ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில் திருப்பம்: அரசு வக்கீல் ஆச்சார்யா ராஜினாமா

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு:தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த, கர்நாடக அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, உடல் நிலை காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, 1997ம் ஆண்டு, சென்னையிலிருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்ட போது, ஆச்சார்யா, அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து, 15 ஆண்டுகளாக ஆஜராகி வருகிறார்.

கடந்த ஆண்டில், ஆச்சார்யாவுக்கு மூன்றாவது முறையாக கர்நாடக அட்வகேட் ஜெனரல் பதவி கொடுக்கப்பட்டது. அட்வகேட் ஜெனரலாக இருப்பதால், ஜெயலலிதா வழக்கை விசாரிக்கக் கூடாது என, புகார் எழுந்ததையடுத்து, தனக்கு சொத்துக் குவிப்பு வழக்கு தான் முக்கியம் என, அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்து, ஜெயலலிதா வழக்கில் ஆஜராகி வந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மல்லிகார்ஜுனையா, இம்மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, கர்நாடக உள்துறை செயலரை சந்தித்து, தன் உடல் நிலை காரணமாக, ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி, வாதிட இயலாது. எனவே, தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கடிதம் கொடுத்தார்.ஆச்சார்யாவுக்கு தற்போது, 84 வயது. இந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட செயலர், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஒப்புதல் பெற்றார்.

அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ராஜினாமா செய்ததையடுத்து, இவ்வழக்கில் புதியதாக ஒரு அரசு வழக்கறிஞரை நியமிக்க, மேலும் ஒரு மாதம் ஆகும் என்று, நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (71)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
16-ஆக-201201:45:18 IST Report Abuse
Sundeli Siththar ஆச்சர்யமா இருக்கே... கருணா காசு தரமாட்டேனுட்டாரா.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
16-ஆக-201200:15:08 IST Report Abuse
muthu Rajendran சாதகமான வழக்கு என்றால் தீர்ப்பை வாங்கு இல்லையென்றால் சாக்குபோக்கு சொல்லி வாய்தா வாங்கு. நீதி மன்றங்கள் எல்லாரையும் என்றைக்கு ஒன்றாக பார்க்கிறதோ அன்று தான் உண்மையான நீதி எல்லோருக்கும் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
alex thennavan - chennai,இந்தியா
15-ஆக-201216:20:13 IST Report Abuse
alex thennavan 2G வழக்கில் திமுகவும்...சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வரும்...இதுதானே இந்திய சட்டம்?இரண்டு திருடர்கள் நல்லவர்களாவார்கள்..ஒரே குளத்தில் ஊறிய ஊழல் மட்டைகள்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
15-ஆக-201215:16:51 IST Report Abuse
K.Sugavanam இங்க கருத்து பதியும் நண்பர்கள் ஒரு கெட் டுகெதர் வெச்சா என்ன?
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-ஆக-201201:52:16 IST Report Abuse
மதுரை விருமாண்டிஏன்யா ?? ஏன் ?? ..... கொம்பு சீவி விடுதுன்னா.. நீ ரத்தம் பாக்காமே விடமாட்டியா ? சிங்கப்பூர்லே இருந்து ஒருத்தன் வந்து கருத்துன்னு கதை கதையா சொல்லி காதிலே ரத்தம் வர வரைக்கும் விடமாட்டானே......
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
15-ஆக-201213:58:13 IST Report Abuse
ganapathy இவருக்கு பிடிவாதம் அதிகம். இப்போது அவர் விலகுவது அவருடைய வயது காரணமாகவே. இந்த வழக்கு நியாயமாக நடக்க வேறு நல்ல நீதிபதி மற்றும் வக்கீலை நியமிக்கலாம். சங்கராச்சாரியார் வழக்கு, போன்றவற்றில் அம்மாவும் வாங்க பிரேம்குமார் போன்ற நேர்மையில்லாத மனிதர்களை தான் நியமித்தார். அப்போது, நேர்மையாக இருந்த லட்சுமி பிரானேஷ், காவல் துறை அதிகாரி மூர்த்தி போன்றவர்கள் பதவியை ரிசைன் செய்துவிட்டு போனார்கள். தர்மம் வெல்லட்டும்.
Rate this:
Share this comment
ganapathy - khartoum,சூடான்
15-ஆக-201217:08:56 IST Report Abuse
ganapathyயாருக்கும் பயந்து பணிந்து அவர் இந்த வேலையை விட்டு இருக்க மாட்டார். ...
Rate this:
Share this comment
Cancel
Krishnan B - kabul,ஆப்கானிஸ்தான்
15-ஆக-201213:27:54 IST Report Abuse
Krishnan B இந்த சொம்புகளே சொல்லீட்டாங்களே, இவ என்ன பெரிசா தப்பு பண்ணீட்டா, கருணா தான் அதிகமான ஊழல் பண்ணி இருக்கார். எனவே தப்பே பண்ணாத/ நேர்மையான /சட்டத்தை மதித்து நீதிமன்றத்துக்கே வராமல் டிமிக்கி கொடுக்கும் ஜெயாவை இந்த கேசிலிருந்து விடுவித்து நீதி மன்றம் மன்னிப்பு கேட்க வேண்டும். (தப்பே பண்ணாதவர், யாருக்கும் பயப்படாதவர் எதுக்கு நீதி மன்றத்தை விட்டு ஓடி ஒளிய வேண்டும் என கருணா ஆட்கள் கேட்பது ஒலிக்கிறது. என் சொம்புகள் இருக்கும் வரை நீதி மன்றமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தப்பு மேல தப்பு பண்ணி தப்பிக்க வைக்க எனக்கு ஒரு டீமே இருக்கு).
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-201213:19:01 IST Report Abuse
periya gundoosi இங்கு நகைச்சுவை உணர்வோடும்,உண்மையோடும்,உறுதியோடும் கருத்துகளைப் பதிக்கும் நண்பர்களுக்கும் என் இந்திய சகோதர,சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த சுதந்திர நல்வாழ்த்துக்கள். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற என் தாய்நாடு. இந்த நாட்டில் உள்ள எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. நாம் நினைத்தால் இந்திய முதல் குடிமகனைக்கூட, நாட்டின் பிரதமரைக் கூட விமர்சிக்கலாம். அது தான் நமக்கு கிடைத்த மிகப் பெரிய சுதந்திரம். நான் இன்று யாரையும் விமர்சிக்க தயாராக இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Lightning View - Fahaheel,குவைத்
15-ஆக-201211:27:59 IST Report Abuse
Lightning View "கன்னித்தீவு" ஒரு தொடர்கதை தீர்வே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
velmurugan - Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-201209:58:07 IST Report Abuse
velmurugan அப்படியே அரசு வழக்கறிஞராக பன்னீர்செல்வதையோ அல்லது சிங்கபூர் சேகரையோ நியமித்தால் இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடலாம் ,
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
15-ஆக-201209:28:36 IST Report Abuse
N.Purushothaman உண்மையாலுமே அவர் உடல் நிலையை காட்டி ஒதுங்கி இருந்தாலும் அது உண்மையாக இருக்கும் என்று நினைக்க தோன்றவில்லை.......தான் உண்மையாலுமே தவறு செய்யவில்லை என்றால் அதை நிரூபிக்க இத்தனை வருடங்கள் தற்போதைய முதல்வருக்கு தேவையில்லை.......இந்த வழக்கில்முதல்வர் முனைப்பு காட்டி அதை முடித்து நிரபராதி என்று வெளியே வர வேண்டும்......இப்படி பல நிகழ்வுகள் (வழக்கு இழுத்தடிப்பது,இவர் ராஜினாமா செய்தது) அவருக்கு ஆதரவாக நடப்பது அவரின் மேல் உள்ள சந்தேகத்தை அதிகரிக்க செய்கிறது......அது அவருக்கு நல்லதல்ல...... இந்த வழக்கு இழுத்தடிப்பது மற்றவர்களுக்கு தப்பு செய்யும் ஊக்கத்தை அளிக்கிறது என்றால் அது மிகையாகாது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்