டெசோ மாநாடு: பூமி பூஜையுடன் துவங்கியது பந்தல் அமைக்கும் பணி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பூமி பூஜை நடத்தப்பட்டு, டெசோ மாநாடு பந்தல் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 11 மணிக்கு, 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய, பிரமாண்டமான பந்தலை, தி.மு.க., தலைவர் கருணாநிதி பார்வையிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கு சம உரிமை, அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், வரும் 12ம் தேதி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், டெசோ மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகள், வெளிநாடுவாழ் தமிழ் எம்.பி.,க்கள், இலங்கை அரசியல் கட்சிகளின் எம்.பி.,க்கள் மற்றும் வட மாநில அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

50 ஆயிரம் பேர்: தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக, தொண்டர்கள் வாகனங்களில் சென்னைக்கு படையெடுத்து வரத் திட்டமிட்டுள்ளனர். தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள் வெளியிடும் அறிக்கையில், "மாநாட்டிற்கு தொண்டர்கள் திரளாக வர வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய, பிரமாண்டமான பந்தலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. பந்தலில் தீப்பிடித்து சேதம் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், மழை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தினால் மாநாடு பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், பந்தல் உரிமையாளர் சார்பில் பூமி பூஜை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தனது ஆதரவாளர்களுடன், ஒய்.எம்.சி.ஏ., மைதானம் சென்று பார்வையிட்டார். நேற்று காலை, 11 மணிக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., பந்தலுக்கு வந்தார். அங்கு காரில் அமர்ந்த வண்ணம், பத்து நிமிடங்கள் பந்தல் அமைக்கும் பணியை பார்øவியிட்டுச் சென்றார்.

- நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (166)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pullatpandi - uae,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஆக-201210:57:16 IST Report Abuse
pullatpandi இந்த மரியா யாரு? ஆனா? பெண்ணா? எவ்வளோ அடிச்சாலும் தாங்குறார். எல்லா கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்லிகிட்டே இருக்காரே ம்ம்ம்மம்மம்ம்கும் இவரு அதுக்கு சரியாய் வர மாட்டாரு.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-ஆக-201221:38:20 IST Report Abuse
g.s,rajan Anaithu India Indira Congress matrum athan kootani thavaru koottu kalavani katchigalidam irundhu India udanadiyaga suthandhiram adaiya vum,illaiyel Indiavai varaipadathil kooda theda mudiyathu g.s.rajan,chennai.
Rate this:
Share this comment
Cancel
Sathyasundaram Lakshminarayanan - Mumbai,இந்தியா
07-ஆக-201220:40:53 IST Report Abuse
Sathyasundaram Lakshminarayanan பூஜை போட்டு மாநாடு துவங்கும் நாத்திகவாதி
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-ஆக-201220:17:19 IST Report Abuse
Pasupathi Subbian மாநாட்டில் தானை தலிவி நமது பெண் இனத்தின் பெருந்தகை ஈழ விஜய திலகம் திருமதி கனிமொழி அவர்கள் வருவார்களா. அவர் தனது ஈழ அனுபவங்களை வெளியிடுவாரா ?
Rate this:
Share this comment
Cancel
vramanujam - trichy,இந்தியா
07-ஆக-201219:12:23 IST Report Abuse
vramanujam இதெற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது ?/ 2 g 700 கோடியில்லா?? இல்லை துண்டு விரிப்பிலா ??
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
07-ஆக-201221:35:09 IST Report Abuse
K.Sugavanamசற்றொப்ப முப்பத்துநாலு ஆண்டுகளுக்கு முன் "வசூலித்தது"கூட இருக்கலாம்.அப்போ அதுக்கு கணக்கெல்லாம் காட்டவில்லை,முக.இதுவும் இலங்கை தமிழர்,எல்டீடீஈ பணமாக கூட இருக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
07-ஆக-201218:12:13 IST Report Abuse
rajan ஈழம் தரப்போகும் தலைவா ஒரு சின்ன சின்ன ஆசை. நிறைவேதுவாயா இந்த தமிழ் மக்களுக்காக. டொசோ விழா துவங்கும் முன் &39மை நேம் இஸ் பில்லா&39 எனும் பாட்டு போட்டு துவங்கோணும். அப்போ தான் விழா களை கட்டும் தலிவா.
Rate this:
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
07-ஆக-201217:19:48 IST Report Abuse
Ayathuray Rajasingam இவ்விழாவுக்கு கருணாநிதியின் முக்கிய பங்காளியான காங்கிரஸ் கட்சியும் பங்கு கொள்ளுமா? இவர் முழு மூச்சுடன் ஆதரவளித்த பிரணாப் முகர்ஜியும் பிரதம விருந்தாளியாக இருப்பாரா?
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஆக-201217:51:23 IST Report Abuse
s.maria alphonse pandianஇந்த விஷயத்தில் காங்கிரசின் கொள்கை ஜெயாவுக்கே ஒத்து போகும்...
Rate this:
Share this comment
S.Bala - tamilnadu,இந்தியா
07-ஆக-201218:02:06 IST Report Abuse
S.Balaஅதைவிட முக்கியமானது மானாட மயிலாட நிகழ்ச்சி உண்டா ?...
Rate this:
Share this comment
JEYARAJ S - kanchipuram,இந்தியா
07-ஆக-201219:26:12 IST Report Abuse
JEYARAJ Sகருணாநிதி அவர்களின் நாடகம் அவர் மூச்சு உள்ளவரை இருக்கும். தமிழின புரட்டு நடக்கும்....
Rate this:
Share this comment
anbu - trichy,இந்தியா
07-ஆக-201220:28:50 IST Report Abuse
anbuமரியா சொல்வதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை தான் ஆனால் கடைசியில் தலைவர் பல்டி அடிக்காமல் இருந்தால் சரிதான்...
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஆக-201214:04:39 IST Report Abuse
periya gundoosi ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது ஆன்மீகத் தத்துவம், ஆனால் இதை 40 ஆண்டுகளுக்கு முன்னே கருணா தன் குடும்பத்தைப் பார்த்து சொல்லிக் கொண்டது. இன்று ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசியல் குடும்பம் உண்டென்றால் அது மஞ்சத்துண்டு குடும்பம்தான். ஏன் சும்மா வயிற்றெறிச்சலை வாங்கிக் கொள்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஆக-201213:50:16 IST Report Abuse
Nallavan Nallavan இந்த மேடையில "உண்ணாவிரத சிறப்புக் காட்சி" காமெடி சீன் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
Pongutamil - chennai,இந்தியா
07-ஆக-201213:43:53 IST Report Abuse
Pongutamil கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம். அவரு ஆட்சில இருக்கும்போது அங்க டெய்லி 1000 க்கு மேல மக்களை கொன்னுட்டு இருந்தனுங்க. அப்பெல்லாம் சினிமா கு கதை எழுதுறதும் நமீதா டான்ஸ் பாக்குறதையும் பண்ணிட்டு இப்போ நீலி கண்ணீர் வடிக்கிறார். ஆட்சி ல இல்லாமல் இவராலே ஒரு நாள் கூட இருக்கமுடியாது. எதையாவது தூண்டி விட்டு குளிர் காய வேண்டியது. எல்லாரும் செத்தாச்சி. இபோ டெசோ அது இதுன்னு கெளப்பி அங்க கொஞ்சம் நிம்மதியா இருக்குறவன் லைப் லும் மண்ணள்ளி போட போறாரு.
Rate this:
Share this comment
tamilnambi - new delhi,இந்தியா
07-ஆக-201214:50:02 IST Report Abuse
tamilnambiபிரபாகரன் என் அண்ணன் சிங்களவனோடு எப்படி கைகோர்த்து வாழ்வது தனி தமிழ் ஈழமே எங்கள் இலக்கு என்று உங்களுக்கு பல்லக்கு தூக்கி பஜனை பாடிக்கொண்டு இருக்கும் சீமானும் வைக்கோவும் என்ன கிழிக்க போகிறார்கள் தேர்தல் நேரத்தில் கருணாநிதி இனத்துரோகி இருதிபோரின்போது காங்கிரெஸ் கட்சியோடு சேர்ந்து இலங்கையில் பல்லாயிரக்கணக்கானோரை ராஜபக்சே கொலை செய் உதவியவர் என்று சொல்லி வாக்கு கேட்ப்பார்கள் இதற்க்கு தானே இலங்கை பிரட்சினையை இவர்கள் கையாண்டு வருகிறார்கள் வேறு என்ன கிழித்துவிட்டார்கள் வைக்கோவும் திடீர் தமிழன் சீமானும் இந்த லட்சணத்துல தினமலர்ல இலங்கை தமிழர்கள் மேல் மிகுந்த பாசம் கொண்டவர்கள் விமர்சனம் செய்துள்ளது இவர்கள் யார் என்பதை வெளிபடுத்திக்காட்ட நிச்சயம் உதவும்...
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஆக-201215:09:19 IST Report Abuse
s.maria alphonse pandianஅப்போது நடந்து கொண்டு இருந்தது புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையேயான போர்....(போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்?) அதில் இரு தரப்பிலும் பலர் இறந்து கொண்டு இருந்தார்கள்..அந்த போரை நிறுத்திக்கொள்ள கலைஞர் மத்திய அரசின் மூலம் முயற்சி எடுத்தார்..புலிகள் அதற்கு உடன்படவில்லை......
Rate this:
Share this comment
Thiru - Chennai,இந்தியா
07-ஆக-201216:24:18 IST Report Abuse
Thiruஏன் கலைஞர் தூது செய்து கொண்டிருந்தார், கூட்டணியில் இல்ருந்து விலகி இருக்கலாமே....
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஆக-201216:42:59 IST Report Abuse
s.maria alphonse pandianதிரு அவர்களே..போர் நடந்தது இலங்கை தமிழ் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே...அவர்கள் இருவருமே இலங்கை பிரஜைகள்....நமது மொழியை பேசுபவர்கள் என்பதற்காக போரை நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்த மூன்றாம் மனிதராக நாம் கேட்டுக்கொண்டதை விடுதலை புலிகள் ஏற்கவில்லை...இதற்காக திமுக ஏன் இந்திய அரசு கூட்டனியிலிருது விலக வேண்டும்?...
Rate this:
Share this comment
alriyath - Hongkong,சீனா
07-ஆக-201217:23:37 IST Report Abuse
alriyathஒருபுறம் நீங்க விடுதலை புலிகல பேச அலைபீங்க, மறுபுறம் இலங்கை ராணுவத்திற்கு பயர்சி கொடுப்பீங்க..இன்னும் காங்கிரஸ் காரர்களை நம்புகிறீர்களே..என்ன கொடுமே மேடம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்