திருத்துறைப்பூண்டி: ""நித்யானந்தா குறித்து பதில் கூறி சலித்து விட்டது. எனவே, அவர் குறித்து கேள்விகள் கேட்க வேண்டாம்,'' என, நிருபர்களிடமிருந்து மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நழுவினார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கச்சனம் கைக்கிணேஸ்வரர் கோவிலுக்கு, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நேற்று வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: வட இந்திய புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களுக்கு, மாநில அரசு சலுகைகள் அறிவித்துள்ளதை பாராட்டுகிறோம். கோவில் சன்னிதானத்தில் ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கம் என்னும் பாகுபாடு இல்லை. ஆனால், "தரிசனக் கட்டணம்' என்னும் பெயரில் வசூல் செய்வதை, அரசு ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், காலத்தோடு மழையும் பெய்யாத நிலையில், வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்று திருவையாறில், திருஞானசம்பந்தர் மழை பெய்வதற்காக பதிகம் பாடியுள்ளார். அப்பதிகத்தை பாடி, கூட்டு வழிபாடு நடத்தினால் மழை பொழியும். இவ்வாறு அவர் கூறினார்.
"மயிலாடுதுறையில் இருக்கும் தர்மபுரம் ஆதீனத்தை, ஏன் நீங்கள் சென்று நேரில் சந்திக்கவில்லை?' என, நிருபர்கள் கேட்டதற்கு, "மே 5ம் தேதி அவரை, நான் சந்திக்க அனுமதி கொடுத்தார். ஆனால், நித்யானந்தாவுடன் வந்தால் அனுமதியில்லை என மறுத்ததால் சந்திக்கவில்லை. காலம், நேரம் வரும்போது, நல்ல செய்தியை கூறுவேன்' என்றார். "நித்யானந்தா குறித்த உங்களின் நிலைப்பாட்டில் வேறு ஏதேனும் மாற்றம் உண்டா?' என, மீண்டும் மீண்டும் நிருபர்கள் கேட்டதற்கு, "இது குறித்து பதில் கூறியே சலித்து விட்டது. அது குறித்து எதுவும் கேள்விகள் கேட்க வேண்டாம்' என, பதில் அளித்து, முற்றுப்புள்ளி வைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிடதி ஆசிரமத்தில் இளம்பெண்களுடன் ஆடிப்பாடினோம். மிகவும் நன்றாக இருந்தது, சந்தோஷமாக இருந்தது. மனிதன் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.. நித்தி ரொம்ப நல்லவர். அவர் ஆன்மீகவாதி மட்டுமல்ல ஆள் பலமிக்க வாதி,, ஆதினத்திற்கு அவர் தான் பொருத்தமானவர் என்று நான் புரிந்துகொண்டதோடு சிவனே என் கனவில் வந்து அவரை கைகாட்டி விட்டு போனார்.. அன்று.... அவன் நாசமா போவ, என்னமா என்ன கட்டம் கட்டிட்டு அவளை கொத்திட்டு போய்ட்டான். அவன் உருப்படவே மாட்டான். என்னோட சாபம் சும்மா விடாது.. நான் எவ்வளவோ சொன்னேன், போறா இருந்தா நீ மட்டும் போ. அவளை கொண்டு வந்து என்னோட கஸ்டடி இல விட்டுட்டு, இல்லாட்டி ஒன்னோட நானும் வாறேன், அவளையும் கூட்டிட்டு போவோம்.. ம்ஹூம் மசியழியே பாவி.. இப்ப பாருங்க இந்த பத்திரிக்க காராலாம் என்னமா கேள்வி கேக்கறா. எனக்கு கோவம் கோவமா வருது... நித்திய பத்தி சுத்தி சுத்தி என்னிடம் கேள்வி கேக்காத ஓய்... இன்று... ரொம்ப படுத்துரானுங்கடா...
இன்னும்மா இந்த அருணகிரி நித்தி மேல் நம்பிக்கை வைத்துள்ளார்? துறவிகள் என்றாலே எளிமையின் சின்னமாக விளங்க வேண்டும். இந்த இருவருமே உடல் முழுதும் ஆபரணங்கள் மற்றும் பயன்படுத்தும் நவீனரக கார் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் பார்க்கும் பொது துறவறம் பூண்டதற்குரிய அடையாளமே இல்லை. இதில் ஒரு படி மேல போனது நித்திதான். சுத்தி எத்தனை பணிப்பெண்கள் சீடர்கள் என்ற பெயரில்? இவர்களை பார்க்கும் பொது அன்றாடம் மக்கள் படும் பாடுதான் கண்ணில் நிற்கிறது. தங்கள் தேவை குழந்தையின் தேவை சமுதாய இன்னல்கள் அனைத்தையும் தாண்டி தங்கள் முதுமைக்கு என அவர்கள் சேமிக்க படும் இன்னல்கள் எத்தனை? ஆனால் இந்த காவி பட்டுக்கரை வேஷ்டி ஆசாமிகள் அனுபவிக்கும் சுகபோகங்கள் என்ன? ஒப்பிட்டு பார்த்தால் நடவடிக்கை எடுக்காத அரசாங்கத்தின் மீதும் இதையெல்லாம் தட்டி கேட்க்க துணிவில்லாமல் இருக்கும் மக்களாகிய நம்மீதும் வேதனை உண்டாகிறது. அப்படியென்ன இவர்கள் இறைவனுக்கு தொண்டு செய்து கிழித்து விட்டார்கள்? கோவில்கள் அனைத்தும் பொதுமக்களும் அரசாங்கமும் பராமரிக்க வேண்டிய போதுசொத்து. இதை இவர்களை போன்ற கயவர்கள் மட்டும் அனுபவிப்பதில் ஞாயம் இல்லை. படித்த ஹிந்துக்களுக்கு இது போன்ற கோவில் பணிகளை அரசாங்க வேலையாகவே தரலாம். வேதமும் தமிழும் முறைப்படி கற்றவர்களுக்கு தேர்வு வைத்து முறைப்படி வென்றவர்களை பணியில் அமர்த்த வேண்டும். சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பையும் முறையாக ஹிந்துக்களே அரசாங்கத்தின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். அதில் வரும் பணத்தை வாழ வழியில்லாத ஹிந்துக்களுக்கு உதவ உபயோகபடுத்த வேண்டும். இதே போல ஒவ்வொரு மதத்தினரும் தங்களின் புனிதத்தை பாதுகாத்து தங்கள் இனத்தவர்களுக்கும் மதத்தவர்களுக்கும் உதவி செய்யலாம். இது சட்டமானால் நிச்சயம் வேண்டாத சடங்கு அறிவுகெட்ட மூடநம்பிக்கை சித்து விளையாட்டு அனைத்தும் ஒழியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.