Karunanidhi put war or Eelam | "ஈழம்' மீது கருணாநிதி தொடுத்த யுத்தங்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"ஈழம்' மீது கருணாநிதி தொடுத்த யுத்தங்கள்

Updated : ஆக 13, 2012 | Added : ஆக 11, 2012 | கருத்துகள் (83)
Advertisement
"ஈழம்' மீது கருணாநிதி தொடுத்த யுத்தங்கள்,Karunanidhi put war or Eelam

சென்னையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்திருந்த, "இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு' (டெசோ) இன்று நடக்குமா, நடக்காதா என்ற நிலையில், "ஈழம்' குறித்து பேசும் கருணாநிதி, தான் ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது, "ஈழம்' குறித்து பேசியவர்கள் மீது, அவர் தொடுத்த யுத்தங்கள் அதிகம். கடந்த, 1990 ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்த போது, பழ.நெடுமாறன், "தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாடு' நடத்த திட்டமிட்டார். அந்த மாநாட்டில், "ஈழம்' என்ற தலைப்பில், கண்காட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தவிர, மாநாடு தொடர்புடைய, சாலை.இளந்திரையன் உள்ளிட்ட பலர், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.சென்னையில், 1996ம் ஆண்டு, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பா.ம.க., நடத்திய மாநாட்டில், "ஈழம்' குறித்து பேசியதற்காக, சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க., கூட்டணியில் இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில், 2008 டிச., 27ம் தேதி, "ஈழ உலக அங்கீகார மாநாடு' நடத்தினார். அப்போது, "ஈழம்' என்ற வார்த்தையை போஸ்டர் ஒட்டியும், பெயின்ட் அடித்தும் போலீசார் மறைத்தனர். அப்போதும், தமிழக முதல்வராக கருணாநிதி தான் இருந்தார்."இலங்கை போரை நிறுத்த வேண்டும்' என, தீக்குளித்து இறந்த முத்துக்குமரனுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சாணுரப்பட்டியில் ரத்தினவேலன், தன் சொந்த இடத்தில் சிலை வைக்க முயன்றார்.

அதற்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் இயங்கிய அரசு, சிலை வைக்க தடை விதித்தது. கலெக்டர் சண்முகம் சிலை வைக்க அனுமதி தர மறுத்தார். ரத்தினவேலன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, "தனியார் இடத்தில் சிலை வைக்க தடை விதிக்க முடியாது. அது அவரது சொந்த விருப்பம்' என்று தெரிவித்தார்.இப்படி, "ஈழம்' குறித்து பேசியவர்கள், மாநாடு நடத்தியவர்கள் மீது, கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, தாக்குதல் நடத்தியுள்ளார். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது போல, கருணாநிதி நடத்தும், "டெசோ' நாடகத்துக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Riyadh,சவுதி அரேபியா
12-ஆக-201221:08:29 IST Report Abuse
Rajesh இவருக்கு அதரவு கொடுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வருத்தங்கள்..நீங்கள் தமிழர்கள?
Rate this:
Share this comment
Cancel
varadh - chennai,இந்தியா
12-ஆக-201221:05:26 IST Report Abuse
varadh see who participate in the conference, alagiri, stalin, kanimozhi,karunanidhi .karuninidhi conducts this conference after keeping silent ,when genocide was done in srilanka..people know very well of all his dramas.3- hour fasting drama is the cap of all his dramas,after taking breakfast and lunch in the company of his wife ,dayalu and lover , rajathi.and kanimozhi born out of his illicit relationship with rajathi.. people of tamilnadu will not forgive him for all his misdeeds
Rate this:
Share this comment
Cancel
Prabhu Pechimuthu - Coimbatore,ஐஸ்லாந்து
12-ஆக-201220:11:59 IST Report Abuse
Prabhu Pechimuthu சரவணபெருமாள் ஜால்ரா கூட்டத்த விட கொடுமை உங்கள மாதிரி காலரா கூட்டம் தான். செத்ததுக்கு பிண்ணாடி பால் னு சொல்லுவாங்க. உங்க ஆள் எல்லாரும் செத்ததுக்கு அப்புறம் வாழ்உரிமை கால் உரிமைன்னு சொல்லிட்டு அரசியல் சாக்கடை அள்ளும் வண்டி ஓடிட்டு இருக்குறார்
Rate this:
Share this comment
Cancel
Mohonraj Mohon - p.metuppalayam ,இந்தியா
12-ஆக-201218:21:19 IST Report Abuse
Mohonraj Mohon ஆக மொத்தம் இரண்டு பேருமேஇலங்கை தமிழர்களக்கு காக ஒன்ரும செய வீல்லை தமிழர்கள் என்றும யமளிகள் தான்
Rate this:
Share this comment
Cancel
Subramani Velu - Hosur,இந்தியா
12-ஆக-201217:56:38 IST Report Abuse
Subramani Velu கருணாநிதி என்ற பெயறீலய நிதி யை சுமந்து கொண்டிருவப்பர் இவரும் இவரது பரம்பரையும் ஈழ தமிழர்களின் உள்ளுணர்வு சாபத்தால் கண்டிப்பாக அனுபவித்து தீர வேண்டும் . அரசன் அன்றே கொன்றால் தெய்வம் நின்று கொள்ளும் . கண்ணியகுமரி இல் திருவள்ளுவர் சிலை அமைத்தவருக்கு அவரின் குறள் பொருள் தெரியாத அல்லது நடிக்கிறாரா.உலகத்துக்கே வெளிச்சம் . இவருக்கு தமிழகத்தில் உள்ள அணைத்து அடி மட்ட தொண்டர்களையும் தெரியும் என்ற தகவல் ஒன்று உண்டு ,எங்களுக்கு இவர் ஒருவரின் கபட நாடகம் கூட தெரியாதா...... சுப்பிரமணி வேலு ஹோசூர்
Rate this:
Share this comment
Cancel
Puthiyavan Raj - New Delhi ,இந்தியா
12-ஆக-201216:42:48 IST Report Abuse
Puthiyavan Raj தின மலர் செய்தி : "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்&39 என்பது போல, கருணாநிதி நடத்தும், "டெசோ&39 நாடகத்துக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அந்த முற்றுப்புள்ளியையே, தொடரும் குறியீடாக (கமா) மாற்றி சாதித்து விட்டார் கலைஞர். (நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டது)
Rate this:
Share this comment
parasuraman sharma - jeddah,சவுதி அரேபியா
12-ஆக-201221:14:25 IST Report Abuse
parasuraman sharma\\\\ அந்த முற்றுப்புள்ளியையே, தொடரும் குறியீடாக (கமா) மாற்றி சாதித்து விட்டார் கலைஞர். (நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டது) //// இதையெல்லாம் பெருமையாகக் கருதி வருகிறீர்கள். பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் மறுபடி பாடம் புகட்டுவார்கள். அதிலாவது திமுக பாடம் கற்றால் அண்ணா துவங்கிய கட்சி குடும்பச் சந்தையில் அழிந்தது என்ற அவப்பெயர் சரித்திரத்தில் இடம் பெறாமல் இருக்கும். இதைத் தவிர்ப்பதற்காக ஒட்டு மொத்த திமுகவினரும் ஒரு குடும்பத்திற்கு அடிமையாக இருப்பதைக் கைவிட்டு வைகோவின் தலைமையை ஏற்று அவருடைய கரங்களை வலுப்படுத்த வேண்டும் முடிவு திமுக கட்சியினர் கைகளில்...
Rate this:
Share this comment
Cancel
sanjiv aswin - powerless country,இந்தியா
12-ஆக-201216:16:30 IST Report Abuse
sanjiv aswin டெசோ அமைப்பு மீண்டும் தொடங்க படுவதாக கலைஞர் அறிவித்த போது இது அவரது ஆதரவு கோஷ்டியின் கச்சேரியாக தான் இருக்கும் என ஜெயா அண்ட் கோ நினைத்தது . விழுப்புரத்தில் டெசோ மாநாடு என அறிவிக்க பட்ட போதும், நக்கலும் நையாண்டியும் தான் இந்த தரப்பிடம் இருந்து வெளிப்பட்டது. மாநாட்டு தேதி ஆகஸ்ட் 5 லிருந்து 12 ஆக மாற்றப்பட்டதுடன் விழுப்புரத்திற்கு பதிலாக சென்னை என்று இடமும் மாற்ற பட்ட போதுதான் கலைஞர் இந்த மாநாட்டில் சீரியசாக இருக்கிறார் என்பது புரிந்தது. இலங்கையில் வுள்ள தமிழ் பிரதி நிதி களை அழைக்கும் வேலையை டெசோ அமைப்பு ஆரம்பித்து விட்டது என்கிற தகவலும் அவர்களை எட்டியது. so அவர்களின் தடுப்பு பணி ஆரம்பித்தது. தமிழ் ஈழத்தில் இருந்து யாரும் இந்த மாநாட்டுக்கு வந்து விட கூடாது என்று அங்குள்ள தமிழ் mp களையும், தமிழ் அமைப்புகளின் தலைவர்களையும் தொடர்பு கொண்டு " டெசோ மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளாதீர்கள். வுங்களுகாக தமிழ்நாட்டில் குரல் கொடுப்பது நாங்கள்தான் அவர் நடத்துற மாநாட்டுக்கு அழைப்பு வந்தாலும் போக கூடாது " என்று அழுத்தமாகவே சொல்லியிருகிறார்கள் . ஆனாலும் மாநாட்டிற்கு அவர்கள் வருகிறார்கள் என தெரிந்ததும் மீண்டும் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்திருகிறார்கள்" எங்களுக்கு கலைஞர் ஜெயா நீங்கள் எல்லார் வுதவியும் தேவை. சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்க்கும் ஒரு வாய்ப்பு என்ற அடிப்படையில் நங்கள் அந்த மாநாட்டிற்கு செல்கிறோம் எப்படியாவது நல்லது நடந்தால் சரிதானே" என்று சொல்ல தமிழகத்த்தின் ஈழ ஆதரவு தலைவர்களோ " ராஜபக்ஷேவை கூட நம்புங்கள் . கலைஞரை நம்பாதீர்கள் " என வுச்ச கட்ட வெறுப்பை வெளிபடுதிருகிரர்கள். இதற்கிடையில் டெசோ மாநாட்டிற்கு ஜெயா அரசு தடை விதித்து, தடுத்து விடும் என்று எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது. அது நடந்தது
Rate this:
Share this comment
Cancel
A.DHANABAL - tirupur ,இந்தியா
12-ஆக-201216:09:41 IST Report Abuse
A.DHANABAL dear fris, nallatha yar seithalum atharku support pannanum. finala nallathu nam srilanka peopleku kidaithal pothum
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
12-ஆக-201214:44:02 IST Report Abuse
Rss கருணாநிதி வாழ்க. ஈழத்துக்காக உயிர் விட்டவனுக்கு சிலை தேவை இல்லை . நம் இந்திய ராணுவத்தில் நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தால் தான் சிலை ...
Rate this:
Share this comment
Cancel
Paiva Alan - Chennai,இந்தியா
12-ஆக-201213:19:06 IST Report Abuse
Paiva Alan இது போன்ற கபட நாடகம் நடத்தும் அரசியல் தலைவர்களை __மறந்து விட வேண்டும் இதை தானே இத்தனை காலமாக செய்து கொண்டிருக்கிறோம் , அடே போங்கப்பா, வாய் கிளியிய பேசிய நாம் கை, கால் , ஈyaலaதவர் கலஹதான் இருக்கிறோம், இன்று இவன் , நாளை இநோருவன், ம் ..... தமிழன் எனது சொல்லடா , தலை நிமிர்த்து நில்லடா எங்க அது நடக்கிறது,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை