Govt to introduce SC/ST promotions' bill | எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தர சட்ட திருத்த மசோதா| Dinamalar

எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தர சட்ட திருத்த மசோதா

Updated : ஆக 11, 2012 | Added : ஆக 09, 2012 | கருத்துகள் (72)
Advertisement

அரசுப் பதவிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு, பதவி உயர்வுகளில், இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதா, வரும், 22ம் தேதி பார்லிமென்டில் கொண்டு வரப்படும்,'' என, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, நேற்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

ராஜ்யசபா நேற்று துவங்கியதும், கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள, சபைத் தலைவர் ஹமீது அன்சாரி முயன்றபோது, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் எழுந்தனர். அப்போது மாயாவதி பேசியதாவது: அரசுப் பதவிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு, பதவி உயர்வு அளிப்பதில், பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். பதவி உயர்வு அளிப்பதில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அதை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது. "இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும்' என, கடந்த கூட்டத்தொடரின் போதே, அரசு உறுதியளித்தது. அதன் பின், எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்விஷயத்தில், காலம் தாழ்த்தும் தந்திரத்தை அரசு கையாள்கிறது; இதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே பார்லிமென்டில், முழு அளவில் விவாதம் நடந்து முடிந்து விட்டது. ஏறத்தாழ எல்லா கட்சிகளுமே, ஆதரவும் தெரிவித்து விட்டன. இனியும் காலம் தாழ்த்தப் பார்த்து, சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லை எனில், சபையை நடத்த விட மாட்டோம். இவ்வாறு மாயாவதி பேசினார்.


அமளி: இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் ரகளையில் இறங்கினர். அப்போது, அரசு தரப்பில் பதிலளித்த அமைச்சர் நாராயணசாமி, ""இந்தக் கூட்டத்தொடரிலேயே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்,'' என்றார். இந்தப் பதிலால் திருப்தி அடையாத, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள், அமளியில் இறங்கினர். இந்த நேரத்தில், "கறுப்புப் பண விவகாரம் குறித்து பேச வேண்டும் எனக் கூறி, பா.ஜ., - எம்.பி.,க்களும் கோஷங்கள் எழுப்பினர். இதனால், பகுஜன் சமாஜ் மற்றும் பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.


அமைச்சர் உறுதி: மீண்டும் சபை கூடிய போதும், இதே போல் அமளி தொடரவே, அரசு சார்பில் பேசிய, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: பதவி உயர்வுகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து விவாதிக்க, வரும், 21ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் கூட்டுவார். மறுநாள் இந்த கோரிக்கை தொடர்பான, அரசியல் சட்டத் திருத்த மசோதா, பார்லிமென்டில் கொண்டு வரப்படும். இவ்வாறு நாராயணசாமி கூறினார். இதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்து, சபையில் அமைதி திரும்பியது.


லோக்சபா நிலவரம்: லோக்சபா நேற்று காலை கூடியதும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள், சபையின் மையத்திற்கு வந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உறுப்பினர்கள் தங்களின் இருக்கைக்கு திரும்ப மறுக்கவே, இந்த விவகாரம் தொடர்பாக, சிலர் பேச, சபாநாயகர் மீராகுமார் அனுமதித்தார். இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சைலேந்திர குமார், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தாராசிங் சவுகான், காங்கிரசைச் சேர்ந்த பன்னா லால் புனியா ஆகியோர் பேசினர்.


- நமது டில்லி நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thesaapimaani - chennai ,இந்தியா
10-ஆக-201220:57:09 IST Report Abuse
thesaapimaani பதவி உயர்வில் முக்கியமாக கவனிக்கவும், பதவி உயர்வில் முன்னுரிமை கொடுப்பது மிகவும் தவறான அணுகுமுறை. அரசியல் வோட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய அரசியல்வாதிகள் தயங்க மாட்டார்கள், இது பிரச்சினையை தீர்க்க உதவாது என்று இதனால் பலன் அடைய போகிறவர்களுக்கு கூட நன்றாக தெரியும். சொல்லப்போனால் அவர்களே கூட இதை விரும்ப மாட்டார்கள். நாடு சுதந்திரம் அடைந்து இத்துனை ஆண்டுகள் ஆன பின்னும் இதுவரை நம்மால் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கேவலமான முறையை முழுதும் மாற்ற முடிய வில்லை, பிரச்சினைகளை அப்பிடியே வைத்துக்கொண்டு அதை சொல்லி, சொல்லியே எந்த ஒரு குறியீடும் இல்லாமல் சலுகைகளை வழங்கி கொண்டே இருப்பது இந்தியா போன்ற நாட்டிற்கு நல்லதில்லை. சலுகைகளை அடைவதில் இருக்கும் வேகம், அதுவும் பதவி சுகத்திற்கு அலையும் கேடு கேட்ட அரசியல் வாதிகள் தான் இது மாதிரியான விசயங்களை கையில் எடுக்கிறார்களே தவிர, உண்மையான சமத்துவத்திற்கு, பிரச்சினைகளை களைவதற்கு யாரும் குரல் கொடுப்பது இல்லை, போராடுவதும் இல்லை. நாட்டில் இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதை விடுத்து புது புது சமூக ஏற்ற தாழ்வுகளை மேலும் அதிகபடுத்தும் விதமாக நடவடிக்கைகளை நோக்கியே அரசுகள் செல்லுமேயானால் எங்கிருந்து சமத்துவம் வரும். நாம் பின்னோக்கி செல்கிறோம் என்பது தான் நிஜம்.
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
11-ஆக-201201:39:33 IST Report Abuse
Karam chand Gandhi அறிவாளியா கருத்து கூறியது போதும். நீர் முதலில் சாதி பாராமல் உம் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும். சாதியும் ஒழியும் . இட ஒதுக்கீடும் ஒழியும்....
Rate this:
Share this comment
Cancel
Tharma - kalpakkam,இந்தியா
10-ஆக-201220:14:19 IST Report Abuse
Tharma இட ஒதுக்கேடு ரெம்ப முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
subramanian Theerthagiri - Harur,இந்தியா
10-ஆக-201220:13:21 IST Report Abuse
subramanian Theerthagiri தனக்கு கீழ வேலை செய்யும் SC ST வேலை தெரியாமல் அல்லது விருப்பமில்லாமல் இருப்பதால் அவர் வேலையையும் சேர்த்து செய்வர்.பின்னர் தன் பதவிக்கு ஒப்பான பணியில் இட ஓதிக்கீட்டில் அமர்தபின்னர்,மீண்டும் இட ஒதிக்கீட்டில் அவருக்கே உயர் அதிகாரியாக வந்து அவரையே வேலை வாங்குவார்.கடிந்துகொள்வார் எப்படி நிர்வாகத்தில் திறமை இருக்கும்?SC
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
11-ஆக-201201:36:27 IST Report Abuse
Karam chand Gandhi இன்று நிர்வாக திறமையுடன்தான் ஆட்சி நடக்கிறது?.................ஊழல் கூத்தான ஆட்சிகள்...........................
Rate this:
Share this comment
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
10-ஆக-201219:37:46 IST Report Abuse
Enrum anbudan இட ஒதிக்கீடு என்பது பதவி உயர்வில் இருக்கக்கூடாது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கண்டிப்பாக யாராவது நல்லவர் ஒருவர் கோர்டுக்கு பொய் நல்ல முடிவு வரும்., நம்புவோம்
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
11-ஆக-201201:34:31 IST Report Abuse
Karam chand Gandhi இந்தியாவில் நல்லவர்கள் குறைவு. அவர் அவர் அவர்களின் குல தொழிலுக்கு அனுப்பி விடலாம். தமாம் நண்பரே தங்களின் குலத்தொழில் என்னவோ? தயவு செய்து திரும்பி இந்தியா வாரும்....
Rate this:
Share this comment
Cancel
Kavitha Kumar - namakkal,இந்தியா
10-ஆக-201219:15:17 IST Report Abuse
Kavitha Kumar அடுத்த தரமில்லா அரசு உழியர்கள் தயார் பண்ணுகிறது இந்த முட்டாள் அரசு. இந்த தேவ தாசி காங்கிரஸ் ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும். திறமை மட்டும் உடய தம்பி தங்கைகளே அண்ணன் அக்காக்களே சிந்தியுங்கள் அடுத்த தேர்தலில் சரியான பாடம் மற்றும் படம் காட்டுவோம்
Rate this:
Share this comment
Cancel
Jegan - Chennai,இந்தியா
10-ஆக-201219:12:44 IST Report Abuse
Jegan நல்ல வேளை IT கம்பெனில இட ஒதிக்கீடு கொடுக்கணும்னு சட்டம் போடாத வரைக்கு நாங்க பொழசுக்குவோம்.. இந்தியாவுல ஏன் பொறந்தோம்னு இருக்கு.. சீ சீ இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா தான் போக போறாங்க.. நா என்னோட குடும்பத்தோட வெளி நாட்டுல செட்டில் ஆயுட்டேன். போதும் போதும் நார பொழப்பு
Rate this:
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
10-ஆக-201219:05:56 IST Report Abuse
யமதர்மன் வாழையடி வாழை என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் - உங்க சமுதாயத்துக்கு செலவழிச்ச பணத்தை வேற ஒரு சமூகத்துக்கு செலவு செய்திருந்தால் அவர்கள் எவ்வளவோ முன்னேறியிருப்பார்கள்."
Rate this:
Share this comment
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
10-ஆக-201214:20:04 IST Report Abuse
Radj, Delhi All politicians are fight for sc and st promotion in govt quota, but the majority of the OBC population are forgot the politician, but vote is important but never raise the objection from the parliament. Bihar, UP, TN, etc. MPs are silent for OBC promotion quota, the public never vote this type of politicians in future. They want OBC vote and never raise the objection in parliament for promotion quota.
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
10-ஆக-201214:00:16 IST Report Abuse
vidhuran BC -க்குக் கூட SC -யை விட அதிகமாக reservation அமலில் உள்ளது. ஆனால் எதுவுமே இல்லாமல், தனது திறமையை மட்டுமே நம்பி கஷ்டப்பட்டு படித்து 95 % மேலேயே மார்க் வாங்கியும், வாய்ப்புகள் இல்லாமல் இன்றும் ஏழையாகவே அல்லல்படும் நமது பக்கத்து உறவுகளை பற்றி கொஞ்சம் யோசியுங்கள். இந்த மக்களின் மூதாதையர்கள் தான், முற்காலங்களில் மற்றவர்களுக்காக, தாங்களுக்கென்று பணம் பண்ணும் எந்த தொழில் எதையும் கற்றுக்கொள்ளாமல், தெய்வப்பணிகளுக்காக வேதங்களைக் கற்று, அனைத்து விதாமான நாட்டு மக்களின் சுபிட்சமான வாழ்க்கைக்காக, தன்னலம் கருதாமல், தெய்வப் பணியாற்றி, மற்ற மக்களிடம் அன்பையும், நல்லொழுக்கத்தையும், விலையில்லா கல்விச் செல்வத்தையும் பரப்பியிருக்கிறார்கள். அவர்களின் வழித்தோன்றல்களோ இன்று எந்தவிதமான அரசாங்க Reservation -இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். sports , millitary கோட்டா, SC , ST , BC , MBC கோட்டா , etc என்று அனைவரும் அரசாங்க reservation -இல் பயனடையும் பொழுது, மற்றவர்களுக்காக வாழ்ந்த இந்த மக்கள் மட்டும் ஏன் எந்த அரசு உதவியும் இல்லாமல் கஷ்டப் பட வேண்டும். ஏன் மேல் கோபப் படாமல், நல்ல மனத்துடன் யோசிங்கள் தோழர்களே. அல்லது எல்லோருக்குமே Reservation -ஐ நிறுத்தி சமமாக நடத்தலாமே?
Rate this:
Share this comment
venki - Chennai,இந்தியா
10-ஆக-201220:42:40 IST Report Abuse
venkiI totally agree with you, even though I am not from that higher e, I believe the job opportunity and promotion should be based on the talent and not on the e,...
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
11-ஆக-201201:45:21 IST Report Abuse
Karam chand Gandhi தங்கள் கருத்து நன்றாக உள்ளது போல் உள்ளது.ஆனால் நீர் எப்படி அமேரிக்கா போனீர், கோடிக்கு மேல் கோடி சபாதிக்க ஆசை. சகதியில் வயலில் உனக்காக உழைக்கும் மக்களுக்கு,நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்த அவர்களுக்கு கொடுப்பதில் ஏன் இவ்வளவு காழ்புணர்வு?...
Rate this:
Share this comment
Cancel
Raajan - mumbai,இந்தியா
10-ஆக-201213:09:16 IST Report Abuse
Raajan இட ஒதிக்கீடு கண்டிப்பாக தேவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை