கவுகாத்தி : கடந்த சில நாட்களாக அமைதி திரும்பியிருந்த அசாம் மாநிலத்தில் இன்று மீண்டும் வன்முறை வெடித்தது. இன்று நடந்த வன்முறையில் சிக்கி 5 பேர் பலியாயினர். இதனையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
அச்சத்தில் அசாம்: அசாம் மாநிலத்தில் இருபிரிவினருக்கிடையே நடைபெற்ற மோதல், பெரும் வன்முறையாக வெடித்தது. சிறிய அளவில் பரவிய வன்முறை, சிராங், கோக்ராஜ்ஹர் உள்ளிட்ட 3 மாவட்டங்களையே புரட்டிப் போட்டது. இந்த வன்முறையில் சிக்கி 56 பேர் பலியாயினர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அவர்கள் பாதுகாப்பிற்காக மாற்று இடத்திற்கு புலம்பெயர்ந்தனர்.
நாட்டின் களங்கம் - பிரதமர் : அசாம் மாநிலத்தில் நிலவிய வன்முறை, நாட்டின் களங்கம் என, அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநில மறுசீரமைப்பிற்கு ரூ. 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. அதில் முதற்கட்டமாக, கோக்ராஜ்ஹர் மாவட்ட மறுசீரமைப்பு பணிக்காக ரூ. 100 கோடியும், வன்முறையில் பலியானவர்களுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சமும் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
மீண்டும் வன்முறை : இந்நிலையில், அமைதி திரும்பிய நிலையில், இன்று மீண்டும் அங்கு வன்முறை வெடித்தது. கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் நிலவிய வன்முறையில் 2 பேரும், சிராங் மாவட்டத்தில் 3 பேரும் கொல்லப்பட்டனர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு : இன்று நிகழ்ந்த வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அசாமில் செத்து விழும் ஒவ்வொரு இந்திய முஸ்லிம்களுக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸே பொறுப்பு. அகதிகள் முகாமில் உணவின்றியும் சுகாதார குறைபாட்டினாலும் மென்மேலும் உயிர்கள் போய் கொண்டிருக்கிறது. அங்கு மடிவது மனித உயிர்கள் என்ற உயர்ந்த எண்ணத்தோடு இதனை அனுகவேண்டும். அங்கு நிலவி வரும் பிரச்சினையை பிரதமர் சிறப்பு கவனமேற்று கையாள வேண்டும். அசாம் பிரச்சினையை தொடர்ந்து செய்திகளாக தரும் தினமலரை பாராட்ட வேண்டும். ஏனெனில், ஆங்கில ஊடகங்கள் இந்த பிரச்சினைக்கு தரும் முக்கியதுவத்தை மற்ற தமிழ் ஊடகங்கள் தரவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதற்க்கு மூல காரணம் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒட்டு வங்கி அரசியல் தான். பல வருடங்களாக அச்சம் மக்கள் பங்கள்தேஷிளிருந்து புலம் பெயர்ந்து இந்தியாவுக்குள் திருட்டுத்தனமாக நுழையும் மக்களால் பிரச்னை என்று சொல்லி வந்தார்கள். ஆனால் காங்கிரஸ் அரசாங்கமோ இப்படி நுழைபவர்களுக்கேல்லாம் ரேஷன் கார்டு ஆகியவை கொடுத்து அவர்களை இந்திய பிரஜைகள் என்று அறிவித்தது. எதிர்த்தவர்களை இந்து வெறியர்கள் என்று கேலி செய்தது. இதை வன்மையாக பல ஆண்டு காலமாக போடோ மக்கள் எதிர்த்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் அங்கு பாலும் தேனும் ஓடுகிறது என்று ஏமாற்றியது. விளைவு இதோ மக்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொள்ளும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இங்கு பங்களாதேஷிலிருந்து இந்தியாவிற்கு திருட்டுத்தனமாக வந்த பலர் இந்திய முழுக்க பரவி பல விதமான கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் . இவர்கள் இன்று படும் அல்லலுக்கு ஒரே காரணம் என்றால் அது காங்கிரஸின் " எவன் செத்தால் என்ன .. எனக்கு வோட்டு தான் முக்கியம் என்கிற கேடு கேட்ட அரசியல் தான் காரணம் "

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.