Advertisement
மந்திரிகள், அதிகாரிகளுடன் கோட்டையில் ஜெ., 90 நிமிடம் ஆலோசனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2012,23:31 IST
மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 09,2012,00:37 IST

சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா வறட்சி மற்றும் கிரானைட் குவாரி ஊழல் விவகாரங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று கோட்டையில் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள் 90 நிமிடங்கள் நடந்தன.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்த முதல்வர், நேற்று முன்தினம் பிற்பகல் சென்னை வந்தார். துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்த அவர், அன்று கோட்டைக்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணி வரை, கோட்டைக்கு அவர் வரும் எந்த திட்டமும் இல்லை என்று முதலில் கூறப்பட்டது. பின்பு திடீரென பிற்பகல் 2:20 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா, கோட்டைக்கு வந்தார். முன்னதாகவே அவர் வருகை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால், அமைச்சர்கள் அனைவரும், தலைமைச் செயலகத்தில் ஆஜராகியிருந்தனர்.


பரபரப்பு: முதல்வரின் இந்த திடீர் வருகையால், தலைமைச் செயலக வட்டாரம் பரபரப்படைந்தது. தொடர்ந்து, ஒண்ணரை மணிநேரம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருந்தார். அதன் பின் புறப்பட்டு சென்றார். அலுவலகத்தில் கோப்புகளை பார்ப்பதற்காக முதல்வர் வந்ததாக கூறப்பட்டது. ஆனால், தமிழகத்தை உலுக்கி வரும் கிரானைட் குவாரி பிரச்னை, காவிரி டெல்டா பகுதி விவசாயம், சென்னையில் தற்போது நிலவி வரும் காலரா பீதி


குறித்த பிரச்னை தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. கிரானைட் குவாரி விவகாரத்தில், தற்போது சிக்கலில் உள்ள குவாரி உரிமையாளர்கள், முன்ஜாமின் கேட்டு மனுக்கள் அளித்துள்ளனர். இது குறித்து, சட்டத்துறை செயலருடன் ஆலோசனை நடத்தியதாகவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.


சென்னையில் பரவி வரும் வாந்தி, பேதிக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், காவிரி டெல்டா பகுதியில் நிலவி வரும் வறட்சி தொடர்பாக, அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, கனிமவள ஊழல் குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை


உருவாகி வருகிறது. அதற்கு அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆலோசனைகள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த ஆலோசனைகளை அடுத்து தமிழக முதல்வர், தமிழகம் சந்திக்கும் பல்வேறு முக்கிய பிரச்னை களுக்கு முக்கிய முடிவுகளை அடுத்தடுத்து அறிவிக்கலாம் என்ற கருத்தும் பரவலாகப் பேசப்படுகிறது. நேற்று காலையில் நூறு நாட்கள் வேலை திட்டம் குறித்து தணிக்கை நடைமுறையை அரசு அறிவிப்பாக வெளியிட்டதை அடுத்து, இந்த ஆலோசனையும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் அறிவிப்புகளை, அடுத்த சில நாட்களில் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (142)
Mahendran Madurai - Madurai,இந்தியா
09-ஆக-201215:55:23 IST Report Abuse
Mahendran Madurai லஞ்சம் வாங்குபவர்களை பணி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். . இளைஞகர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அரசு பணி எனில் பயம் வர வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
amirtha rani - chennai,இந்தியா
08-ஆக-201221:10:20 IST Report Abuse
amirtha rani யார் காலையில் 7 மணிக்கு வேலையை தொடங்குகிறார்களோ அவர்கள்தான் நல்லாட்சி கொடுக்க முடியும். இது சோம்பேறி. 2 மணிக்கு வந்து ஒன்னும் செய்ய போறது இல்ல,எல்லாம் நம்ம தல விதி ,பத்து நாளுக்கு 11 மணிக்கு எழுந்து பாருங்க உங்களுக்குள்ள ஒரு அழுக்கு ,மோசமான சிந்தனை தான் வரும்,அதுதான் ஜெயா சசி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GURU.INDIAN - beiruth,லெபனான்
08-ஆக-201221:08:41 IST Report Abuse
GURU.INDIAN ஹலோ சொம்பு மலரே 90 நிமிடம் இன்னும் மிக சிறியதாக இருக்கிறது. 900 வினாடிகலஎன்று போட்டு பாராட்டு பெறவும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
NVRAMANAN - California,யூ.எஸ்.ஏ
08-ஆக-201220:55:02 IST Report Abuse
NVRAMANAN அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதிலும் திரு சகாயம் போல் பிறப்பது மிகவும் அரிது .IAS அதிகரிகள் இவர் போல செயல் பட்டால் நாட்டின் வளம் நிச்சயம் பெருகும்..நல் ஆட்சி கிடைக்கும் .திரு சகாயம் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துகொள்கிறேன் .USA sanfransisco நகரிலிருந்து, ந.வெ ரமணன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GURU.INDIAN - beiruth,லெபனான்
08-ஆக-201220:08:42 IST Report Abuse
GURU.INDIAN தின மலரே செம்பு அடிச்சது போதும். செம்பு ரொம்ப அடி வாங்கிருச்சு . இனிமேல் அடிச்சா ஓட்டைதான் விழும் . அது என்ன 90 நிமிடம் ? ஏன் இந்த பாரபட்சம் ? 900 வினாடிகல்னு போடலாமுள்ள ? ஒருமாதம் அதாவது 24 + 30 = 720 மணிநேரம் ஒய்வு. அதாவது உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டு . .இப்போவந்து பந்தாகாட்டுறீங்க ? அவ்வளவுதானே ? என்னதா புடுங்க போறீங்க அப்படி ? கொள்ளை அடிப்பவன்தான் உங்களுக்கு தேர்தலுக்கு நிதிஉதவி கொடுக்குறானே ? அப்புறம் அவன நீங்க எப்படி புடுங்கமுடியும் ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
08-ஆக-201217:14:28 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar மிகவும் வரவேற்க படவேண்டிய நடவடிக்கை இத்துணைக்கும் காரணம் பத்திரிகைகள் செய்திகள் விழிப்புணர்வு ஆகும் நமது முதல்வர் அவர்கள் கற்பனை கலை துறை- அதாவது சினிமா துறையை சேர்த்தவர்கள் இருந்தாலும் தாம் படித்த நல்ல கல்வியால் மட்டுமே அவர் போராடும் குணம் கொண்டவராக விளங்குகிறார் என்பதை மக்கள் அறிய வேண்டும் அவர் நிர்வாக கலையில் சிறந்து விளங்க பொதுமக்கள் கோரிக்கை மனுவாக அனுப்ப வேண்டும் அப்போதுதான் தமிழகம் முழுவதும் குற்றங்கள் தடுக்கப்படும் மக்கள் வாக்கு மட்டும் போட்டால் போதாது சரியான ஆலோசனைகள் வழங்க வேண்டும் மக்கள் ஆட்சி நிர்வாகம் மெருகேறும் - பூபதியார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
08-ஆக-201218:10:54 IST Report Abuse
பாமரன்ஐய்யா பூபதியாரே.....எல்லாம் மக்களே செய்யனும்னா அப்புறம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பட்டாளங்கள் எதற்கு???? பேசாம ஜெயாவோட அதிகம் படிச்ச ....அதாவது பத்தாவதுக்கு மேல் படிச்ச கோடிக்கணக்கான மக்களே பாத்துக்குவேமே..............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
08-ஆக-201216:39:28 IST Report Abuse
INDIAN தினமலருக்கு வேறு வேலையே இல்லையா? "அம்மா" "சும்மா" எதையாவது செய்தால், அதை அவரது கடமை என்று விட்டுவிடாமல் அதைபெரிது படுத்தி, "அதிரடி", சட்டையை சுழற்றுகிறார் முதல்வர், கிடுக்கிபிடி, அதிசயம் ஆனால் உண்மை, சூப்பர் முதல்வர் என்றெல்லாம் தலைப்பைபோட்டு ஆளும்கட்சிக்கு "ஜிங் ஜாக்" அடிப்பதும், "அப்பாடா" இனி விடிந்துவிடும் என்று நினைக்கும் மக்களுக்கு மொட்டை அடிப்பதும் ஒரு பத்திரிக்கைக்கு அழகா? இந்த செய்திகளெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மிகைபடுத்தி, என்னவோ மேற்கே இருக்கும் மலையை பெயர்த்து கிழக்கில் கொண்டு வைத்ததுபோல்,யாராலும் முடியாத ஒரு சாகசத்தை செய்ததுபோல் இவ்வளவு "பில்டப் " தேவையா? இதே மற்ற எதிக்கட்சிகள் என்றால் தலைப்பே வேறுமாதிரியாக இருக்கும். அந்த தலைப்பை பார்த்தாலே அவர்களை நக்கலடிப்பது போலவோ அல்லது அவர்களை தரம் தாழ்த்துவது போலவோ இருக்கும் சிந்திக்குமா தினமலர்? "உறைகல்" "குறைகல்" ஆகிவிடக்கூடாது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
08-ஆக-201216:07:17 IST Report Abuse
K.Sugavanam தாத்தா வாய தொரக்கலை,கேப்டன் இதப்பத்தி மக்களிடம் முறை இடவில்லை,மம்மி மட்டும் பதறி அடிச்சு ஓடியாந்து இருக்குறாங்கோ.மேட்டர் ரொம்ப சீரியஸ் மாதிரி தெரியுது.சுதந்திர தினத்தை சுதந்திரமா கொண்டாட வுட மாட்டாங்க போல இருக்கே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
08-ஆக-201215:45:39 IST Report Abuse
Pugal ஒரு மாநில முதல்வர் ஒன்னரை மணி நேரம் வேலை பார்த்தது செய்தியாகிற நிலை. எங்க ஆபீசில் தினம் ரெண்டு மீட்டிங் நடக்கும் - இதெல்லாம் அலுவல்களின் ஒரு பாகம், கடமை- இது செய்தியாகிறதெனில், எந்த அழகில் அலுவல்கள் நடக்கின்றன என்று சொல்லாமலே தெரிகிறதே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Palanivel Naattaar - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-201215:33:17 IST Report Abuse
 Palanivel Naattaar 20 வருஷங்களாக கணிமவளத்தை சுரண்டியது அரசாங்கத்துக்கு தெரியாமலா இருந்தது அந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வருவாய் அதிகாரிகள் கிராம நிர்வாக அதிகாரிகள் இல்லாமலா அரசு இருந்தது இதுபோன்ற மஹா கொள்ளையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த திரு.சகாயம் அவர்களை பாராட்டி வணங்குகிறேன். இந்த கொள்ளையில் தொடர்புடைய 20 ஆண்டுகளில் அங்கு வேலை செய்த அனைத்து அதிகாரிகளும் சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் அதற்க்கு எதுவாக மீண்டும் திரு.சகாயம் அவர்களை மதுரைமாவட்ட ஆட்சியராக நியமிக்கவேண்டும் அல்லது இந்த உழலை விசாரிக்க தனியாக (special Team) ஒரு அரசு அமைப்பை சுதந்திரமாக செயல்படுமாறு அமைக்க வேண்டும் அதில் திரு.சகாயம் மற்றும் அவரோடு திரு.உமாசங்கர் அவர்களையும் சேர்க்கவேண்டும்.அப்பொழுதுதான் முழு உண்மையும் வெளியில் வரும் செய்வாரா நம் முதல்வர் அவர்கள்.....??????????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
08-ஆக-201220:18:55 IST Report Abuse
மதுரை விருமாண்டிசகாயம் பெரிய ஆளா, மம்மி பெரிய ஆளா... மம்மி தூக்கிப் போட்ட ஆளை, திரும்பவும் கொண்டு வரச்சொல்ல நீர் யாரு ஓய் ?? இந்த தமிழ்நாட்டு பூலான் தேவியை இன்னமுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க ?? இந்தியாவுலே இதுக்கெலாம் சட்டமே இல்லைன்னு நம்ப வச்சி, இதுக்கு காரணம் மத்திய அரசும், கருணாநிதியும் என்று சொல்லி முடிச்சிருவாங்க... பி.ஆர்.பி எவ்வளவு பெரிய ஆளு.. முப்பது ஊரிலே, மூணு லட்சம் பேரு இருக்காங்க.. அதை விட முக்கியமா பக்கத்திலேயே ஒரு பாம்பை (சசிகலாவை) மடியிலே வச்சிக்கிட்டு சுத்துற மம்மியாலே இந்த கேசிலே ஒண்ணும் பண்ண முடியாது... ஒரு சின்ன கல்லைக் கூட புரட்ட முடியாது.. சகாயம், நீ பெரிய கில்லாடிய்யா.. சைலண்டா வச்சியே ஒரு ஆப்பு... சபாஷ்.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.