புதுடில்லி: அரசியல் கட்சி துவங்க முடிவு செய்துள்ளதை அடுத்து, லோக்பால் மசோதாவுக்காக அமைக்கப்பட்ட ஹசாரே குழு கலைக்கப்பட்டுள்ளது. "லோக்பால் மசோதா குறித்து, அரசுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்பட மாட்டாது'என, அன்னா ஹசாரே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும், டில்லியில், 10 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்தும், அவர்களுடன் பேச்சு நடத்த, அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்த ஹசாரே குழுவினர், அரசியல் கட்சி துவங்கப் போவதாக அறிவித்தனர்.
மாற்று வழி: இந்நிலையில், அன்னா ஹசாரே, தன் வலைப்பூவில் (பிளாக்) கூறியுள்ளதாவது: லோக்பால் மசோதாவை கொண்டு வருவதற்காகவும், இதுகுறித்து அரசுடன் பேச்சு நடத்துவதற்காகவும், அன்னா ஹசாரே குழு அமைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவுக்காக, மாற்று வழியில் போராட முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, இன்று முதல் ஹசாரே குழு கலைக்கப்படுகிறது. இனிமேல், அரசுடன் எந்த பேச்சும் நடத்தப் போவது இல்லை. இன்று முதல், ஹசாரே குழு, ஹசாரே உயர்மட்டக் குழு என்று, எதுவும் இல்லை.
மயங்க கூடாது: ஊழல் கறைபடியாத நபர்கள், பார்லிமென்ட்டுக்கு செல்ல வேண்டும் என, விரும்புகிறோம். ஆனால், நான் பார்லிமென்ட்டுக்கு போகப்போவதும் இல்லை, அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கப் போவதும் இல்லை. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், மீண்டும் மகாராஷ்டிராவுக்கு சென்று, என்னுடைய பணிகளை கவனிக்க போய் விடுவேன். பார்லிமென்ட்டுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், பணத்துக்கோ, அதிகாரத்துக்கோ, மயங்கிவிடக் கூடாது. மக்களுக்காகவும், நாட்டுக்காகவும், சேவை செய்ய வேண்டும். வரும் 2014ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் தான், ஊழலை ஒழிப்பதற்கு, மக்களுக்கு கிடைக்கும், கடைசி வாய்ப்பு. இதற்கு பின், வாய்ப்பு கிடைப்பது கடினம்.
பிரச்னைகள்: அரசியல் கட்சி துவங்குவதில், ஏராளமான பிரச்னைகள் உள்ளன. கட்சிக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வது மிகவும் சிரமம். குண்டர் கள், ஊழல்வாதிகள் போன்றவர்கள், கட்சியில் சேர்ந்தால், இந்த அமைப்பின் நோக்கம் என்ன ஆகும்? அரசியல் கட்சியினர், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒரு தொகுதிக்கு, 10 முதல் 15 கோடி வரை செலவிடும்போது, இதை நாம் எப்படி எதிர்கொள்வது? நம் அமைப்பில் இருப்பவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றதும், ஊழல்வாதிகளாக மாறிவிட்டால் என்ன செய்வது, இதை எப்படி கண்காணிப்பது என்பது போன்ற கேள்விகள் நம் முன் உள்ளன. அடுத்த 18 மாதங்களுக்கு, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளேன். இவ்வாறு அதில் ஹசாரே கூறியுள்ளார்.
தாக்கரே வரவேற்பு: சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தன் கட்சி பத்திரிகையான "சாம்னா'வில் எழுதியுள்ளதாவது: "அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம், அரசியல்' என, சில அறிவாளிகள் கூறினர். இந்நிலையில், அன்னா ஹசாரே குழுவினர் அரசியலுக்கு வந்துள்ளது, ஆச்சர்யமாக உள்ளது. எப்படி இந்த அதிசயம் நடந்தது? ஹசாரே குழுவினரின் உண்ணாவிரதம், மக்களை ஈர்க்காததை அடுத்து, அவர்களின் அணுகுமுறையில் ஏதாவது மாற்றம் ஏற்படலாம் என, கருதினேன். அது தான் இப்போது நடந்துள்ளது. ஆனாலும், ஹசாரே குழுவினர், அரசியல் பாதைக்கு திரும்பியுள்ளதை வரவேற்கிறேன். இவ்வாறு பால் தாக்கரே எழுதியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இத்தனை நாளா இவருக்கு பாஜவினர் ஆதரவு தந்தனர் , இப்போ இவர் கட்சி ஆரம்பித்து நாளை இவர் பா ஜ கவுடனே கூட்டணி வைத்தாலும் கூட இவர் கட்சிக்கு என்று சீட்டு ஒதுக்கணும் இவர் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொன்ன பின்னும் இவரை ஆதரிக்க பா ஜ வினருக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கு ?
ஊழலை ஒழிப்பேன் என்று சொல்பவர் , தன்னுடன் இருக்கும் ஊழல் வாதிகளை ஒழிக்க மறுப்பது ஏன் கர்நாடகாவில் பா ஜ க என்ன ஆட்சி நடத்து கிறதாம் ? அதுவும் ஊழல் ஆட்சி தானே ? அதை எதிர்த்து போராட இவர் மறுப்பது ஏன் ?
ஊழலை எதிர்க்க உண்ணாவிரதம் இருந்து தேவையற்ற ஊளை சதையை குறைத்து கொண்டு விட்டார் அவ்வளவு தான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.