"ஊழலுக்கு பதக்கம் என்றால் இந்தியாவுக்கு தான்':பாபா ராம்தேவ்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

""ஒலிம்பிக்கில், விளையாட்டுப் போட்டிகளுக்கு பதக்கம் அளிக்கப்படுவது போல், ஊழலுக்கும் பதக்கம் அளிக்க முடிவு செய்தால், அந்தப் பதக்கம் நிச்69+சயம் இந்தியாவுக்கு தான் கிடைக்கும். அந்தளவுக்கு ஊழல் நம் நாட்டில் நாறிப்போய் கிடக்கிறது,'' என, யோகா குரு ராம்தேவ் குற்றம் சாட்டினார். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும், கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர வலியுறுத்தி, யோகா குரு பாபா ராம்தேவ், டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ராம்லீலா மைதானத்தில், மூன்று நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ள அவர், இரண்டாவது நாளான நேற்று, மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியதாவது:ஊழலை ஒழிப்பதற்கு, வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்; வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும், இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும்; சி.பி.ஐ., அமைப்புக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற, மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, இந்த உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. கறுப்புப் பணத்தை மீட்பதற்கு, ஏழு யோசனைகளை அரசுக்கு சொல்லியுள்ளேன்.

ஒலிம்பிக்கில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அந்த விளையாட்டுகளில், ஊழலையும் சேர்த்துக் கொண்டால், நிச்சயம் அதற்கான தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு தான் கிடைக்கும். அந்தளவுக்கு இந்தியாவில் ஊழல் நாறிப்போய் கிடக்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரும், ஊழலால் கெட்டுப் போயுள்ளது.அன்னா ஹசாரேக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன; அதில் உண்மையில்லை; நாங்கள் ஒருமித்துதான் செயல்படுகிறோம். ஊழல் எதிர்ப்பில், நாங்கள் இருவரும் எதிர்காலத்திலும் ஒருங்கிணைந்தே செயல்படுவோம்.

கறுப்புப் பணத்தை மீட்பதில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை. கறுப்புப் பணம் எங்கெல்லாம் உள்ளது, எவ்வளவு உள்ளது, யார், யார் வைத்திருக்கின்றனர், எப்போது வெளிக்கொண்டு வரப்படும் என்ற தகவல்கள், எதையும் அரசு சொல்வதில்லை. யார் யார் கறுப்புப் பணம் வைத்திருக்கின்றனர் என்ற தகவலையாவது வெளியிட்டால், நாட்டு மக்கள் தெரிந்து கொள்வர்; அதைக்கூட செய்ய, அரசு மறுக்கிறது.சி.பி.ஐ., அமைப்புக்கு தன்னாட்சி அளிக்க வேண்டும். அந்த அமைப்பு, முழு சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள், ஆளும் பொறுப்பில் உள்ளவர்களின் தலையீடு இருக்கவே கூடாது. பிரதமர் நேர்மையானவர் என சொல்லப்படுகிறது. அது உண்மையெனில், கறுப்புப் பணத்தை, அவர் மீட்க வேண்டும். வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும்.இவ்வாறு ராம்தேவ் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (74)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
12-ஆக-201206:14:41 IST Report Abuse
Bebeto முற்றிலும் உண்மை. இந்த ஊழல் தொடர் (Relay ) ஓட்டத்தில் முதலில் - கருணாநிதி, அவருக்கு அடுத்தது - ப சிதம்பரம் அவருக்கு அடுத்தது - சரத் பவார், கடைசியில் சோனியா.- இந்தியா உலக ரெகார்ட் ஏற்படுத்தும்.
Rate this:
Share this comment
Cancel
Kathir Jegan - boonlay,சிங்கப்பூர்
12-ஆக-201200:29:34 IST Report Abuse
Kathir Jegan திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
desadasan - mumbai,இந்தியா
11-ஆக-201222:34:24 IST Report Abuse
desadasan ஒரு காவி உடை கறுப்புப் பணத்தை பற்றி கதைக்கிறது ..கண் சிமிட்டுகிறது...இருபது வருடங்களுக்குள் இரு நூறு கோடி சேர்க்க முடிந்தவர் தங்கப் பதக்கத்தைப் பற்றிப் பேசுகிறார்..நாம் நம்பிக்கெட்டவர்கள்.. கேட்டதெல்லாம் நம்புவோம்..கெட்டவர்களையும் நம்புவோம்.. மூலிகைக்காரரின் போலிப் பாஸ்போர்ட் கதை வெளிவந்துவிட்டது.. யோக குருவின் யோக்யதை வெளிவரும் நாள் எந்நாளோ?காவி உடை ஆனாலும் காசாசை போகாதடி ஞானத் தங்கமே.. கண்டவர் பேச்சை நம்பும் காலம் என்று மாறும் என் ஞானத்தங்கமே..
Rate this:
Share this comment
Cancel
????????????? - Vietnam,வியட்னாம்
11-ஆக-201222:03:51 IST Report Abuse
????????????? ஐயோ .. பன்னி குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதே
Rate this:
Share this comment
Cancel
Radheshyam - Chennai,இந்தியா
11-ஆக-201221:06:40 IST Report Abuse
Radheshyam சில நாடுகள் இந்தியாவைவிட ஊழல் அதிகம். எனவே இதிலும் பதக்கம் கிடைக்காது.
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
12-ஆக-201200:17:11 IST Report Abuse
Karam chand Gandhi இந்தியாவே முதலிடம்...
Rate this:
Share this comment
Cancel
Aravind .. Coimbatore. - coimbatore ,இந்தியா
11-ஆக-201219:50:18 IST Report Abuse
Aravind .. Coimbatore. யோகா என்பது ஒரு தியானம். ஒரு உடற்பயிற்சி.. அதை வைத்து கோடிகளில் செல்வம் சேர்த்தது எப்படி.. ? ஊழலால் இந்தியர்கள் எல்லாருமே சங்கடத்தில்தான் இருக்கிறார்கள்.. ஏதோ உங்களுக்கு மட்டும் அக்கறை இருப்பது போல நடிக்காதீர் .. பொது இடத்தில எப்படி பேசுவது என்பது தெரியாதா.. ? ஒட்டு மொத்த தேசத்தையே அவமானபடுத்துவது சரி அல்ல மிஸ்டர் ராம்தேவ்.
Rate this:
Share this comment
Cancel
E=mc2 - chennai,இந்தியா
11-ஆக-201219:32:31 IST Report Abuse
E=mc2 அப்போ ஒலிம்பிக்ஸ் ல் பதக்கம் இல்லை feel பண்ண வேண்டாம் ன்னு சொல்றாரா
Rate this:
Share this comment
Cancel
alriyath - Hongkong,சீனா
11-ஆக-201218:06:08 IST Report Abuse
alriyath காந்தி சொன்னார், மனிதர்களில் இரண்டு வகை, ஒன்று தவறு செய்பவர்கள், மற்றொன்று சந்தர்பம் கிடைக்காதவர்கள். அதிகமானவர்கள் இரண்டவது வகை மக்கள் தான். சந்தர்பம் கிடைத்தும் நேர்மையாக நடப்பது ஒரு சிலரே, அவர்கள் மாமனிதர்கள். என்ன இருந்தாலும் ஊழலில் இந்தியாவ அடிச்சிக்க எந்த நாடாலயும் முடியாது... இவர்கள் நினைத்தால் இந்த போட்டி அடுத்த ஒலிம்பிக்ஸில் கொண்டு வந்தாலும் ஆச்சர்யபடுவார்கிள்ள..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஆக-201218:03:25 IST Report Abuse
Nallavan Nallavan இங்கே ராம்தேவை எதிர்த்து / கிண்டல் செய்து கருத்து எழுதியவர்களின் பெயர்களைப் பாருங்கள். பல பெயர்கள் நமக்கு ஒரு அடிப்படை உண்மையை உணர்த்தும்.
Rate this:
Share this comment
Cancel
Sivasamy Natarajan - Bangalore,இந்தியா
11-ஆக-201217:19:11 IST Report Abuse
Sivasamy Natarajan அய்யா.. அப்போ அந்த ஊழல் பட்டியலின் அனைத்து பரிசுகளும் இந்த காங்கிரசு மற்றும் தி.மு.க கூட்டணிக்கே முதலிடம் கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்