E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது "ரோவர்' விண்கலம்: 8 மாத பயணம் வெற்றி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 ஆக
2012
00:13
பதிவு செய்த நாள்
ஆக 06,2012 23:48

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட "ரோவர்' விண்கலம், எட்டு மாதப் பயணத்துக்கு பின், நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள், பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆராய, சில விண்கலங்கள் அனுப்பப்பட்டன. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக, சில தடயங்கள் கிடைத்தன.

"கியூரியாசிட்டி': இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த நவம்பர் மாதம், "ரோவர்' விண்கலம் செலுத்தப்பட்டது; 250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம் தயாரித்து, செவ்வாய் கிரகத்தில் நேற்று தரையிறங்கியது. "ரோவர்' விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "கியூரியாசிட்டி' என்ற "ரோபோ' வாகனம், செவ்வாயின் நிலப்பரப்பில், நேற்று காலை, இறக்கி விடப்பட்டது. "பாராசூட்' மூலம் மெதுவாக, செவ்வாயின் புவி பரப்பைத் தொட்ட, "கியூரியாசிட்டி', தரையிறங்கியதற்கு ஆதாரமாக, சில படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

மகிழ்ச்சி: ரோவர் விண்கலம் தொடர்பாக, 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த "நாசா' விஞ்ஞானிகள், "கியூரியாசிட்டி' செவ்வாயில் இறங்கியதும், கட்டுப்பாட்டறையில் இருந்தபடி, ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

96 மைல் பரப்பளவு: ஆறு சக்கரங்களுடன் கூடிய, "கியூரியாசிட்டி' "ரோபோ' வாகனத்தில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை ஆராயக்கூடிய வசதி உள்ளது. செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்ட பின், ஒரு மாதம் கழித்து, "கேலே' பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ள "கியூரியாசிட்டி' ஆய்வுகளை துவங்கும். செவ்வாய் கிரகத்தில் 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து, "கியூரியாசிட்டி' ஆய்வுகளைச் செய்யும். புளூடோனியம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பேட்டரி, இந்த ரோபோவில் உள்ளது. "கியூரியாசிட்டி'யுடன் இணைக்கப்பட்டுள்ள ஆன்டெனா, ஸ்கேனர் கருவிகள், ஒரு வாரத்துக்கு பிறகு செயல்பாட்டுக்கு வர உள்ளன.

நேரடி ஒளிபரப்பு: ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கும் நிகழ்ச்சி, நியூயார்க்கின், "டைம்ஸ்' சதுக்கத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ""ஓரிரு நாட்களில் "ரோவர்' விண்கலத்திலிருந்து துல்லியமான படங்கள் கிடைக்கும்,'' என, "நாசா' மைய தலைமை இன்ஜினியர் ராபர்ட் மேனிங் தெரிவித்துள்ளார்.

அமிதாப் கோஷ்: ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்தியர் அமிதாப் கோஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hk.nazir - kl,மலேஷியா
08-ஆக-201213:01:10 IST Report Abuse
hk.nazir எபோழுதும் மதப்பித்தில் இருக்கும் சில முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களும் தொழில்நுட்பத்தையும் வான்வெளி ஆராச்சிகளையும் நம்புவதில்லை. இது அவர்களுடைய மடமைத்தனம்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
&2970&2991&3007&2985&3021&3000&3021 &2986&3007&299 - NASA KSC, Orlando, FL,யூ.எஸ்.ஏ
07-ஆக-201223:54:24 IST Report Abuse
&2970&2991&3007&2985&3021&3000&3021 &2986&3007&299 இந்த முறை "கியூரியாசிட்டி ரோவர்" ப்ரோக்ராமில் வெகு சில இந்தியர்களே பங்கு பெற்றனர் :( அவர்களில் முக்கியமானவர்கள் "அஷ்வின் வசாவாத்" ( Ashwin Vasavada - Deputy Project Scientists , JPL MARS , NASA) மற்றும் "அனிதா சென்குப்தா" (Anitha Sengupta - EDL Supersonic Parachute Engineer , JPL MARS , NASA ) இனி வரும் காலங்களில் மேலும் பல இந்தியர்கள் இது போல் பல நாசா மிஷன்களில் ஈடுபட வேண்டும் என்று வாழ்த்துவோம். மேலும் இஸ்ரோ இந்தியாவில் இது போன்ற பல மிஷன்களை வெற்றிகரமாக செய்து சாதனை புரிய வேண்டும் என்று வாழ்த்துவோம்
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Nanmai Nanmaigal - tuticorin,இந்தியா
07-ஆக-201220:09:56 IST Report Abuse
Nanmai Nanmaigal nanmaiசெவ்வாய் 7, ஆகஸ்ட் 2012 - 03:55:35 PM | Posted IP 59.92 முடிவு காலத்திலே அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள் அறிவும் பெருகிபோகும் தானியல் 12 4 அதுதான் இது. அன்று தானியலுக்கு தேவனால் தெரிவிக்கப்பட்டது கடந்த 2011 ஜெனிவாவில் அணுக்களை மோதவிட்டு ஆராய்ந்தனர் அதே இடத்தில கடந்த மாதத்தில் ஆராய்ந்ததில் ஹிக்ஸ் போசன் என்னும் கடவுள் துகள்களை தென்பட்டதாக தெரிவிக்கின்றனர் கடந்த முறை பீனிக்ஸ் விண்கலம் 9 மாத இடைவெளியில் செவ்வாய் சென்றது தற்போது ரோவர் சென்றிருக்கிறது பரலோக தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் நிறைவேறுகிறது அவ்வள்வுதான் . அறிவின் மிகுதியால் ஆராய்சிகள் நடத்தலாம் அனால் மனிதனை குடியமர்த்துவது சாத்தியமாகாது பைபிள் அப்படிதான் சொல்கிறது வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதபடி என்றும் சொல்கிறார் மற்று மோரு வசனத்தில் பூமியையோ மனு புத்திரருக்கு கொடுத்தார் என்றும் இருக்கிறது நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டை கட்டினாலும் அவ்விடத்திலிருந்தும் உன்னை விளதள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் . ஒபதியா4 இந்த மாதிரி ஆய்வுகள் காலம் கடைசி என்பதை நமக்கு கட்டுகிறது வேதத்தின் வார்த்தைகள் நிறைவேறி வருகிறதுபோல ஏசுவின் வருகையும் நியயதீர்பும் நிறைவேற காத்திருகிறது இதற்கு அடையாளமாக உலகமெங்கும் அழிவுகள் அதிகரித்து வருகிறதை காணமுடிகிறதே இன்றே மனந்திரும்புங்கள் இனி காலம் செல்லாது .இது பரலோக தேவனின் பணிவான வேண்டுகோள் god bless you.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
rajan - kerala,இந்தியா
07-ஆக-201218:16:35 IST Report Abuse
rajan வாழ்த்துகள். அப்படியே இன்னும் கொஞ்சம் ஆராச்சி பண்ணி எங்க நாட்டில உள்ள ஊழல் அண்ணன்களுக்கு அங்கேயே பிளாட் போட்டு வீடு கட்டி குடி பெயர்துருங்க. எங்களால அவுகளை திருத்தவும் முடியல்லே தண்டிக்க சட்டமும் இல்லே. உங்களுக்கும் புண்ணியமாய் போகும். நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க ஒரு பெரிய லிஸ்டே வரும் உங்களை தேடி.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
mathi - chennai,இந்தியா
07-ஆக-201214:12:22 IST Report Abuse
mathi ஒரு வேலை அங்கு நமைப்போல வேற்று கரக மனிதன் இருந்தா அன்பா இருபங்களா சண்டை போடுவாங்களா
Rate this:
0 members
0 members
0 members
Madukkur Nesan - Madukkur ,இந்தியா
07-ஆக-201218:11:03 IST Report Abuse
Madukkur Nesanசத்தியமா ஊழல் செய்ய தெரிந்து இருக்க வாய்ப்பில்லை....
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Krishnaswamy - chidambaram,இந்தியா
07-ஆக-201213:59:19 IST Report Abuse
Krishnaswamy இயற்கையை ஒரு அளவுக்கு மேல் சோதித்தால் உலக அழிவிட்கு வழிகோலும். வேண்டாம் விபரீத விளையாட்டு
Rate this:
0 members
0 members
0 members
Cancel
shiva - Bangalore,இந்தியா
07-ஆக-201213:13:40 IST Report Abuse
shiva ஹையோ ஹையோ இவங்க பேசுரதலா பார்த்த எனக்கு சிரிப்ப அடக்கவே முடியல
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Lightning View - Fahaheel,குவைத்
07-ஆக-201211:00:11 IST Report Abuse
Lightning View கடவுளின் படைப்பில் மனிதன் மிக சிறந்த படைப்பு. சிந்தித்து தன்னம்பிக்கையோடு விடா முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்கு இதுவும் இரு எடுத்துகாட்டு.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
mr.citizen - Salem,இந்தியா
07-ஆக-201209:55:13 IST Report Abuse
mr.citizen அவர்களுக்கு மனிதர்களை பற்றி எல்லாம் ஒரு புண்ணாக்கு கவலையும் இல்லை.......மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கும் முயற்சி இது.....கண்டுபிடித்து அதையும் நம் போன்ற முட்டாள் அடிமை புத்தி தேசங்களுக்கு விற்று எப்போதும் உலக வல்லரசாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் உண்மை நோக்கம்.....
Rate this:
0 members
0 members
0 members
Cancel
sombu - chennai,இந்தியா
07-ஆக-201207:21:17 IST Report Abuse
sombu யாரும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ். எனக்கு தெரிந்து நாம் அனுப்பும் தொலைதொடர்பு செயற்கைகோள்கள் எல்லாம் பூமியிலிருந்து அதிகபட்சம் சில ஆயிரம் கிலோமீட்டர் (High Earth Orbit 36 ,000 Km ) தூரத்தில்தான் பயணித்து கொண்டிருக்கின்றன. இந்த 36000 km துரத்தில் இருந்து பூமிக்கு பெறப்படும் SIGNAL STRENGTH IS VERY VERY POOR IN THE ORDER OF MICRO OR NANO VOLTS ONLY. அப்படி இருக்கையில் எப்படி 57,00,00,௦௦௦ km தொலைவில் உள்ள செய்வயிளிருந்து சிக்னல் (link ) பெறபடுகிறது..
Rate this:
0 members
0 members
0 members
alanraj - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஆக-201208:24:22 IST Report Abuse
alanrajஹலோ பாஸ், அங்க ஏற்கனவே "மார்ஸ் ஒடிஸி" என்னும் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தை சுற்றிவந்து கொண்டு இருக்கிறது. so , இந்த "க்யூரியாசிட்டி" சேகரிக்கும் தகவல்கள் ஒடிஸி வழியாக சில வினாடிகள் தாமதமாக புவி விண்வெளியில் அமைக்கபட்டுள்ள மிதக்கும் ஆய்வுகூடத்திற்கு வந்து சேர்ந்து பின்பு "நாசா" கட்டுபாட்டு அறைக்கு தகவல்கள் கிடைக்கபெறும்....
Rate this:
0 members
0 members
0 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.