Like Sand and Tasmac, will Govt., take over granite quarries | கோடிகளைக் கொட்டும் கிரானைட் குவாரிகளை அரசு கைப்பற்றுமா? | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (78)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: ஆற்று மணல், மது விற்பனை இவற்றை அரசே எடுத்து நடத்தி வருவதைப் போல், பல ஆயிரம் கோடி ரூபாய் புரளும் கிரானைட் குவாரிகளையும் கைப்பற்றி, அரசே நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அ.தி.மு.க., 2001ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த நிலையில், மதுபான விற்பனையானது தனியார் கையில் இருந்தது. தனியாரின் ஆதிக்கத்தை ஒழித்து, இம்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, 2003ல் மது விற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டது. 2010-11ம் ஆண்டில் இந்த விற்பனை, 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது. 2011-12ம் ஆண்டு விற்பனை, 19 ஆயிரம் கோடியை எட்டியது. இந்தாண்டில், இது 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கனிம வளம்: இதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது தமிழகத்தின் கனிம வளம். ஆற்று மணல் வெளி மாநிலங்களுக்கும் அளவில்லாமல் கடத்தப்பட்டது. இதைத் தடுக்கும் வகையில், ஆற்றுமணல் விற்பனையை அரசே தன் கையில் எடுத்து, தற்போது நடத்தி வருகிறது. இதில், அரசுக்கு குறிப்பிட்ட அளவு வருவாய் கிடைத்துவருகிறது. ஆனால், மற்றகனிமங்களானகிரானைட், கிராபைட், கன கனிம மணல் உள்ளிட்டவற்றை எடுக்கும் உரிமம், தமிழக அரசின் கனிம நிறுவனமான டாமினிடம் உள்ளது. இந்த நிறுவனம், தனியாருக்கு

டெண்டர் விட்டு, வெட்டி எடுத்து வருகிறது. இதில் தற்போது, சர்ச்சையில்சிக்கியுள்ளது கிரானைட் குவாரிகளின் ஏக போக நடவடிக்கை. மதுரையில் டாமினிடம் இருந்து டெண்டர் பெற்ற கிரானைட் நிறுவனங்கள், ஏக போகமாக குறிப்பிட்ட அளவிற்கு மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் அறிக்கை அளித்தநிலையில், தற் போது அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில், தனியார் நிறுவனங்கள் கிரானைட் மூலம் கோடிக்கணக்கில் லாபம் பெற்று வருகின்றன. எனவே, தற்போது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ள கிரானைட் குவாரிகளை அரசு கைப்பற்றி, மணல் மற்றும்

Advertisement

மதுபானம் போல் தனியார் ஆதிக்கத்தை ஒழித்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (78)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sashi - chennai,இந்தியா
09-ஆக-201221:51:19 IST Report Abuse
sashi இப்போதெல்லாம் பல நூறு / ஆயிரம் கோடிகளில் பேசுவதாலேயே ரூபாயின் மதிப்பும் சரிந்து கொண்டு போகிறது.
Rate this:
Share this comment
Cancel
sadaadmi - coimbatore,இந்தியா
09-ஆக-201221:17:49 IST Report Abuse
sadaadmi மணல் உட்பட கனிம வளம் முழுவதும் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். அம்மா விற்கு தஹிரியம் உண்டு .நெனச்ஹா செய்யலாம். மணல் எடுத்து மொத விற்பனை நிலையத்திற்கு செல்ல அரசாங்க லாரிகள் மட்டும் ஆற்றில் அனுமதிக்க பட வேண்டும். தற்பொழுது ஒரு லோடுக்கு ரசித்தும் முனு லோடுக்கு காசும் வாங்குவதாக கேள்வி.
Rate this:
Share this comment
Cancel
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
09-ஆக-201220:27:25 IST Report Abuse
RAMASWAMY S THE GOVERNMENT SHOULD UNDER TAKE GRANITE QUARY BUSINESS IMMEDIATELY WITHOUT ANY HESITATION. THEN ONLY FURTHER FAILURE WILL BE ARRESTED. OUR CM SHOULD TAKE CONCRETE STEPS TO IMBLEMENT IT IMMEDIATELY
Rate this:
Share this comment
Cancel
Dinakar - Coimbatore,இந்தியா
09-ஆக-201217:17:32 IST Report Abuse
Dinakar நம்ம கவுருமெண்டோட அடுத்த யாவாரம் ரெடி அதுல ஒரு நாலு லட்சம் பேர வேலைக்கி வெச்சு நாலாவது பட்ஜெட்ல அதுல நஷ்ட்ட கணக்கு காமிக்க மாட்டாங்கன்னு நம்புவோம்
Rate this:
Share this comment
Cancel
saravanan sagadevan - Chennai,இந்தியா
09-ஆக-201215:03:23 IST Report Abuse
saravanan sagadevan ஜெயா டிவி லாப நோக்கிற்காக நடத்தப்படுவதாக தெரிய வில்லை . சன் டிவி போல் 24 மணி நேரமும் சினிமா போட்டு யாரயும் சிந்திக்க விடுவதிலை . லாபம் தான் முக்கியம் என்றால் தனது செல்வாக்கை பயன் படுத்தி எல்லா சினிமாவையும் வாங்கி ஒளி பரப்ப மூடியும் . திறமையான தொழிநுட்ப வலுனர்களை வைத்து தங்கள் டிவி வருமனதியா பெருக்க முடியும் .
Rate this:
Share this comment
Cancel
SHivA - cheNNAi,இந்தியா
09-ஆக-201214:47:53 IST Report Abuse
SHivA அரசே நடத்தினால் லாபம் வரும் என்றோ அல்லது நேர்மையாக நடக்கும் என்பதற்கோ என்ன உத்திரவாதம்???? நேர்மையான மனிதர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.. திருடர்கள் அயோக்கியர்களை திறமைசாலி என்று வெக்கமில்லாமல் பாராட்டும் சமுதாயம் உருப்பட வழியில்லை..
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-201213:15:09 IST Report Abuse
periya gundoosi அனைத்துக் கருத்துகளையும் படிச்சு பார்த்தேன். கண்ணைக் கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்கு. புரியிற மா.. தி..ரி இருக்கு ஆனால் புரியலை. மதுரை விருமாண்டி எந்தப் பக்கம் கோல் போடுறாருன்னு தெரியலை. இருந்தாலும் நானும் அவர் கூட ஓடுறேன். அதாங்க அவர் சொல்றதுதான் சரிங்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Oosi - Port Said,எகிப்து
09-ஆக-201212:21:09 IST Report Abuse
Oosi விதிகளை மீறி வெட்டி எடுத்த பின் இதுமாதிரி மாட்டிக்கொண்டால் அபராதம் மட்டுமே வசூலிக்க முடியும். அழிந்துபோன இயற்கையை உருவாக்க முடியுமா? இப்போதே தாமதம் தான் என்றாலும், இதற்கு மேலும் அழியாமல் பாதுக்க வேண்டும். இதை வெளியிட்ட திரு சகாயம் அவர்களுக்கு நன்றி. இத்தகைய குவாரிகளை சாட்டிலைட் மூலம் மாதமாதம் அளந்து வந்து அதை பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் பார்வைக்கு அரசு வெப் சைடுகளில் வெளியிட்டால் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்கலாம். அந்த அளவுக்கு வெளிப்படையாக செயல்படும் மனமும் உறுதியும் அரசிடம் இருக்கிறதா?
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-ஆக-201200:19:12 IST Report Abuse
மதுரை விருமாண்டிமன உறுதி இருக்க கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.. அரசாள்பவர், அரசுப் பணியாளர், சட்டம் ஒழுங்கு, மிக முக்கியமாக தண்டனையை தீர்மானிக்கும் சர்வ வல்லமை கொண்ட நீதித் துறை.. இதில் நீதித் துறை கை நீட்ட ஆரம்பித்து விட்டதால், மற்றவை எல்லாம் கலகலத்துப் போய், "அட, என்ன செஞ்சாலும் வெளியே வந்ததுரலாமையா" என்ற நினைப்பு மற்ற எல்லாருக்கும் வந்து விட்டது.. சாட்டலைட் வாங்கவும், ராக்கெட் விடவும், அந்த விஷயங்களை அமெரிக்காவிலும், பிரான்சிலும் நன்றாக செய்வதால் அதைப் பற்றி அறிய மந்திகள் குழு அந்நாடுகளை சுற்றிப் பார்க்கவும் செய்த செலவுகள் வகையில் 327 கோடி ரூபாய் கணக்கு காட்டுவார்கள்.. இது தான் நடக்கிறது.....
Rate this:
Share this comment
Cancel
Rajanbabu - Pune,இந்தியா
09-ஆக-201212:06:44 IST Report Abuse
Rajanbabu Certainly this is a way to transfer social responsibilty of Granite quarry owners to Govt and favour the Granite barons. All know that granite barons are in both DMK and AIADMK.Thay have exploited the national asset and pocketed crores. Now huge pits in mountains are in dangerous condition for future generations to suffer.When we want Union Carbide to bear the cost of Bhopal gas tragedy after even thirty years, these granite barons must be penalised hundreds of crores to manage the damaged natural hills, now itself.
Rate this:
Share this comment
Cancel
shivan - madurai,இந்தியா
09-ஆக-201212:04:53 IST Report Abuse
shivan சகாயம் மாற்றத்தின் பின்னணியில் யார்?. இவர்கள் தானே...?
Rate this:
Share this comment
P Mani - Mayiladuthurai ,இந்தியா
09-ஆக-201212:25:38 IST Report Abuse
P Maniநிச்சயம் பி.ஆர்.பி மற்றும் ஒரு சில மந்திரிகளும் சேர்ந்துதான்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.