மனுதாரர்களுக்கு தகவல் தரவும் ஏற்பாடு: முதல்வர் தனிப்பிரிவிற்கு புதிய வலைதளம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:முதல்வரின் தனிப் பிரிவிற்கு, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, புதிய வலைதளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையையும் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்துஉள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வரின் தனிப்பிரிவிற்கு நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், தபால் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன.இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கையால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.முதல்வரின் தனிப்பிரிவின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதல்வரின் தனிப்பிரிவிற்கு, http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். ஒப்புகைச் சீட்டு:இவ்வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு, உடனே மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும். புதிய வலைதளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள முதல்வர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைதளத்தில் குறிப்பிடப்படும். இதன்மூலம் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.மேலும், இப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.,) மூலம் மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையையும் முதல்வர் துவக்கி வைத்தார். அதேபோல், தபால் வழியாக அனுப்பும் மனுக்களில் மனுதாரர் கைபேசி எண்ணை குறிப்பிட்டிருந்தால் முதல்வரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண், தொடர்புடைய அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதல்வர் தனிப்பிரிவிலிருந்து குறுந்தகவல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.


கல்வி உதவி தொகை:மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, 113 ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (41)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Thiyagar - Chennai,இந்தியா
25-அக்-201209:30:09 IST Report Abuse
R.Thiyagar அய்யா வணக்கம், எனது பழைய முகவரியிலிருந்து புதிய முகவரி மாற்றம் செய்து கோரி தமிழக தலைமை செயலர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவின்குமார் முதல் எங்கள் பகுதி தேர்தல் மையம் மீனாட்சி மேனிலை பள்ளி வழியே உரிய படிவத்தை நிறைவு செய்து கடந்த ஓராண்டாகியும் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்காமல் இழுத்தடித்துக்கொண்டு இருப்பதால் , எனது குழந்தைகளின் அயல்நாட்டு உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் தள்ளிக்கொண்டே போகிறது, பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை. பல கடிதங்கள் பதிவு தபாலில் அனுப்பியும் இன்றுவரை பலனில்லை. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்களின் வலைதளத்தில் கடந்த மாதம் முதல் தொடர்ந்து முறையிட்டு வருகிறேன் . தயவுசெய்து நீங்களும் இக்கோரிகையை முதல்வரின் தனி கனிவான பார்வைக்கு எடுத்துசென்று உதவிட வேண்டி விரும்பிக்கேட்டுகொள்கிறேன். நன்றி .
Rate this:
Share this comment
Cancel
Suresh - Coimbatore,இந்தியா
28-செப்-201214:38:14 IST Report Abuse
Suresh சார், எல்லா ரேஷன் கடைகளிலும் மண்ணெண்ணெய் பங்க் மூலமாக விநியோகிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.இதனால் மக்களுக்கு சரியான அளவு மண்ணெண்ணெய் கிடைக்கும். சுரேஷ்,Coimbatore
Rate this:
Share this comment
Cancel
yasar - karur ,இந்தியா
02-செப்-201214:19:26 IST Report Abuse
yasar i have doing mba in vsb engineering college karur so the tamilnadu government has to give help for my continuity of studies support to provide loan for my studies thankyou to cm for launching this website
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
15-ஆக-201219:09:02 IST Report Abuse
p.saravanan மக்கள் இந்த இணைய தளத்தை நல்ல வழிகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம். இது மிகும் வரவேற்க கூடிய ஒன்று.
Rate this:
Share this comment
Cancel
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
14-ஆக-201208:10:33 IST Report Abuse
A.SESHAGIRI ஒரு வழியாக பல பல முயற்சிகளுக்கு பின் நேற்று இரவு முதல்வர் தனி பிரிவு வலைய தளத்திலிருந்து user name ம் password ம் பெற்றுவிட்டேன்.இதற்கே இந்தப்பாடு என்றால்.......ஐயோ கண்ணை கட்டுகிறதே
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
14-ஆக-201201:33:48 IST Report Abuse
மதுரை விருமாண்டி துதிபாடிகள் கவனத்திற்கு... தேசிய தகவலியல் மையத்தின் (National Informatics Center - NIC) உபயம் இது... இந்த "சிறப்பம்சம்" எல்லா மாநில முதல்வர்களுக்கும் NIC ஏற்கனவே செய்து தந்துள்ளது... ஆகவே, மம்மியே வடிவமைத்து தந்ததாக சிலாகிக்க வேண்டாம்.. தேசிய தகவலியல் மையத்தின் உபயத்தால் மம்மிக்கு பேர்... ஆகவே, துதி பாடிகள் ரொம்பவே தூபம் போட வேண்டாம்.. இதில் ஒரு சின்ன சிக்கல்... பயனாளர் பதிவும், கோரிக்கை பதிவும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.. UNICODE இன்னும் இல்லை..
Rate this:
Share this comment
Cancel
senthilkumar - bangalore,இந்தியா
13-ஆக-201212:48:42 IST Report Abuse
senthilkumar ://cmcell.tn.gov.in/ is the correct webiste which is launched yesterday by CM, It was working on morning and not working now.
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
13-ஆக-201212:38:24 IST Report Abuse
Vaduvooraan இந்தப் புதிய இணைய தளம் சிறப்பாக செயல் பட்டு மக்கள் குறைகளை உடனுக்குடன் களைந்து நல்லாட்சி மலர்ந்திட எனது பரிபூரண வாழ்த்துக்கள். ஆனால் contact us பட்டனை கிளிக் செய்யும்போது குறிப்பிடப் பட்டுள்ள பேக்ஸ் நம்பர் தொடர்ந்து ரிங் போய்கொண்டே இருக்கிறது. பேக்ஸ் டோன் வருவதில்லை. என்னுடைய முதல் புகாராக அதைப் பதிவு செயலாம என்று பார்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
A.P.B.Rams - Naganenthal. TN,இந்தியா
13-ஆக-201212:27:46 IST Report Abuse
A.P.B.Rams நண்பர்களே நீங்கள் இந்த முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் இது சரியானது ://cmcellgdp.tn.gov.in/
Rate this:
Share this comment
Cancel
MaduraiNayagan - CHENNAI,இந்தியா
13-ஆக-201212:18:02 IST Report Abuse
MaduraiNayagan ://cmcellgdp.tn.gov.in/ is the correct web site
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்