Smart shoppers expo | தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி இன்று மட்டுமே : 9 மணி நேர "ஜாலி ஷாப்பிங்' - இன்று விட்டால் இன்னும் ஓராண்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி இன்று மட்டுமே : 9 மணி நேர "ஜாலி ஷாப்பிங்' - இன்று விட்டால் இன்னும் ஓராண்டு

Added : ஆக 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி இன்று மட்டுமே : 9 மணி நேர "ஜாலி ஷாப்பிங்' - இன்று விட்டால் இன்னும் ஓராண்டு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும், "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியின் இறுதி நாளான இன்று, அனைத்து ஸ்டால்களிலும், சலுகைகைள் அறிவிக்கப்பட்டுள்ளதால், காலையிலிருந்தே தேவையான பொருட்களை, "ஷாப்பிங்' செய்து மகிழலாம்.

ஆக.,1ல் தொடங்கிய தினமலர் கண்காட்சி, வழக்கம் போல், மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று , இன்று நிறைவு பெறுகிறது. கடந்த ஐந்து நாட்களாக, அரங்கு நிறைந்த கூட்டத்தில் அலைமோதிய தமுக்கம், இன்றும் ஆர்ப்பரிக்க போகிறது. தாராளமாய் நடந்து செல்லும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுளளது. "குளுகுளு' அனுபவம் தரும், "ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளதால், உங்கள் களைப்பு, காணாமல் போய்விடும். "பாத்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பர்னிச்சர்கள், அழகு சாதனப் பொருட்கள், தோரண விளக்குகள், காய்கறி "கட்' செய்யும் மெஷின்கள், துணியால் ஆன தயாரிப்புகள், தாய்லாந்து தயாரிப்புகள், தைவான் சிகை அலங்காரப்பொருட்கள், வடமாநில இனிப்புகள், பெங்களூரூ கார வகைகள், சீனா மிட்டாய்கள், கொடைக்கானல் "சாக்லெட்', ராஜஸ்தான் விரிப்புகள், ஜெய்பூர் ஆடைகள், பாக்., மார்பிள் சிலைகள், மாடர்ன் கிச்சன் அறை, 3டி புரஜக்டர், சோலார் சிஸ்டம்ஸ், சமையல் தேங்காய் எண்ணெய், சொகுசு பிளாஸ்டிக் சேர், ஒளிரும் போட்டோக்கள், ஆன்மிகப் புத்தகங்கள், "சிடி' கள், மருத்துவ புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், எண்ணற்ற ஊறுகாய் வகைகள், விளையாட்டு பொருட்கள், கல்வி "சிடி', ரிமோட் லைட், ஆடைகள், ஐஸ் கிரீம், பேட்டரி பைக் மற்றும் கார்கள், உடற்பயிற்சி சாதனங்கள்,' என, அனைத்திற்கும், தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியின் இறுதி நாளில், நிறுவனங்கள் போட்டி போட்டு, சலுகை அறிவித்துள்ளதால், இன்றும் கண்காட்சி களை கட்டும். இனி, இது போன்ற சலுகையை அனுபவிக்க, ஓராண்டு காத்திருக்க வேண்டும். இன்று காலை 10.30
மணி முதல் இரவு 7.30 மணி வரை, ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணம் ரூ.30.

காலையிலேயே வாங்க: இன்று கண்காட்சியின் கடைசி நாள்.. அதனால், நீங்கள் அனைவருமே காலையிலேயே கண்காட்சிக்கு வந்தால், சந்தோஷமாக கண்டுகளிப்பதோடு, பொருட்களை பொறுமையாக, நிதானமாக இருந்து வாங்கிச் செல்லலாம். வெயில் கடுமையாக இருந்தாலும், உள்ளே ""குளு...குளு'' "ஏசி' உள்ளது.

"சூப்பரோ... சூப்பருங்க இவ்வளவு சலுகை எப்படிங்க' : "ஷாப்பிங்' செய்தவர்கள் சந்தோஷம்

மதுரை தினமலர் வீட்டு உபயோகக் கண்காட்சியில் பங்கேற்று "பர்சேஸ்' செய்தவர்கள், "சூப்பரோ... சூப்பருங்க...' என,தங்கள் அனுபவத்தை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.இல்லத்தரசிகளின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்த "தினமலர்' கண்காட்சி, இம்முறையும் இமாலய சலுகைகளால்,பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது. இன்று இறுதி நாள் என்பதால், சலுகைகளுக்கு பஞ்சமிருக்காது. நட்டு முதல் நானோ கார் வரை பார்த்து ரசிக்க, இதை விட்டால் வேறு வாய்ப்பு இருக்காது. குடும்பத்துடன் வந்து, குதூகலமாய் "பர்சேஸ்'குடும்பத் தலைவிகளிடம் கருத்து கேட்டோம். ஆர்வமாய் அவர்கள் பகிர்ந்தவை இதோ:

அப்சர், மதுரை:
நோன்பு சமையத்தில், "ஏசி' ஸ்டால்களில் களைப்பின்றி "பர்சேஸ்' செய்ய முடிந்தது. எந்த ஸ்டாலும், சோடைபோகவில்லை. கொடுத்த பணத்திற்கு திருப்தியாக "ஷாப்பிங்' இருந்தது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், ஸ்டால்கள் இருப்பதால், நமக்கு ஏற்றதை வாங்கலாம்.

கனிமொழி, மதுரை:
சூப்பரோ சூப்பர். ஒரே இடத்தில் இத்தனை சலுகைகள் கிடைப்பது, ஆச்சர்யம். வீட்டுக்கு வேண்டியதை வாங்க, இதுவே சரியான தருணம். வெளிநாட்டு ஸ்டால்களை பார்வையிடும் போது, வியப்பாய் உள்ளது. "தினமலர்'கண்காட்சியில் மட்டுமே இது சாத்தியம்.

ஜெயஸ்ரீபிரியா, சிவகாசி: "தினமலர்' கண்காட்சியில் நான் பங்கேற்பது, இது மூன்றாவது முறை. ஒவ்வொரு முறையும், புதியஅனுபவத்தை உணர்கிறேன். உறவினர்கள், குழந்தைகளுடன் வந்துள்ளேன். பார்க்கும் அனைத்தையும் வாங்கத் தோன்றுகிறது.

சண்முகப்பிரியா, கம்பம்: இரண்டாவது முறை "டிக்கெட்' எடுத்து உள்ளே வருகிறேன். காலையிலிருந்து குடும்பத்துடன் பார்த்து ரசித்தோம். வீடு திரும்ப மனமில்லை. குழந்தைகளும் ஆர்வமாய் இருந்ததால், மீண்டும் தொடர்ந்தோம். அடுத்தடுத்து பார்த்த சலிப்பு இல்லை. மனம்நிறைய சந்தோஷம்.

சுகன்யா, கொடிக்குளம்: கடந்த மூன்று ஆண்டுகளாக, "தினமலர்' கண்காட்சியில் பங்கேற்று வருகிறேன். என் குழந்தையுடன் வந்தேன். "ஏசி' வசதி இருப்பதால், சுமந்து "ஷாப்பிங்' செய்வதில் களைப்பு இல்லை. பாதுகாப்பாக இருப்பதால், தனிமையில் வர தயக்கம் இல்லை, என்றனர்.இவர்களை போல, நீங்களும் ஆரோக்கியமான அனுபவத்தை பெற, தயாராகுங்கள் தமுக்கத்திற்கு. இன்று, கண்காட்சியின் கடைசி நாள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை