Advertisement
வெள்ளிப்பதக்கம் வென்றார் சுஷில்குமார்; இந்தியாவுக்கு 6வது பதக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012,15:47 IST
மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012,19:49 IST

லண்டன்: ஒலிம்பிக்போட்டி நிறைவுபெறும் இன்று 66 கிலோ ஆண்கள் ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.இறுதிப்போட்டியில் அவர் போராடி தோல்வியந்தார்.சுஷில்குமார் கடந்த 2008-ம் ஆண்டு பீய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 66 கி..கி. எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் இக்தியோர் நூர்ஸோவை 3-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.


விறுவிறுப்பான அரையிறுதி பலப்பரீட்சையில், சுஷில்குமார் கஜகஸ்தான் வீரர் டனடரேவுடன் மோதினார். இதில் 3-0, 0-3, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். கடும் சவாலுடன் விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.


சுஷில்குமார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தங்கம் வெல்ல வேண்டும் என இந்தியா முழுவதும் பிரார்த்தனை நடந்தது. தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியில் சுஷில் குமார், ஜப்பானின் டாட்சுகிரோ யோனேமிட்சூவை எதிர்கொண்டார். இதில் சுஷில் குமார் 2-4 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில் குமார், தற்போது வெள்ளி பதக்கம் கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது.


பிரதமர் வாழ்த்து: சுஷில்குமாருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் கூறுகையில் சுஷில் குமாரால் நாடு பெருமையடைகிறது. அவரது மனபலம், திறமை, விடாமுயற்சி ஆகியவை காரணமாக பதக்கம் வென்றுள்ளார் என கூறினார்,





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (38)
Minibala - Chennai,இந்தியா
13-ஆக-201211:57:08 IST Report Abuse
Minibala இந்தியாவின் 120 கோடி மக்களின் சார்பாக எனது இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raju - Madurai,இந்தியா
13-ஆக-201210:34:20 IST Report Abuse
raju உள்ளம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள் வீணாபோன அரசியல்வாதிகள் ..இத்தனை கோடி செலவு செய்கிறார்கள் ஆனால் நாம் நிறைய தங்கம் வெல்ல முயற்சி செய்வதில்லை. இபோதிருந்தே 100 சிறந்த வீரர்களை தேர்வு செய்து சம்பளம் கொடுத்து பயிற்சி கொடுத்து வந்தால் நாமும் தங்கம் வெல்லலாம்.. மடையர்கள் அரசியலில் இருப்பதுவரை இது சத்யம் இல்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sathish - mayiladuthurai  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201209:38:10 IST Report Abuse
sathish வாழ்த்துகள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
popular m.s sundhar - palayamkottai  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201207:47:12 IST Report Abuse
popular m.s sundhar vaalthukal
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vigneshwar ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-201223:02:27 IST Report Abuse
vigneshwar ram வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Manikumar S - Trichy,இந்தியா
12-ஆக-201222:51:19 IST Report Abuse
Manikumar S வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
primo - toronto,கனடா
12-ஆக-201220:29:45 IST Report Abuse
primo very well done sushil. we all proud of you.jaihind
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajkamal - Salem  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-201220:14:05 IST Report Abuse
Rajkamal yeaterday........... bronze Today................. Silver Tommorow............... Gold All the best sushil........ we r proud to be indian for yours.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nanda Kumar Dhanapal - Chennai,இந்தியா
12-ஆக-201219:43:48 IST Report Abuse
Nanda Kumar Dhanapal வாழ்த்துகள் வெள்ளி நாயகனே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Senthil Shanmugam - hougang,சிங்கப்பூர்
12-ஆக-201219:36:42 IST Report Abuse
Senthil Shanmugam வெள்ளி வென்ற வீரனே, உனக்கு என் வணக்கம். நீ நீடுழி வாழ்க என ஆண்டவனை வேண்டுகிறேன். நீங்கள் அறுவரும் இந்தியாவின் மானம் காத்தவர்கள் உங்களுக்கு என் வணக்கம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.