Delhi ush | பிரணாபின் "டின்னர் டிப்ளமசி'| Dinamalar

பிரணாபின் "டின்னர் டிப்ளமசி'

Added : ஆக 11, 2012 | கருத்துகள் (4)
Advertisement
பிரணாபின்  "டின்னர் டிப்ளமசி'

அரசியல்வாதிகள், குறிப்பாக பதவியில் இருப்பவர்கள், அரசியல் விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள, சக அரசியல்வாதிகளை விருந்துக்கு அழைப்பது வழக்கம். அந்த விருந்தில், பல விவகாரங்கள் அலசப்படும். இதை, "டின்னர் டிப்ளமசி' என்று அழைப்பர். புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், இந்த, "டின்னர் டிப்ளமசி'யை கையாள ஆரம்பித்துள்ளார். சுறுசுறுப்பாக இருந்தவர் பிரணாப். தற்போது, வேலை எதுவும் இல்லாமல், வெறும் புத்தகங்கள் படித்துக் கொண்டும், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் எப்படி அதிக நேரத்தை செலவிட முடியும்?பதவியேற்றவுடன், பிரணாப் அளித்த முதல் டின்னர் சோனியா குடும்பத்தினருக்கு. சென்ற வாரம் நடைபெற்ற இந்த விருந்தில், சோனியா, ராகுல், பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவர்கள் ஜனாதிபதி மாளிகையில் நுழைந்ததும், பிரணாப் உட்பட அவரது குடும்பத்தினர் வணக்கத்துடன் வரவேற்றனர். பிரணாப்பின் மனைவி, இரண்டு மகன்கள், மகள் ஆகியோரும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.விருந்திற்குப் பிறகு, சோனியா, ராகுலைத் தனியாக சந்தித்து பேசினார் பிரணாப். வழக்கமாக ஜனாதிபதியுடன் இருக்கும் பாதுகாவலர்களைக் கூட அனுப்பிவிட்டார் பிரணாப். இந்த வாரம், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு விருந்து அளிக்கப் போகிறார். இதைத் தொடர்ந்து, அத்வானி உட்பட மற்ற கட்சித் தலைவர்களும் விருந்துக்கு அழைக்கப்படுவர்.


ராஜ்யசபா துணைத்தலைவர் பதவி அ.தி.மு.க.,விற்கு?


துணை ஜனாதிபதியாக அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தற்போது அடுத்த பதவிக்கு போட்டி ஆரம்பித்துள்ளது. ராஜ்ய சபாவின் தலைவராக இருப்பார் அன்சாரி. இவருக்கு கீழே துணைத்தலைவராக ரகுமான் கான் உள்ளார். தற்போது அந்த பதவிக்கு வேறொருத்தர் நியமிக்கப்பட வேண்டும்.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய பதவிகள் காங்கிரசுக்கு சென்றுள்ளன. எனவே, ராஜ்ய சபா துணைத்தலைவர் பதவி, எதிர்க்கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்கிறது பா.ஜ., அப்படியே கிடைத்தால், பா.ஜ., இந்த பதவியை எடுத்துக் கொள்ளாதாம். அ.தி.மு.க.,விற்கு கொடுத்துவிடும் என்று சொல்லப்படுகிறது. காரணம், 2014 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது.முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியோ, துணைதலைவர் பதவி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. இன்னொரு பக்கம் காங்கிரசோ, ராஜ்யசபாவில் காங்கிரசின் பலம் குறைவு. எனவே, தங்கள் கட்சியே அந்தப் பதவியையும் கைப்பற்ற வேண்டும் என்கிறது.இப்படி ஆளுக்கொரு ஆசையில் ராஜ்யசபா துணை தலைவர் பதவி கிடந்து திண்டாடுகிறது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - Cochin,இந்தியா
19-ஆக-201200:06:19 IST Report Abuse
bala அப்துல்கலாம் முதல் குடிமகனாக பொறுப்பேற்றதிலிருந்து அவர் செய்த ஒவ்வொரு விஷயமும் ஒரு சாதனையாக வந்தது, ஆனா, இவர் போருப்பட்ட்றதும், அவருக்கு வாங்கிய car எவ்வளவு, இப்போ டின்னர் டிப்ளமசி, இதுமட்டும் தான் முக்கியாம பேசபட்டுவருது. இந்த " முதல் குடிமகனின் சாதனை பட்டியல் எப்போது தொடங்கும்? இல்ல இதுபோல நிகழ்வையே சாதனையாக செய்வாரோ ?."
Rate this:
Share this comment
Cancel
Nelson - TRY,இந்தியா
18-ஆக-201215:09:43 IST Report Abuse
Nelson மாண்புமிகு ப்ரெசிடென்ட் நம்ம INDIA வ கொள்ளயடிக்க்ரவங்களுக்கு விருந்தா never
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-ஆக-201215:11:30 IST Report Abuse
Nallavan Nallavan பிரணாப் தாத்தாவின் மகள் பெயர் சுகன்யா தேவி இல்லையே????
Rate this:
Share this comment
Cancel
bhavani shastry - secunderabad,இந்தியா
16-ஆக-201211:39:36 IST Report Abuse
bhavani shastry எப்படியாவது பிராடு பண்ணி எதிர் கட்சிகளே இல்லாதபடி செய்து விட்டால் நிம்மதியாக ஜன நாயகத்தை காப்பாற்றிவிடலாம் என்று காங்கிரஸ் கணக்கு பண்ணுறதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை