ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் பேச்சு வெளியாகியிருந்தது. சென்னை நகர மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது (காலராவால்), ஒரு முதல்வர் எப்படி விடுமுறையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என ஸ்டாலின் பேசி யதாக, அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியானது.

இதையடுத்து, ஸ்டாலின், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வெளியீட்டாளர், ஆசிரியருக்கு எதிராக அவதூறு வழக்கை, தமிழக அரசு சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது:முதல்வர் விடுமுறையில் இருக்கிறார் என கூறியிருப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. இது அவதூறானது. முதல்வர் எங்கு தங்கியிருந்தாலும், அவரது அலுவலக மற்றும் அரசியலமைப்புச் சட்டப்பூர்வமான கடமைகளை தொடர்ந்து ஆற்றி வருகிறார். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அடிப்படையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
priyadharshan - Chennai,இந்தியா
09-ஆக-201214:18:47 IST Report Abuse
priyadharshan R.BALAMURUGESAN - அதைதான் சொல்லுகிறோம். தள்ளாத இந்த 90 வயசில் உழைப்பது யாருக்காக ? என்பதில்தான் குழப்பமே.
Rate this:
Share this comment
Cancel
Dinakar - Coimbatore,இந்தியா
09-ஆக-201214:15:21 IST Report Abuse
Dinakar அப்படியா?
Rate this:
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
09-ஆக-201212:21:42 IST Report Abuse
m.s.kumar மம்மி ஆட்சில் வழக்கு என்பது வழக்கம் ஆகி வருகிறது இவர் மீது உள்ள வழக்கை கவனிக்கவே இவரால் முடியவில்லை மற்றவர்கள் மீது பாய்ந்து என்ன பயன்
Rate this:
Share this comment
Cancel
Asokaraj - Doha,கத்தார்
09-ஆக-201211:37:06 IST Report Abuse
Asokaraj திரு பாலமுருகேசன், நானும்தான் இந்த தள்ளாத 90 வயதில் எனது அலுவலகத்தில் மானேஜரா வேலை செய்யிரேன்னு சொல்றேன். அதை பாராட்டாம முடியாது நீ ரிட்டையர் ஆகனும்னு சொல்லி 60 வயசிலே அனுப்பிட்டாங்க. தள்ளாத வயசுன்னா ஒதுங்கிக்கிடனும். அதை வச்சி அனுதாபம் தேடக் கூடாது. எல்லாம் பணம் படுத்தும் பாடு. அதுக்கு கைத் தட்ட இது போல நாலு சொம்புங்க.
Rate this:
Share this comment
Cancel
kevin - chennai,இந்தியா
09-ஆக-201211:25:44 IST Report Abuse
kevin ஜெயாவின் ஆட்சி தொடர என் வாழ்த்துக்கள்...பேச்சுரிமை, எழுத்துரிமை மக்கள் நல பணியாளர்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் எல்லோர் மீதும் அராஜகத்தை அவிழ்த்து விடுவது இது என்ன புதுசா...ஒட்டு போட்ட மக்கள் இதை அனுபவித்து தான் ஆக வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - மெட்ராஸ் ,இந்தியா
09-ஆக-201201:14:13 IST Report Abuse
முக்கண் மைந்தன் சபாஷ்.... "போட்டு தாக்கு................"
Rate this:
Share this comment
Cancel
kalaignar piriyan - Arivaalaiyam,யூ.எஸ்.ஏ
09-ஆக-201201:12:31 IST Report Abuse
kalaignar piriyan இப்போ தான் தெரியுது 90 நிமிடம் என்ன ஆலோசனை பண்ணாங்கன்னு, எல்லார் மேலையும் அவதூறு வழக்கு போடத்தானா? முதல்வர் அவர்களே நீங்கள் பொது வாழ்வில் உள்ளீர்கள், உங்களை கேள்வி கேட்க உரிமை உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Murali - Ettayapuram,இந்தியா
09-ஆக-201200:57:17 IST Report Abuse
Murali முதல்வர் இம்மாதிரியானவற்றில் கவனத்தைச் செலுத்தாமல், மற்ற முக்கியப் பிரச்சினைகளைக் கவனித்தால்தான் லோக் சபைத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்... ஏனென்றால், மக்கள் பல கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர்...
Rate this:
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
09-ஆக-201209:40:38 IST Report Abuse
R.BALAMURUGESANமக்கள் எழுப்பும் கேள்விகள் பத்தாது இன்னும்..... கேள்விகள் எழுப்பிக்கொண்டே இருக்கவேண்டும்..... மக்கள் மாற வேண்டும்........
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
09-ஆக-201210:15:12 IST Report Abuse
பாமரன்முரளி....வாடியம்மா...அடுத்த நோட்டீசு உங்களுக்குத்தான்...கேள்வியா கேக்கறீங்க கேள்வி?????...
Rate this:
Share this comment
Cancel
arun.subramaniyam - LA, Cali,இந்தியா
09-ஆக-201200:28:23 IST Report Abuse
arun.subramaniyam ஸ்டாலின் அண்ணா, அப்போ மாண்ட மயிலாட பாத்து, வாரத்துக்கு ஒரு நாள் சினிமா விழா கொண்டாடினது ... இந்த வயசுல நமீதா , குஷ்பு டான்சு பாக்கறது எல்லாம் , விடுமுறை இல்லையா ??
Rate this:
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
09-ஆக-201209:50:01 IST Report Abuse
R.BALAMURUGESANதள்ளாத இந்த 90 வயசில் உழைப்பது யாருக்கும் தெரியவில்லை. ஒருவரிடம் இருந்து நல்லதை முதலில் கற்றுக்கொள்ளவேண்டும்..... அதை முதலில் செய்யுங்கள்.......
Rate this:
Share this comment
Vel - Chennai,இந்தியா
09-ஆக-201210:31:59 IST Report Abuse
Velஓகோ எங்க தாத்தா இந்த வயசுலேயும் உழைக்கிறார் என்று சொல்றீங்களா முருகேசன். அவரை முதலில் நல்லதை கற்று தர சொல்லுங்க. நல்லதுன்னா எதுன்னு நீங்க அவருக்கு கற்று கொடுங்கள்....
Rate this:
Share this comment
Partha - Bangalore,இந்தியா
09-ஆக-201210:34:33 IST Report Abuse
Parthaபாலமுருகேசன் யாருக்கு இதை சொன்னிர்கள்? ஸ்டாலினுக்கா? இல்லை அருணுக்கா?...
Rate this:
Share this comment
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
09-ஆக-201210:45:25 IST Report Abuse
Matt Pதள்ளாத வயதில் இளைஞர்களுக்கு வழி விட்டு ஓய்வெடுப்பது நல்லது......
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
09-ஆக-201212:22:50 IST Report Abuse
villupuram jeevithanஸ்டாலின் பெங்களூருக்கு சென்றுவிட்டாராம். மாநாட்டிற்கு முன்னாள் தான் வருவாராம்....
Rate this:
Share this comment
Arun Kumar - bangaluru,இந்தியா
09-ஆக-201216:44:16 IST Report Abuse
Arun Kumarதள்ளாத 90 வயதில் யாருக்கு உழைக்கிறார் அவர் குடும்பத்திற்கு தானே ? .அவரிடம் நல்லது ஏதும் இருப்பதாக தெரியவில்லை ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்