அரியலூர்: "குரூப்-2 தேர்விலும் ஊழல் என்றால், ஏழை மாணவர்கள் எப்படி வேலைக்குச் செல்ல முடியும்?'' என, அரியலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், அரியலூர் காமராஜர் திடலில் நேற்று முன்தினம் இரவு, பொதுக்கூட்டம் நடந்தது. துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை
வழங்கி, கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில், 10 சிமென்ட் ஆலைகள் மற்றும் ஒரு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைகளில், இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தில் நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கொடுத்து, அனல் மின் திட்டத்தை துவக்காமல், கடந்த, 10 ஆண்டுகளுக்கும்
மேலாக, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடன்குடியில், 8,000 கோடி ரூபாய் செலவில், மின் திட்டம் துவக்கப்படும் என, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அத்திட்டத்துக்காக ஒரு செங்
கல் கூட, இதுவரை எடுத்து வைக்கவில்லை. ஆட்சி மாறினாலும் மணல் கொள்ளை நீடிக்கிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்பதற்காக, முன் கவுரவம் பார்க்காமல் எம்.ஜி.ஆர்.,
கர்நாடக முதல்வரை சந்தித்துப் பேசினார். தற்போது, அதற்கான வழிவகை செய்யப்படவில்லை.மதுரையில், 16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் ஊழல் என்கின்றனர். ஆனால், எந்த அமைச்சரும் அங்கு செல்லவில்லை. பதவியை காப்பாற்றுவதற்காக, கோட்டையை சுற்றி வந்து
கொண்டிருக்கின்றனர். ஆதிதிராவிட மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, தலைமை ஆசிரியர்கள் கொள்ளையடித்துள்ளனர்; துப்புரவுத் தொழிலாளர் பணத்திலும் முறை÷
கடு நடந்து வருகிறது.
இப்போது, குரூப்-2 தேர்விலும் ஊழல் நடந்துள்ளது. இதிலும், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் தான் முதலிடம் பிடித்துள்ளன. இப்படி இருந்தால் படித்த ஏழை மாணவர்கள் எப்படி வேலைக்குச் செல்ல முடியும். பிரபாகரன் கொல்லப்பட்டது, தி.மு.க., ஆட்சியில் தான். இலங்கை பிரச்னைக்காக அன்றே பதவியை தூக்கி எறிந்திருந்தால், உண்மையான தமிழர் தலைவர் என கூறலாம். என் மகனுக்கு பிரபாகரன் என பெயர் வைத்துள்ளேன். பிரான்ஸ், இத்தாலி என, உலக நாடுகள் பலவற்றிலும் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு நான் உதவி செய்துள்ளேன். ஆனால்,
நீங்கள் பேசி பேசியே சுடுகாடாக்கினீர்கள். வரும், 2016ம் ஆண்டு, தே.மு.தி.க., ஆட்சி தான். மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என, மக்களை அதிர்வடைய செய்தவர்களுக்கு, பொதுமக்கள் பாடம்
புகட்டுவர். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
========================
குரூப்-2 வினாத்தாள் "லீக்' விசாரணைக்கு 5 பேர் குழு
சென்னை, ஆக. 15-குரூப்-2 கேள்வித் தாள், "லீக்' விவகாரம் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் முழுமையாக விசாரணை நடத்த, உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய, 5 பேர் குழுவை அமைத்
தும், இக்குழு, 15 நாளில் விசாரணை அறிக்கையை வழங்கவும், அதன் தலைவர் நடராஜ் நேற்று உத்தரவிட்டார்.
கடந்த, 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வு கேள்வித் தாள், ஈரோடு, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் முன்கூட்டியே வெளியானதை அடுத்து, அன்று நடந்த, டி.என்.பி.எஸ்.சி., ÷
தர்வு, ரத்து செய்யப்பட்டது. பின்னணியில் யார்: கேள்வித்தாள், "லீக்' விவகாரம் தொடர்பாக, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டின் பின்னணியில்எத்
தனை பேர் உள்ளனர் என தெரியாமல், தேர்வாணைய அதிகாரிகளே தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், "கேள்வித் தாள், "லீக்' குறித்தும், இதில் யார், யாருக்கு தொடர்புள்ளது, கேள்வித் தாள் தயாரிப்பது முதல், அச்சிட்டு, தேர்வு மையங்களில் வினியோகம் செய்வது வரை
உள்ள பல்வேறு நிலைகளை ஆய்வு செய்யவும், தனி குழு அமைக்கப்படும்' என, நடராஜ் தெரிவித்தார். அதன்படி, உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து, நடராஜ் நேற்று உத்தரவிட்டார். இது குறித்து, அவர் கூறும்போது, ""ஐந்து பேர் குழு
முழுமையாக விசாரணை நடத்தி, 15 நாளில் அறிக்கை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அறிக்கையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
நடராஜ் தலைமையில் ஐந்து பேர் குழுவும், செயலர் உதய சந்திரன் தலைமையில் துணைக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களிடம் விசாரணை: ஐந்து பேர்
குழுவும், துணைக் குழுவும் தனித்தனியே விசாரணை நடத்தும் என தெரிகிறது. முதலில், தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து விசாரணையை துவக்க, குழு முடிவெடுத்துள்ளது. தேர்வாணையத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் என, அனைவரிடமும், தனித்தனியே விசாரணை நடத்தப்பட
உள்ளது.
முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில், தற்காலிக அடிப்படையில், 100 பேர் வரை வேலை பார்த்து வந்தனர். நடராஜ் தலைவராக வந்தபின், தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை,
50க்கும் குறைவாக குறைத்து விட்டார். தற்போது பணியில் உள்ள, குறைந்த எண்ணிக்கையிலுள்ள தற்காலிக ஊழியர்களும், விரைவில் நீக்கப்படுவர் என கூறப்படுகிறது.
=========================
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீ ஜெயாவை எதிர்க்க முழு துணிவும் இல்லாததால் எப்போதும் கருணாநிதியை கடிந்து கொண்டே இருக்கிறாய். இதற்க்கு முன் கருணாவின் ஆட்சியில் எல்லா தப்பிற்கும் அவரை மட்டுமே வசை பாடினாய். அதற்க்கு நீ சொன்ன விளக்கம் - ஆட்சியில் மு க இருப்பதால் அவரை தானே குறை சொல்ல முடியும் என்று. இப்போது ஜெயாவை முழுமையாக எதிர்க்க துணிவு இல்லை என்பதை உன் அரை வேக்காட்டு செயல்கள் வெட்ட வெளிச்சமாக்குகிறது.
கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது. தொடருங்கள் உங்கள் கனவு பயணத்தை. இலங்கை போரின் பொது இவரு (காப்டன்) வாய கூட தொறக்கல. இப்ப வந்து இலங்கை தமிழர்களுக்காக ஏதோ ஆணிய புடிங்கினாராம். இலங்கை தமிழர்கள்னா இவனுங்களுக்கு அரசியல் பண்ண எதுவா போச்சி. முதல்ல தமிழ் நாட்டுல உள்ள தமிழனுக்காக நீ எந்த ஆணிய புடிங்கினணு சொல்லு. பால் விழ, பஸ் கட்டணம், மின் கட்டணம் எல்லாம் ஏதாம அதுல வேல செய்ற ஊழியர்களுக்கு இவரு படம் நடிச்சு இல்லன கல்யாண மண்டபத்து (இடிந்சிபோன) வித்து சம்பளம் கொடுப்பாரு. நகரத்துக்குள்ள வந்து பால் விழ ஏறி போச்சின்னு கத்த வேண்டியது கிராமத்துக்குள்ள பொய் பால் உற்பத்தி விலைய ஏத்த சொல்லி கத்த வேண்டியது. நல்ல இருக்குங்கடா உங்க பொழப்பு,
ஏழைகளை பற்றி கவலைப் படும் நீங்கள் வருடத்திற்கு பத்து ஏழை மாணவர்களை தேர்தெடுத்து உங்கள் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி மற்றும் உங்கள் மச்சன் பெயரில் உள்ள பாண்டிச்சேரி மெடிக்கல் கல்லூரியில் இலவசமாக கல்வி தரலாமே?..........அதெல்லாம் செய்யாமல் ஊர் ஊரா போயி கத்திக் கூப்பாடு போட்டுக்குட்டு இருக்க...........என்ன நீ கொடுக்குற ஒடஞ்சி போற பிளாஸ்டிக் சாமானுக்கு உனக்கு ஓட்டு போடா சொல்லுறைய?..........
ஹரிக்ரிஷ்ணன் சரியா சொன்னிங்க..... சிவகுமாருக்கு என்ன தெர்யும்? கேப்டன் கல்லூரியில் எத்தனை பேர் இலவசமாக படிகிறார்கள் தெரியுமா இதுதான் கேப்டன் ஸ்டைல் அவர் இலவசமாக கல்லூரியில் சேர்பவர்களை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேப்டன் சொல்லி இருக்கிறார். தயவு செய்து சிவகுமார் உங்களால் நாலு பேருக்கு கொடுத்து உதவ முடியவில்லை என்றாலும், கொடுபவர்களை குறை கூராதிர்கள்... இல்லாதவர்கள் எவ்வளவு பேரு பயனடைகிறார்கள் தெரியுமா.............

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.