அரசு போக்குவரத்துக் கழகங்களில், பராமரிப்பு செய்யப்பட்டாத பஸ்களை இயக்கும் டிரைவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி, பாதுகாப்பில்லாமல் பயணிகளை அழைத்துச் செல்லும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். "வருவாயை எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை' என, தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மற்ற மாநில அரசு பஸ்களை காட்டிலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள், படுமோசமான நிலையில் உள்ளன. எட்டு மண்டலங்களில் இயக்கப்படும், 21 ஆயிரம் பஸ்களில், பாதிக்கு மேல் பாடாவதி பஸ்களாகி விட்டன.ஒவ்வொரு நாளும் பஸ்களை எடுக்கும் டிரைவர்கள், புலம்பலுடனேயே அவற்றை இயக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். டீசல் சிக்கனத்தையும், அதிக வருவாயையும் எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் கவனம் எடுத்துக் கொள்வதில்லை.பெரும்பாலான டிப்போக்களில், பழுது நீக்குதல் பெயரில், போக்குவரத்து கழக அதிகாரிகள், மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட நகரங்களில், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளால், ஒவ்வொரு டிப்போக்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள், இயக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ளன.
தற்போதைய அரசு பஸ்களில், பராமரிப்பு என்ற பெயரில், "பெயின்ட்' மட்டுமே அடிக்கப்படுகிறது. பல பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி இல்லாமலும், அதற்கு பதிலாக தகரம், அட்டை போன்றவற்றைப் பொருத்தியும் வைத்திருக்கின்றனர். பயணிகள், காற்றோட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், டிரைவர், கண்டக்டர்களிடம், பயணிகள், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அது மட்டுமின்றி, பஸ்சின், "ஸ்பிரிங்' பட்டை உடைந்து கிடக்கிறது. சீட்டுகள் கிழிந்து, பயணிகளின் உடலை பதம் பார்க்கின்றன. பஸ்சின் கூரை, ஓட்டை, உடைசலாக இருப்பதால், மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், கடும் குளிரில் மக்கள் அவதிப்படுகின்றனர்.எந்த, "ஸ்விட்சு'க்கும் ஒயர்கள் இல்லாமலோ, அறுந்த நிலையிலோ காணப்படுகின்றன.இதுபோன்ற பிரச்னைகளால், டிரைவர்கள் மிகுந்த மன உளைச்சலோடு, வண்டியை ஓட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாதுகாப்பில்லாமல், அரசு பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு, பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெயர் வெளியிட விரும்பாத, அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில் இருந்த நிலை, அரசு பஸ்சில் இப்போது இல்லை. நஷ்டத்தில் இயங்குகிறது என கூறி, தொழிலாளர்களை பாடாய் படுத்துகின்றனர். டிரைவர்கள் பஸ்சை எடுத்தால், இரண்டு நாள் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.
பஸ்சும், சரியான கண்டிஷன் இல்லாமல் இருப்பதால், நீண்ட தூரம் சென்று வருவதற்குள் நொந்து போகிறோம். ஏதாவது கேட்டால், டிரைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கின்றனர். டிப்போக்களில், பாடாவதி பஸ்கள் தான் அதிகம் உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ காலங்களில், ஓட்டை பஸ்களை கொடுத்து, "கூடுதல், "டிரிப்' அடிக்க வேண்டும், அதிகப்படியான வசூலை தரவேண்டும்' என, கூறுகின்றனர். போக்குவரத்து கழகங்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழக அரசு அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
it is high time the state transport be privatized for better service and better income. As long as it remains a pubic service it is difficult to expect proper maintenance, good income, better service and less accidents. Major drawback with the existing services it is a pity that traffic police have no control over it for all the traffic violations very often committed by them which is quite obvious
சில்லறை பிரச்னையை ஒழிக்க பிரீபெயிட்( Prepaid) கார்டு முறையை அனைத்து பேருந்துகளிலும் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இதனால் சில்லறை பிரச்சினை கட்டாயம் ஒழியும் . பயணிகளிடம் வாய்த் தகராறு குறையும் வாய்ப்பு ஏற்படும் .மேலும் அறுதப்பழசான பேருந்துகளை காயலான் கடைக்கு அனுப்ப வேண்டும் .பராமரிப்பில் ஊழல்கள் தலை விரித்து ஆடுவதால் அதனை ஒழிக்க வேண்டும் .ஓட்டை ஒடசல்கள் பேருந்துகளால் பயணியருக்கும் , ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் எப்போதும் மன உளைச்சல்கள் தான் ஏற்படும் ,மழை காலங்களில் இன்னும் நிலைமை படு மோசம் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வது போல அரசு பேருந்துகளையும் கட்டாயம் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் .
ஜி.எஸ்,ராஜன்
சென்னை .
அய்யா நம்ம போக்குவரத்து துறை தரமான ஓட்டுனர்களை உருவாக்க தகுதியான பயிற்சியாளர்கள் தேவை என அரசு புதிதான ஒரு சுட்டறு அறிக்கை ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு வரையறுத்தனர் . இருப்பினும் தற்போதுகூட அதிக
பயிற்சி பள்ளிகளில் அங்கீகரிக்க பட்ட பயிற்சியாளர்களை தவிர்த்து குறைந்த சம்பளத்தில் சாதா ஓட்டுனர்களை
வைத்து முறையாக பயிற்சியளிப்பதில்லை இதை சரியாக தணிக்கை செய்ய வேண்டும்
ஒரு பேருந்து என்றால் குறைந்தபட்சம் என்னென்ன இருக்க வேண்டும் என்பதற்கு சில உதாரணங்கள்......1.பேருந்து நல்ல காற்றோட்ட வசதி கொண்ட ,மழை,மண்,தூசு போன்றவைகளால் பாதிப்பிற்க்குல்லாகாமல் இருக்கும் வகையில் வடிவமைத்தல்....2.ஆபத்து காலங்களில் வெளியேற பின்பக்கம் மற்றும் மேற்பகுதியில் கதவுகளை அமைத்தல் (Emergency Door)....3.இருக்கைகள் நல்ல தரமானதாகவும், எளிதில் தீப்பிடிக்காவண்ணம் வடிவமைத்தல்.. 4 .எக்காரணத்தை கொண்டும் குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்ற கூடாது.....5.ஓட்டுனர் இருக்கை நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாகவும்,அதற்கேற்ற சூழல் கொண்டதாகவும் இருத்தல்,6.பேருந்து சோலார் மற்றும் எரிபொருள் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடியதாக வடிவமைத்தல்.....அதன் மூலம் பகல் நேரங்களில் சூரிய சக்தி மூலமாகவும்,இரவில் எரிபொருள் மூலமாகவும் இயக்கலாம்... 7. பராமரிப்பு மனைகளை நவீனபடுத்துதல்....8.ஆறு மாதத்திற்கு ஒரு முறை அனைவருக்கும் பயிற்சி வழங்குதல் போன்றவை செய்தால் அரசு பேருந்து கழகம் தலை நிமிரும்......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.