Advertisement
விரைவில் நடவடிக்கை எடுப்பேன்: மதுரை ஆதீனகர்த்தர் உறுதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2012,23:39 IST
மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 09,2012,00:29 IST

சென்னை: "நித்யானந்தாவின் சீடர்களின் போக்கு சரியில்லை. அவர்களின் செயல்பாடுகள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் நடவடிக்கை எடுப்பேன்' என, மதுரை ஆதீனகர்த்தர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா தனது சீடர் குழுவுடன் கயிலை மலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கச்சனம் மற்றும் திருப்புறம்பியத்தில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான கோவில்களுக்கு மதுரை ஆதீனகர்த்தர் சென்றார். அப்போது, அவரை திருப்பனந்தாள் காசித்திருமடத்து அதிபர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நித்யானந்தாவிடம் தான் சிக்கவில்லை என்பதை தனிப்பட்ட முறையிலும், வெளிப்படையாக நிருபர்களிடமும் மதுரை ஆதீனகர்த்தர் தெரிவித்திருந்தார்.

நியமனம் ஏன்: இந்நிலையில், ஆதீனத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழல்கள் குறித்து மதுரை ஆதீனகர்த்தர், தன் நெருக்கமான சீடரிடம் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் தகவல்: மதுரை ஆதீனம், ஆதீன கோவில்கள் நிர்வாகம், சொத்துக்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் நான் நித்யானந்தாவை நியமித்தேன். துவக்கத்தில் அவர் என்னிடம், 100 கோடி ரூபாய் தந்து விடுவதாகவும், அந்தப் பணத்தை வைத்து சன்னிதானம் நிர்வாகத்தை சீர் செய்து கொள்ளலாம் எனவும், முதல் தவணையாக ஐந்து கோடி ரூபாய் தருவதாகவும் என்னிடம் உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை அவர் ஒரு பைசா கூட தரவில்லை. நானும் அந்தப் பணத்தை விரும்பிக் கேட்கவில்லை.

சோதனை, ரோதனை: அவர் எனக்குப் பணம் தருவதாகச் சொன்னதை அடுத்துத் தான் ஆதீனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். ஆதீன வரலாற்றில் இதுபோன்ற ஒரு சோதனை நடந்ததில்லை. மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான இடங்களில் உள்ளவர்களை நித்யானந்தா ஆட்கள் மிரட்டி வருவதாக, எனக்குத் தெரிய வந்துள்ளது. கச்சனம் உள்ளிட்ட கோவில்களின் தேவஸ்தானத்துக்கு, நித்யானந்தா சார்பில் அம்சானந்தா என்பவரை நியமித்தார். அவர், நித்யானந்தாவின் படம் மற்றும் தலைமையகம் மதுரை ஆதீனம் என, "விசிட்டிங் கார்டு' அச்சிட்டு அளித்துள்ள தகவல் எனக்கு வந்ததை அடுத்து, நான் நித்யானந்தாவை கூப்பிட்டு விசாரித்தேன். அவரும் சீடரைக் கூப்பிட்டு சன்னிதானம் சொன்னபடி கேட்க வேண்டும் என கண்டித்தார். அதேபோல், பாண்டிச் செல்வம் என்பவர் என் படத்தை சிறிதாக போட்டு, நித்யானந்தா படத்தை பெரிதாக போட்டு விசிட்டிங் கார்டு அடித்தது பற்றியும், நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போதும் நித்யானந்தா பாண்டிச் செல்வத்தைக் கூப்பிட்டு கண்டித்தார். இதற்கெல்லாம் மேலாக, ஆதீன சார்பில் புதிதாக அச்சடிக்கப்பட்ட லெட்டர் பேட்டில், எங்கள் இருவர் படமும் போட்டு, திருப்புறம்பியம் என்பதற்குப் பதிலாக திருப்புறம்பயல் எனவும், மதுரை ஆதீன தொலைபேசி எண்களுக்குப் பதிலாக, பிடதி ஆசிரம தொலைபேசி எண்களையும் அச்சிட்டனர். இதையும் நான் கண்டித்தேன். கடந்த, 40 ஆண்டுகளாக, நான்
ஆதீன அலுவலகத்தில் ஒரு ஒலி வாங்கி, ஒலிப் பெருக்கி, எட்டு கண்காணிப்பு கேமராக்கள் வைத்துள்ளேன். அதன் மூலம் நிர்வாகத்தில் சில ஆலோசனைகளை நான் சொல்வேன். நிர்வாக நடவடிக்கைக்காக இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வித மயக்கத்தில்...: நித்யானந்தாவின் பெண் சீடர்கள் வந்த பின், அவர்கள் பேசுவதை நான் ஒட்டுக் கேட்பதாக தவறாகப் புகார் செய்தனர். நான் நித்யானந்தாவிடம் சொன்னேன். அவர், அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்து, வேறு வேறு ஊர்களுக்குப் பணி மாற்றம் செய்தார். நித்யானந்தா சீடர்கள் மரபுக்கு மாறாக நடந்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. இளைய சீடர்கள், தங்கள் பெற்றோரை மதிப்பதில்லை. எப்போதும் ஒரு வித மயக்கத்தில் இருப்பதைப் போல உள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால், மதுரை ஆதீனம், நித்யானந்தா பீடமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கறார் பேர்வழி: எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். எனக்குரிய மரியாதைகளை தரவேண்டும் என்பதில் நான் எப்போதும் கறாராக நடந்து கொள்வேன். நான் தமிழ் மொழி, அரசியல், இனப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் எந்த இடத்திலும், என் மரியாதைக்குப் பங்கம் நேருவதை நான் விரும்புவதில்லை.
ஆதீனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் பொறுமையாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் கோபப்பட மாட்டேன். தவறுகளைத் திருத்துவதற்கு அவகாசம் அளித்து வருகிறேன். ஆனால், ஒரு நாள் எனது ஆவேசம் வெளிப்படும். விரைவில் இந்த விவகாரம் குறித்து நான் உறுதியான நடவடிக்கை எடுப்பேன். இப்போது நினைத்தாலும் நான் தருமபுரம் செல்வேன். அதில் எந்தத் தடையும் இல்லை. இவ்வாறு மதுரை ஆதீனகர்த்தர் தெரிவித்துள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (63)
arabuthamilan - Manama,பஹ்ரைன்
09-ஆக-201210:47:38 IST Report Abuse
arabuthamilan sekhar , ஓமன் சரியான நெத்தியடி பதில். இவனுகளை செருப்பால அடிக்கக் கூடாது. கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி செருப்பு மாலைய கழுத்திலும், தலையிலும் போட்டு, தெரு தெருவா இழுத்துட்டு (கழுதையில் ஏற்றக்கூடாது, கழுதை அசுத்தமாகி விடும்). போகணும். கல்லால அடிக்கணும் இவனுகள. த்.....தூ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
DMR - Arcadia,யூ.எஸ்.ஏ
09-ஆக-201201:09:26 IST Report Abuse
DMR ஆப்பு பிடுங்கிய குரங்கின் நிலை தான் மதுரை ஆதீனத்தின் நிலை .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Venkat - Chennai,இந்தியா
08-ஆக-201219:20:26 IST Report Abuse
Venkat எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் - என்ன ஸ்கூல் நடதறேங்கள Headmaster sir? ஆன்மிகம் என்பது ஒருவனுக்கு முழு &39சுதந்திரம்&39 தருவது யாருக்கும் கீழ்ப்படிந்து நடப்பது இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
08-ஆக-201217:28:31 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar மதுரை ஆதினம் எடுக்க வேண்டிய நடவடிக்கை.., மதுரை ஆதின மட நிர்வாகத்தை அரசு நிர்வாகத்தில் ஒப்படைகவேண்டியவை ஆகும் மடம் பாரம்பரியம் பராமரிக்க படும் என்பதை மதுரை ஆதினம் உணரவேண்டும் இவைதான் உலக ஆன்மிக அன்பர்கள் எண்ணம் ஆகும் - பூபதியார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
SARAVANAN K - TIRUPUR,இந்தியா
08-ஆக-201217:23:47 IST Report Abuse
SARAVANAN K தம்பி டீ இன்னும் வரல....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
MaduraiMuthu - chennai,இந்தியா
08-ஆக-201217:23:21 IST Report Abuse
MaduraiMuthu சாமி... உங்களுக்கே தெரியாதா.... நீங்க எவ்வளவு பெரியவங்க... எவ்வளவு அனுபவசாலி... ஒரு பரதேசி பயல ...இப்படி கொண்டுவந்து உக்கார வேச்சிடீங்களே..?? இப்பவாவது.... அவனை வெளிய தொரத்தி... உங்க கௌரவத்தையும்... மடத்தோட பெருமையையும் காப்பதிக்கோங்க...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ramachandran - thanjavur,இந்தியா
08-ஆக-201216:56:55 IST Report Abuse
ramachandran தினமலரில்&39 உள்ள இன்றைய&39திருக்குறள் உனக்கு தான், உனக்கு மட்டும் தான் அருணகிரி. பாத்து நடந்துக்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Palanivel Naattaar - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-201216:02:05 IST Report Abuse
 Palanivel Naattaar வேலியில போகிற ஓனான கூப்பிட்டு காதுல உட்டுக்கிட்டு இப்ப குத்துதே கொடயுதே என்பதுபோலத்தான் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், மதுரை ஆதீனம், நித்யானந்தா பீடமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ஆதீனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் பொறுமையாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் ஒரு நாள் எனது ஆவேசம் வெளிப்படும் அப்போது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள அருணகிரி நாதரே உன்னுடைய மண்டையில் முடியைத்தான் மழிக்கிறர்களா அல்லது உன் மூளையையும் சேர்த்துமழிக்கிறர்களா.அவன் நல்லவன் இல்லை என்று கிளிபிள்ளைக்கு சொல்வது போல பலரும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.உங்கள் நடவடிக்கை தொடங்குமுன் உங்களுக்கு slowpoison போட்டு பரலோகத்துக்கு அனுப்பிவிடுவான். உன்னுடைய நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.உப்பை திங்கிறவன் தண்ணி குடித்துதான் ஆகவேண்டும் ????????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
hameed - riyadh,சவுதி அரேபியா
08-ஆக-201212:43:05 IST Report Abuse
hameed திருநாவுகரசர் புகழ் பாடி ,கருத்துகளை ஆணித்தரமா பேசும் உம்மின் நேர்வழி எங்கே போயிற்று??????பணத்திற்காக பதவி கொடுத்துட்டேன்னு சொல்லி உம்மின் மேல்தரத்தை மழுங்கடித்து விட்டீரே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Oosi - Port Said,எகிப்து
08-ஆக-201212:17:36 IST Report Abuse
Oosi ஆன்மீகத்தை சுயநலத்திற்காக அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களைப் போன்றவர்களை புறக்கணிப்போம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.