ADMK plan to change its political path | தேசிய அரசியல் வியூகத்தை மாற்றுகிறது அ.தி.மு.க.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேசிய அரசியல் வியூகத்தை மாற்றுகிறது அ.தி.மு.க.,

Updated : ஆக 13, 2012 | Added : ஆக 12, 2012 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தேசிய அரசியல் வியூகத்தை மாற்றுகிறது அ.தி.மு.க.,,ADMK plan to change its political path

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலின் மூலமாக, பா.ஜ., - அ.தி.மு.க., இடையே ஏற்பட்ட தோழமை, லோக்சபா தேர்தலுக்கு அச்சாரமாக மாறியுள்ளது. கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து, தேசிய அரசியலில் களம் இறங்குவதை விட, பா.ஜ.,வுடன் இணைந்திருப்பது, அ.தி.மு.க., விற்கு கூடுதல் பலத்தை பெற்றுத்தரும் என்று கருத்து இரு தரப்பிலும் வலுப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில், ஐ.மு., - தே.ஜ., கூட்டணியில் குழப்பம் நிலவியபோது, சங்மாவை வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சங்மாவை கம்யூனிஸ்டுகள், பா.ஜ., மற்றும் சமாஜ்வாடி, திரிணமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரிக்கும் என, முதல்வர் ஜெயலலிதா எதிர்பார்த்தார்.ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள், திடீரென குறுக்குசால் ஓட்டி, ஐ.மு.கூட்டணி வேட்பாளர் பிரணாபை ஆதரித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலை புறக்கணித்தது. இந்த கட்சிகள் எடுத்த முடிவினால், முலாயம்சிங், மம்தா போன்றவர்களும், சங்மாவை ஆதரிக்க முடியாத நிலை உருவாகியது. இறுதியில், பா.ஜ., மற்றும் பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள், சங்மாவை ஆதரித்தன. மொத்தத்தில், அ.தி.மு.க., முன் மொழிந்த வேட்பாளரை, பா.ஜ., ஆதரித்ததன் மூலம், இரு கட்சிகளுக்கும் இணக்கம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது.

இடைவெளி குறைந்தது:அடுத்ததாய், துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., நிறுத்திய ஜஸ்வந்த் சிங்கை, அ.தி.மு.க., ஆதரித்தது. ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க.,வோடு ஓரணியில் நின்ற, பிஜு ஜனதா தளம், இம்முறை மாநில அரசியலை காரணம் காட்டி, மாறுபட்ட நிலையை எடுத் தது. இந்த முடிவால், அ.தி.மு.க., பா.ஜ., இடைவெளி குறைந்து, அக்கட்சிகளின் நெருக்கம் அதிகரித்துள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

நிர்ணயிக்கும் சக்தி:வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி மலர வேண்டும் என அ.தி.மு.க.,வின் தோழமை கட்சியினர் விரும்புகின்றனர். இதன் மூலம், காங்கிரஸ் எதிர்ப்பு அலையை, பா.ஜ., மூலம் சாதகமாக்கி கொள்வதோடு, அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக, அ.தி.மு.க., மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் அவர்கள்.

இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலுக்கு முன், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது ஜெயலலிதா மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்தார். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பினால், மண்குதிரையாகதான் கரைய வேண்டும் என்பதை, ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சிகள் நிரூபித்து விட்டன. எனவே தான், கம்யூனிஸ்ட் கட்சிகளின், மேலிட தலைவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர் மாற்றிக் கொண்டார்.

ராஜ்யசபா எம்.பி., :லோக்சபா தேர்தல் முடிவில், காங்கிரஸ் அல்லது பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை வரும் போது, முலாயம்சிங்கை பிரதமராக கொண்டு வர வேண்டும் என்பதில் தான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் விரும்புகின்றனர். அதற்கு பரிகாரமாகத்தான், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுக்கவும் முலாயம்சிங் சம்மதம் தெரிவித்துள்ளார்.மேலும் சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீடு உள்ளிட்ட சில கொள்கைகளை மத்திய அரசு கொண்டு வந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைவர்களுடன் இணைந்து முலாயம் சிங்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். தேசிய அரசியலில், ஜெயலலிதாவை விட, முலாயம்சிங்கை முன்னிலைப்படுத்துவதில் தான், கம்யூனிஸ்டுகள் ஆர்வம் காட்டுகின்றன என்பதை இது வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், தற்போதைய காங்கிரஸ் எதிர்ப்பு அலையை அறுவடை செய்யும், பா.ஜ.,வோடு இணைந்து தேர்தலை சந்திப்பது, அ.தி.மு.க.,விற்கு கூடுதல் வலுவைத் தரும். இதற்கேற்ப ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் களம் அமைந்து விட்டது. அ.தி.மு.க.,வுடனான கூட்டணி உறவை பா.ஜ., தரப்பிலும் விரும்புகின்றனர். அடுத்து வரும் நாட்களில், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில், இரு கட்சிகளும் இணைந்து பார்லிமென்டில் செயல்படவும் திட்டமிட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
15-ஆக-201219:31:28 IST Report Abuse
p.saravanan அம்மையார் அவர்கள் பிரதமர் அனால் கண்டிப்பாக நாடு செழிக்கும். காலம சுழன்று கொண்டுள்ளது.வாருவார் B J P உடன் கூட்டணி வைத்து அடுத்த முறை இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று நாடு SUPUER POWER ஆக இந்திய உலக அரங்கில் உருவெடுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Veera Kumaran - Thiruppur,இந்தியா
14-ஆக-201212:09:46 IST Report Abuse
Veera Kumaran தமிழக கட்சிகளும், தமிழகத்தில் இயங்கும் சில தேசிய கட்சிகளும் பல முறை ஜெயலலிதாவிடம் பாடம் கற்றுள்ளனர். இருப்பினும் மீண்டும் மீண்டும் அவரிடம் கூட்டு சேருவதும், அவருடைய குடைச்சல் தாளாமல் அவமானப்பட்டு ஒதுங்கி நிற்பதும், பின்பு கூட்டணியில் இருந்து விலகுவதும் சர்வ சாதரணமாக நடக்கும் ஒரு நிகழ்வாகிவிட்டது. அதற்கு தற்போதைய வுதரணம் சென்ற ஆண்டு கூட்டணியில் இருந்து சட்டசபை தேர்தலை சந்தித்த கட்சிகள். சரித்திர நிகழ்வுகள் சிறிது காலம் கடந்து மீண்டும் தொடரும் என்று கேள்விபட்டு இருக்கிறோம். அதற்கு ஆதாரமாக 1999 ஆண்டு ஜெயலலிதாவால் படாதபாடு படுத்தப்பட்டு பின்னர் ஆட்சியை இழந்த BJP மீண்டும் AIADMK வுடன் கூட்டணி அமைக்கும் என்றால் அதற்கு தலைவலி தொடங்க போகிறது என்றுதானே பொருள். எது எப்படியோ ஜெயலலிதா என்ற தனி நபரால் ஒரு நாடாளுமன்ற தேர்தலையே இந்தியா சந்தித்தது. இந்த தேவையற்ற தேர்தலினால் மக்களின் பணம் பலகோடி விரயமானது. மக்கள் இதையெல்லாம் சிறிது மனதில் கொண்டால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
M.RAJAN - chennai,இந்தியா
12-ஆக-201221:57:41 IST Report Abuse
M.RAJAN ஜெ. ஜெயலலிதா அவர்கள் தன்னிடம் உள்ள சிறப்பான திறமைகளை திறமையாக கையாள்கிறார் என்பதுதான் உண்மை . இதை யாரும் ஒப்புகொள்வர்கள். கடந்த ஆட்சியையும் தற்போதைய ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்தால நன்றாக தெரியும். அவர் மக்களிடம் இருந்து விலகி இருபது போல தெரிந்தாலும் அவர் அப்படி அல்ல . எல்லா விசயகளையும் தெளிவாக தெரிந்து கொண்டு தான் செயல் படுகிறார் . அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழக மக்கள் கண்டிப்பாக டெல்லிக்கு ஆனுப்ப தயாராகி விட்டார்கள் . அரசியலில் சிறுது நீக்கு போக்கு இருந்தால் ஆங்கு தாக்கு பிடிக்கலாம்,. நன்றி ம. ராஜன்
Rate this:
Share this comment
Cancel
Kovai Rajesh - Peelamedu, Kovai,இந்தியா
12-ஆக-201218:49:31 IST Report Abuse
Kovai Rajesh அப்துல் கலாம் கனவு காணச்சொன்னார் என்பதற்காக கண்ட மேனிக்கு கனவு காணக்கூடாது. அடுத்த நாடாளு மன்ற தேர்தலில் பா.ஜ.க அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தமிழ் நாட்டில் தோல்வி அடையும். இந்திய அளவில் காங்கிரஸ் மீது வெறுப்பு இருக்கலாம். தமிழ் நாட்டில் மக்கள் அதிமுக மீது வெறுப்பில் உள்ளனர். எனக்கு தமிழ் நாடு முழுவதும் உள்ள வாக்காளர் மன நிலை தெரியவில்லை. ஆனால் கோவை சுற்றூ வட்டாரத்தை வைத்து சொல்கிறேன். மற்ற வாசகர்கள் அவர்களின் ஊர் நிலையை சொல்லலாம். இந்த ஆட்சி நிறைய எதிர்பார்ப்புடன் வந்தது. செம்மொழி மானாடு நடந்தவுடன், ஒரு சில தினத்தில் ஜெயலலிதா கோவையில் பேசிய போது, நல்ல கூட்டம். அப்பதான் அதிமுகவுக்கு தெம்பு வந்தது. எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா கோவை வந்த போது ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதன் பின் அதிமுக வெற்றி பெறும் சூழல் தலை தூக்கியது. ஆனால் அமோகமாக பெற்ற வெற்றியை அதிமுக தக்க வைத்து கொள்ளவில்லை. முதலிலே குழப்பம். அடிக்கடி மந்திரி சபை மாற்றம். கோவையில் இருந்து மந்திரியான எஸ்.பி. வேலு மணி குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான கோடிகள் சேர்த்து ஏ.வி.ஆர் நகைக்கடை ஆரம்பித்தது பாமரனுக்கும் தெரியும். இங்குள்ள கார்ப்பரேஷனில் லஞ்சம் இல்லாமல் வேலை நடக்காது. சமீபத்தில் என் காலி நிலத்துக்கு வரி கட்ட போன போது பில் கலெக்டர் 20000 வரை லஞ்சம் கேட்டார் (வரியே 22000 ரூபாய்தான்). ஜெயலலிதா கடைசி முறை என்பதால் நல்ல ஆட்சி கொடுக்க முயற்சிப்பது உண்மை, பாராட்டத்தக்கது. ஆனால் அவர் முயற்சி ஓட்டைப்பானையில் தண்ணீர் ஊற்றுவது போல் உள்ளது. பண ருசி கொண்ட மந்திரிகளும், கவுன்சிலர்களும் அவர் அருகில் இருந்து குழி பார்க்கிறார்கள். மின் வெட்டு கண்டித்து கோவையில் 40,000 பேர் வீதிக்கு வந்து போராடியும் அது தீரவில்லை. சம்பந்தப்பட்ட மந்திரி என்ன செய்கிறார் என்ற தகவலே இல்லை.பி.ஜே.பி விஜய காந்துடன் கூட்டணி வைத்தால் அமோக வெற்றி பெறும். திருப்புமுனை கொடுத்த கோவை அதிமுகவுக்கு ஏமாற்றத்தை கொடுக்க இருக்கிறது. என்னைப்போன்ற 50+ வாக்காளர்கள் சீர் தூக்கி பார்க்கும் மன நிலையில் உள்ளோம். ஆனால் 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Anandh Kumar - Nagapattinam,இந்தியா
12-ஆக-201218:13:41 IST Report Abuse
Anandh Kumar ஆதிமுக மற்றும் பிஜேபி சேர்ந்து ஆட்சியை பிடித்தால் தமிழ்நாட்டிற்கு நிறைய நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதை எதிர்த்து பேசுபவர்கள் மறுபடியும் காங்கிரஸ் ஆட்சி செய்ய விரும்புகிறிர்களா என தெரியபடுத்தவும் எல்லாவற்றையுமே எதிர்க்க வேண்டும் என்றே சிலர் உள்ளனர் .
Rate this:
Share this comment
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஆக-201219:45:22 IST Report Abuse
Mohanadas Murugaiyanஜெயலலிதாவை நம்பினால் என்னாகும் என்று வாஜ்பாயி கிட்ட கேட்டு சொல்லுங்கப்பா.......
Rate this:
Share this comment
Cancel
Kanal - Chennai,இந்தியா
12-ஆக-201216:16:02 IST Report Abuse
Kanal நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மோசாமான தோல்வியைத் தழுவும் என்பது உறுதி. நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. விலைவாசி விண்ணைத் தொடுகிறது. மின்விநியோகம் சீர்குலைந்துள்ளது. மோசமான ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் துன்பம் தொடர்கதையாக உள்ளது. இப்போது இருக்கும் ஒரு துருப்புச்சீட்டு தேர்தல் கமிஷன் மட்டுமே. அதை வைத்து ஏதாவது சகஸம் செய்ய ஜெயா முயல்வார்.
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
14-ஆக-201208:30:53 IST Report Abuse
Bebetoஅதெல்லாம் ஒரு காரணம் இல்லை. மக்கள் லஞ்சம் வாங்க முடிவதில்லை. கருணா ஆட்சியில் கொள்ளையில் எல்லோருக்கும் பங்கு. அதனால் திமுக ஆதரவு ...
Rate this:
Share this comment
Cancel
Vidhya Ramachandran - Dublin,அயர்லாந்து
12-ஆக-201214:29:10 IST Report Abuse
Vidhya Ramachandran திமுக ஆட்சியை விட்டு இறங்கியே ஆகவேண்டும். அப்படியே காங்கிரஸ் அரசும் ஆட்சியில் இருக்க கூடாது. அப்பொழுது தான் இந்த 2g ஊழலும் மற்றும் நிலகரி ஊழலும் ஒழுங்காக அடுத்த ஐந்து வருடங்களில் வெளி வரும். இல்ல, இந்த எமகாத பசங்க போபார்ஸ் ஊழல ஊத்தி மூடிய மாதிரி இதையும் ஊத்தி மூடி விடுவாங்க. நம்ம மக்கள் விரலை சூப்பி கொண்டு எவனாவது ஓட்டுக்கு 1000 தருவானா 2000 தருவானா என்று கிளம்பி விடுவார்கள். பிஜேபி -யும் அதிமுகவும் கூட்டணியோட ஆட்சி அமைத்தால், கண்டிப்பாக 2g ஊழல் வெளியில் வந்து நம்ம ராசாவும் சிதம்பரனாரும் கண்டிப்பாக கம்பி எண்ணுவார்கள். ஆனால் என்ன, மற்ற நண்பர்கள் சொன்ன மாதிரி பிஜேபி தினமும் வயித்துல ஒரு நெருப்பு துண்டோட தான் உட்காரனும். இந்த அம்மா எப்போ ஆப்பு வைப்பாங்கன்னு தெரியாமல். அதற்காக இந்த ஊழல் பெருச்சாளிகளான காங்கிரஸ்-உம் திமுகவும் எந்த காரணத்தினாலும் திரும்பவும் ஆட்சிக்கு வந்திர கூடாது. முக்கியமா மத்திய அரசாங்கத்தில். தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் கிடையாது. மாறி மாறி அதிமுகவும் திமுகவும் தான் வந்து ஆக வேண்டும். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஆக-201214:00:52 IST Report Abuse
periya gundoosi அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது அம்மாவுக்கு பொருந்தாது, அதாவது மற்றவரை தன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பாரே தவிர, ஆமாம் சாமி போட்டு மற்ற தலைவர்களுககு கட்டுப்பட மாட்டார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களின் நிலைபாடு வேறு, சட்டசபை தேர்தலில் நிலைபாடு வேறு. பா.ஜ.க வோடு அம்மா கூட்டணி வைத்தால் ஒரு ஸீட் கிடைக்காது. தமிழகத்தை பொறுத்தவரை இனி பா.ஜ.கவைப் பற்றியெல்லாம் பேசுவதெல்லாம் வெட்டி வேலை. அப்படியே கூட்டணி அமைத்து ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அது அம்மாவால் கிடைத்த வெற்றியாகத்தான் இருக்கும். இன்று கலைஞர் அறிவித்த ஈழப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற தலைப்பைப் பார்த்த பிறகு இந்த மாநாட்டு நாடகம் கிழட்டுக் குள்ள நரியின் மூளையில் உதித்துள்ள சூழ்சசி வலை என்றே நினைக்கத் தோன்றுகிறது. முதலில் ஈழம் என்று பேசக் கூடாது என்று தடை என்றனர், இல்லை பேசலாம் என்று அனுமதிக் கடிதம் வந்திருப்பதாக கூறுகிறார். இப்படியே படிப்படியாக காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுப்பார்.அடுத்த மாதத்திற்குள் காங்கிரஸை விட்டு வெளியில் வருவதற்குண்டான எல்லா நடவடிக்கையிலும் இவர் ஈடுபடுவார். பா.ஜ.கட்சியோடு கூட்டணி வைக்க அச்சாரம் போடுவார். அப்படி நடந்தால் இரண்டு கட்சிகளுக்குமே தமிழகத்தில் பட்டையும், நாமமும் தான். அம்மா அவர்கள் அவசரப்படடு எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். வை.கோ அவர்கள் விரைவில் அன்புள்ள சகோதரியே என்று கூறிக் கொண்டு அதிமுகவில் ஐக்கியமாகி விடுவார் (ஆக வேண்டும்.) தலையாய பிரச்சினையாகிய மின்சாரம் பற்றாக்குறை இன்னும் 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் தமிழகத்துக்கு தந்துவிட்டால் அம்மாவின் செல்வாக்கு எங்கோ போய்விடும்.
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
12-ஆக-201212:57:23 IST Report Abuse
MJA Mayuram அந்தம்மா அருவாளும் சுத்தியும் வச்சுகிறது கூட்டணிக்கு அல்ல இதே அருவாலாளையும் சுத்தியலாலயும்தான் வாஜ்பாய போட்டேன் இந்த முறை அத்வானிய மோடியான்னு தெரியாமல் தவிக்கிறார் பாவம்
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
12-ஆக-201212:54:42 IST Report Abuse
MJA Mayuram அய்யயோ அப்பா உண்டியல் குலுக்கி தா பாண்டியன் என்ன செய்வார் ? எந்த கட்சியுடன் கூட்டணி போட்டாலும் தா பா ஜெயாவின் மானசீக ரசிகர், மனுஷன் தோளுல செகப்புதுண்டும் மாருல அதிமுக துண்டையும் போட்டுகிட்டு அல்லாடுறார் என்ன செயுறது ஒன்னு தொண்டனா இருக்கணும் அல்லது ரசிகரா இருக்கணும் ரெண்டுமாகவோ அல்லது ரெண்டும் கெட்டானாவோ இருந்தால் இப்படித்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை