7 துணை மின் நிலையம், 11 உறுப்பு கல்லூரி:முதல்வர் துவக்கி வைத்தார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில், ஏழு துணை மின் நிலையங்கள் மற்றும் தமிழகம் முழுவதும், 11 இடங்களில், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை, "வீடியோ கான்பிரன்சிங்' மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தமிழகத்தின் மின் உற்பத்தியை அதிகரிக்கவும், மின் வினியோகத்தை சீரமைக்கவும், புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியில், தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில், 9.67 கோடி; பெட்டவாய்த்தலையில், 4.60 கோடி; திருவாரூர் மாவட்டம், உள்ளிக்கோட்டையில், 4.70 கோடி; தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டியில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், தலா, 11 கிலோ வாட் துணை மின் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டியில், 27.18 கோடி ரூபாய் மதிப்பில், 33 கிலோ வாட் துணை மின் நிலையமும்; தேனி மாவட்டம், குள்ளப்ப கவுண்டன்பட்டியில், 6.38 கோடி ரூபாயில், 22 கிலோ வாட் துணை மின் நிலையமும்; தஞ்சை மாவட்டம், கரம்பயத்தில், 33.96 கோடி ரூபாயில், 110 கிலோ வாட் துணை மின் நிலையமும் அமைக்கப் பட்டுள்ளது.தரம் உயர்த்தப்பட்டவை, புதியவை என, மொத்தம், 94.49 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு துணை மின் நிலையங்களை, "வீடியோ கான்பிரன்சிங்' மூலம், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழகத்தில், 11 இடங்களில், இரு பாலரும் பயிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்க, முதல்வர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.இதன்படி, சேலம் - எடப்பாடி; கன்னியாகுமரி - கன்னியாகுமரி; திண்டுக்கல் - வேடச்சந்தூர்; ஈரோடு - மொடக்குறிச்சி; மதுரை - திருமங்கலம்; திருவள்ளூர் - திருவொற்றியூர்; ராமநாதபுரம் - பரமக்குடி; நெல்லை - கடையநல்லூர்; விருதுநகர் - அருப்புக்கோட்டை; நாகை - நாகப்பட்டினம்; வேலூர் - அரக்கோணம் ஆகிய பகுதிகளில், புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, தலைமைச் செயலகத்தில் இருந்து, "வீடியோ கான்பிரன்சிங்' மூலம், முதல்வர் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் சேவைகள், தென் மாவட்டங்களுக்கு விரைவில் கிடைக்க, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மதுரை கிளை, 91 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, சென்னை வடக்கு அம்பத்தூர் மண்டல உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி கமிஷனர் அலுவலகம், தரமணி பஸ் நிலையம் அருகில் உள்ள கானகம் சாலையில், 31.74 லட்சம் ரூபாய் செலவில், சோலார் மின் வசதியுடன் நான்கு ரேஷன் கடைகளையும், முதல்வர் திறந்து வைத்தார்.மேலும், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை, பொது வினியோகத் திட்டத்தை சிறப்பாக கண்காணிக்கும் வகையில், 27.72 லட்சம் ரூபாய் செலவில், ஐந்து புதிய ஜீப்புகளை, ஐந்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு முதல்வர் வழங்கினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siddiq - Doha,கத்தார்
13-ஆக-201201:05:06 IST Report Abuse
Siddiq MGR SONG .. இன்னும் எத்த்னை காலம் தான் எமற்றுவர் இந்த நாட்டில .....
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
12-ஆக-201215:49:21 IST Report Abuse
maran செயல்படுமா .....? போட்டோவுக்கு போஸ் கொடுத்து சுய விளம்பரம் தேடுவதைவிட மக்களின் அன்றாட குறைகளை தீர்க்க பாருங்கப்பா ......மக்களின் மனநிலையை பார்த்து இந்த உலகம் ஒரு நாள் அழிய வெகு நாட்கள் இல்லை
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
12-ஆக-201209:33:54 IST Report Abuse
R.BALAMURUGESAN ......STARTING எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா FINISHING சரியில்லையே ஆயா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்