சென்னைக்கு குழாய் மூலம் எரிவாயு திட்டம்: விரைந்து செயல்படுத்த தமிழக எம்.பி., கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

"காக்கிநாடாவில் இருந்து சென்னைக்கு, குழாய் மூலம் எரிவாயு கொண்டு வர, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும், "டில்லி, மும்பை மற்றும் கோல்கட்டாவிலிருந்து சென்னைக்கு தனி சரக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்' என்றும், லோக்சபாவில் தமிழக எம்.பி., öŒம்மலை கோரிக்கை விடுத்தார்.

நின்று போனது: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில், எரிவாயு கிடைக்கிறது. இதை, ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்து வரும் நிலையில், சென்னைக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டம், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு அங்குலம் நீளத்திற்கு கூட குழாய்கள் அமைக்கப்படாமல், அந்தத் திட்டம், அப்படியே நின்று போனது.


ஒப்பந்தம் ரத்து: ஐந்தாண்டுகளாக பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், குழாய்கள் அமைப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளித்திருந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால், தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட, இந்த குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை, மத்திய அரசு நிறுவனமான, "கெயிலி'டம் விட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.


இந்நிலையில், இந்தத் திட்டம் குறித்து, சேலம் லோக்சபா தொகுதி எம்.பி.,யான செம்மலை நேற்று லோக்சபாவில் பேசியதாவது: கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் எரிவாயு, குழாய் மூலம் குஜராத், மகாராஷ்டிராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு எரிவாயு கொண்டு செல்ல குழாய் அமைக்கப்படாமல் இருக்கிறது. அறிவிக்கப்பட்ட திட்டத்தை நடை முறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, தனியாக சரக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மும்பை - டில்லி; லூதியானா - கோல்கட்டா இடையே, தனி சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம், உலக வங்கியின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களை அறிவித்த, அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சென்னைக்கும் இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என, இதே சபையில் தெரிவித்தார்.


வாக்குறுதி: "சென்னை - மும்பை; சென்னை - டில்லி மற்றும் சென்னை - கோல்கட்டா இடையே, சரக்கு ரயில் போக்குவரத்துக்கு என, தனி ரயில் பாதை அமைக்கப்படும்' என்றும் வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி அளித்து, ஐந்தாண்டுகளாகி விட்ட நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, டில்லி, மும்பை, கோல்கட்டா நகரங்களில் இருந்து சென்னைக்கு சரக்கு ரயில் போக்குவரத்து அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செம்மலை பேசினார்.


- நமது டில்லி நிருபர் -


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஆக-201214:41:24 IST Report Abuse
Nallavan Nallavan GAIL நிறுவனத்தால் இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Manoharan J - Bangalore,இந்தியா
10-ஆக-201209:23:34 IST Report Abuse
Manoharan J அப்பாடா முதல் முறையாக நம்ம MP வாய தொறந்து இருகாங்க ........
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
10-ஆக-201201:22:02 IST Report Abuse
Thamilan-indian ஆந்திராவில் கிடைக்கும் எரிவாயுவை நம்பியவர்களில் வெறும் 30 % பேர்தான் தற்போது பயனடைகிறார்கள். அதில் தமிழகதிற்கு எங்கே கிடைக்க போகிறது. முன்னர் நிறைய கிடைக்கும் என்று நம்பினார்கள், கொடுக்கலாம் என்று கூறினார்கள். அப்படி கூறியவர்கள் யாருக்கும் இதுவரை முழுமையாக கொடுக்க முடியவில்லை. இவர்கள் புதிதாக குழாய் அமைத்து எப்போது கொடுப்பார்கள். அதற்கு முன் ஈரானில் இருந்து அமைத்து விடலாம் என்றால் அமேரிக்கா முட்டுக்கட்டை போடுகிறது. உலகமெல்லாம் பொருளாதார் வீழ்ச்சி. இந்திய அரசிடம் பணமில்லை. ரெட்டி, பழனிசாமி போன்றோரிடம்தான் கொஞ்சம் பணம் உள்ளது. அவர்களும் ஜெயிலில் கம்பி என்ன வேண்டிய நிலை. என்ன செய்வது?. இந்தியர்கள் தமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடித்து சாவார்கள் என்பது அவர்களின் தலைஎழுத்து, saabakkedu. ஆங்கிலேய ஆக்கிரமிப்பும் நடந்திருக்காது. இன்று இந்தியனை, தமிழனை அடிக்க உலகில் எவனும் இருந்திருக்க மாட்டான். கேடுகெட்ட அரசியல் சட்டமோ, நாடு சுதந்திரமடைந்த பின்பும் உண்மையை மறைக்கிறது. அந்நியர்களுக்கு காவடி தூக்குவதுதான் இந்தியனோ, தமிழனோ முன்னேற ஒரே வழி என்கிறது. மூடர்களையும், குருடர்களையும், காட்டுமிராண்டிகளையும், அடிமைகளையும், பிசைகாரகளையும் ஊக்குவிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்