Why political parties calm over Quary scam | அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்?

Updated : ஆக 13, 2012 | Added : ஆக 12, 2012 | கருத்துகள் (47)
Advertisement
 அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: அரசியல் கட்சிகள் மவுனம் ஏன்?Why political parties calm over Quary scam

தமிழகத்தையே உலுக்கியுள்ள, மதுரை கிரானைட் ஊழல் குறித்து, அரசியல் கட்சிகள் பெரிய அளவில் கருத்துகளையோ, போராட்டங்களையோ நடத்தாமல், வாய்மூடி மவுனிகளாகவே உள்ளன. கட்சி பாகுபாடு இல்லாமல், அரசியல் கட்சிகளும், இந்த ஊழலுக்கு துணையாய் இருந்ததுதான் அமைதிக்கு காரணமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

பணம் கொழிக்கும் கிரானைட் தொழிலில் தொடரும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. துணைபோன அதிகாரிகள் பட்டியல் எடுக்கப்பட்டு நடவடிக்கை தூள் பறக்கிறது. இவ்வளவு பெரிய தொகை தொடர்புடைய விவகாரத்தில் அரசியல்வாதிகள் நுழையாமல் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவது இயற்கை. தேர்தல் நிதி, மாநாடு போன்ற கட்சி நிகழ்ச்சிகளுக்கு நிதி என கிரானைட் அதிபர்கள் பெரும்தொகையை வழங்கியதால்தான், அரசியல் கட்சிகள் இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தாமல் இருந்து வந்துள்ளதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். இன்னும் சில அரசியல்வாதிகளோ, நேரடியாக தாங்களே குவாரிகளை நடத்தி கொள்ளை லாபம் பார்த்து வந்துள்ளனர்.

மத்திய அமைச்சர் அழகிரியின் மகன், கிரானைட் குவாரி நடத்தி வருகிறார். காங்கிரøŒச் சேர்ந்த மதுரை மாவட்ட பிரமுகர் பி.கே.செல்வராஜ் குவாரி நடத்துகிறார். இவர்களது குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.கிரானைட் தொழிலில் ஈடுபட்டவர்கள், அரசியலை கடந்து நட்போடு பழகியதால், இதுநாள்வரை இந்த முறைகேடு வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது, முறைகேடு விவரம் வெளியில் தெரிந்தும், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல் ஒதுங்கி நிற்கின்றன.அரசியல் கட்சிகளைப் போலவே, போலீஸ் மற்றும் வருவாய்துறை, கனிமத் துறை அதிகாரிகளும் குவாரி முதலாளிகளின் கைப்பாவைகளாகவே இருகின்றனர். கிரானைட் குவாரி ஊழல் குறித்து, மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து சில மாதங்கள் ஆன பின்பும் கூட, நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அறிக்கை ஊடகங்களில் வெளியானதால் வேறு வழியின்றி நடவடிக்கைய எடுத்து வருவதாகக் கூறுகின்றனர். சகாயம் தனது அறிக்கையில், மூன்று நிறுவனங்களின் முறைகேடுகளைத் தான் சுட்டிக்காட்டி உள்ளார். மதுரை மாவட்டத்தில்175 குவாரிகள் உள்ளன. இவற்றில் நடந்துள்ள அத்துமீறல்களால், அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் அரசியல் கட்சிகள் முன்வராது. அவை, பெற்றுக்கொண்ட அன்பளிப்புகளும், கட்சிக்கான நிதியும் அவர்களை வாய் திறக்க விடாது என்று குற்றஞ்சாட்டுகின்றனர் சுற்றுச்சூழல்வாதிகள்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan - Chennai,இந்தியா
17-ஆக-201213:59:24 IST Report Abuse
Srinivasan why cant High court of madurai take this case as somoto and deal with it? Is there any link too??
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
17-ஆக-201202:42:59 IST Report Abuse
Devanand Louis ஆகமொத்தம் திமுக என்பது ஒரு ரவுடிகளின் கட்சி என்பதை நேரடியாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். தான் ஆளும்போது எல்லா அராஜகமும், அட்டூழியமும் செய்வது, பொதுச் சொத்துக்கள், கோயில் சொத்துக்களைச் சூறையாடுவது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொது அரசாங்கத்தால் எடுக்கப்படும் எந்த ஒரு திட்டத்தையும் ஏதாவது ஒரு வகையில் தடுப்பது என்று ரவுடி ராஜ்ஜியமே நடத்துகிறது திமுக என்றால் மிகையாகாது. நல்லா வெவரமாத்தான் இருக்காங்க திமுக தலைவனுங்க
Rate this:
Share this comment
Cancel
Arunachalam Arumugam - Paramakudi,இந்தியா
15-ஆக-201212:00:33 IST Report Abuse
Arunachalam Arumugam குவாரியில் சிறு மலைகளையே இருந்தஇடம் தெரியாமல் பண்ணிவிட்டார்கள். இனியாவது அங்கு யாரும் அரசும் சேர்த்து கைவைக்காமல் சட்டம் இயற்றினால் இயற்கை வளம் காக்கப்படும். அரசு குவாரியை எடுத்து நடத்தினால் மறுபடியும் இந்த கதை தான்.
Rate this:
Share this comment
Cancel
nallusowmi sowmi - madurai,இந்தியா
12-ஆக-201220:32:39 IST Report Abuse
nallusowmi sowmi ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் மக்களின் குறிப்பாக விவசாயிகளின் படைத்தலைவனாக சிபிஎம் இன்றைக்கல்ல என்றைக்குமே முன்னிற்கும் இயக்கம், கிரானைட் கொள்ளையை எதிர்த்து முதன்முதலில் சண்டமாருதம் செய்த இயக்கம் சிபிஎம் தான் என்பதை மறைக்கவோ மறுக்வோ கூடாது.
Rate this:
Share this comment
sadhanandan palani - toronto,கனடா
12-ஆக-201222:10:14 IST Report Abuse
sadhanandan palaniதோழருக்கு ,உங்கள் கருத்து 25 வருடங்களுக்கு முன்பு சொல்ல வேண்டியது கோபாலனும் ,நம்பூதிரிபாடும் ,நல்ல கண்ணுவும் காலம்.இப்போது வன்முறையே வழிமுறையாய் bengalum ,கேரளாவும் ......பிரணாய் விஜயன் போன்ற ஆட்கள் இருக்கும் போது எந்த தைரியத்தில் பேசுகிறாய்...
Rate this:
Share this comment
Cancel
Rajeshwaraadevar Subramanian - Liverpool,யுனைடெட் கிங்டம்
12-ஆக-201220:07:22 IST Report Abuse
Rajeshwaraadevar Subramanian We need auction very powerfully ......dismiss whole govt officers.... Then will do politics.... First we clean the officers .... Future no one going to do that..... Pls.... Madam... So us ur administration knowledge .... Including ur own party & ministers& officers punish them .... Whole world Tamil public are happy.... Do it now.... U got a good chance now..... We are with uuuuuu
Rate this:
Share this comment
Cancel
Kovai Rajesh - Peelamedu, Kovai,இந்தியா
12-ஆக-201218:55:21 IST Report Abuse
Kovai Rajesh தேவை இல்லாமல் சகாயத்தை மாற்றும்போதே நினைத்தேன். இதில் உள் விவகாரம் இருக்கும் என்று. நடக்கும் நிகழ்வுகள் அப்படித்தான் உள்ளது. இந்த அரசு இந்த விவகாரத்தை அமுக்க நினைக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட மந்திரிகள் யார் என்று ஆராய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ram Mohan - tirunelveli,இந்தியா
12-ஆக-201216:13:24 IST Report Abuse
Ram Mohan வருவாய் துறை அதிகாரிகள் எல்லாரின் வீட்டிலும் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ரெய்டு செய்யுங்க பல கோடி ரூபாய் கண்டு பிடிக்கலாம் ..... ஒவ்வரு தாலுகா வருவாய் அதிகாரியும் தாசில்தார் ரேஞ்சுக்கு அலப்பறை விடுறாங்க ...சிலர் கலெக்டர் ரேஞ்சுக்கு கல்லா கட்டுரங்க ...... ... தினமலர்க்கு ஒரு வேண்டுகோள் இதுநாள் வரை தமிழ்நாடு ஊழல் ஒரு கண்ணோட்டம் காங்கிரஸ் அரசு ஊழல் ஒரு கண்ணோட்டம்னு தளிப்பு குடுத்து செய்தி போட்டு விடுங்க மக்கள் மறக்காம இருக்க எதனை ஊழல் வழக்கு ஒழுங்கை முடிந்து தீர்ப்பு வந்தது என்பதை தெரிந்து 2104 இல் அவர்களின் முகத்திரை கிழிக்கப்படும் .... தோற்றவன் எல்லாம் அமைச்சர் நாடு உருப்புடுனு நேனைகுரிங்க
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஆக-201215:59:48 IST Report Abuse
periya gundoosi முதல்வர் அம்மா யார் மேல் வேண்டுமானாலும், எத்தனை வேண்டுமானாலும் போடுங்கள் வழக்கு, விரைவில் தமிழகமெங்கும் தடையில்லா மின்சாரத்தால் எரிய வேண்டும் விளக்கு, கிரானைட் ஊழலுக்கு போட்டுடாதிங்க முழுக்கு, 2014ல் தேர்தல் ஒன்னு இருக்கு, அதற்கு நீண்ட நாள் இருக்கிறதென்று போடாதீங்க தப்புக் கணக்கு
Rate this:
Share this comment
Ulagarasan - Kolkatta,இந்தியா
12-ஆக-201220:32:10 IST Report Abuse
Ulagarasanஐயா பெரிய குண்டூசி, நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதெல்லாம் கனவில் தான் நடக்கும்....
Rate this:
Share this comment
Cancel
IYAPPAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஆக-201215:15:52 IST Report Abuse
IYAPPAN மொத்தத்தில் அரசாங்க அதிகாரிகளும்,அரசியல்வியாதிகளும் கூட்டு களவாணிகள் என்பதற்கு நல்ல சான்று.திரு சகாயம் போன்று ஒரு சிலர் இருப்பதால் என்னவோ இந்த பிரபஞ்சம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.நாங்கள் இப்படி கருத்து எழுதுவதை விட வேறு என்ன செய்ய முடியும். இப்படிக்கு கையாலகாத ஜீவன்களின் ஒருவன்
Rate this:
Share this comment
Cancel
essveegtm - vellore,இந்தியா
12-ஆக-201214:00:12 IST Report Abuse
essveegtm this much can be done only by so called politician immaterial of the party, now only government officers cornered . but in INDIAN HISTORY SO FAR SO POLITICIAN ON THE GROUND OF CORRUPTION AND CHEATING GOVERNMENT. THE SAME THING WILL CONTINUE IN THIS ALSO LIKE 2G, asian games etc.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை