E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012,23:56 IST
கருத்துகள் (174)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: சென்‌னையில் நாளை ( 12-ம் தேதி) தி.மு.க., நடத்த உள்ள டெசோ மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. சென்னையில் காவல் துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டதிற்கு பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெசோ மாநாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். டெசோ மாநாட்டிற்கு அனுமதி இல்லை என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்; மாநாடு நடக்கும் மைதானம் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லை என்பன உள்ளிட்ட 11 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. எனவே டெசோ மாநாடு அனுமதி கேட்டிருந்த தி.மு.க. எம்எல்.ஏ. அன்பழகனிடம் மறுப்பு தொடர்பான கடிதம் அளிக்கப்படும் என இணை கமிஷனர் சேஷாயி கூறினார்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நாளை 12ம் தேதி "டெசோ' எனப்படும் தமிழ் ஈழ ஆதரவு மாநாட்டுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ளார். மாநாட்டில் வெளிநாட்டு தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்து வழக்கு: இந்நிலையில், தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானம் மற்றும் சென்னை நகருக்குள் எங்கும் மாநாட்டிற்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும், நகருக்கு வெளியில் மாநாட்டை மாற்றிக் கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.இம்மனுவை நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, "ஒய்.எம்.சி.ஏ., மைதானம் எதிரில் அரசு மருத்துவமனை உள்ளது. மாநாட்டுக்கு அனுமதியளித்தால், நோயாளிகளை ஒலி மாசு பாதிக்கும். மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். எனவே, மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது' என வாதாடினார்.
தி.மு.க., வாதம்: ஒய்.எம்.சி.ஏ., சார்பில் வழக்கறிஞர் தங்கவேல், "தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் இதே மைதானத்தில் கூட்டங்களை நடத்தியுள்ளன. மொத்தம் 99 கிரவுண்ட் இடம் உள்ளது. பல மாநாடுகள், கருத்தரங்குகள் இங்கு நடத்தப்பட்டுள்ளன. தி.மு.க., தரப்பில் அன்புதுரை என்பவர் கடந்த மாதம் 2ம் தேதி அனுப்பிய விண்ணப்பத்தின்படி, 5ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது' என்றார்."டெசோ' தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், "மாநாடு குறித்து பத்திரிகைகளில் விரிவான விளம்பரங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 12ம் தேதி மாநாடு நடக்கும் நிலையில், கடந்த 7ம் தேதி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் புத்தக கண்காட்சி, வர்த்தக கண்காட்சி, இன்னிசை நிகழ்ச்சிகள், நடத்தப்பட்டுள்ளன. போலீஸ் கமிஷனரிடம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல், கோர்ட்டுக்கு நேரடியாக வந்துள்ளார். "டெசோ' தரப்பில் அனுப்பிய கடிதங்களை, மறைமுகமாக மனுதாரர் பெற்றுள்ளார். அதை எப்படி பெற்றார் என தெரிவிக்கவில்லை. அதில் இருந்து அவரது நோக்கம் தெரிகிறது' என்றார். லட்சம் பேருக்கு இடம் இல்லை: அரசு மற்றும் போலீஸ் கமிஷனர் சார்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன்: தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், ஒரு லட்சம் பேர் மாநாட்டுக்கு வருவதாகவும், 1,250 வாகனங்கள் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 8,000 பேர் தான் இருக்க முடியும் என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. மைதானத்தில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. ஒரு வாயில் வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் ஒதுக்கப்படும். மற்றவர்கள் உள்ளே செல்லவும், வெளியே

வரவும், மற்றொரு வாயில் பயன்படுத்தப்படும். எனவே, ஒரே வாயிலை பயன்படுத்தும் போது, அங்கு வருபவர்களின் பாதுகாப்பு ஆபத்துக்குரியதாகி விடும். தினசரி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 3,000 நோயாளிகள் வருகின்றனர். மைதானத்தில் மாநாடு நடத்த அனுமதித்தால், நோயாளிகள் மட்டுமல்லாமல், பொது மக்களும் பாதிக்கப்படுவர். மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பணிகளும் நடக்கிறது. எனவே, மாநாட்டுக்கு அனுமதித்தால், சென்னை நகர மக்களின் வாழ்வு ஸ்தம்பிக்கும்.இவ்வாறு அவர் கூறினார். மத்திய அரசு கடிதம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கடிதம் ஒன்றையும், அட்வகேட்-ஜெனரல் தாக்கல் செய்தார். அதில், "வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டுக்கு ஆட்சேபணையில்லை. மாநாட்டின் தலைப்பில், "ஈழம்' என்கிற வார்த்தையை நீக்கி விடலாம்' என கூறப்பட்டுள்ளது.ஆட்சேபனையில்லை என்கிற மத்திய அரசின் கடிதத்தை, ஒட்டுமொத்தமாக கருதக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனை பின்பற்றப்படவில்லை என்றும் அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார். போலீஸ் முடிவெடுக்க உத்தரவு: இதையடுத்து, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:தமிழ்நாடு நகர போலீஸ் சட்டப்படி, பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஒரு பொதுக் கூட்டத்துக்கு அனுமதியளிக்கவோ, நிராகரிக்கவோ, போலீஸ் கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரர் தரப்பில் எந்த மனுவும் போலீஸ் கமிஷனருக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், அவர் தாக்கல் செய்த மனுவோடு, மைதானத்தில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு ஓய்.எம்.சி.ஏ.,வுக்கு தி.மு.க., பகுதிச் செயலர் அன்புதுரை அனுப்பிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை எப்படி மனுதாரர் பெற்றார் என்கிற கேள்விக்கு பதில் இல்லை. மாநாடு நடத்த அனுமதி கேட்டு, தி.மு.க., தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது உத்தரவு பிறப்பிக்க போலீஸ் கமிஷனருக்கு அதிகாரம் இருந்தும், இதுவரை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. மாநாட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில், உள்நோக்கத்துடன் இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனருக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாங்கள் பறிக்க விரும்பவில்லை. எனவே, இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என கமிஷனருக்கு உத்தரவிடுவது தான் உகந்ததாக இருக்கும் என கருதுகிறோம்.எனவே, மைதானத்தின் கொள்ளளவு, அங்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்த மைதானத்தை பயன்படுத்த அனுமதியளித்து முன்பு பிறப்பித்த உத்தரவுகள், மருத்துவமனை அமைந்துள்ள தூரம், ஒலிபெருக்கியை பயன்படுத்த உள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தகுந்த உத்தரவை, போலீஸ் கமிஷனர் பிறப்பிக்க வேண்டும்.இந்த உத்தரவு பெற்ற உடன், போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்து, அதை "டெசோ' மற்றும் மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்: கருணாநிதி பேட்டி:சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி, நிருபர்களிடம் கூறியதாவது:"ஈழம்' என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என, உள்துறை அமைச்சகத்திடமிருந்தோ, பிரதமரிடமிருந்தோ எதுவும் வரவில்லை. ஈழம் என்ற வார்த்தை, தமிழ் இலக்கியங்களிலேயே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இடம் பெற்றுள்ளது. ஈழம் என்பது இல்லாத, கற்பனை சொல் அல்ல; வரலாற்றிலேயே இடம் பெற்ற ஒரு சொல். "டெசோ' மாநாட்டில் பங்கேற்க,

Advertisement

காங்கிரசாருக்கும் அழைப்பு தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு அழைப்பு கொடுத்து, விடுத்த வேண்டுகோளின் காரணமாகத்தான், இங்கே வர விரும்பிய பல பேருக்கு விசா போன்ற அனுமதிகளை, மத்திய அரசு வழங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் எனச் சொல்வர் என்று நாங்களும் நினைத்தோம்; அதன்படி சொல்லியிருக்கின்றனர்.அமைதியான முறையில் மாநாடு நடக்க, போலீஸ் துறைக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை, அவர்கள் தட்டிக் கழிக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.
யாருடைய உத்தரவுக்காகவோ, யாருடைய கட்டளைக்காகவோ, யாருடைய கருத்துக்களுக்காகவோ தேவையில்லாமல், ஒரு அவப்பெயரை அவர்கள் தேடிக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். மாநாட்டிற்கு அனுமதி மறுக்கும் பட்சத்தில், "தடைக்கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு'என்று பாரதிதாசன் பாடியிருக்கிறார். எனவே, திட்டமிட்டபடி, "டெசோ' மாநாடு நடைபெறும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

தி.மு.க.,வினர் கலக்கம்: "டெசோ' மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதற்காக, மாவட்ட வாரியாக தி.மு.க.,வினர் ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், எவ்வளவு பேர், எத்தனை வாகனங்களில் வருகின்றனர் என்பது குறித்து கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், "டெசோ' மாநாட்டுக்கு தடை விதிக்கப்படுமானால், தி.மு.க.,வினர் சென்னைக்கு புறப்படும் முன், கைது செய்ய போலீசார் தயார்படுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையில் முன்வரிசையில் நின்ற தி.மு.க.,வினர், தற்போது கைது நடக்கலாம் என்பதால் கலக்கத்தில் உள்ளனர்.
ஈழத்துக்கு மத்திய அரசு தடை: "டெசோ' மாநாட்டில், "ஈழம்' என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது' என, மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு, மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில், அதன் துணைச் செயலர் ஆர்.கே.நாக்பால், தமிழ் ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டை நடத்தும் ஏற்பாட்டாளர், ஹசன் முகமது ஜின்னாவுக்கு, கடந்த 9ம் தேதி, கடிதம் அனுப்பியுள்ளார்.
தி.மு.க., தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியல் ரீதியாக, சர்வதேச அளவிலான மாநாட்டை நடத்துவதற்கும், அதில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதற்கும், வெளியுறவு அமைச்சகம், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், இந்த மாநாட்டுக்கான தலைப்பில், "ஈழம்' என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கடிதத்தின் நகல், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (174)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash JP - chennai,இந்தியா
12-ஆக-201200:12:53 IST Report Abuse
Prakash JP டெசோ மாநாடு நடந்தால் தீவிரவாதிகள் வருவார்கள் (விடுதலைப்புலிகள் ) ஆதலால் அனுமதி தரமுடியாது, ஈழம் என்ற வார்த்தை இருக்கிறது அதினால் டெசோ மாநாட்டிற்க்கு அதிமுக ஜெயாவின் காவல்துறை அறிவிப்பு... குபீர் திடீர் உணர்வாளர்கள், நடுநிலை நாயகர்கள் யாரும் இதுப்பற்றி வாயே திறக்கவில்லை........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Parandagan - Gobi,இந்தியா
11-ஆக-201214:39:34 IST Report Abuse
Parandagan நாளைக்கு இருக்கு எல்லோருக்கும் ஆப்பு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Parandagan - Gobi,இந்தியா
11-ஆக-201214:37:08 IST Report Abuse
Parandagan மறுபடியும் ஒரு சாமி பட ஸ்டைல் ஷூட்டிங். be கேர் புல்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
11-ஆக-201214:36:26 IST Report Abuse
manoharan இந்த திராவிட கழகங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டை குட்டி சுவர் பண்ணிவிட்டார்கள். 1960 களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி, தமிழ் மக்களை இந்தி படிக்காமல் பின்தங்க வைத்து இப்போது பாடுபட வைத்திருக்கிறார்கள். தி மு க ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டி, தலைவரின் மகளே திகார் சிறையில் கம்பி என்ன வைத்து பேர் நாறுகிறது. தி மு வுக்கு சாவு மணி அடித்து விட்டது போல் தெரிகிறது. எப்போதெல்லாம் தேவையோ அப்போது இந்த தமிழ் ஈழ பிரச்சினை, மீனவர் தாக்கபடுவது பிரச்சினை என்று உயிர் கொடுத்து மக்களை திசை திருப்புகின்றனர். இலங்கையில் எல்லாம் முடிந்து விட்டது. தி மு க உண்மையிலேயே ஈழ தமிழருக்கு உதவி இருக்க வேண்டுமானால் 2009 ல் செய்து இருக்கலாம். மத்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் நன்றாக கொள்ளை அடித்து கொண்டு இருந்ததால் அப்போது வாயை திறக்காமல் இப்போது கதை பண்ணுகிறார்கள். எல்லாம் சுய நலம். தமிழ் மக்களே ஏமாந்தது போதும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
d.punitha - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-201213:56:29 IST Report Abuse
d.punitha பிரதர் அமானுல்லாஹ்வின் கருத்துக்கள் சிந்திக்கும் விதமாக உள்ளது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
d.punitha - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-201213:49:34 IST Report Abuse
d.punitha தலைவர் கருணாநிதி அவர்கள்க்கு எதிராக செயல்படுவது மட்டும்தான் அம்மா அரசின் சாதனை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-201213:19:36 IST Report Abuse
periya gundoosi என்ன இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டான், எத்தனை போலீஸாபிசரு போனாலும் பரவாயில்லை, காணாப் போன என் கிணத்தை கண்டுபிடிக்காம விடமாட்டேன். ஏன்னா எங்கிட்டை கிணறு தோன்டினதுக்குண்டான ரசீது இருக்கு.வடிவேல் காமெடி.... எத்தனை சொற்களுக்கு தடை விதித்தாலும், எத்தனை இடையூறுகள் வந்தாலும் பரவாயில்லை. யார் தடுக்க நினைத்தாலும் இந்த மாநாட்டை நடத்தியே காட்டுவேன், எனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது- கலைஞர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Eela Tamilan - Jaffna,இலங்கை
11-ஆக-201213:12:34 IST Report Abuse
Eela Tamilan டெசோ மகாநாட்டை தடை செய்தமைக்கு தமிழக அரசுக்கு ஈழ தமிழனின் நன்றிகள். ஈழ போரில் உறவுகளை இழந்து நிற்பவன் என்ற முறையில் இம் மடலை வரைகின்றேன் ஈழ போர் உக்கிரம் அடைந்து நின்றபோது எல்லா மக்களும் தமிழகத்தையே நம்பி நின்றனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எம்மை இலங்கை அரசிடம் இருந்தும் விடுதலை புலிகளிடமிருந்து கட்டு விடுவார்கள் என்று நம்பி இருந்தனர். தமிழக அரசியலில் இருக்கும் சில அரசியல் தலைமைகள் இலங்கை யுத்தத்தில் அரசிலியல் நடத்தினரா தவிர ஈழ மக்களுக்கு உதவமுன்வரவுமில்லை எந்த நடவடிக்கையும் எடுக்கவுமில்லை. 1. தி.மு.க கருணாநிதி 2. வை.கோ 3. விடுதலை சிறுத்தைகள் 4. நெடுமாறன் போன்றோரை கூறலாம். வேடிக்கை என்னவென்றால் கருணாநிதியின் ஒரு மணி நேர உண்ணவிரத்திட்கு பின்னரே டாங்கிகளும் ஆட்லறிகளும் ஈழ மண்ணை பதம் பார்த்தன. அதுவரை ராஜபக்சே அரசு, தமிழக அரசு என்ன முடிவு எடுக்குமோ / இந்திய மத்திய அரசை இலங்கைக்கு உதவ வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்குமோ என அஞ்சியது. டெசோ மகாநாடும் ஈழ தமிழரை இன்னும் ஒரு புதைகுழியில் தள்ளும் ஒரு முயற்சியாகவே ஈழ தமிழரால் பார்க்கபடுகின்றது. கருணாநிதி அல்லது வேறு அரசியல் தலைவர்களோ ஈழ தமிழருக்கு உத்வுட்டேன்றல் உங்கள் நியாயமான கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கு முன்வைத்து கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருக்கவும். நவம்பரில் இலங்கையில் ஏற்படுள்ள முன்னேற்றங்கள் குறித்து UN மீளாய்வு உள்ளது அதில் இந்திய முக்கிய அங்கம். டெசோ மகாநாடு செலவு செய்த பணம் போரால் பாதிக்க பட்ட ஈழ தமிழருக்கு கிடைத்திருந்தால் பேர் உதவியாக இருந்திருக்கும். சில நேயர்கள் கேட்கலாம் ஏன் ஜெயலலிதா பற்றி குறிப்பிடவில்லை என்று? ஈழ தமிழர் ஜெயலலிதா எதுவும் செய்வர் என்று எதிர்பாக்கவில்லை M. G. R இருந்திருந்தால் ஈழத்தில் ரத ஆறு ஓடியிருக்காது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
karthikeya - Cuddalore,இந்தியா
11-ஆக-201213:09:54 IST Report Abuse
karthikeya ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது . அந்த இடத்தில இது வரை மாநாடு போட்டதேயில்லையா .ஈழம் வார்த்தையை ஜெயலலிதா பயன்படுத்தியதே இல்லையா. எல்லாம் பார்ப்பன சூது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
11-ஆக-201213:07:30 IST Report Abuse
Appavi Tamilan ஆஹா..இது எதிர்பார்த்ததுதான்...ஜெயா தேர்தலில் ஓட்டு கேட்கும்போது இல்லை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லி ஓட்டு கேட்டார்...இதற்கு ஜால்ரா அடித்த சீமான் போன்றோரும் இப்போது என்ன சொல்வார்கள்? கன்னட பிரமணரான ஜெயா தமிழர் மேல் எள்ளளவும் அக்கறை இல்லாதவர்....திமுக நடத்தும் மாநாடு என்ற ஒரே காரணத்திற்க்காக அதை தடை செய்கிறாரே .... ஒரு முதல்வராக ஈழத்தமிழர்காக ஜெயா என்ன செய்வார்? கருணாநிதி நடுவண் அரசுக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் அதை விமர்சனம் செய்தவர், இன்று அதையே எல்லா பிரச்னைகளுக்கும் தேவைகளுக்கும் செய்கிறார்....தமிழரின் தேவைகளை பூர்த்தி செய்ய யாரும் உதவ மாட்டார்கள்...உண்மை தமிழர்களுக்கு இது ஒரு அசிங்கம்...குருதி உறவுகள் ஈழத்தில் அழிந்ததை வேடிக்கை பார்த்தோம்...அரசியல்வாதிகள் அதை வைத்து அரசியல் செய்தார்கள்...இன்று அங்கே எஞ்சியிருக்கும் மக்களுக்கு ஆதரவாக நம்மால் ஒற்றுமையாக ஒரு கூட்டம் கூட நடத்த இயலவில்லை...எல்லாம் இந்த கேடு கேட்ட அரசியலால் நாம் சிதறிக்கிடப்பதே காரணம்... உலகத்தில் பழம்பெரும் சமூகமாக, உலகுக்கு பலவற்றை கற்றுகொடுத்த சமூகமாக, 20000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழி கூறும் சமூகமாக இருக்கும் தமிழினம் இன்று நாசமாய் போகிறது....நாளை தமிழகத்திலேயே தமிழன் இன்னலுற்றாலும் அதை நம்மால் எதிர்த்து போராட முடியாது...நமக்கு ஆதரவும் கிடைக்காது...நம் அரசியல்வாதிகளும் அதை வைத்து அரசியல் செய்வார்கள்...தமிழனே ..சிந்திக்காதே...அது நம்மால் இயலாது....கேடு கேட்ட அரசியல் என்னும் சாக்கடையில் ஊறிக்கிடக்கும் பன்றிக்கூட்டம் போல நாம் இருக்கும் வரை....எதுவும் இயலாது...முடியாது..நடக்காது....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.