கடந்த ஏப்ரலில், சட்டசபையில் நடந்த மானியக்கோரிக்கை விவாதத்திலேயே, ஈமு கோழி மோசடி குறித்து, தே.மு.தி.க., கேள்வி எழுப்பியது. அப்போதே இந்த விஷயத்தில் விழித்துக் கொள்ளாமல், மெத்தனம் காட்டிய கால்நடை பராமரிப்புத் துறை, இப்போது விழித்துக் கொண்டுள்ளது.
"ஆஸ்திரேலிய பறவை இனத்தைச் சேர்ந்த ஈமு கோழியை வளர்த்தால், பணம் கொட்டும்' என, விளம்பரம் செய்யப்பட்டது. ஈமு கோழி, இறைச்சி முதல் இறகு வரை பணம் கிடைக்கும் எனவும், பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் காண்பிக்கப்பட்டன. ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்களுக்கு சினிமா நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு, விளம்பரத் தூதுவர்களாக வலம் வந்தனர்.இதை நம்பி, தமிழகம் முழுவதும் ஏராளமானோர் ஈமு கோழி வளர்ப்பில் மிகுந்த ஆர்வமுடன் முதலீடு செய்தனர். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை, இதற்காக அவர்கள் செலவிட்டனர். ஆனால், ஈமு கோழி வளர்ப்பு "கோல்மால்' என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நடவடிக்கை:இப்பிரச்னை குறித்து, கடந்த ஏப்ரல் 27ம் தேதி, சட்டசபையில் தே.மு.தி.க., வலியுறுத்தியுள்ளது. கால்நடைத் துறை மானியக்கோரிக்கை விவாதத்தில், தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து பேசும்போது, "ஈமு கோழி வளர்ப்பு புற்றீசல்போல் பெருகிவிட்டது. ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்கள் விளம்பரம் செய்து, பலரிடம் பணம் வசூலித்து முறைகேடுகள் செய்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.அதற்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா, "ஈமு கோழி வளர்ப்பு குறித்து, அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. உண்மையில், ஈமு கோழி வளர்த்தால் லாபம் கிடைக்குமா என்பது குறித்து, கால்நடைத் துறை ஆய்வு செய்து வருகிறது. முடிவு தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
அமைச்சரிடம் இருந்து எம்.எல்.ஏ.,வின் கேள்விக்குப் பதில் கிடைத்ததே தவிர, ஈமு நிறுவனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போதே, இதை தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்திருந்தால், குறைந்தபட்சம் கடந்த மூன்று மாதங்களில் முதலீடு செய்து, ஏமாந்தவர்களையாவது காப்பாற்றி இருக்கலாம். இதன்மூலம், அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பல லட்சம் ரூபாயை, மோசடி ஈமு நிறுவனங்களுக்கு செல்லாமல் தடுத்திருக்கலாம். ஆனால், பிரச்னை பூதாகரமாக வெடித்து, ஈமு நிறுவனங்களால், 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது தான் கால்நடை பராமரிப்புத் துறை விழித்துக் கொண்டுள்ளது. ஈமு நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ள நிலையில், கோழிகளை பராமரிக்கும் பணியை சொந்த செலவில் அரசு செய்து வருவது, கொம்பை விட்டு வாலை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஓர் அறிவிப்பு செய்தார்: "ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக நாசிக் வட்டாரத்தில் சுமார் 2,000 விவசாயிகள், ரூ.200 கோடி அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளதாக வந்த புகார்களை விசாரிக்க சிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது&39 என்பதுதான் அது. இத படிச்சிருந்த யாரும் மட்டிருக்க மட்டங்க....
ஈமு கோழி வளர்ப்பில், காசு போட்டதுக்கு இணையான ஈமு கோழிகள் இருந்தாலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஈமு கோழிக்கான சந்தை இந்தியாவில் இல்லை. இந்தியாவில் ஈமு கோழிக்கறி உண்பாரும் யாரும் கிடையாது.
ஈமு கோழியை உயிருடன் ஏற்றுமதி செய்வதோ அல்லது வெட்டுவதோ கூடாது என்று ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தபோது, ஈமு கோழி வளர்ப்பு வெளிநாடுகளில் நடைபெறத் தொடங்கியது. அமெரிக்காவிலும்கூட இந்த முயற்சிகள் நடந்தன. ஆனால், ஈமு கோழியை வளர்த்து அதன் இறைச்சியில் கிடைக்கும் பணத்தைவிட, மாட்டிறைச்சி மூலம் அதிக வருவாய் கிடைப்பதை நடைமுறையில் உணர்ந்த அமெரிக்கர்கள் இத்திட்டத்தைக் கைவிடத் தொடங்கினர். கடைசியாக இந்தியாவில் இந்தத் திட்டத்தை இறக்குமதி செய்தார்கள்.
ஈமு கோழியின் விலை அதிகம் என்பதும், இதன் இறைச்சி, எண்ணெய், நகங்கள் எல்லாமும் விலை போகும் என்பதும் உண்மைதான். ஆனால், இதை யார் வாங்குகிறார்கள், சந்தையின் தேவைஅளவு என்ன என்று எந்த உண்மைகளையும் தெரிந்துகொள்ளாமல், காசு போட்டவங்க அறியாமைதான் மோசடி செய்தவர்களின் முதலீடு.
"விவசாயத்தில் நஷ்டம். ஆகவே இதிலாவது கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்றுதான் ஈமு கோழி வளர்ப்புக்கு ஆட்பட்டோம்&39 என்று அப்பாவித்தனமாக மக்கள் சொல்கிறார்கள். விவசாயம் பொய்த்தது என்பதற்காக பொய்யான திட்டங்களில் முதலீடு செய்யலமா? வானம் ஒருமுறை பொய்த்தாலும் மறுமுறை அள்ளிக்கொடுக்கும். இந்த மோசடிக்காரர்கள் இருந்த அனைத்து முதலீட்டையும் அல்லவா துடைத்துச் சென்றுவிட்டனர்.
தேக்கு மரம் வளர்த்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதை வெட்டிப் பணம் தருகிறோம் என்கிற திட்டத்தில் ஒரு கன்றுக்கு சிறிய தொகை செலுத்தினால் போதும் என்றார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரம் இருக்குமா, நாம் இருப்போமோ, அல்லது அந்த நிறுவனம்தான் இருக்குமா என்று எதையுமே யோசிக்காமல் முதலீடு செய்தார்கள் தமிழர்கள்.
வட்டியைக் காட்டி, மரத்தைக் காட்டி, தங்கத்தைக் காட்டி, இறைச்சியைக் காட்டி ஏமாற்றியவர்கள் இப்போது மண்ணைக் காட்டியும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது வேளாண் நிலமா, வீட்டுமனைக்கான அங்கீகாரம் பெற்றிருப்பது உண்மையானதுதானா? என்கின்ற எந்தக் கேள்விமுறையும் இல்லாமல் மனைகளை விற்கிறார்கள். "மண்ணுல போட்டா வீண் போகாது&39 என்பது விவசாயத்துக்கான பழமொழி. வீட்டுமனைக்கானது அல்ல.
ஆசைக்கோர் அளவில்லை என்பார்கள். அறிவும் இல்லை

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.