DMK banned leaders portrait and flags in TESO | டெசோ மாநாட்டுக்கு ரூ.25 லட்சம் வசூல்: கருணாநிதியும் ரூ.2 லட்சம் வழங்கினார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெசோ மாநாட்டுக்கு ரூ.25 லட்சம் வசூல்: கருணாநிதியும் ரூ.2 லட்சம் வழங்கினார்

Updated : ஆக 11, 2012 | Added : ஆக 09, 2012 | கருத்துகள் (201)
Advertisement

வரும் 12ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டு செலவுக்கு தேவையான நிதியை கட்சி பிரமுகர்களிடம் வசூலிக்கும் பணி தி.மு.க., வில் துவக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கடந்த இரு நாட்களாக 25 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. தனது பங்குக்கு இரண்டு லட்சம் ரூபாயை கருணாநிதி வழங்கியுள்ளார்.

டெசோ மாநாட்டுக்கு ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய் வரை செலவாகும் வாய்ப்பு இருப்பதாக, மாநாட்டுக் குழுவினர் கணக்கிட்டுள்ளனர். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் அமைக்கப்படும் பிரமாண்டமான பந்தலில் 20 ஆயிரம் நாற்காலிகள் அமைக்கப்படுகின்றன. டெசோ மாநாட்டுக்கு முன் சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் ஆய்வரங்கம் நடைபெறவுள்ளது.


நட்சத்திர ஓட்டல்கள்: வெளிநாடுகளிலிருந்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த எம்.பி.,க்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என, தி.மு.க., தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்களை அழைத்து வருவதற்கும் ஆடம்பரமான கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு பல்வேறு வகைகளில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்சிப் பிரமுகர்களிடம் நிதி பெற தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவு செய்தார். தனது பங்குக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியை அளித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பொருளாளர் ஸ்டாலின் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.


நிதி வசூல் குவிகிறது: இந்நிலையில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தலா 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எம்.எல்.ஏ., க்களும் நிதியை அளித்துள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களும் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து நிதியை வழங்கி வருகின்றனர். கடந்த இரு நாட்களாக 25 லட்சம் ரூபாய் வரை நிதி வசூலாகியுள்ளது. கருணாநிதியை தி.மு.க., பிரமுகர்கள் சிலர் நேற்று சந்தித்து, நிதி வழங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தலைவர்கள் படங்களுக்கு தி.மு.க., தடை: "டெசோ மாநாட்டிற்கு தலைவர்களின் புகைப்படங்களை கொண்டுவரக்கூடாது' என, தி.மு.க., அறிவித்துள்ளது.


இது குறித்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கட்சித் தொண்டர்களோ அல்லது கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்தவர்களோ கொடிகளையோ, தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையோ கட்டாயமாகக் கொண்டு வரக்கூடாது என்று கண்டிப்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாநாட்டிலும் வேறெந்தக் கட்சிகள் பற்றிய ஒலி முழக்கங்களோ எழுப்பிடக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


- நமது நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (201)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sami - chennai,இந்தியா
11-ஆக-201202:20:28 IST Report Abuse
sami இருபது கோடி கூட தலைவர் கொடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Arumugam Muthukumar - newyork,யூ.எஸ்.ஏ
11-ஆக-201200:12:00 IST Report Abuse
Arumugam Muthukumar He is one of the rich man in the world. He should give atleast 2 cr.
Rate this:
Share this comment
Cancel
balagiri - Chennai,இந்தியா
11-ஆக-201200:05:25 IST Report Abuse
balagiri ஈழ மக்களுக்காக கடற்கரையில் உண்ணாவிரத கேலிகூத்து நடத்தி, முத்துக்குமாரை பழித்து, ராஜபக்ஷே வீட்டில் விருந்து உண்ண மகளை அனுப்பி, சிகிச்சைகாக வந்த பிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி, இந்த தள்ளாத வயதிலும் வறுமையிலும், இலங்கை நலனுக்காக டெசோ மாநாடு நடத்த உழைப்பதும், தன்னிடம் உள்ள ஒரே கையிருப்பான இரண்டு லட்சம் ரூபாயையும் தனெக்கென்று கொள்ளாமல், தன்னலம் கருதாமல் அள்ளி கொடுத்த வள்ளல் தான் டாக்டர் கலைஞர் திராவிட பகுத்தறிவின் பல்கலைகழகம் கருணாநிதி,
Rate this:
Share this comment
Cancel
kalaignar piriyan - Arivaalaiyam,யூ.எஸ்.ஏ
10-ஆக-201222:56:30 IST Report Abuse
kalaignar piriyan T.C.Mahran : எப்பவும் ரெண்டையும் படிக்கணும், நாங்க சொல்லுறத கேட்டு நீங்க திருந்த கூட வேண்டாம், உண்மை என்னனு தெரிஞ்சிகோங்க அதுபோதும்
Rate this:
Share this comment
Cancel
Gopi Krishna - Chennai,இந்தியா
10-ஆக-201220:47:37 IST Report Abuse
Gopi Krishna ஆரிய கூத்து ஆடினாலும் தாண்டவக்கோனே காசு மீது கண் வையடா தாண்டவக்கோனே - இதை கலைஞரின் கொள்கை
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
10-ஆக-201216:50:34 IST Report Abuse
Pannadai Pandian இந்த டேசோ மாநாட்டோட தலைவர கழட்டி விட்டுடும் காங்கிரசு. இப்ப இவரு எக்ஸ்ட்ரா லக்கேஜு டெல்லிக்கு. மத்திய அரசு, குறிப்பாக மன் மோகன் நினைப்பது திமுகவால் காங்கிரஸ் மக்களிடம் மதிப்பை இழக்கிறது. ஆனால் கழுத்தை பிடித்து தள்ளினாலும் போக மாட்டேன் என்கிறார் தலைவர்.
Rate this:
Share this comment
Cancel
varia kilphonse - doha,கத்தார்
10-ஆக-201216:25:11 IST Report Abuse
varia kilphonse ரெண்டு லட்சம் போட்டா ரெண்டு கோடியா? இது ஏன் இந்த ஈமு கோழி வளர்கிரவங்களுக்கு தெரியாம போச்சு? பெருசு சூப்பரப்பு
Rate this:
Share this comment
Murali - Ettayapuram,இந்தியா
10-ஆக-201222:44:09 IST Report Abuse
Muraliசூப்பரப்பு, உங்கள் பெயரும், கருத்தும்... You did make my day :-)...
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
10-ஆக-201213:57:53 IST Report Abuse
T.C.MAHENDRAN இதுவரை செய்த (அடித்த ) வசூல் போதாதா இந்த வசூல் ராஜாவுக்கு ?.
Rate this:
Share this comment
Cancel
Lightning View - Fahaheel,குவைத்
10-ஆக-201213:01:30 IST Report Abuse
Lightning View தலைவா, உன்னை பற்றி கருத்து எழுதுபவர்கள் ஒரு வகையில் தமிழ் வார்த்தைகளை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்று தெரிந்து கொண்டனர். இதுவும் நீ செய்து கொண்டிருக்கும் தமிழ் தொண்டுதான்.
Rate this:
Share this comment
Cancel
kurumbu - tirupur,இந்தியா
10-ஆக-201212:56:43 IST Report Abuse
kurumbu டெசோ-செத்து போனவங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார் திருவாரூர் தீய சக்தி......... இதுலயும் பணத்தை ஆட்டயபோட போறார்...............
Rate this:
Share this comment
beemboy - Oslo,நார்வே
10-ஆக-201217:10:11 IST Report Abuse
beemboyஇந்த மாநாடு இப்போ ரொம்ப முக்கியமா?? தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது அதை எல்லாம் களைய உங்களுக்கு வக்கு இல்லையா? ஏன்டா இப்படி லட்சம் லட்சமாக வீண் விரயம் செய்து மாநாடு மயிர்நாடு என்று நடத்தி என்னடா சாதிக்க போகிறீர்கள். தமிழக மக்களே இது போன்ற சந்தர்ப்ப வாதிகளை தூக்கி எறியுங்கள். மக்களிடம் சுரண்டியது பத்தாதா??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை