புதுடில்லி: ""அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ.கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நிறுத்த மாட்டோம் என, பா.ஜ., உறுதி அளிக்க வேண்டும்; இல்லையெனில், தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறத் தயங்க மாட்டோம்,'' என, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில், ஐக்கிய ஜனதா தளம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த கட்சிக்கு 29 எம்.பி.,க்கள் உள்ளனர். பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனாலும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விவகாரத்தில், இரண்டு கட்சிகளுக்கும் இடையே, தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
பிரசாரம்: கடந்த 2010ல் பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தபோது, அங்கு நரேந்திர மோடி பிரசாரம் செய்யக் கூடாது என, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டால், தங்கள் கட்சிக்கு உள்ள ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என்பதால், நிதிஷ் குமார் இவ்வாறு கூறினார். இதையடுத்து, நரேந்திர மோடி, அங்கு பிரசாரம் செய்யவில்லை. இதற்கிடையே, வரும் 2014ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. நிதிஷ் குமார், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். சமீபத்தில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ.கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுபவர், மதச் சார்பற்ற தலைவராக இருக்க வேண்டும்' என்றார்.
கட்காரியிடம் வலியுறுத்தல்: இந்நிலையில், சமீபத்தில் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரியை சந்தித்த நிதிஷ் குமார், "அடுத்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் என, பா.ஜ., உறுதி அளிக்க வேண்டும். இல்லையெனில், ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறியது போல், நாங்களும் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்' என, வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் கூறியதாவது: நரேந்திர மோடிக்கு எதிரான போக்கை தொடர்வது என்பதில் நிதிஷ் குமார் உறுதியாக உள்ளார். பீகார் சட்டசபையை பொறுத்தவரை, இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தாலும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு மட்டும், 117 உறுப்பினர்கள் உள்ளனர். தனிப் பெரும்பான்மைக்கு, 122 உறுப்பினர்களே தேவை என்ற நிலையில், மேலும் ஐந்து உறுப்பினர்களின் ஆதரவுடன், ஆட்சியை தொடர்வது, நிதிஷ் குமாருக்கு சிரமமாக இருக்காது. இதனால், பா.ஜ.,வுடனான உறவை துண்டிப்பதற்கு அவர் தயங்க மாட்டார். அதே நேரத்தில், பீகாரில், ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு இல்லாமல், வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது. எனவே, நிதிஷ் குமாரின் கோரிக்கைக்கு சம்மதிப்பதை தவிர, பா.ஜ., தலைவர்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன.
பா.ஜ., மறுப்பு: இந்த விவகாரம் குறித்து பா.ஜ., துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில், தே.ஜ.கூட்டணிக்குள், எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதேபோல், இந்த விஷயத்தில், பா.ஜ.,வுக்குள்ளும், எந்த பிரச்னையும் இல்லை. அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ.கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில், எந்த சந்தேகமும் இல்லை. ஊழல் காரணமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியை சந்திக்கும். இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
அத்வானி புது தகவல்: அடுத்த லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, இணையதளத்தில் கூறியுள்ளதாவது: பா.ஜ., - காங்., அல்லாத கட்சிகளைச் சேர்ந்த, அதேநேரத்தில், இந்தக் கட்சிகள் ஆதரவு தருகிற ஒருவரை பிரதமராக தேர்வு செய்வது என்பது, சாத்தியமானது தான். ஆனால், இந்த இரண்டு கட்சிகளையும் சாராத ஒருவரை பிரதமராக தேர்வு செய்யும்போது, நிலையான ஆட்சி என்பது, கேள்விக்குறியாகி விடும். கடந்த காலங்களில், இந்த இரண்டு கட்சிகளையும் சாராத சரண் சிங், சந்திரசேகர், தேவகவுடா போன்றோர் பிரதமர்களாக இருந்தபோது, ஆட்சி நீடிக்கவில்லை. காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் பிரதமர்களாக இருந்தால் மட்டுமே, நிலையான ஆட்சி ஏற்படும். இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காங்கிரஸ் தன் பிரித்தாளும் சூழ்ச்சியை அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்...... தேவைக்கு அதிகமான நிதி கொடுத்து நிதிஷை விலைக்கு வாங்கியிருக்கிறது......... யார் என்ன செய்தாலும் மோடி பிரதமர் ஆவதை தடுக்க முடியாது........... இவர்களின் செயல்களிலிருந்தே மோடியின் மீது இவர்களுக்கிருக்கும் பயம் தெரிகிறது........ மோடி அத்தனை தடைகளையும் தகர்ப்பார்..... இந்தியாவை அந்நியர்களிடம் இருந்து மீட்பார்.....
இப்போவே ஆரம்பிச்சால் தான் எலக்சன் வருவதற்குள் கூட்டணியை உடைத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் போல் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முடியும். நாடு உருப்பட்ட மாதிரி தான்.
நல்ல நேரம் பார்த்து தொடங்கி வைத்திருக்கிறார் நிதீஷ் குமார். இன்னும் ஐந்து வருடங்களுக்கு சுய நல கூட்டத்தின் ஆட்சியா? நினைக்கையில் வெறுப்பாக இருக்கிறது.
தவறுகளில் இருந்து பாடம் கற்பவன்தான் அறிவுள்ளவன்.....சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது ஆரம்பத்தில் பா.ஜ.க வே முன்னிலையில் இருந்தது.....தேர்தல் நெருக்கத்தில் நவீன் பட்நாயக் முதுகில் குத்திவிட்டு வெளியேறியதால் தேசிய ஜன நாயக கூட்டணி பலவீனமடைந்தது.....ஜெயிக்கும் கூட்டணிக்கு வாக்களித்து பழகிய நம் மக்கள் காங்கிரசையே மீண்டும் தேர்ந்தெடுத்தனர்......மீண்டும் அது போன்ற நிலையை பி.ஜே.பி எதிர் நோக்குகிறது.....மாறன் சாகும் வரை கூட்டணியில் இருந்து அதிகாரத்தை சுவைத்து விட்டு , தேர்தல் நெருக்கத்தில் பா.ஜ.க வை கழற்றிவிட்டுவிட்டு காங்கிரஸ் கூட்டணிக்கு தாவிய கருணாநிதி போல் நடந்துகொள்கிறார் நிதிஷ்,....2014 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறவேண்டும் என்று எண்ணினால் உடனடியாக,திரு. நரேந்திர மோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்....நிதிஷ் வெளியேறுவார்.....அதனால் பி.ஜே .பிக்கு ஒன்றும் பாதிப்பில்லை.....பீகார் மாநிலத்தின் சாதிய அரசியல் கணக்கே வேறு.....யாதவர்கள் ஒட்டு லாலுவுக்கும் , தலித்கள் ஒட்டு பாஸ்வானுக்கும் விழும்....தற்போது குர்மிகளின் ஓட்டோடு பி.ஜே.பி யை தொடர்ந்து ஆதரிக்கும் பிராமணர்கள் மற்றும் இதர முற்பட்ட சாதிகளின் ஆதரவோடுதான் நிதிஷ் வெற்றி பெற முடிந்தது.....பி.ஜே.பி இல்லாவிட்டால் நிதிஷ் டப்பா டான்ஸ் ஆடிவிடும்............பா.ஜ.க உறுதியான ஆதரவு வழங்குவதால்தான் நிதிஷ்குமாரால் நிலையாக ஆட்சி செய்ய முடிகிறது......பா.ஜ.க வெளியேறி ஆட்சி மைனாரிட்டி ஆட்சியாகிவிட்டால் நிதிஷால் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாது....வெகு விரைவில் பெயரை கெடுத்துக்கொள்வார் ........ஆகவே இவரது ஊளை மிரட்டலுக்கு பணியாமல் உடனடியாக இவரை வெளியேற்ற வேண்டும்.......தேர்தல் நெருக்கத்தில் அதிமுக, அசாம்கனபரிஷத், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, லோக்தள் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வரும்.....மோடி அவர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள நற்பெயரால் நிச்சயம் ஆட்சியை பிடிக்கலாம்..... கூட்டணிகட்சிகளின் நிர்பந்தந்த்துக்கு பயந்தோ, உ ட்கட்சி குழப்பத்தாலோ வேறு ஒருவரை முன் நிறுத்தினால் தோல்வி நிச்சயம்......பார்ப்போம்.... தேசத்தின் தலைவிதி எப்படி உள்ளதென்று,,,,,

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.