Need a second freedom struggle to ensure free from hunger,disease and poverty: Pranab | மற்றொரு சுதந்திர போராட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு| Dinamalar

மற்றொரு சுதந்திர போராட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

Updated : ஆக 16, 2012 | Added : ஆக 14, 2012 | கருத்துகள் (65)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 "வறுமை, நோய் இல்லாத இந்தியாவை உருவாக்கமற்றொரு சுதந்திர போராட்டத்துக்கு அவசியம்!',Need a second freedom strug

புதுடில்லி:நாட்டின், 66வது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாட்டு மக்களுக்கு, "டிவி'யில், ஆற்றிய உரையில் கூறியதாவது:உலகம் முழுவதும் பரவியுள்ள ஊழலுக்கு எதிராக கோபம் கொள்வது நியாயமானது தான். அதற்காக, ஜனநாயக அமைப்புக்களை விமர்சித்து தாக்குவதை ஏற்க முடியாது. சட்டம் இயற்றும் அதிகாரத்தை, சட்டசபை, பார்லிமென்ட்டில் இருந்து பறித்து விட முடியாது. நீதித்துறையில் இருந்து நீதியை பறித்து விட முடியாது. போராட்டங்கள் தொடர்ந்து பரவினால், அது நம்மை குழப்பத்துக்கு ஆளாக்கி, உலுக்கி விடும்.கடந்த 1947ல், ஒரு சதவீத வளர்ச்சி கொண்டிருந்த இந்தியா, கடந்த ஏழு ஆண்டுகளாக, எட்டு சதவீத வளர்ச்சியைப் பெற்றிருந்தது. வறுமை, நோய் ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்க, இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கான நேரம் வந்துள்ளது.

உணவு பொருள் இருப்பு ஆரோக்கியமானதாக உள்ளது. நமது விவசாயிகளின் பங்கை மறந்து விட முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக, "சார்க்' நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், இந்தியா விரைந்து முன்னேறும். இளைஞர்களுக்கு வழங்கும் கல்வி என்பது விதை. பொருளாதாரம் என்பது அதன் மூலம் கிடைக்கும் பழம். சிறந்த கல்வியை வழங்கினால், நோய், பசி, வறுமை போன்றவை மாயமாகி விடும்.இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - chennai,இந்தியா
15-ஆக-201218:57:21 IST Report Abuse
Balasubramanian போராட்டம் சோனியாவுக்கு எதிராக வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
gurusamythevar.k - geylong,சிங்கப்பூர்
15-ஆக-201217:34:29 IST Report Abuse
gurusamythevar.k நோய் இல்லாத இந்தியாவைஅமைப்போம் என்பது இனிமேல் நமது தேசத்தந்தை மகாத்மா அவர்கள் மீண்டும் வந்தாலும்கூட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.இது மகாத்மா அவர்களுக்கு (ஒருவேளை மீண்டு வந்துவிட்டால்)நன்றாகவே தெரியும்.காரணம் இந்தியாவின் புற்றுநோயான புரையோடிக்கிடக்கும் இந்த காங்கிரஸ் நோயை எப்படி அழிப்பது என்பதை அறிந்துகொள்ள மகாத்மா அவர்கள் பாரிஸ்டர் பட்டம் முடிப்பதற்குள் அவரினாயுளும் முடிந்துவிடும்.எனவே ப்ரநாப்ஜி அவர்களே வேறு ஏதாவது ஆக்கபூர்வ காரணத்துக்கு மக்களை வழிநடத்த வழிதேடுங்கள்.சிங்கபூரிலிருந்து கா.ஜீவானந்தம்.(மு.ப.வீ.)
Rate this:
Share this comment
Cancel
R.SREENIVASAN - CHENNAI,இந்தியா
15-ஆக-201216:17:15 IST Report Abuse
R.SREENIVASAN ஊழலின் ஊற்று காங்கிரஸ் கட்சியினை வரும் நாடாளுமன்ற தேர்தலில் விரட்டி அடிக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம். வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
Muthu Raja - woodlands,சிங்கப்பூர்
15-ஆக-201213:55:41 IST Report Abuse
Muthu Raja காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரா இன்னொரு சுதந்திர போராட்டம் ஆரம்பிக்கத்தான் போகுது .................
Rate this:
Share this comment
Cancel
Deen - Doha,கத்தார்
15-ஆக-201213:42:32 IST Report Abuse
Deen 1947 ல இருந்து 8 சதவீகித வளர்ச்சின்னு சொல்லி இருக்கீங்களே, அனேகமா அது 70 சதவிகித வளர்ச்சி பெற்று இருக்கனும்... உங்க அரசியல் வியாதிகள் ரொம்ப கஷ்டப்பட்டு 8 சதவிகிதம் கொண்டு வந்தீகளாகும்
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
15-ஆக-201213:25:40 IST Report Abuse
Thamilan-indian நாட்டில் வறுமை, பசி ஏற்பட காரனகர்தாக்கலான, அந்நிய ஏஜெண்டுகளான பிரணாப், அன்சாரி, சோனியா போன்றோரின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவை விடுவிப்பதுதான்
Rate this:
Share this comment
Cancel
lanus singam - chennai,இந்தியா
15-ஆக-201212:26:39 IST Report Abuse
lanus singam முதல்ல நாம திறந்தனம் பின்னாடி நாட்டை திருத்தனும் .காசு வாங்காம எதனை பெர்ரூ வோடே போடுறாங்க.தனி மனிதனை திருந்துங்க பின்னாடி நாட்டை திருத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-201211:14:14 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar என் இனமே என் உறவே இன்று சுதந்திர காற்று வீசுகிறது வாய் வீச்சில் கால நிலை மாற்றம் நாளை இருக்குமா இந்த காற்று 66 வயது கிழத்திற்கு பிறந்தநாள் விழா வெளியே வெடி சத்தம் பலர் வயிற்றிளும்தான் பசிசத்தம் அதுமட்டுமா ? அசாமிலும் அதற்கு எல்லைபுரதிலும்..... ஒட்டுண்ணியாய் ஓர் நாடு நம்முடனே அங்கு மட்டும் சிவப்பு சூரியன் தானே சிந்திய ரத்தம் பிரதிபலிப்பதால் ஈழத்து சோகம் சுதந்திரம் தனக்கு மட்டும் தானா??? அது சுயநலம் என் உறவே என்று உனக்கு மகிழ்ச்சியோ அன்று எனக்கு மகிழ்ச்சி அது வரை நானும் எனக்கு இட்டுக்கொள்வேன் ஒரு முள்வேலி நீ மட்டும் பார்கவில்லை முள்வேலி ஏன் என் மனதும் தான் முள்வேலியில் காந்தி சொன்ன இந்திய சுதந்திரம் இந்திய பெண் நாடு நிசியில் தனியே வெளி சென்று கற்புடன் திரும்போது எமது இன சுதந்திரம் என் உறவுகள் ஈழ மண்ணில் பகலிலும் பயமில்லாமல் நடமாடும்போது இந்திய தாயே வழி செய்வாயா சரவணன் தோஹா கத்தார்
Rate this:
Share this comment
Cancel
M.Srinivasan - SADHURVEDHAMANGALAM,இந்தியா
15-ஆக-201211:14:00 IST Report Abuse
M.Srinivasan ஊழலிலும் கருப்புப்பணத்தை காப்பதிலும் தங்களை மிஞ்ச ஆள் இல்லை என்னும் அளவிற்கு நடந்து கொள்ளும் ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து வந்துவிட்டு இன்று நாட்டின் முதல் குடிமகன் ஆகிவிட்டோம் என்பதற்காக சம்பிரதாய வார்த்தைகளால் ஏதோ பேசி இருக்கிறார் பாவம் விட்டு விடுங்கள் அந்த பதவியை நினைத்தாவது .....மற்றதுறை வளர்ச்சியைவிட விவசாயம் நம் நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் உணர்ந்ததே ஆனால் விவசாயத்துறையில் தன்னிறைவு அடைய நாம் இன்னும் வெகு தூரம் செல்லவேண்டும் என்ற நிலைதான் இன்னும் நீடிக்கிறது மேலை நாடுகளுக்கு நாம் சவால் விடும் அளவிற்கு பொருளாதார தன்னிறைவு அடைய விவசாய வளர்ச்சி மட்டுமே kai கொடுக்கும், அளவிட முடியாத மனித சக்தியை கொண்டுள்ள இந்தியா அதை முறையாக பயன்படுத்தினால் எல்லாம் சாத்தியமே வாழ்க ஜனநாயகம் வந்தே மாதரம்- ஸ்ரீனி சதுர்வேதமங்கலம்
Rate this:
Share this comment
Cancel
Lightning View - Fahaheel,குவைத்
15-ஆக-201211:13:44 IST Report Abuse
Lightning View இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கான நேரம் வந்துள்ளது. உண்மைதான், நாட்டை சுயநலமிக்க அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மதம், ஜாதி இவைகளிடமிருந்து காப்பற்றவேண்டும். இலவசத்தை நம்பி தனி மனிதனின் சுதந்திரத்தை அடகு வைத்துவிடவேண்டம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை