திருவாரூர் என்றால் ஸ்பெக்ட்ரம்: ஞாபகம்: விஜயகாந்த் பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருவாரூர்:""திருவாரூர் என்றால் தேரும், கருணாநிதி பேரும் முன் நினைவுக்கு வரும். தற்போது, திருவாரூர் என்றால், ஸ்பெக்ட்ரம் ஊழல், இலங்கைத் தமிழர் படுகொலை ஆகியவை மட்டுமே நினைவுக்கு வருகிறது,'' என்று, விஜயகாந்த் பேசினார்.

தே.மு.தி.க., சார்பில், திருவாரூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:இலவசம் என்னும் பெயரில், தமிழக மக்களை, தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே ஏமாற்றி வருகின்றன. இந்த இரு கட்சிகளையும் மக்கள் நம்பினால், பாதாளத்தில் கொண்டு போய் தள்ளி விடுவர்.விவசாயத்துக்கு தேவையான தண்ணீர், உரம் பற்றாக்குறையாக ஏற்பட்டுள்ளது. மத்திய உரத்துறை அமைச்சராக, கருணாநிதி மகன் அழகிரி பதவியில் இருந்தும், இது தான் நிலைமை. திருவாரூர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தேர். அதற்கடுத்தபடியாக இது கருணாநிதி ஊர் என்பர். ஆனால், தற்போது திருவாரூர் என்றாலே, ஸ்பெக்ட்ரம் ஊழல், இலங்கைத் தமிழர் படுகொலை ஆகியவை மட்டுமே நினைவுக்கு வருகிறது.

தொண்டர்கள் விருப்பத்துக்காகவே கடந்த தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தேன். நான் தலைகுனிந்தாலும், தொண்டர்களை தலைகுனிய விட மாட்டேன். மதுரை கிரானைட் ஊழல் யார் ஆட்சி காலத்தில் நடந்தது என தெரியும்.கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்து போராட்டம் நடத்திய, அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில், எப்பணியும் நடக்கவில்லை. மக்களுக்கு தேவையான உதவிகளை இவர்களும் செய்வதில்லை. நாங்கள் செய்தாலும், அதற்கு தடையாக உள்ளனர்.தி.மு.க.,வினர்,- அ.தி.மு.கவினர் என, யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வதில், பாகுபாடு காட்டி வருகின்றனர். ஒருவரையொருவர் குறை கூறுவதையே வேலையாக கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (94)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pinkthamizhan - Budapest,ஹங்கேரி
18-ஆக-201200:36:36 IST Report Abuse
pinkthamizhan விஜயகாந்த் என்றால் க்வார்ட்டர் ஞாபகம்
Rate this:
Share this comment
Cancel
Michael Xavier - Doha,கத்தார்
13-ஆக-201215:31:35 IST Report Abuse
Michael Xavier ஏதாவது பேசணும்....ஆளுங்கட்சிய சொன்னா உதை விழும்.....இவரையாவது சொல்லுவோம்....கரெக்ட் தானே கேப்டன்.........
Rate this:
Share this comment
Cancel
B Arasu - New Delhi,இந்தியா
13-ஆக-201215:17:28 IST Report Abuse
B Arasu விஜய காந்த் சொல்லும் கருத்தை கவனியுங்கள். அவர் என்ன தினம் சாப்பிடுகிறார்? என்ன சட்டை போடுகிறார்? எவ்வளவு நேரம் தூங்குகிறார்? என்ன கலர் அவருக்கு பிடிக்கும் என்பது முக்கியம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
13-ஆக-201215:16:48 IST Report Abuse
MOHAMED GANI தண்ணி அடித்துவிட்டு சட்டமன்றத்திற்கு வந்தவர் ( இது உங்கள் முன்னாள் கூட்டணித் தலைவர் சொன்னதுதான் ) என்றாலே உங்கள் நினைவுதான் வரும். தொண்டர்களுக்காக கூட்டணி வைத்தேன் என்று கூறுகிறவர் இன்று தன்னுடன் இருப்பவர்கள் மாற்றுக்கட்சிக்குத் தாவுவதைத் தடுப்பதற்கு ஊர் ஊராகப் போய் உளறுகிறார். ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்னும் நடத்தப் படாமல் காலம் தாழ்த்தபப்டுகிறது - ஏலம் நடக்கட்டும், சி ஏ ஜி சொன்ன மாதிரி ரூ.1.79 லட்சம் கோடி அரசுக்கு கிடைக்க வில்லையெனில்...இப்படி ஒரு மகா பொய்யைச் சொன்னவரெல்லாம் மன்னிப்பு கேட்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
Muthurasu - Singapore ,சிங்கப்பூர்
13-ஆக-201215:00:18 IST Report Abuse
Muthurasu சூப்பரா மஞ்ச துண்டை பஞ்சர் பண்ணிட்டார்
Rate this:
Share this comment
Cancel
kudimagan - chennai,இந்தியா
13-ஆக-201214:29:23 IST Report Abuse
kudimagan இவரு எதாவது சொன்னாருன்னு நியூஸ் வந்தா .... கமெண்ட் கவுன்ட் எகுருது ..... காமெடி கிங் ....
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201214:07:01 IST Report Abuse
periya gundoosi செய்தியில் கடைசியில் இடம்பெற்றுள்ள வாசகம் ஒருவரையொருவர் குறைகூறுவதையே வேலையாகக் கொண்டுள்ளனர். இந்த இரண்டு பேரையும் குறைகூறுவதையே வேலையாக நீங்கள் அலைந்து கொண்டு இருக்கிறீர்கள். என்னது, விஜய்காந்துக்கு ஆதரவு பெருகிவருவது கண்கூடாகத் தெரிகிறதா அல்லது கண் குருடாகத் தெரிகிறதா. நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Madurai Karan - Thirumangalam, Madurai,இந்தியா
13-ஆக-201214:00:11 IST Report Abuse
Madurai Karan ஆரம்பத்தில் கேப்டனை கோமாளி என்று நினைத்தேன். அவர் சுற்றுப்பயணம் சென்று மக்களிடம் குறை கேட்பது நல்ல அணுகுமுறை. அவர் கேட்கும் கேள்விகள் சரியாகத்தான் உள்ளது. ஏன் அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யணும்....
Rate this:
Share this comment
Cancel
Michael Xavier - Doha,கத்தார்
13-ஆக-201213:41:07 IST Report Abuse
Michael Xavier இவன யாரு உள்ள விட்டது ???????
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
13-ஆக-201213:36:52 IST Report Abuse
T.C.MAHENDRAN அப்புவுக்கு மப்பு ஜாஸ்தி ஆயிடிச்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்