புதுடில்லி: நாளை மறுநாள் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில், இதில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்களின் பட்டியலில், லோக்பால் மசோதா இடம்பெறவில்லை. இதனால், இந்த கூட்டத் தொடரில், லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்பு இல்லை. புனே குண்டு வெடிப்பு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது ஆகிய விஷயங்கள் தொடர்பாக, புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுஷில் குமார் ஷிண்டே, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சிதம்பரம் ஆகியோரை கேள்விகளால் துளைத்தெடுக்க, எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், வரும் 8ம் தேதி துவங்கி, செப்டம்பர் 7 வரை நடக்கிறது. இந்த கூட்டத் தொடர், பல்வேறு மாற்றங்களுடன் புதிய சூழலில் நடக்கிறது.
சவால்களை சமாளிக்க...: லோக்சபா சபை முன்னவராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதால், சுஷில் குமார் ஷிண்டே, புதிய சபை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார். சபையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, சபை முன்னவருக்கு உள்ளதால், சுஷில் குமார் ஷிண்டேவுக்கு, சவால் காத்திருக்கிறது. மேலும், உள்துறை அமைச்சராகவும் சுஷில் குமார் ஷிண்டே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே, அவரது சொந்த மாநிலமான
மகாராஷ்டிராவில் உள்ள புனேயில், நான்கு இடங்களில் குண்டு வெடித்தது. மேலும், அசாமிலும், இதுவரை இல்லாத அளவுக்கு, பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டு, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகியுள்ளனர். பொறுப்பு, அவருக்கு உள்ளது.
சிதம்பரத்துக்கு சிக்கல்: அடுத்ததாக, நிதி அமைச்சராக மீண்டும்
பொறுப்பேற்றுள்ள சிதம்பரத்துக்கும், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகள்
காத்திருக்கின்றன. சில்லரை
இதுகுறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய முக்கிய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு,
மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள்
மட்டுமல்லாமல், ஆளும் ஐ.மு. கூட்ட ணியில் உள்ள திரிணமுல் காங்கிரசும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
"2ஜி' விவகாரம்: இது மட்டுமல்லாமல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான பிரச்னையில் சிதம்பரத்தின் மீது, எதிர்க்கட்சிகள் தரப்பில் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவரை, மீண்டும் நிதி அமைச்சராக நியமித்துள்ளதற்கு, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு, புதிதாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விஷயம், சர்ச்சையை கிளப்பும். அதற்கு அவர் பதிலளிப்பதுடன், தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை அரசு சமாளிப்பதற்கான உத்திகளை அவர் தெரிவித்தாக வேண்டிய நிலையும் உள்ளது. இந்த கூட்டத்
தொடரில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா, கம்பெனிகள் மசோதா, பெண்கள் மசோதா என, 31 மசோதாக்களை நிறைவேற்ற, அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ள லோக்பால் மசோதா இடம் பெறவில்லை. லோக்பால் மசோதாவுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி வந்த ஹசாரே குழுவினர்,