Central finance ministry order doctors to pay tax | மருத்துவர்களுக்கு கவனிப்பு: மருந்து நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவர்களுக்கு கவனிப்பு: மருந்து நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி

Updated : ஆக 13, 2012 | Added : ஆக 12, 2012 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மருத்துவர்களுக்கு கவனிப்பு: மருந்து நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி: இரு தரப்பினரும் வரி செல��

மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் தரும் பரிசுப் பொருட்கள், வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு வருமான வரி விதிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்திருப்பது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்களது தயாரிப்புகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களைக் கவனிப்பதில் மருந்து நிறுவனங்களுக்கிடையே பெரும் போட்டா போட்டி நடக்கிறது. முன்பெல்லாம், மருத்துவர்களுக்கு "மாதிரி மருந்து'கள் தருவதும், சிறுசிறு பரிசுப் பொருட்கள் தருவதுமே அதிகபட்ச கவனிப்பாக இருந்தது.

பரிந்துரை:சமீபகாலமாக, வெளிநாட்டு சுற்றுலா, விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் தருவது என்று இதன் எல்லை நீண்டு கொண்டே இருக்கிறது. இதனால், விலை குறைந்த, தரமுள்ள, பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பரிந்துரைப்பதற்குப் பதிலாக, தங்களை "சிறப்பாக' கவனிக்கும் மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பரிந்துரைக்கும் மனநிலைக்கு பெரும்பாலான மருத்துவர்கள் மாறியுள்ளனர்.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே, இது தொடர்பான புகார்கள் பரவலாக வந்ததன் எதிரொலியாக, மருத்துவர்களுக்கான புதிய விதிமுறைகளை 2009 டிச.,10ல் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டது. குறிப்பாக, பரிசுப் பொருட்கள் வாங்குவது, வெளிநாட்டு சுற்றுலா, பிற வழிகளிலான விருந்தோம்பல்களை ஏற்பதை முற்றிலும் தடை செய்தது.

இதனை, 30 சதவீதம் டாக்டர்கள் கடை பிடிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்வது உள்ளிட்ட "காஸ்ட்லி கவனிப்பு'கள் அதிகமாகியுள்ளன. மருந்து நிறுவனங்கள் தங்கள் வருவாயில் ஐந்து சதவீதத்தை ஒதுக்கி, அதனை "புரமோஷன் செலவு' என்று கணக்குக் காட்டுகின்றன.

உத்தரவு:மருத்துவக் கவுன்சிலாலும் முடிவு கட்ட முடியாத இந்த விவகாரத்துக்கு, மத்திய நிதியமைச்சகம் இப்போது "கிடுக்கிப்பிடி' போட்டுள்ளது. டாக்டர்களுக்கு வழங்கப்படும் மாதிரி மருந்துகள், பரிசுப் பொருட்கள், வெளிநாட்டு சுற்றுலா உள்ளிட்ட அனைத்துக்கும் வரி செலுத்த வேண்டுமென்று நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.மருந்து நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, மருத்துவர்களின் வருவாயிலும் இவற்றைச் சேர்த்து, அதற்கும் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் அலுவலக அறிவுறுத்தலின்பேரில், நிதியமைச்சகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் சமூகநல அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, இத்தகைய வருவாய்க்கு வரி செலுத்தப்பட்டாலும், அதனை பட்டியல் எடுத்து இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு நிதித்துறை அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளது.மத்திய நிதியமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில், தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்வதோடு, மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டியது அவசியம்' என்றார்.அதேநேரத்தில், "மாதிரி மருந்து'களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balachandran - chennai,இந்தியா
14-ஆக-201216:07:02 IST Report Abuse
Balachandran கன்சல்டிங் பீஸ் க்கு பில் கொடுபதில்லை
Rate this:
Share this comment
Cancel
Anand GPM - Raslaffan Industrial City,கத்தார்
12-ஆக-201217:22:01 IST Report Abuse
Anand GPM காங்கிரஸ் கட்சி எனக்கு பிடிக்காத கட்சியாக இருந்தாலும், இவ் விசயத்தில் டாக்டர்களுக்கும் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் நடக்கும் வெளி உலகத்திற்கு தெரியாத மோசடியே நிதி அமைச்சர் திரு.சிதம்பரம் தடுத்து நிறுத்தி உள்ளார் என்பதால் திரு. மன்மோகன் சிங் அவர்களையும், திரு. சிதம்பரம் அவர்களையும் மனதார வாழ்த்துகிறேன்..பாராட்டுகிறேன்..நோயாளிகளிடமிருந்து வாங்கும் பணத்திற்கு, அது ஐம்பது ரூபாயானாலும் சரி, ஐம்பது ஆயிரமாக இருந்தாலும் சரியான ரசீது கொடுக்க டாக்டர்களுக்கு உத்திரவு இடுங்கள்.. சீரியல் எண்ணுடன் கூடிய ரசீது புத்தகத்தை அரசாங்கமே அச்சிட்டு டாக்டர்களிடம் கொடுத்தால் இன்னமும் மக்களுக்கு சௌகரியமாக இருக்கும்..ஏனென்றால் குளறுபடி செய்வதற்கோ மோசடித்தனம் செய்வதை இது தடுக்கும்..வருமான வரித்துறையில் மருத்துவர்களை கண்காணிக்க தனி டிவிசன் ஆரம்பித்தால் இன்னமும் நல்லது..இன்றைய கால சூழ்நிலையில் நிறைய பேர் மருத்துவமனைக்கு பணம் கட்டியே ஏழை ஆகி விடுகிறார்கள்..திரு. சிதம்பரம் இது போன்ற மக்கள் ஆதரவு நிலைகளை கடுமையாக அமுல்படுத்தினால் என்றைக்கும் அவர் தான் நிதி அமைச்சர்..வாழ்க திரு. சிதம்பரம்..தொடரட்டும் மக்கள் சேவை..பயன்பெறட்டும் நம் தேச மக்கள்..
Rate this:
Share this comment
Cancel
raj indian - l.gan,மாலத்தீவு
12-ஆக-201211:49:16 IST Report Abuse
raj indian மருத்துவர்கள் generic நெய்ம்மில் மருந்து எழுத வேண்டும் ... qualitiy இல்லாத மருந்துகளே தடை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Janakiraman Nappalur - Chennai,இந்தியா
12-ஆக-201208:15:18 IST Report Abuse
Janakiraman Nappalur இதற்கு எளிமையான வழி, மருத்துவர்கள் குறிப்பிட்ட கம்பெனிகளின் பிராண்ட் பெயரில் மருந்து பொருட்களை தருவதை தடை செய்து, ஜெனிரிக் பெயர்களில் மருந்து எழுதுவதை கட்டாயப்படுத்தவேண்டும். அதே போல, தரமான மருந்துகளை உற்பத்தி செய்யாத மருந்து நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இப்படி செய்தால் மக்களுக்கு மிகப் பெரிய பயன் இருக்கும். மருந்துகளின் விலையை சார்ந்த கொள்ளையும் குறையும்.
Rate this:
Share this comment
VRaman - Chennai,இந்தியா
12-ஆக-201216:56:51 IST Report Abuse
VRamanஅறியாமையால் வந்த கருத்து. Generic எனப்படும் மருந்து வகைகள் அந்த மருந்து வந்த பல ஆண்டுகளுக்கு பின்னரே புழக்கத்திற்கு வரும். அத்துடன் Generic மருந்தை தருவது பார்மசி மக்களே அன்றி மருத்துவர் அல்ல. மருத்துவர் எழுதி தந்த மருந்திற்கு generic இருப்பின் அதனை சொல்ல வேண்டியது பார்மசி கார்களின் கடமை. அதில் அவர்களுக்கு லாபம் குறைவு என்பதால் அவர்கள் தருவதில்லை. மருத்துவரை இதில் குறை சொல்ல இயலாது - அவரே பார்மசி நடத்தி வந்தால் ஒழிய. அதிலும் அந்த பார்மசி-யில் தான் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினால் அந்த மருத்துவரை &39கை&39 கழுவது நல்லது. மருந்து கட்டுப்பாடு வாரியம் இருக்கிறது நம்மூரில். ஆனால் அதனை நடைமுறையில் பயன்படுத்த முடியாது தடுப்பது ஊழல், லஞ்சம். ...
Rate this:
Share this comment
Cancel
muruganandha raja - Melaka,மலேஷியா
12-ஆக-201207:19:47 IST Report Abuse
muruganandha raja At the same time can give another one order like, Doctors are not allowed to have an own medical store with their own licence. For this they can use a pharmacist to the medical store even inside their own clinic or hospital. Muruganandharaja from Thirukkannamangai.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
12-ஆக-201206:54:25 IST Report Abuse
ஆரூர் ரங மருத்துவக்கல்லூரி சீட் 40 லட்சம், பீஸ் பத்து லட்சம் . மேற்படிப்பு சீட் ஒரு கோடி. இந்த ஒன்றரை கோடிபணத்தை வட்டியுடன் சம்பாதிக்க என்ன வழி ? நிச்சயம் ஐந்துக்கும் பத்துக்கும் சிகிச்சை தந்து அல்ல. இதெல்லாம் தெரிந்தும் தானே இந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளை மூட நாம் போராடியதேயில்லை. இப்போ? அந்தப் பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கவேண்டாமா? அனுபவி ராஜா அனுபவி காசுக்காக இவர்கள் எழுதும் அனாவசிய மருந்துகளும் டெஸ்ட்டுகளும் காலப்போக்கில் நிரந்தர ஊனம், பக்கவிளைவுகளில்தான் விடியும். முழு சமுதாயமுமே எந்த மருந்தும் வேலை செய்யாத நிலைமையில் சாமியார்கள், மந்திரவாதிகள் பின்னால் ஒடப்போகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
12-ஆக-201204:33:40 IST Report Abuse
Thangairaja சிதம்பர சாகசமா ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை