Government fixes 500 word limit for RTI query | ஆர்.டி.ஐ., கேள்விகள் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்: மத்திய அரசு கட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆர்.டி.ஐ., கேள்விகள் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்: மத்திய அரசு கட்டுப்பாடு

Updated : ஆக 14, 2012 | Added : ஆக 12, 2012 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி: "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்' என, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து, பொதுமக்கள், தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக, 2005ம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்கள் கேட்டு, கேள்விகள் சமர்ப்பிக்கும் போது, அந்தக் கேள்விகள், இவ்வளவு வார்த்தைகளில் தான் இருக்க வேண்டும் என, இதுவரை எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கேள்விகள், 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என, கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இதில், மத்திய பொது தகவல் அலுவலர் பெயர், முகவரி, விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் இணைப்புக்கள் போன்றவை கணக்கில் எடுப்பதில்லை. இருப்பினும், 500 வார்த்தைகளுக்கு மேல் இருந்தாலும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.மேலும், மத்திய தகவல் ஆணையரிடம், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்பவர்கள், அவர்களே நேரடியாக ஆஜராக வேண்டும் அல்லது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். இல்லையெனில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டு, பதில்கள் தபாலில் அனுப்பப்படும் போது, 50 ரூபாய்க்கு மேல், செலவு ஏற்பட்டால், கூடுதலாகும் தபால் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.

தகவல்கள் கோரி விண்ணப்பம் செய்வோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர் என்பதற்கான, அரசு வழங்கிய சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண வில்லையை இணைக்க வேண்டும்.இவ்வாறு பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SOLAN - Chennai,இந்தியா
13-ஆக-201211:43:35 IST Report Abuse
SOLAN சுதந்திர தினத்தில் மத்திய அரசின் பரிசு. பக்கம் பக்கமாக கேள்விக்கு விளக்கம் அளித்து பதில் கேட்டாலே இவர்கள் பதில் தருவது இல்லை. இந்த இலட்சணத்தில் 500 வார்த்தையில் என்ன கேள்வியை கேட்க முடியும். இப்படி எல்லாம் செய்தால் நக்சல்கள் உருவாகாமல் என்ன செய்வார்கள். மஞ்ச துண்டு கைதடி ஒன்று தகவல் கொடுக்கும் இடத்தில இருந்து கொண்டு யாருக்கும் தகவலே கிடைக்காத மாதிரி வேலை செய்து கொண்டு இருக்கிறது. அம்மா ஆட்சியில் கூட இது நடக்கிறது. ஹ்ம்ம்.. இதை எல்லாம் கேட்க ஒரு நாதியும் இல்லை... அது மட்டும் அல்ல ஆங்கிலத்தில் 500 வார்த்தையில் கேட்கும் கேள்வியை தமிழில் கேட்க வேண்டும் என்றால் அதற்க்கு 800 வார்த்தைகள் தேவைப்படும். மொழிக்கு மொழி இது வேறுபடுகிறது. பாவி பசங்க... இத்தாலி ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமாக இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
Jay - Bengaluru,இந்தியா
13-ஆக-201211:21:06 IST Report Abuse
Jay இது மூலமா யார் இப்டி கேள்வி கேடங்கனு ரெகார்ட் பண்ணி, அவங்கள குடும்பத்தோட தீர்த்து கட்ட போட்டு இருக்குற சதி. அந்த பயத்துல நெறைய பேர் கேள்வி கேக்கவே பயப்பட்டு, விட்ருவாங்க. What an idea Sirji?
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
13-ஆக-201210:47:57 IST Report Abuse
mirudan நான் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மனு ஓன்று அனுப்பி 45 நாள் ஆகி விட்டது ஒரு பதிலும் இல்லை. பள்ளி கல்வி துறைக்கு அனுப்பிய மனுவிற்கு ஆறுமாத காலம் கழித்து பதில் அனுப்பினார்கள். எழுத படிக்க தெரிந்தவன் கூட இப்படி பதில் சொல்லமாட்டான். கேட்ட கேள்வி ஒன்றுக்கு கூட உரிய பதில் இல்லை
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
13-ஆக-201210:44:10 IST Report Abuse
mirudan நீதியை நிலைநாட்ட வேண்டிய உயர் நீதிமன்றத்தில் இருந்தே உரிய பதில் பெற முடிய வில்லை இது தான் RTI Act இந்த லட்சணத்தில் இப்படி ஒரு கட்டுப்பாடு தேவைதான்
Rate this:
Share this comment
Cancel
Nakkeran - Bengaluru,இந்தியா
13-ஆக-201209:40:46 IST Report Abuse
Nakkeran This looks like it is meant for TN&39s HR&CE dept. They must have celebrated with crackers and sweets
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஆக-201209:40:42 IST Report Abuse
Kasimani Baskaran நல்ல வேளை பதில் 500 எழுத்துக்களுக்குள் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் ஆம் / இல்லை என்று பதில் சொல்லி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
13-ஆக-201207:08:38 IST Report Abuse
ஆரூர் ரங கேள்வியே புரியவில்லை எனச் சொல்லி பதிலளிக்காமல் தப்ப சிறந்த வழியோ ? நாம் மணிரத்னத்திடம் டிரைனிங் எடுத்து ரத்தின சுருக்க தந்தி பாஷையில் கேள்விகளை அனுப்பலாம். RTI சட்டம் எதற்குக் கொண்டு வந்தார்கள என்றே தெரியவில்லை. கேள்வி கேட்ட ஐநூறு பேர் கொலைபலபலக் கேள்விகளுக்கு பதிலில்லை. ஆளும் வர்க்கத்தை அஹிம்சை முறையில் திருத்த முடியாது
Rate this:
Share this comment
Cancel
K Ramesh - Frankfurt,ஜெர்மனி
13-ஆக-201206:53:20 IST Report Abuse
K Ramesh அதையும் இதையும் போட்டு இந்த நல்ல சட்டத்தையும் ஒன்னும் இல்லாம பண்ணிருங்க, இந்தியா உருப்பட்டுரும், இப்பவே வருவாய் கோட்டாட்சியர் துறையில் தகவல் கேட்டா, "தாங்கள் கோரிய ஆவணம் 1995 ம் ஆண்டிற்கானது என்பதால் பதிவரையில் இறுந்து எடுத்த பின்பு அனுப்பி வைக்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது" என்று பதில் வருகிறது..
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
13-ஆக-201205:05:25 IST Report Abuse
மதுரை விருமாண்டி நேரு குடும்பத்தின் அறக்கட்டளைகளின் சொத்து மதிப்பு எவ்வளவு.... (மொத்தம் 31 எழுத்துக்கள் தான்..இந்தியாவின் தலை எழுத்து மாறக் காரணமான விடைகள் தொக்கி நிற்கும் கேள்வி)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை