Dinamalar News reaction: Govt. rescues Kapaleeswarar Temple Land | 'தினமலர்' செய்தி எதிரொலி கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் அதிரடியாக மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் அதிரடியாக மீட்பு

Updated : ஆக 09, 2012 | Added : ஆக 08, 2012 | கருத்துகள் (15)
Advertisement

சென்னை: மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, சைதாப்பேட்டையில் உள்ள நான்கரை கிரவுண்ட் நிலத்தை, அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக மீட்டனர்.மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுரை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 10,100 சதுர அடி நிலம், சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி பகுதி எண், 117ல் உள்ளது. 4.57 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தில், 1,500 சதுர அடி மட்டும் தனியார் ஒருவருக்கு பல ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரும் இறந்து விட, அந்த இடமும் காலியாகவே உள்ளது.

மீதம் உள்ள கோவில் நிலத்தை, ஆளுங்கட்சி வட்ட செயலர் ஒருவர் தன் கட்டுபாட்டில் ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்நிலையில், அந்த இடத்தை, இரவு நேரங்களில் சூதாடுவதற்கும், மது அருந்துவதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களால், அப்பகுதியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன.

இந்த நிலை குறித்து, நேற்று, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. ஆக்கிரமிப்பு விவரம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கோவில் நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் நேற்று இந்து சமய அறநிலையத் துறையினர் களம் இறங்கினர்.

நடவடிக்கை

மயிலாப்பூர் கோவில் துணை கமிஷனர் காவேரி, தக்கார் விஜயகுமார் தலைமையில், 15 பேர் கொண்ட குழு, சைதை போலீஸ் உதவி கமிஷனர் ராமன், ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான காவலர்களின் உதவியோடு நேற்று மதியம், 12 மணியளவில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அதிரடியாக மீட்டனர்.

இது குறித்து கோவில் துணை கமிஷனர் காவேரி கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த பின்பக்கச் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டது. காவல் துறை உதவி ஆணையர் மற்று சைதாப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ஆயோரின் ஒத்துழைப்புடன் இடம் கையகப்படுத்தப்பட்டது. சமூக விரோதிகளால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டு, இவ்விடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், உடைக்கப்பட்ட மதில் சுவர் கட்டும் பணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Logu Dindigul - Dindigul,இந்தியா
09-ஆக-201217:44:33 IST Report Abuse
Logu Dindigul தினமலருக்கு நன்றி... சேவை தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
B.SARAVANAN - cuddalore,இந்தியா
09-ஆக-201216:25:20 IST Report Abuse
B.SARAVANAN இதே போன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கொல்லிமலை கீழபாதி கிராமத்தில் இருக்கும் அருள் மிகு சிவலோகநாத சுவாமி கோயில் சொத்துகளும் ஆக்கிரமிப்பில் உள்ளது , இதன் மதிப்பு பல கோடி ரூபாயாகும் .இது குறித்து இந்து சமய அற நிலையத்துறைக்கு பல புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை .தினமலர் தலையிட்டு சிவன் சொத்தை காப்பாற்றுமா ???? B .சரவணன் .கொல்லிமலை கீழ்பாதி செல் 9865311036
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
09-ஆக-201214:39:34 IST Report Abuse
maran தினமலர் நடவடிக்கை சூப்பர் .....ஆளும் கட்சி வட்ட செயலரே ..சமூக விரோதின்னு அரசு துறையே சொல்லிவிட்டது .......அவருக்கு என்ன தண்டனை ...?..இன்னும் பல ஊர்களில் உள்ள கோவில் நிலங்கள் மீட்ப்பு எப்போது ....? கோவில் நிர்வாகத்தினருக்கு சம்பளம் ...அதற்க்கு ஒரு அமைச்சர் வேற ......அவர்கள் என்ன செய்கிறார்கள் .....அம்மாவிற்கு தலை கும்பிடு போட்டால் மட்டும் போதாது .....பனி செய்யனுமிடியோவ் ......ஆப்பு காத்துகிட்டு இருக்கு .....
Rate this:
Share this comment
Cancel
B.SARAVANAN - cuddalore,இந்தியா
09-ஆக-201213:29:29 IST Report Abuse
B.SARAVANAN கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கொல்லிமலை கீழ்பாதி அருள்மிகு சிவலோகநாத சாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் இதே போன்று அபகரிக்க பட்டுள்ளது ,இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் பயன் இல்லை , இதே போன்று செய்தி தினமலர் பிரசுரித்து சிவன் சொத்தை காப்பாற்றுமா. சரவணன் .ப கொல்லிமலை கீழ்பாதி செல் 9865311036
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - chennai,இந்தியா
09-ஆக-201213:07:30 IST Report Abuse
meenakshisundaram தினமலர் எழுதும் வரை அந்த அதிகாரிகள் வேறு வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர்.எல்லா கோவில் நிலத்தையும் அவர்கள் மீட்க விரும்பவில்லை . ஏனெனில் வேலை அதிகமாகி விடும் அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
Oosi - Port Said,எகிப்து
09-ஆக-201212:27:33 IST Report Abuse
Oosi இவ்வளவு நடந்தும் அற நிலையத் துறைக்கு தெரியாமலா இருக்கும்? அரசு அதிகாரிகள் கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர். தினமலருக்குப் பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
09-ஆக-201209:07:03 IST Report Abuse
Nagarajan S சபாஷ் தினமலர். உங்களைப்போல சமூக அக்கறையுள்ள பத்திரிகைகளை படிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது, தொடரட்டும் உங்களின் பணி.
Rate this:
Share this comment
Cancel
Govindan - Chennai,இந்தியா
09-ஆக-201207:37:00 IST Report Abuse
Govindan தினமலரின் பொதுச்சேவைக்கு நன்றி. தொடருங்கள் உங்கள் பணியை எங்கள் ஆதரவு என்றும் உண்டு...
Rate this:
Share this comment
Cancel
Chandrasekaran Subramaniam - Tiruchirapalli (Trichy),இந்தியா
09-ஆக-201206:38:31 IST Report Abuse
Chandrasekaran Subramaniam பத்ரி"கை "யின் வலிமை புரிந்ததா ?
Rate this:
Share this comment
Cancel
Jai - ,கனடா
09-ஆக-201205:53:14 IST Report Abuse
Jai சபாஷ் தினமலர். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை