மத்திய உணவு சேமிப்பு கிடங்குகளில் அரிசி, தானியங்கள் வீணாகின்றன

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

உற்பத்தி குறைந்ததால், ஏறி வரும் அரிசி மற்றும் தானியங்களின் விலை ஏற்றத்தை தடுக்க மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளில் வீணாகி வரும் உணவுப் பொருட்களை வெளிசந்தைக்கு விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விண்ணை முட்டும் அளவிற்கு தொடர்ந்து ஏறி வரும் விலையேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகவுள்ளது. ஒரு ஆட்சி வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் நிர்ணயிக்கும் சக்தியாக உணவுப் பொருட்களின் விலை உள்ளது.கடந்த 1998ம் ஆண்டு, நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி கவிழ்வதற்கு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெங்காய விலை உயர்ந்ததே காரணமாக அமைந்ததை, இதற்கு உதாரணமாக கூறலாம். கடந்த 1967ம் ஆண்டு, தமிழகத்தில், இந்தி எதிர்ப்புக்கு இணையாக, உணவு பஞ்சமும், காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கும், தி.மு.க.,வின் எழுச்சிக்கும் உதவியது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

வறட்சி:தற்போது ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போதுமான மழை இல்லாத தால், நெல், தானியங்கள், உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால், அவற்றை பதுக்குவது அதிகரித்துள்ளது. அரிசி மற்றும் தானியங்களின் விலைகள் விறுவிறுவென உயர்ந்து வரலாறு படைக்கும் உச்சத்தை தொட்டுள்ளது, அடித்தட்டு, நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது ஒருபுறம் இருக்க, விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு வாங்கும் அரிசி, கோதுமை, தானியங்கள், சேமிப்பு கிடங்குகளில் முறையாக பராமரிக்கப்படாமல் குறிப்பிட்ட சதவீதம் வீணடிக்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்கள் வீணாகி, எலிகளுக்கு உணவானாலும் பரவாயில்லை, அவற்றை மக்களுக்கு குறைந்த விலையில் தரமாட்டோம் என்ற மன நிலையில்,மத்திய அரசு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு சேமிப்பு கிடங்குகளில், 26.7 மில்லியன் டன் அரிசி, 20.6 மில்லியன் டன் கோதுமை கையிருப்பில் உள்ளது. இவற்றில் இருந்து ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் டன் உணவு பொருட்கள் வீணாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் உணவு பஞ்சம் வராமல் தடுக்க 8.2 மில்லியன் டன் கோதுமையும், 11.8 மில்லியன் டன் அரிசியும் கையிருப்பு இருந்தாலே போதும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கையிருப்பு:ஆனால், அதைவிட கூடுதல் உணவுப் பொருட்கள் கையிருப்பு மத்திய அரசிடம் உள்ளது. இந்த கையிருப்பு மூலம், அரிசி, கோதுமை, தானியங்களின் விலை ஏற்றத்தை மத்திய அரசால் நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். விலைவாசி உயரும்போது, கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களை மாநிலங்களின் தேவைக்கேற்ப வெளிச்சந்தையில் விட்டால், விவசாயிகளின் போர்வையில் உலாவும் இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள் வேறு வழியின்றி அவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்வர்.இதன் மூலம் உணவுப் பொருட்கள் விலைவாசி கட்டுக்குள் வரும். மக்களும் நிம்மதி அடைவர். இனியாவது, மத்திய அரசு தனது முடிவை மாற்றி, வீணாகும் உணவுப் பொருட்களை அவ்வப்போது, வெளிச்சந்தைக்கு விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதுகுறித்து வேளாண்துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:உலகிலேயே இரண்டாவதாக அதிக மக்கள் தொகை கொண்டுள்ள இந்திய விவசாயிகளை விட குட்டி தீவான இலங்கை விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு இருமடங்கு மகசூல் செய்து வருகின்றனர். உலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட முதல் நாடான சீனாவின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு ஆப்ரிக்காவில் அந்நாடு விவசாயம் செய்து வருகிறது. ஆனால், இந்தியாவில் பசுமை புரட்சிக்கு பிறகு, விவசாயத்தை பெருக்க பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்காததே விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.இனியாவது, விலை உயர்வை தடுக்க, விவசாயத்தை பெருக்க மத்திய, மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
14-ஆக-201209:21:33 IST Report Abuse
parvathy murali விவாசய மந்திரி என்ன செய்கிறார் ? உணவுப் பொருள்கள் வீனாஹிறது பற்றி அவருக்கு கவலை இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Sulaiman Badsha - Muscat,ஓமன்
12-ஆக-201215:57:24 IST Report Abuse
Sulaiman Badsha இப்டியே பேசிகிட்டே இருந்த எப்படி அரசாங்கத்திற்கு கேடு விதியுங்கள் 1 மாசத்திற்குள் வீணாகும் உணவுகளை ஈளைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் இல்லை அரசாங்கம் சொல்வதுபோல் வருங்காலத்தில் பஞ்சம் விலையேற்றம் ஏற்படாமல் இருக்க சேமிக்கப்படுகிறது என்றால் நல்ல சேமிப்பு கிடங்கை அமையுங்கள் இல்லை என்றால் மக்களே இந்த சேமிப்பு கிடங்குளை முற்றுகை இடுங்கள் பேசி பேசியே காலாத ஓட்ட வேணாம் நாம்
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
12-ஆக-201215:54:03 IST Report Abuse
maran ஒரு வேலை உணவுக்கு கொலை செய்யும் காலம் வெகு நாட்கள் இல்லை .........யானை கட்டி போரடித்த காலத்தை புத்தகவடிவில் படித்தால் தான் உண்டோ ......?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
12-ஆக-201215:00:40 IST Report Abuse
g.s,rajan வரலாறு காணாத உணவு உற்பத்தி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன ,ஆனால் விலைவாசி துளியும் குறையவில்லை .வீணாக் போகும் உணவு பொருட்களை சந்தையில் விட்டால் கட்டாயம் விலை வாசி குறையும் .இல்லையேல் பெரும் அளவில் பதுக்கல்கள் செய்யப்பட்டு உணவு பொருட்கள் விலை தாறு மாறாக உயர்ந்து ,மக்களை பட்டினி போட்டு சாகடித்து விடும் .பூச்சிகள்,வண்டுகள் தின்பதை உயிரோடு இருக்கும் மனிதர்கள் தின்னக்கூடாதா ? அல்லும் பகலும் வெயிலிலும் மழையிலும் உணவுப்பொருட்களை பாடு பட்டு விவசாயம் செய்யும் விவசாயிகளின் கஷ்டம் தான் ஆள்பவர்களுக்கு தெரியுமா ?விளைவிப்பது கடினம் வீணாக்குவது எளிது .அரசுக்கு எப்போதான் புத்தி வருமோ ?இந்திய எதியோபியா வாக் மாறிவிடுமோ ?இல்லை சோமாலியாவாக மாறிவிடுமோ ?மாளிகைகளில் வசிப்பவர்கள் மட்டுமே மளிகை பொருட்களை வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விடுமோ ? எது எப்படியோ பசியினால் கொலை மற்றும் கொள்ளை அதிகரித்து, சமூக பொருளாதார குற்றங்கள் பெருகப்போகிறது என்பது மட்டும் நிச்சயம் . ஜி.எஸ்,ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
12-ஆக-201205:26:26 IST Report Abuse
NavaMayam அரசாங்கம் செய்வது சரியே .. அரசாங்கத்திடம் இவ்வளவு இருப்பு இருப்பதால் தான் விலைவாசி கூட வில்லை .. இல்லையென்றால் விண்ணை தொட்டுவிடும்... பஞ்ச காலங்களில் ஏழைமக்களுக்கு தடையற்ற ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என்றால் இது தவிர்க்க முடியாதது .. இப்போது வறட்சியால் உணவு உற்பத்தி கம்மி எனவே , எனவே வெளி சந்தை அரிசி , கோதுமை கிலோவுக்கு ஐந்து ரூபாய் கூடி உள்ளது ... ஆனால் இதே அரசாங்கத்திடம் போதிய இருப்பு இல்லை என்று தெரிந்தால் , வியாபாரிகள் பதுக்கி விடுவார்கள் .. அரசாங்கமும் பஞ்ச காலங்களில் ரேசனில் போடா வெளி மார்கெட்டுக்கு வாங்க வந்தால் , இன்று கிலோவுக்கு ஐந்து ரூபாய் கூடியது , பதினைந்து ரூபாய் கூடி விடும்.. அரசாங்கம் ரேசனில் போடுவதை நிருத்துனால் ஏழைமக்கள் பாதித்து , எகிப்ப்தில் ஏற்பட்டது போல் மக்கள் புரட்சி ஏற்படும் .. அதில் இருந்து நாடு மீண்டு சகஜ நிலை திரும்ப இரண்டு ஆண்டுகள் ஆகும்... எனவே இந்த இருப்பு இல்லாமல் இன்று வெளிமார்க்கெட்டில் வாங்கினால் , அரசாங்கத்துக்கு 40000 நாற்பதாரிரம் கோடி இழப்பு வரும் ., இது உணவு கேட்டுபோவதால் ஏற்படும் நட்டத்தை விட கம்மிதான்... மேலும் ரேசனை நம்ம்பாமல் வெளி மார்கெட்டில் வாங்கும் நடுத்தர மேலும் விலை உயர்வால் பாதிக்க படுவார்கள் ... அரசாங்கத்தை நடத்துவது எளிதல்ல .. எதிர்காலத்தில் எந்த நிகழ்வுகளுக்கும் ஏழை மக்கள் பாதிக்க கூடாது என்றுதான் மத்திய அரசு செய்யல பட்டு வருகிறது... இருப்பினும் இருப்பு வீணாக்காமல் இருக்க நாவீன கிடங்குகளில் முதலீடு அவசியம் .. இதன் மூலம் உணவு பொருட்கள் கேட்டுபோவதை முழுமையாக குறைக்க முடியவில்லை எனினும் குறைக்கலாம் ...
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
12-ஆக-201204:32:37 IST Report Abuse
Thangairaja ஆளும் கட்சி தான் கண்டு கொள்வதில்லைஎன்றால் எதேதெற்கோ பாராளுமன்றத்தை முடக்கும் எதிர்கட்சிகளும் பத்திரிகை தர்மத்தை காக்க வேண்டிய மீடியாக்களும் களத்தில் இறங்கி அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாமே. ராம்தேவ் கூட இப்படி உணவு வீணாவதை தடுக்க போராடலாம்.
Rate this:
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
12-ஆக-201210:28:46 IST Report Abuse
Hari Dossஎதிர்க் கட்சிகள் பலமுறை பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தான் இந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் உணவுத் துறையினைக் கையாளும் சரத் பவாரும் மக்களின் சிரமத்தை ஒரு பொருட்டாகக் கருதுவைல்லை என்பது மட்டும் இல்லை (என்டோசல்பான் போன்ற மக்களுக்கு ஆபத்த்டு விளைவிக்கும் பொருட்களைத் தயாரிக்கும்) பெரும் பணக் காரர்களின் பசியைப் போக்கவே முற்படுகின்றான்ர், அதற்குரிய திட்டங்களைத் தான் தீட்டுகின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
Oosi - Port Said,எகிப்து
12-ஆக-201202:35:06 IST Report Abuse
Oosi அரசு கிடங்குகளில் தானியங்களை வைத்திருப்பது வயலில் இருந்து நெல்லை எலி தன் வலையில் வைத்திருப்பதை போல இருக்கிறது. தானும் உண்ணாமல் மனிதர்களுக்கும் பயன்படாமல் வீணடிப்பது போல. இவ்வளவு விலை வாசி ஏற்றத்திற்கு பின்னும் சரியாக பராமரிக்காமல் இருப்போரின் மேல் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வறுமையில் ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் பகுதிகளுக்காவது அனுப்பி முடிந்தவரை பட்டினி சாவுகளைத் தவிர்க்கலாமே. இலவசங்களுக்கு எங்கள் வரிப் பணத்தை வீணடிக்காமல் உணவு பொருட்களை சேமிக்கவும், அழுகிப்போகும் காய்கறிகளை பாதுகாக்க குளிர் சாதன வசதியும் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்