பதிவு செய்த நாள் :
கருத்துகள் (29)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கிருஷ்ணகிரி: மதுரையைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், ஐந்து தாலுகாவில் உள்ள, 123 கிரானைட் குவாரிகளில், நேற்று, சப்-கலெக்டர்கள் தலைமையிலான, ஐந்து குழுவினர், அதிரடி ஆய்வு நடத்தினர். மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில், முறைகேடாக கனிமங்களை வெட்டி எடுத்துள்ளதால், அரசுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதையடுத்து, தற்போது கலெக்டராக உள்ள அன்சுல் மிஸ்ரா, 18 குழுக்களை அமைத்து, தனியார் கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். இச்சோதனை தொடர்ந்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 300 குவாரிகள்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கும், "பாரடைஸ்' என்ற ரக கிரானைட்டுக்கு, உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இக்குவாரிகளில், கிரானைட் கற்கள் உற்பத்தி செய்ய, அருகில் உள்ள குவாரிகளில் இருந்து, அதிக அளவில் கற்கள், அனுமதி இன்றி வெட்டி எடுக்கப்பட்டு, இரவு நேரங்களில் கடத்தப் படுவதாகவும், அதனால் அரசுக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், புகார்கள் வந்துள்ளன. ஆய்வுக்குழு: இந்த புகாரைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிரா னைட் குவாரிகளில் ஆய்வு நடத்த, கலெக்டர் மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய, ஐந்து தாலுகாவிலும், சப்-கலெக்டர் அந்தஸ்தில் உள்ளவர் மற்றும் அந்தந்த பகுதி தாசில்தார்கள், மண்டலத் துணை தாசில்தார், பி.டி.ஓ., - ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், அந்தந்த தாலுகாவில் உள்ள, ஐந்து தனியார் கிரானைட் குவாரிகளில், நேற்று ஆய்வு நடத்தினர். கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவியில்,

ஆர்.டி.ஓ., சதீஷ், தாசில்தார் மணி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆவணங்களும் சரிபார்ப்பு: ஆய்வில், அரசு அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே, கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பதை, குழுவினர் அளவீடு செய்து பார்த்தனர். மேலும், அரசு அனுமதி வழங்கிய காலத்தை கடந்து, கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பது குறித்த ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன. ஆய்வுக்குப் பின், ஆர்.டி.ஓ., சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்கள் ஆய்வு நடக்கும். ஆய்வில், ஒவ்வொரு கிரானைட் குவாரிகளில் கிடைத்த தகவல்கள் அனைத்தும், கலெக்டரிடம் அறிக்கையாக சமர்ப்பிப்போம். குவாரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா அல்லது முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை, கலெக்டர் மீண்டும் ஆய்வு செய்து, முறைகேடுகள் நடந்திருந்தால், குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு சதீஷ் கூறினார். புதுக்கோட்டையில் பீதி: புதுக்கோட்டை மாவட் டத்தில், கீரனூர், குடுமியான்மலை, அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, திரு மயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், அரசு அனுமதி பெற்று, 116 கிரானைட் குவாரிகளும், அனுமதியின்றி, 100க்கும் மேற்பட்ட குவாரிகளும் இயங்கி வருகின்றன.எல்லோ ஷேடு, பாரடைஸ், பிங்க், ஐவரி, பிளாக் ஷேடு, மல்டிகலர் போன்ற,

Advertisement

எட்டு வகையான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவற்றில், எல்லோ ஷேடு கிரானைட் கற்கள், உலகத்தரம் வாய்ந்தவை. நார்த்தாமலையைச் சுற்றிஉள்ள பொம்மாடி மலையில், இவ்வகையான கற்கள் உள்ளன. இங்கிருந்து வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்கள், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மதுரை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடந்து வரும் ரெய்டை போன்று, புதுக்கோட்டை மாவட்ட கிரானைட் குவாரிகளிலும், ரெய்டு நடக்கலாம் என்பதால், அம்மாவட்ட கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பீதியில் உள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
07-ஆக-201222:42:11 IST Report Abuse
மதுரை விருமாண்டி கருத்து சொல்லும் புத்திசாலிகள் பல பேர், குறிப்பா vyzk - Ambai,இந்தியா, எல்லாரும் மிகச் சில அடிப்படையான ஆதாரங்களை வைத்து சுலபமாக , பி.ஆர்.பி, பி.எஸ்.பி இவ்வளவு அடிச்சான், அதிகாரி அவ்வளவு அடிச்சான்னு சரியா கணக்கு சொல்றீங்க.. இதெல்லாம் நடமாடும் கம்ப்யூட்டருக்கு தெரியாதா ?? அதான் தேர்தல் சமயத்தில் வருடத்திற்கு 8,000 கோடி அடித்தார், 10,000 கோடி அடித்தார் கருணாநிதி குடும்பம்ன்னு சொன்னாங்களே.. சொல்லி ஒரு வருஷம் ஆச்சி.. கப்பம் கட்டுறவன் இந்த ஆண்டு தொகை 8,000 மோ , 10,000 மோ, அவ்வளவு கோடியை யாருக்கு கொடுத்திருப்பான்? தெருக் கோடியில் இருக்கும் கருணாநிதி குடும்பத்துக்கா ?? அதான் காலாவதி குடும்பம் ஆயிடிச்சே... அப்போ யாருக்கு போயிருக்கும் என்று அதிமுக சொம்புகளுக்குக் கூட தெரியும்... இப்படி நல்லா போயிட்டு இருந்தததை இந்த சகாயம் போட்டு நோண்டி சிரங்காக்கி விட்டார்.. அதனால் தான் அவரை மதுரை கலெக்டர் போஸ்டில் இருந்து தூக்கி, மூலையில் உட்கார வைத்தார் நம் சரித்திர நாயகி... அவரு நோண்டி சிரங்காக்கி விட்டதற்கு மேல் பூச்சு பூசும் நாயகியின் இந்த ஆட்டத்தை பார்த்து நம்பிக்கை வைப்பது மடமையே.. அது சரி, ஆட்டையைப் போட்டவங்களே மறு ஆய்வு செஞ்சா, என்ன வருமுன்னு எதிர்பார்க்கிறீங்க ?? ஆய்வு = ஆய் + (வாய்)வு ..தான் வரும்... இதை சி.பி.ஐ க்கு விட்டா அவனுங்களும் இருபது வருடம் இழுத்தடிப்பாங்க.. நம்ம நாட்டில் கனிம வளங்களோடு, நீதியையும், நேர்மையும் நாட்டை விட்டே கடத்திட்டாங்க..
Rate this:
Share this comment
Cancel
DR K Gauthaman - DErna,லிபியா
07-ஆக-201221:11:59 IST Report Abuse
DR K Gauthaman why they susp the VAOs they should susp the previous collectors of Madurai and the higher officials of Industrial ministry. all cheating fellows Cheating the public .
Rate this:
Share this comment
Cancel
kannan pillai - doha,கத்தார்
07-ஆக-201220:03:06 IST Report Abuse
kannan pillai இப்போ எவ்வளவு அடித்திருக்கிறார்கள் என்று கணக்கு தான் பார்கிறார்கள். அதன் பிறகு தான் யாரிடம் இருந்து எவ்வளவு வாங்கவேண்டும் என்று பேரம் நடக்கும். பேரம் படியாவிட்டால் வேறு வழக்குகள் போட்டு படியவைக்க கொஞ்ச காலமாகும். இதையெல்லாம் பார்த்துவிட்டு ஏதோ அரசாங்கம் நேர்மையாக நடவடிக்கைகள் எல்லாம் எடுக்குது என நினைத்து ஏமாறவேண்டாம். போயி எல்லாரும் அடுத்த சோலிய பார்க்கலாம் வாங்க.
Rate this:
Share this comment
Cancel
vyzk - Ambai,இந்தியா
07-ஆக-201219:27:33 IST Report Abuse
vyzk இதை பாருங்கள் குவாரிகளில் என்ன நடக்கிதுன்னு புரியும் (பீ . ஆர். பீ)
Rate this:
Share this comment
Cancel
Madukkur Nesan - Madukkur ,இந்தியா
07-ஆக-201217:35:19 IST Report Abuse
Madukkur Nesan ஓகோ இவ்வளவு நாள் உறக்கத்தில் இருந்து இருந்திருப்பார்களோ என்னவோ ( எல்லாம் அந்த அந்த அதிர்கரிகளின் வீட்டில் உறங்கும் லஞ்ச பணதிற்க்கே வெளிச்சம் )
Rate this:
Share this comment
Cancel
Balachandran - chennai,இந்தியா
07-ஆக-201217:27:49 IST Report Abuse
Balachandran எல்லாம் சுரண்டியாச்ச்சு.
Rate this:
Share this comment
Cancel
Rajeshwaraadevar Subramanian - Liverpool,யுனைடெட் கிங்டம்
07-ஆக-201216:31:13 IST Report Abuse
Rajeshwaraadevar Subramanian Wait and see. Public J J Ultimate Power& auction. Madam pls Don&39t allow like the guys. If u clear the current& currupt officer& politician Ur are a clean CM plsss Can u you do Good officers with you& we also. No worrys....
Rate this:
Share this comment
Cancel
Satheesh - chennai,இந்தியா
07-ஆக-201214:18:27 IST Report Abuse
Satheesh முதல்வர் நடவடிக்கை ஈடுத்து குஜராத் அதிகரிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் சதீஷ் சென்னை
Rate this:
Share this comment
Cancel
mahrouf - shajrah,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஆக-201214:10:36 IST Report Abuse
mahrouf மனிதன் சிந்திக்க தவறிவிட்டான்...உலகம் தோன்றி இத்தனை மில்லியன் ஆண்டுகளாக இருந்த கனிமங்களை இப்படி அவற்றின் பிறப்பு அறியாமல் அவற்றை அழிகின்றான் இந்த மனிதன்..இவைகளின் எதிர்வினை என்ன அறிவனா மனிதன்...நாம் நம்மைபற்றியே அறியாமல் தவறான சிந்தனையில் வாழ்கிறோம்...இந்த இயற்கை செல்வங்கள் எதற்காக படைகபட்டன... அப்படிஎன்றால் வருங்களா மனிதர்களின் நிலை என்ன...சிந்தி மனிதா சிந்தி....
Rate this:
Share this comment
Cancel
vyzk - Ambai,இந்தியா
07-ஆக-201214:00:03 IST Report Abuse
vyzk இது போன்ற நிகழ்சிகள் என் நடக்கின்றன? அரசு அதிகாரிகள் 1997 ஆண்டில் இருந்து இந்த கற்கள் கணக்கை எடுக்க வேண்டும் தனியார் நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு ஒரு கல்லுக்கு காசு குடுத்துவிட்டு 20 கற்களை ஏற்றுமதி செய்கின்றனர். தூத்துக்குடி போர்ட்ல ஏற்றுமதியான கற்கள் கணக்கை எடுக்க வேண்டும். பின் கனிம வர்த்தகத்தில் எத்தனை கற்களுக்கு &39ராயல்டி&39 செளுதிர்காங்கனு பார்கனும். இதில் ஏகப்பட்ட வித்யாசம் இறக்கும் ஒரு சிறிய கணக்கு - ஒரு தனியார் நிறுவனம் (பீ ஆர் பீ) 15 குவாரிகள் செய்கின்றனர். ஒரு குவாரியில் மட்டும் ஒரு மாதத்திற்கு 1000 கன மீட்டர் கல்லை வெட்டி எடுகின்றனர். 15 குவாரிகளுக்கு 15 x 1000 = 15000 கண meter கற்கள் வெட்டி எடுகிறார்கள். ராயல்டி ஒரு கண மீட்டர் கு ரூபாய் 2500 /- கட்ட வேண்டும் அப்போ ஒரு மாதத்திற்கு 15000 கண மீட்டர் கு 15000 x 2500 = 37500000 (மூன்று கோடியே எழுவத்து இந்து லட்சம்) கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்கு - 12 மாதம் x 37500000 = ???, இதை குறைந்த பட்சமாக 15 வருடகளுக்கு கணக்கு பாருங்கள் இது வெறும் ராயல்டி தான். இன்னும் அரசு இடத்திலே எடுத்த கணக்கு, கண்மாய்ல எடுத்த கணக்கு நம்மால் யோசிக்க முடியாது 2007 ல இது பற்றி ஒரு செய்தி வந்தது - தனியார் நிறுவனம் ஒன்று (பீ . ஆர். பீ) தூதுகுடில 70000 கன மீட்டர் ஏற்றுமதி செய்திருகிறார்கள் அனால் &39ராயல்டி&39 செலுத்தி இர்ருபதோ வெறும் 2500 கன மீட்டர் களுக்கு தான் அந்த செய்தி வந்த பிற்பாடு இதை பற்றி எந்த செய்தியும் வர வில்லை. ஏனென்றால் அதிகாரிகள் காசு வாங்கி விட்டனர். இதுமட்டும் இன்றி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றல் அந்த கற்களுக்கு சில தன்மைகள் இறுக்க வேண்டும் தன் இடத்தில உள்ள கற்களுக்கு அந்த தன்மைகள் இல்லையென்றால் &39டாமின்&39 எடதிலோ, அல்லது பொறோம்போகிலோ அந்த தன்மையுள்ள கற்களை எடுத்து ஏற்றுமதி செய்துவிட்டு தன் இடத்தில உள்ள ஏற்றுமதிக்கான தன்மையில்லாத கற்களை அவ்விடத்தில் நிரப்பி விடுகிறார்கள் ஒரே இரவில் ஒரு இடத்தை தோண்டி பல ஆயிரம் கண மீட்டர் கற்களை எடுத்து மறுபடியும் மண்ணையும் கற்களையும் கொண்டு மூடி விட அவர்களிடம் இயந்திரங்கள் உள்ளன அவர்கள் இன்றைய செய்திதாள்களில் முன் ஜாமீன் கேட்டிருப்பது தெரிய வந்தது காரணம் - "ஏற்றுமதி விருது" பெற்றிருகிரர்கலாம் அரசை ஏமாற்றி பெற்ற விருதெல்லாம் ஒரு விருதா? இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த விருதுகளை பறிக்க வேண்டும் நிருவாகத்தை இழுத்து மூட வேண்டும் அதில உள்ள சொத்தை அரசு விற்று வரவு வைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Thiru - Chennai,இந்தியா
07-ஆக-201216:08:57 IST Report Abuse
ThiruCustoms House - ணாலே குஸ்டமப்பா .. அரசாங்க வேலைன சும்மாவா. ... சம்பாதிப்பான்களே.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.