கிராமங்களை சேர்ந்த இளைஞர்களை ஏஜன்ட்கள் எளிதாக ஏமாற்றி விடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கட்டடத்தொழில் வாய்ப்பு அதிகமுள்ளது. உடலுழைப்பு அதிகமுள்ள இவ்வேலைகளை நகர்ப்புறத்தில் இருந்து வெளிநாடு கனவில் செல்லும் இளைஞர்கள் ஒருநாள் கூட செய்யமுடியாது. பெரிய நிறுவனத்தில் வேலை என்று ஆசைப்பட்டு செல்பவர்கள், பாலைவனத்தின் நடுவே நாடோடிகள் போல தன்னந்தனியாக ஒட்டகம் மேய்த்து பைத்தியம் பிடித்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியாவில் சிறிய தவறுகள் என, மன்னிக்கப்படும் குற்றங்களுக்கு கூட, அரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் உள்ளன. அவர்களின் சட்டத்திட்டங்கள் தெரியாமல், தவறுகளை செய்து தண்டனை பெறுகின்றனர்.

உண்மையில், அரபு நாடுகளில் இறந்து போனவர்களை விட சிறையில் கொடுமை அனுபவிக்கும் இந்தியர்கள் அதிகம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்வர். தென்மாவட்டங்களை பொறுத்தவரை திருச்சி விமான நிலையம் தான் சவுகரியம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் திருச்சியில் இருந்து குறைந்தபட்சம், ஆறு மணி நேரத்துக்குள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுவிடலாம். இதனால் தான் வெளிநாடுகளுக்கு சம்பாதிக்கும் கனவோடு விமானத்தில் ஏறுபவர்கள், சென்ற வேகத்தில் சடலமாக திருச்சி விமான நிலையத்துக்கு திரும்பி இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k.vinoth Raj - riyadh,சவுதி அரேபியா
26-செப்-201223:51:58 IST Report Abuse
k.vinoth Raj கரெக்ட் ப்ளீஸ் போல்லோவுப் தி கமெண்ட்ஸ்
Rate this:
Share this comment
Cancel
tharik - khobar,சவுதி அரேபியா
06-ஆக-201203:06:03 IST Report Abuse
tharik அன்பர்களே இங்கு நமக்குள் ஒற்றுமை இல்லை நம்மை நாமே போட்டு கொடுத்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை ,மலையாளி களை பற்றி உங்கள் எல்லோரும் தெரியும் . எந்த ஒரு கம்பெனி இலும் இந்த நாட்டு காரன் supervise பனுவதில்லை. யாரினால் இங்கு problem என்று உங்கள் எல்லோருகும் தேரியும்
Rate this:
Share this comment
Cancel
Balakumar - vellore,இந்தியா
05-ஆக-201218:36:13 IST Report Abuse
Balakumar நம்ம ஊர்ல இல்லாத வேலையா வெளிநாட்ல இருக்கு? பணம் மனிதனை பாடாய் படுத்துகிறது என்பது மட்டும் உண்மை
Rate this:
Share this comment
Cancel
jayapal - MUSCAT,ஓமன்
05-ஆக-201218:21:54 IST Report Abuse
jayapal வெளிநாடு வருவதுக்கு தயவு செய்து விரும்பதிர்கள் காரணம் உங்கள் வாழ்கையில் சந்தோசம் இளந்துவிடுவிர்கள்
Rate this:
Share this comment
Cancel
k.vinoth Raj - riyadh,சவுதி அரேபியா
05-ஆக-201218:01:00 IST Report Abuse
k.vinoth Raj this is true
Rate this:
Share this comment
Cancel
Saravanan Indian - Chennai,இந்தியா
05-ஆக-201216:09:24 IST Report Abuse
Saravanan Indian பொதுவாக அரபு நாடுகளுக்கு வேலைக்கு வருபவர்கள் ஒன்றிற்கு 100 யோசித்துவிட்டு வரவும் ஏனென்றால் இங்கு படித்தவர் படிக்கார்தவர் யாரையும் மதிக்க மாட்டார்கள். (இவர்களுக்கு என்று தனி சட்டம், நம்மை போண்ர வர்களுக்கு ஓர் சட்டம்)அவர்களை பொறுத்தவரை அவர்கள் எஜமான்கள் நாம் அவர்களிடம் வேலை செய்யும் கொத்தடிமைகள் முதலில் இங்கு வருபர்கள் 90% பேர் மனதளவில் பெரிய பாதிப்படைவீர்கள் அப்படி நடத்துவார்கள், என்ன செய்வது குடும்பம் கஷ்டம் கடன்கள் எதிர்காலம் இவற்றை மனதில் கொண்டு பிள்ளைகள் மனைவி உறவுகள் இவர்களைஎல்லாம் விட்டுவிட்டு ரத்த கண்ணீர் வடித்தாலும் மனதை கள்ளாக்கிகொண்டு இங்கு வேலை செய்கிறோம் இங்கு வேலைக்கு வரநினனக்கும் சகோதரர்களே யோசிக்கவும்???
Rate this:
Share this comment
Cancel
Jebasingh Jeyapaul - Coimbatore,இந்தியா
05-ஆக-201216:08:42 IST Report Abuse
Jebasingh Jeyapaul நம் மக்களின் அறியாமை காரணமாக ஏமாறுகிறார்கள். நம் நாட்டில் சாதரணமாக 15000 சம்பாதிக்கும் டிரைவர் வளைகுடா நாட்டில் வெறும் 10000 கும் குறைவான சம்பளத்தை அதிக கஷ்டத்தின்மத்தியில் பெறுகின்றனர். இதுதான் கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
Ravi - Doha,கத்தார்
05-ஆக-201215:05:01 IST Report Abuse
Ravi விசாவை தனியார் இன்டர்நெட் சென்டருக்கு சென்று அந்த நாட்டை பற்றியும், கம்பனியின் வெப் தளத்தில் உள்ளதை விவரமாக தெரிந்து கொண்டு அதுக்கு அப்புறம் டிக்கெட் எடுக்க முயற்சி செய்யதல் நல்லது. ஒரு மணிக்கு 15 ரூபாய் நெட் செலவை பார்காதீர்கள். அவசர படாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sulaiman Badsha - Muscat,ஓமன்
05-ஆக-201214:56:20 IST Report Abuse
Sulaiman Badsha சார் இதெல்லாம் நம்ம இந்தியன் எம்பசி சரியாக இருந்தால் க்ளிஅர் பண்ணிடலாம் ஆனால் நம்ம எம்பச்சிகாரங்க நம்ம ஆளுங்கள மதிக்கவே மாட்டாங்க அவங்க எல்லோரும் ஜமீந்தார் அங்க .அனால் சின்ன நாட்டு எம்பச்சிலாம் அவுங்க நாட்டு சிடிசெனக்கு ஒண்ணுன்னா உடனே போலீஸ் கோர்ட்னு ஆரம்பிச்சிடுறாங்க அதுனால மத்தவங்களுக்கு பயம் நம்ம ஆளுங்கன்ன எம்பச்ச்ய வச்சு சரி கட்டிருலாம் அவுங்க ஒன்னும் பண்ண மாட்டங்கன்னு தைரியமா செய்றாங்க
Rate this:
Share this comment
Cancel
Good Man - Doha,கத்தார்
05-ஆக-201214:53:27 IST Report Abuse
Good Man Intelligence Agencies & Income Tax department should keep eagle eye on recruiting agents..These agents taking huge money from people, as well as sponsors & they are selling the people to arabs sponsors..There is big nexus between agents & sponsors..These agents flooded in parrys mannady area in chennai..I dont know what our concern departments doing ?? May be they are sleeping...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை