சென்னை: குரூப்-2 கேள்வித் தாள், "லீக்' விவகாரம் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் முழுமையாக விசாரணை நடத்த, உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய, 5 பேர் குழுவை அமைத்தும், இக்குழு, 15 நாளில் விசாரணை அறிக்கையை வழங்கவும், அதன் தலைவர் நடராஜ் நேற்று உத்தரவிட்டார்.
கடந்த, 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வு கேள்வித் தாள், ஈரோடு, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் முன்கூட்டியே வெளியானதை அடுத்து, அன்று நடந்த, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு, ரத்து செய்யப்பட்டது. பின்னணியில் யார்: கேள்வித்தாள், "லீக்' விவகாரம் தொடர்பாக, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டின் பின்னணியில்எத்தனை பேர் உள்ளனர் என தெரியாமல், தேர்வாணைய அதிகாரிகளே தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், "கேள்வித் தாள், "லீக்' குறித்தும், இதில் யார், யாருக்கு தொடர்புள்ளது, கேள்வித் தாள் தயாரிப்பது முதல், அச்சிட்டு, தேர்வு மையங்களில் வினியோகம் செய்வது வரை உள்ள பல்வேறு நிலைகளை ஆய்வு செய்யவும், தனி குழு அமைக்கப்படும்' என, நடராஜ் தெரிவித்தார். அதன்படி, உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து, நடராஜ் நேற்று உத்தரவிட்டார். இது குறித்து, அவர் கூறும்போது, ""ஐந்து பேர் குழு முழுமையாக விசாரணை நடத்தி, 15 நாளில் அறிக்கை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அறிக்கையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
நடராஜ் தலைமையில் ஐந்து பேர் குழுவும், செயலர் உதய சந்திரன் தலைமையில் துணைக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களிடம் விசாரணை: ஐந்து பேர் குழுவும், துணைக் குழுவும் தனித்தனியே விசாரணை நடத்தும் என தெரிகிறது. முதலில், தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து விசாரணையை துவக்க, குழு முடிவெடுத்துள்ளது. தேர்வாணையத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் என, அனைவரிடமும், தனித்தனியே விசாரணை நடத்தப்பட உள்ளது.
முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில், தற்காலிக அடிப்படையில், 100 பேர் வரை வேலை பார்த்து வந்தனர். நடராஜ் தலைவராக வந்தபின், தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை, 50க்கும் குறைவாக குறைத்து விட்டார். தற்போது பணியில் உள்ள, குறைந்த எண்ணிக்கையிலுள்ள தற்காலிக ஊழியர்களும், விரைவில் நீக்கப்படுவர் என கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.