அனுமதியின்றி கட்டடம் : ஜேப்பியார் கல்லூரிக்கு நோட்டீஸ்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஸ்ரீபெரும்புதூர்:உள் விளையாட்டரங்கு சுவர் சரிந்து, வட மாநிலத் தொழிலாளர்கள் பத்து பேர் இறந்ததைத் தொடர்ந்து, கல்லூரியில் அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டதற்கு, விளக்கம் கேட்டு ஊராட்சி சார்பில் "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. கட்டடங்களை பொதுப்பணித் துறை மூலம் ஆய்வு செய்ய, காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். சுங்குவார்சத்திரம் அடுத்த குன்னம் கிராமத்தில், "ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்காக பல்நோக்கு உள் விளையாட்டரங்கு கட்டப்படுகிறது.கடந்த 6ம் தேதி, பல்நோக்கு உள் விளையாட்டரங்கு சுவர் சரிந்து விழுந்ததில், வட மாநிலத் தொழிலாளர்கள் பத்து பேர் இறந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கல்லூரி தலைவர் ஜேப்பியார், இயக்குனர் மரியவில்சன் உட்பட ஐந்து பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரியில், 62 ஆயிரத்து, 953 சதுர அடிக்கு கட்டடம் கட்ட, உள்ளாட்சி அமைப்புகளிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாணவியர் விடுதி, கேன்டீன், வகுப்புகள் நடைபெறும் கட்டடம், ஆய்வகம், ஆகியவை கட்டப்பட்டுள்ளது.அத்துடன், அனுமதியின்றி, மாணவர்கள் விடுதி, ஆய்வகம், முதுகலை வகுப்புகளுக்கான கட்டடம், உள் விளையாட்டரங்கு, ஆகியவை கட்டப்படுகிறது. கட்டடங்கள் அனைத்தும் மூன்று மாடிகளைக் கொண்டதாக கட்டப்படுகிறது.கல்லூரியில் கட்டடங்கள் அனுமதியின்றி கட்டப்படுவதை, அதிகாரிகள் யாரும், "கண்டுகொள்ளவில்லை!'

பத்து பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து துறை அதிகாரிகளும் விழித்துக் கொண்டனர். தற்போது, ஊராட்சி நிர்வாகம் சார்பில், அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியதற்கு விளக்கம் கோரியும், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, 15 நாட்களுக்குள் முறைப்படி அனுமதி பெற வலியுறுத்தியும், கல்லூரிக்கு "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.பத்து பேர் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்லூரியிலிருந்து மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். பத்து நாட்கள் விடுமுறை விடப்படுவதாக, கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்; அதன்பின் எவ்வித அறிவிப்பும், கல்லூரி சார்பில் வெளியிடப்படவில்லை.
இச்சூழலில், கல்லூரியில் உள்ள கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய, காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். கட்டடங்கள் தரமானதாக கட்டப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்து அறிக்கை தரும்படி, காவல் துறையினர், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.முறையாக கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பாகவே, கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. எனவே, பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி அளித்த, அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேப்பியார் மீது, மேலும் பல வழக்குகள் பாய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஜேப்பியாருக்கு சொந்தமான பனிமலர் பொறியியல் கல்லூரியில், கழிவு நீர் தொட்டியில் சிறுவன் விழுந்து இறந்த வழக்கு உட்பட பல்வேறு வழக்கில், ஜேப்பியாரை சேர்க்க வாய்ப்புள்ளதாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam Ponraj - Chennai,இந்தியா
11-ஆக-201217:47:10 IST Report Abuse
Sam Ponraj விஜயகாந்த்துக்கு ஆலோசனையும், நிதி உதவியும் செய்து வருவதுதான் நிஜப்பின்னணி என்கிறது அரசியல் வட்டாரம்.
Rate this:
Share this comment
Cancel
E.GURUSAMY. - OBAJANA,நைஜீரியா
11-ஆக-201216:56:36 IST Report Abuse
E.GURUSAMY. E.GURUSAMY.NELLAI...கப்பம் கட்டி விட்டால் பிரச்னை முடிந்துவிடும், பிரச்சனை நான் MGR ன் பழைய வலது கை,,நான் ஏன் கப்பம் கட்ட வேண்டும் என்ற நினைப்பு,,விசாரணை என்ற பெயரில் டீல் முடிந்ததும் வெளியே வந்து விடுவார் கவலை வேண்டாம். ..
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஆக-201212:01:08 IST Report Abuse
Kasimani Baskaran "பத்து பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து துறை அதிகாரிகளும் விழித்துக் கொண்டனர்" அதிகாரிகள் உறங்கிக் கொண்டிருந்தார்களா? வேலையை சரியாக செய்யவில்லை. அதை சொல்ல ஏன் தயக்கம். இப்படிப்பட்ட அயோக்கிய அதிகாரிகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு சிறிய கட்டடத்துக்கு அனுமதி கொடுக்க எவ்வளவு நொள்ளை பார்க்கும் அதிகாரிகள் இவ்வளவு பெரிய அளவிலான மோசடிக்கு ஏன் துணை போகிறார்கள்? கையூட்டு வங்கி இருப்பார்கள் - அல்லது ஜேபியார் அவர்களுக்கு மாமனா, மச்சானா?
Rate this:
Share this comment
Cancel
vision2020 - chennai,இந்தியா
11-ஆக-201210:04:38 IST Report Abuse
vision2020 jaila போடவேண்டியவனோ நாம நாடுல நேரிய பேரு இருக்காங்க.நான் ஜேப்பியார் கல்லூரி மாணவன் ,ஜேப்பியார் என்னை போல பல மாணவர்களுக்கு கண்ணனுக்கு தெரிஞ்ச கடுவுள இருகரு,அத சொன்ன புரியாது ,என்ன மாதுரி விவசாயி மகனா இருந்து கஷ்டபடுரவன்களுக்கு தான் அது puriyum ,அவர பத்தி யாரு வேணாலும் தப்ப சொலுங்க ,பட் என்ன மாதுரி பல மாணவர்களுக்கு நல்ல தெரியும் ஜேப்பியார் யாரு நு.
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-201209:08:29 IST Report Abuse
Sivakumar Manikandan சாதாரண போலீஸ் காரன் சொத்து இன்னக்கி 15 காலேஜ் .............கொறஞ்சது 10,000 c தேறும்.....
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
11-ஆக-201206:36:00 IST Report Abuse
g.k.natarajan இதைபோல் எல்லா தனியார் கல்லூரிகளையும் ஓர் சிறப்பு குழு வைத்து, கட்டிடங்கள்,அனுமதி உள்ளதா,பணம் எங்கிருந்து வந்தது, வருமான வரி கணக்கில் காட்டப்பட்டுள்ளதா போன்றவைகளை சரிபார்த்து குற்றம் செய்தவர்கள்[,பாரபட்சமின்றி], மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு அப்பத்தான் திருந்தும்~பலர் உள்ளே போக வேண்டி வரும்
Rate this:
Share this comment
Cancel
C Suresh - Charlotte,இந்தியா
11-ஆக-201204:00:50 IST Report Abuse
C Suresh Arrest transport minister for Road accident Stupidity
Rate this:
Share this comment
shahin - Riyadh,சவுதி அரேபியா
11-ஆக-201212:05:03 IST Report Abuse
shahinMr. Suresh, its not a road accident pls read the news then give the comments...
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
11-ஆக-201202:36:13 IST Report Abuse
குடியானவன்-Ryot மாணவர்களின் கல்வி கட்டணத்தை நேரடியாக பணமாக வாங்காமல் தேசிய வங்கியில் கட்ட அரசு உத்தரவிடவேண்டும் அப்போதுதான் இது போன்ற கல்விதந்தை என்று சொல்லி கொண்டு மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டத்தினரிடம் இருந்து அரசு நாட்டு மக்களை காப்பாற்ற முடியும்....
Rate this:
Share this comment
Cancel
Periya-Rasu - Baton Rouge,யூ.எஸ்.ஏ
11-ஆக-201202:24:13 IST Report Abuse
Periya-Rasu சும்மா ஒரு பத்து பதினஞ்சு கேச போட்டு நொங்கு எடுங்க .. மக்கள் பணத்தை ஏமாத்தி சொகுசா இருக்கிறவங்க குலை நடுங்கனும் ..
Rate this:
Share this comment
Cancel
kalaignar piriyan - Arivaalaiyam,யூ.எஸ்.ஏ
11-ஆக-201201:01:22 IST Report Abuse
kalaignar piriyan சட்டம் இருட்டில் தன் கடமையை செவ்வனே செய்யும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்