ராஜபாளையம்: பாதைக்காக மேற்கு தொடர்ச்சி மலையில் தீ வைத்த, எஸ்டேட் ஊழியர்கள் இருவரை, ராஜபாளையம் வனத்துறையினர் கைது செய்தனர்.மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த வாரம் வெள்ளியன்று, தீ பிடித்தது. காற்று வேகமாக அடித்ததில், தீ பல இடங்களுக்கு பரவியது. வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடம் சென்று அணைத்தனர். தீ பிடித்ததற்கான காரணம் குறித்தும், விசாரித்து வந்தனர்.
இதனிடையே, நேற்று முன் தினம், மலையிலும் தீ பிடித்தது. ரேஞ்சர் பாலசுப்பிரமணியன் தலைமையில், இரு குழுக்களாக வனப்பகுதிக்குள் சென்று, தீயை அணைத்தனர். மற்றொரு குழுவினர் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் பாதைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்டேட் ஊழியர்களான தேவிபட்டணத்தை சேர்ந்த அய்யப்பன்,39, தேவதானத்தை சேர்ந்த சண்முக ராஜ்,28, வெளியே வந்தனர். இவர்களிடமிருந்த பீடி கட்டு, தீப்பெட்டிகளை கைப்பற்றினர். விசாரணையில்,""வனவிலங்குகளுக்கு பயந்து, எஸ்டேட் செல்ல பாதை அமைக்க, தீ வைத்தது,'' தெரியவந்தது. இதைதொடர்ந்து, இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.