Advertisement
நீண்ட கால நட்புக்காக ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்கிறோம்: ஜெ.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 ஆக
2012
00:11
பதிவு செய்த நாள்
ஆக 06,2012 23:44

சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்கிறோம் என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி: துணை ஜனாதிபதி தேர்தலில், ஜஸ்வந்த் சிங்கை அ.தி.மு.க., ஆதரிக்க இரண்டு காரணங்கள் உள் ளன. ஒன்று, கடந்த 28 ஆண்டுகளாக ஜஸ்வந்த் சிங்குடன் எனக்கு நட்பு உள்ளது. 1984ல் அவரும், நானும் பார்லிமென்டில் இணைந்து பணியாற்றியுள்ளோம். இந்த நீண்ட கால நட்புக்காக அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன். இரண்டாவது, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமான பங்கு உள்ளது. இதில், மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார் என்பதற்காக, எதிர்க்கட்சி போட்டியிடாமல் இருந்துவிட முடியாது. எதிர்க்கட்சி தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு ஜெயலலிதா கூறினார். முன்னதாக, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்த ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க.,வின் ஆதரவைக் கோரினார்.


இதன் பின், நிருபர்களைச் சந்தித்த அவர், ""துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான எனக்கு, ஆதரவு அளிக்கும்படி அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டேன். என்னை ஆதரிப்பதாக அவர் உறுதியளித்தார். என் வெற்றி செவ்வாய் கிழமை தெரிந்துவிடும். துணை ஜனாதிபதி தேர்தலில், நடுநிலை வகிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எடுத்துள்ள முடிவு குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை,'' என்றார்.


அமைச்சர்களுடன் ஆலோசனை: கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசின் நிர்வாகம் குறித்து அவர் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. கொடநாட்டில் சில வாரங்கள் தங்கியிருந்தபடியே, அரசுப் பணிகளைக் கவனித்த வந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் சென்னை திரும்பினார். சென்னை வந்த அவருக்கு, சாலைகளின் இருபுறங்களிலும் அ.தி.மு.க., கொடி மற்றும் தோரணங்களைக் கட்டி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பார்லிமென்ட் அ.தி.மு.க., தலைவர் தம்பிதுரை ஆகியோர் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களுடன் அரசின் நிர்வாகம் குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் ஆலோசித்ததாகத் தெரிகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில், ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்க எடுத்துள்ள முடிவு குறித்தும், அமைச்சர்களுடன் ஆலோனை நடத்தினார் என, அ.தி. மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் மூத்த அதிகாரிகள் சிலரும் முதல்வரைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.


சென்னை திரும்பினார் முதல்வர்: கொடநாடு எஸ்டேட்டில் இருந்த அரசுப் பணிகளை கவனித்து வந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். கொடநாடு எஸ்டேட்டில் தங்கி அரசு நிர்வாகத்தை கவனித்து வந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை 3 மணிக்கு, கோவையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை, அ.தி.மு.க., சபைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.


ம.தி.மு.க., ஆதரவு: துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிப்பதாக, ம.தி.மு.க., அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த, 15 எம்.பி.,க்களின் ஆதரவை, ஜஸ்வந்த் சிங் பெற்றுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான ஜஸ்வந்த் சிங், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவை, சென்னையில் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். இதையடுத்து, ஜஸ்வந்த் சிங்கை ஆதரிப்பதாக வைகோ அறிவித்தார். ம.தி.மு.க.,வுக்கு ஒரு எம்.பி., உள்ளார். ஜஸ்வந்த் சிங்கை, அ.தி.மு.க.,வும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அ.தி.மு.க.,வுக்கு பார்லிமென்டின் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், 14 உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வும்,- ம.தி.மு.க.,வும் சேர்ந்து, 15 எம்.பி.,க்களின் ஆதரவை, ஜஸ்வந்த் சிங்கிற்கு அளிக்கின்றனர்.


வெற்றி பெறுவேன்: ஜஸ்வந்த் சிங் நம்பிக்கை: ""துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கோர வந்திருக்கிறேன்,'' என்று, ஜஸ்வந்த்சிங் கூறினார்.

பா.ஜ., கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜஸ்வந்த்சிங், நேற்று மதியம், 1.40 மணிக்கு டில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை, பா.ஜ., சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இல.கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில், ஜஸ்வந்த்சிங் அளித்த பேட்டி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க.,வின் ஆதரவு கோர வந்திருக்கிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடு தான், ஓட்டு கேட்டு வந்துள்ளேன். காங்கிரஸ், பா.ஜ., அல்லாத ஒருவர் தான் அடுத்த பிரதமராக அதிக வாய்ப்புள்ளது என்று, அத்வானி கூறியிருப்பதற்கு, அவர் மோடியை மனதில் வைத்து அப்படி சொன்னாரா என்று, நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. துணை ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதால், அரசியல் பேச விரும்பவில்லை. இவ்வாறு ஜஸ்வந்த்சிங் பேட்டியளித்தார். அவரிடம் ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வும்,- அ.தி.மு.க.,வும், சங்மாவை ஆதரித்ததை போல, வரும் பார்லிமென்ட் தேர்தலிலும் கூட்டு தொடருமா என்று கேட்டதற்கு, "அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதால், அரசியல் பேச முடியாது' என்றார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (56)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manoharan - chennai,இந்தியா
09-ஆக-201213:54:51 IST Report Abuse
manoharan ஜனாதிபதி தேர்தலில் மூஞ்சில் கரி பூசி கொண்டார். இப்போ இன்னொரு கரி. இந்த அழகில் பிரதமர் கனவு வேறே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
07-ஆக-201218:26:20 IST Report Abuse
Ayathuray Rajasingam நிதானமான பதில்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
alriyath - Hongkong,சீனா
07-ஆக-201217:31:20 IST Report Abuse
alriyath தமிழன் ஒரு தடவயாச்சும் இந்தியாவ ஆழட்டுமையா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
santhosh gopal - Vellore,இந்தியா
07-ஆக-201215:26:06 IST Report Abuse
santhosh gopal காங்கிரஸ் BJP அல்லாதவர் தான் பிரதமராக வாய்ப்பு என்று அத்வானி கூறியுள்ளார். இதற்க்கு என்ன அர்த்தம்? மோடி பாஜகவை சேர்ந்தவர்.... அப்படி என்றால் அந்த மூன்றாவது நபர் வேறு யாரும் இல்லை, ஜெயலலிதா அம்மா தான்.... இதை கேட்டவுடனே தமிழ்நாட்டில் மஞ்சள் நிறத்தில் உள்ளவருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
07-ஆக-201219:37:52 IST Report Abuse
மதுரை விருமாண்டி"அப்படி என்றால் "..?? மோடிக்கும், அத்வானிக்கும் இடையில் உள்ள பனிப்போரின் உச்சகட்டம் நெருங்குகிறது என்று அர்த்தம்.. அந்த பனி உருகும் போது, பிஜேபி என்ற கட்சி காணாமப் போகப் போகுதுன்னு அர்த்தம் தான்.. சங் பரிவார் நண்பர்களின் வயிற்றில் தான் மஞ்சளையும், புளியையும் சேர்த்துக் கரைத்த எஃபெக்ட் இருக்கும் என்று நம்பலாம்.. மஞ்ச துண்டு "எல்லாம் துறந்தவர்"... யாரோடவாவது ஒட்டிக் கொண்டு "எப்படியும்" காலம் தள்ளி விடுவார்.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஆக-201215:05:04 IST Report Abuse
Nallavan Nallavan அப்ப பாஜகவுக்கு 1999 ஆப்பு திரும்ப உண்டா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
07-ஆக-201214:44:23 IST Report Abuse
Kannan இரண்டாவது, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமான பங்கு உள்ளது." - தமிழ்நாட்டில் மட்டும் இந்த அம்மா ஆட்சியில் இருக்கும்போது மட்டும் இந்த பங்கு பறிக்கப்படும். இவரை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது. என்ன கொள்கையோ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
07-ஆக-201212:39:37 IST Report Abuse
ram prasad அதான் தெரியுமே , அவாளை ஆதரிக்க காரணம் எதற்கு ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஆக-201212:03:49 IST Report Abuse
Pugazh V ஜெயா ஏன் ஜஸ்வந்த்தை ஆதரிக்கிறார்? சங்கமா மாதிரி இன்னொரு பழங்குடியினத்தை சேர்ந்த ஆள் கிடைக்க வில்லையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
pee jee pee - asdf,அல்ஜீரியா
07-ஆக-201211:59:05 IST Report Abuse
pee jee pee மாற்று கட்சி என்று ஒன்று இல்லாமல் இருப்பதற்காகவே காங்கிரசால் ஏற்படுத்தப்பட்ட கட்சி தான் பீ ஜே பி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
07-ஆக-201210:29:06 IST Report Abuse
krishna mr lamanaba பிரதமர் ஆகும் தகுதி ஜெயாவுக்கு இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஆக-201214:50:47 IST Report Abuse
Nallavan Nallavanமஸ்டர் ரோல் ஊழல், கோதுமை பேர ஊழல், பூச்சி மருந்து ஊழல் என்று தொடங்கி 2G வரை (தெரிந்து) முடித்தவர்களின் தலைமையை ஜனாதிபதியாகும் பேச்சு இருந்தது அது தவறல்ல என்றால் இதுவும் தவறல்லவே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.