DMK loss by women: Stalin | தி.மு.க.,வை தோற்கடித்தது பெண்கள்: ஸ்டாலின் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை தோற்கடித்தது பெண்கள்: ஸ்டாலின் பேச்சு

Updated : ஆக 16, 2012 | Added : ஆக 14, 2012 | கருத்துகள் (99)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 தி.மு.க.,வை தோற்கடித்தது பெண்கள்: ஸ்டாலின் பேச்சு,Traffic jam created by Ruling party rally

சென்னை:""சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடித்தது பெண்கள் தான். இப்போது, தவறு செய்து விட்டோம் என்று கவலைப்படுகின்றனர்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

ரம்ஜான் பண்டிகை ஒட்டி, முஸ்லிம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புது வண்ணாரப்பேட்டையில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு செய்திருந்தார்.

விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினர் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர். தி.மு.க., வினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக நான் பேசினேன் என்று என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்குகளை கண்டு நான் அஞ்சமாட்டேன். என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை கோர்ட்டில் சந்திப்பேன்; வாய்தா வாங்கிக் கொண்டு ஓடமாட்டேன்.ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலை பயப்படாமல் எதிர்கொள்வோம். பெண்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமை பெற்றவர்; தி.மு.க.,வை தோற்கடித்ததும் அவர்கள் தான். இப்போது, தவறு செய்து விட்டோம் என்று கவலைப்படுகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


வழக்கை சந்திக்க தயார் கருணாநிதி அறிக்கை

:"முதல்வர் ஜெயலலிதா என் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கைச் சந்திக்கத் தயார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா என் மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறார். அந்த வழக்கைச் சந்திக்க தயார். முதல்வர் சென்று மாதக்கணக்கில் தங்குகிற அளவிற்கு உள்ள அந்த கொடநாடு எஸ்டேட் யாருடையது, அது எப்படி வாங்கப்பட்டது, அந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது என்றால், அங்கு ஒரு முதல்வர் சென்று தங்குகின்ற காரணத்தால், அந்தத் தனியார் இந்த அரசில் உள்ளவர்களிடம் செல்வாக்கைக் காட்டி காரியம் சாதித்துக் கொள்ள முடியுமல்லவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண வழக்கை சந்திப்பேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish kumar - Erode,இந்தியா
15-ஆக-201219:03:08 IST Report Abuse
Sathish kumar ஆம் உண்மைதான்.ஜெ வும் பெண் தானே.
Rate this:
Share this comment
Tamil Selvan - Chennai,இந்தியா
16-ஆக-201209:46:04 IST Report Abuse
Tamil Selvanகனிமொழியும் ஒரு பெண் தானே??????........... அதைத்தான் அவர் சொல்ல......................
Rate this:
Share this comment
Cancel
thamilan - tiruchi,இந்தியா
15-ஆக-201219:02:15 IST Report Abuse
thamilan 500 ருபாய் 1000 ருபாய் கொடுத்து ஒட்டு வாங்கிவிடலாம் என்று நினைத்து தளபதியார் ஏமாந்துவிட்டார் பாஆவம் ஆனால் தமிழ் நாட்டு மக்கள் நம் வரிப்பணத்தில் ஒரு 0.1% திரும்பக்கிடைக்கிறது என்று வாங்கிக்கொண்டு தமிழ் நாட்டின் நலன் கருதி ஓட்டுப்போட்டார்கள். இப்பொழுது ஒரு குடும்பத்தையே புலம்ப வைத்துவிட்டார்கள் இல்லை இல்லை நிறைய குடும்பங்களை காப்பாற்றி இருக்கிறார்கள். வாழ்க தமிழகம்
Rate this:
Share this comment
Cancel
subash - cuddalore,இந்தியா
15-ஆக-201219:01:07 IST Report Abuse
subash தமிழின தலைவர் மகன் நீங்களே ஒருமை பன்மை பிழையோடு பேசலாம்? அது பெண்கள் இல்லை, ஒரு பெண் அதுவும் உங்கள் சகோதரி கனிமொழி செய்த 2g ஊழல்தான் காரணம்
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
15-ஆக-201214:45:24 IST Report Abuse
ram prasad ஆமாம் ஜெ வும் பிரேமலதாவும் சேர்ந்து தான் தோற்கடித்தார்கள்
Rate this:
Share this comment
Cancel
babu - Adelaide,ஆஸ்திரேலியா
15-ஆக-201214:06:58 IST Report Abuse
babu ஆவதும் பெண்ணாலே கட்சி அழிவதும் பெண்ணாலே ..அப்படீன்னு அப்பவே பாரதியார் சொல்லி இருகாரு ...5 ஆம் கிளாஸ் தமிழ் பாடத்துல படிச்சதா ஞாபகம்...
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
15-ஆக-201213:44:33 IST Report Abuse
Sundeli Siththar வழக்குகளை கண்டு நான் அஞ்சமாட்டேன். என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை கோர்ட்டில் சந்திப்பேன் வாய்தா வாங்கிக் கொண்டு ஓடமாட்டேன்.... நில அபகரிப்பு வழக்கில் புகார் தந்தவரின் காலில் விழுந்து அவரிடமிருந்து கொள்ளைஅடித்த பணத்தை திருப்பி தந்து அவரை புகார் வாங்க வைத்ததுபோல செயல்படுவேன்...
Rate this:
Share this comment
Cancel
TWOR - Chennai,இந்தோனேசியா
15-ஆக-201212:29:00 IST Report Abuse
TWOR காலம் கடந்து விட்டது அண்ணே
Rate this:
Share this comment
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
15-ஆக-201212:13:34 IST Report Abuse
அப்பாவி சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடித்தது பெண்கள் அல்ல உங்க குடும்பம்
Rate this:
Share this comment
Cancel
Rajathi raja - doha,கத்தார்
15-ஆக-201212:08:59 IST Report Abuse
Rajathi raja pengal nattin kangal....
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
15-ஆக-201212:00:55 IST Report Abuse
N.Purushothaman இவர்கள் தோற்றதற்கு நாளொரு காரணம் சொல்லி கொண்டு இருப்பவர்கள் தங்கள் தோல்விக்கு தாங்கள் தான் காரணம் என்கிற உண்மையை இதுவரை ஒப்பு கொள்ளவில்லை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை