சென்னை:மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது, ராட்சத கிரேன் நடு அச்சு முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகினர்; ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லூரி அருகே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. சாலையில் பள்ளம் தோண்டி, இரும்பு கம்பிகளை ராட்சத கிரேன் மூலம் பள்ளத்துக்குள் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நேற்று இரவு 8.30 மணிக்கு பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இரும்பு கம்பிகளை மொத்தமாக கட்டி 25 மீட்டர் பள்ளத்தில் இறக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது விபத்து நடந்தது. இதை 70 டன் எடையைத் தாங்கும் 50 அடி உயர கிரேன் இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது கிரேனின் நடு அச்சு முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.இதில் பணியில் இருந்த எட்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிந்து சம்பவ இடத்திலே நசுங்கி இறந்தார். ஏழு பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வட மாநிலங்களைச் சேர்ந்த இமானுவேல், சோனியாலால் 25, சாதிக் 25, ரவீந்திரன் 22, ஜோய்லால் 19, அஜய்மான்சிங் 31 ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, தீயணைப்பு மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. மெட்ரோ ரயில் நிர்வாகம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை.விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். காயம் அடைந்தோருக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் விபத்தில் பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விபரத்தை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்தில் சிந்து 19,என்பவர் இறந்ததார்.
பலியானது எத்தனை பேர்?அனிப், 21 என்பவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மருத்துவமனை போலீசார் இதை உறுதிப்படுத்தினர். ஆனால், டாக்டர்கள் இதை உறுதி செய்யவில்லை. இதனால், மரணம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்களை உறுதிபடுத்த முடியவில்லை. விபத்து நடந்த இடத்தில் இருட்டாக இருந்ததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அங்கு எத்தனை சிக்கியுள்ளனர். எத்தனை பேரின் உடல்கள் கிடந்தன என்ற விபரங்களை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவிலே சுத்தம் சுட்டுப் போட்டாலும் வராது, சேஃப்டி செத்துப் போனாலும் வராது.. "பாவம், அல்பாயிசு" , "எல்லாம் அவன் தலை எழுத்து" ன்னு சொல்லிட்டு டீ குடிக்கப் போயிருவாங்க.. விதிமுறைகளை வைக்கணும், அதை கடைபிடிக்கணும், அப்படி மீறினா தண்டனை கொடுப்பாங்க என்ற பயம் இருக்கணும், அதை மீறினா தண்டனை கொடுக்கணும், வேலை செய்பவரின் அடிப்படை உரிமைகள், அவர்களது அடிப்படை பாதுகாப்பு, இப்படி நினைப்பு, செயல்பாடு எதுவுமே இருப்பதில்லை... ஏழைத் தொழிலாளியின் கஷ்டங்களுக்கு குரல் கொடுக்காத நாடு... இவ்வளவு பாவங்கள் நடக்கும் நம் நாடு உருப்படுவது உண்மையாவே கஷ்டம் தான் ...
தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்யும் வடமாநிலத்தவரின் விபத்து சார்ந்த பலி எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு நம் தமிழக அரசும் ஒரு நிதி உதவி தந்து ஒதுங்கிவிடுகிறது. இவர்கள் இன்னொரு மாநிலத்திற்கு வேலைக்காக வருவதற்கு காரணம் வறட்சி, வறுமை, அதுபோன்ற வறட்சி மிகுந்த மாநிலங்களை மத்திய அரசு ஏன் கவனிக்கவில்லை? அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை மத்திய அரசும் அவர்களுடைய மாநில அரசும் ஏன் தரவில்லை?
The safety measures needs an study. More than that the way these workers from other stats are living is like slaves. Labor Dept must visit their shelters provided by the companies . When the Metro is operational and during my travel in it , my heart always will feel these peoples handwork and how they struggled. Are they not indian's ??? Do we have to cry only for those who die in Middle East??
Another thing is metro rail Official also preasurizing the contractor to do work without any holy day break to the worker. Contracting companies are not giving them proper rest. No over time payment, No proper accomodation, food and tiolet facilites. No labour laws are followed. Labour department total absent / correpted. Labours are treated like slaves.
இந்தியாவில் கட்டுமான பணியில் வேலை செய்யும் பணியாளருக்கு எந்த பாதுக்காப்பும் இல்லை. அவர்களை நடத்தும் விதம் மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க படுவதில்லை. அவர்கள் தங்கும் இடம் சாலையோரம் தான். இதெயெல்லாம் நமது அரசாங்கமும் வேடிக்கை பாத்து கொண்டு இருப்பது தான் வேதனையாக உள்ளது. இவர்கள் கட்டும் பாலங்கள் போடும் சாலைகள் எல்லாம் தான் நம் வளர்ச்சிக்கு உபயோகமாக உள்ளது. ஆனால் இவர்களின் வாழ்க்கை தரத்தில் எந்த மாறுபாடும் இல்லை. நாடோடிகள் போல் வேலை இருக்கும் இடங்களுக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகளுக்கு சரியான கல்வியோ வழிகாட்டுதலோ இல்லை. இதே தொடர்ந்தால் அவர்கள் சமுக விரோதிகளாக மாற கூடும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.