TESO conference was a success: Karunanidhi | டெசோ மாநாடு வெற்றி: கருணாநிதி பெருமிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெசோ மாநாடு வெற்றி: கருணாநிதி பெருமிதம்

Updated : ஆக 15, 2012 | Added : ஆக 13, 2012 | கருத்துகள் (199)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 டெசோ மாநாடு வெற்றி: கருணாநிதி பெருமிதம்

சென்னை:""டெசோ மாநாடு வெற்றிகரமாக நடந்தது. ஒரு போலீசார் கூட மருந்துக்கும் நம் கண்களில் தென்படவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:டெசோ மாநாடு மிகவும் சிறப்பாகவும், ஈழத் தமிழர்களுக்குப் பயனுள்ள வகையிலும் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால், மாநாட்டுப் பந்தலிலோ, அல்லது வெளிப்பகுதிகளிலோ போலீசார் எவ்வித பாதுகாப்புப் பணியையும் மேற்கொள்ளவில்லை. ஒரு போலீசார் கூட மருந்துக்கும் நம் கண்களில் தென்படவில்லை. ஆட்சிக் கட்சி என்பது நிரந்தரமானதல்ல.ஜனநாயக நாட்டில் கட்சிகள் ஆளுங்கட்சிகளாக வரும், மாறும். ஆனால், அதிகாரிகள் என்போர் நிர்வாகத்தில் நிரந்தரமானவர்கள். அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை, கட்சி வேறுபாடு கருதாமல் நடுநிலையோடு நிறைவேற்ற வேண்டும்.


மாநாட்டில் கலந்து கொண்ட, "இசட் பிளஸ்' பிரிவின் கீழ் வரும் தலைவர்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் பாதுகாப்பைத் தவிர, வேறு எந்தவிதமான மாநில போலீசாரின் பாதுகாப்பும் வழங்கவில்லை என்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. போலீசார் பாதுகாப்பே இல்லாதது கண்டு, மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள், குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தெரிவித்தனர். கோர்ட்டிலே தடை பெறுவதற்கு, மூன்று முறை முயன்று மூக்கறுபட்டவர்களுக்கு, போலீசாரின் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் எப்போதும் விரோதப் போக்கினை கடைப்பிடித்து வரும் அ.தி.மு.க.,வும்,- அ.தி.மு.க., ஆட்சியாளர்களும் தொடர்ந்து நமக்கு ஏற்படுத்திய தடைகளையெல்லாம் கடந்து, போலீசாரின் எவ்விதப் பாதுகாப்புமின்றி, டெசோ மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (199)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
14-ஆக-201219:01:10 IST Report Abuse
Sundeli Siththar நம்ம ஆட்சியா இருந்தா, கொலை, கொள்ளை, அராஜகம், வழிப்பறி எல்லாம் நாடாகும்.. மாநாட்டு திடலுக்கு பக்கத்துல எவனும் நிம்மதியா போக முடியாது... தண்ணி அடிச்சு, அடாவடி பண்ணற கும்பல் இருக்கும்... பேருக்காவது போலிஸ் பாதுகாப்பு வேண்டியிருக்கும்... இந்தம்மா ஆட்சியில அப்படி எதுவும் நடக்காது என்பதால் போலிஸ் பாதுகாப்பு இல்லை என்று வெளிநாட்டு விருந்தினர்கள் நினைச்சுடப் போறாங்க.. பாத்து...
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
14-ஆக-201218:31:30 IST Report Abuse
Srinath தலைவருக்கு வயதாக ஆக புத்தி பேதலித்துவிடுகிறது பார்த்தீர்களா. மருந்துக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பின்றி இவ்வளவு மாமாமாபெரும் மாநாடு அமைதியாக முடிந்திருப்பதே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அமைதியாக உள்ளது என்பதற்குக் கட்டியம் கூறுகிறது என்று அதிமுக தலைவி அம்மையார் அறிக்கை விட வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளதே. இதென்ன சேம் சைட் கோல் அடித்துவிட்டாய் தலைவா? இன்னொரு ஐயப்பாடு. டெசோ மாநாடு மாபெரும் வெற்றி என்றால் என்ன பொருள்? இலங்கையில் தமிழர்களுக்கு ஈழம் கிடைத்துவிட்டதா? அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கத் தொடங்கிவிட்டதா? ஒரு உண்ணாவிரதம் மூலம் லட்சம் பேரைக் கொன்றது போல, ஒரு நாள் கூட்டத்தின் மூலம் இறந்தவர்கள் அனைவரையும் உயிர்ப்பித்துவிட்டாயா தலைவா?
Rate this:
Share this comment
Cancel
rajesh - tirupur,இந்தியா
14-ஆக-201218:20:06 IST Report Abuse
rajesh வெற்றி ..வெற்றி..வெற்றி...அண்ணே இந்த கோப்பை எந்த பத்திரக்கடைல வாங்கினது ? தம்பி நசை அப்பன் பத்திரகடைல தம்பி ..:)
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
14-ஆக-201217:02:37 IST Report Abuse
ganapathy எந்த செயலும் நிறைவேறாமல் வெற்றி என்று முழங்க கூடிய ஒரே தலைவன் மு.க மட்டும் தான். அரிசி ரூபாய்க்கு மூணு படி இல்லாட்ட செருப்படி என்று கூவி ஆட்சிக்கு வந்த வுடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த கட்சி தான் திமு.க. பின்னர் வெறும் பொய்யும் ஊழலும் செய்தே ஆட்சியை பிடிச்ச, ஊழலுக்காவே ஆட்சியையும் இழந்தவர் இந்த மு.க.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஆக-201216:01:21 IST Report Abuse
Nallavan Nallavan "டெசோ மாநாடு வெற்றிகரமாக நடந்தது. ஒரு போலீசார் கூட மருந்துக்கும் நம் கண்களில் தென்படவில்லை,&39&39 ஏன்???? அதிகமா பாதுகாப்பு கொடுத்திருந்தா சட்டம் ஒழுங்கு பிரச்னையை வேற எங்கியாவது (குறிப்பா சென்னைக்கு வெளியில்) உண்டாக்கி அத வெச்சு கொஞ்ச நாளைக்கு அரசியல் பண்ணலாம்-ன்னு ஐடியா இருந்திருக்குமே???? அது சரி...எதுக்கு இந்த நாடகத்துக்கேல்லாம் பாதுகாப்பு???? எந்த இலங்கைத் தமிழனாவது இந்த நாடகத்தைச் சகிக்காமல் ஏதாவது இடைஞ்சல் பண்ணிடப்போறான்-ன்னு பயந்தா???? தேவையில்லை பெரியவரே,,,, உங்களை அவங்க கணக்கிலேயே சேக்கலை அது தெரியுமா???? உண்ணாவிரதத்தை நிறுத்த நீங்க வேண்டுகோள் விட்டப்ப சிவந்தன் உங்களுக்கு என்ன பதில் சொன்னாரு தெரியுமா????
Rate this:
Share this comment
Cancel
Uruppadathavan - Coimbatore,இந்தியா
14-ஆக-201214:29:11 IST Report Abuse
Uruppadathavan என்ன வேணும்னாலும் திட்டுங்க ஆனா ஒன்ன ஒத்துக்கணும். மஞ்ச துண்டு சொன்னது தான் எப்பவுமே அதிகம் படித்தவை & விமர்சிக்கப்பட்டவை ல இருக்கு
Rate this:
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
14-ஆக-201218:53:09 IST Report Abuse
Sundeli Siththarத்ரில்லர் படத்தை விட காமெடி படத்திற்கே மவுசு அதிகம் ...
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஆக-201214:15:03 IST Report Abuse
periya gundoosi தான் கதை,வசனம் எழுதிய உளியின் ஓசை படத்துக்கு சிறந்த வசனகர்ததாவாக தேர்ந்தெடுததுக் கொண்டாரா? ச்செ எவ்வளவு கேவலமான ஆள். ஆர் எம். வீரபபனின் தயாரிபபில் மககள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த காவல்காரன் படமும் அதே ஆண்டில் வெளியான விவசாயி படமும் சிறந்த பட தேர்வுக்குழுவுக்கு சென்றிருந்தது. விவசாயி தேர்வானதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தாராம் எம்.ஜி.ஆர். அவர்தான்யா பொண்மனச் செமமல் நீரும் இருக்கிறீரே. மலேசிவுக்கான இலங்கைத் தூதரிடம் ஒரு நிரூபர் நேற்று இலங்கைத் தமிழர்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் அதைக் கேடட ராஜபக்க்ஷேவுக்கு கோபம் உச்சிக்குப் போயி பாவம் தூதர் பதவி பறிக்கப்பட்டு விட்டது.உமமுடைய டெசோ மாநாட்டால். மாநாடு வெற்றி பெருமிதா?
Rate this:
Share this comment
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
14-ஆக-201214:50:49 IST Report Abuse
T.C.MAHENDRANஎம்.ஜி.ஆரோடு இவரை ஒப்பிடுவதே மாபெரும் தவறு . எம்.ஜி.ஆரின் கால்தூசிக்கு கூட இவர் சமமாகமாட்டார் ....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
14-ஆக-201215:21:41 IST Report Abuse
Pannadai Pandianநான்தான் சொல்லிகிட்டே இருக்கேனே இது ஒரு கிரியா ஊக்கின்னு. தான் கெடாது, தன்னோட சேர்ந்தவங்கள கெடுத்து குட்டிச்சுவராக்கிடும்....
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
14-ஆக-201215:45:28 IST Report Abuse
K.Sugavanamவிவசாயி யும் எம் ஜி ஆர் நடித்த படம் தான்....
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
14-ஆக-201214:09:43 IST Report Abuse
T.C.MAHENDRAN இந்த மாநாட்டின் மூலம் பெருசு தன் கல்லாவை நிரப்பிக்கொண்டதுதான் உண்மை .
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
14-ஆக-201215:47:35 IST Report Abuse
K.Sugavanamடி,சிற்றுண்டி,அதனால் அப்போல்லோ போக தேவையானது தேறிவிட்டதோ?...
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
14-ஆக-201214:07:19 IST Report Abuse
babu தீர்மானம் நிறேவேற்றபட்டது அது உலக அளவில் கருதேர்க்க பட வழி தேடு. ஐநா விற்கு உள்ள கருத்து காணலில் தீர்மான விளக்கங்களை விவரிப்பது முக்கியம் அதை விட்டு விட்டு இலங்கை பிரச்சினையில் தன் மீதான பழியை மீட்க செய்யும் வேலையாக டெசோ என்ற ஷோ விட்டு விட்டு தீர்மானம் தீர்க்கும் நிலைகளை ஆராயவேண்டும் தற்போது இவர் பதில் அரசியலாகவே லோக்கல் அரசியல் ஆக கருதவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஆக-201213:57:16 IST Report Abuse
periya gundoosi பாதிக்கபபட்ட இலங்கைத் தமிழர்களுக்கு பூசுவதற்கு எல்லா மருந்தையும் நீங்க வாங்கி பேக் செய்த பிறகு மருந்து எங்கே கிடைக்கும். மாநாட்டால் இலங்கைத் தமிழருக்கு நன்மையைவிட கேடே அதிகம் உண்டாகும்.மாநாட்டால் ராஜபக்க்ஷேவுக்கும், சிங்கர்களுக்கும் கடுங்கோபம், நேற்று தங்களது மற்றும் மாநாட்டின் கலந்து கொள்ள வந்திருந்த ஒரு இலங்கைத் தமிழ் தலைவர், இருவருடைய கொடும்பாவி எரிக்கப்பட்டது, கால் அணிகளால் புகைப்படங்களை அடித்தனர் இலங்கைத் தமிழர்கள் நடத்தும் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. செய்திக்கு தகுந்தார் போல் புகைப்படம் வெளியிட்டு சிலிர்ப்பேத்துகிறார் தினமலரார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை