Advertisement
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2012,23:49 IST
கருத்துகள் (51)
காற்றாலை மின் உற்பத்தி சரிந்ததால், மின் பற்றாக்குறை, 2,500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, இரண்டு நாட்களாக, தினமும், 5 முதல், 7 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.

தமிழகத்தின் மின் உற்பத்தி அமைப்புகள் மூலம், 10 ஆயிரத்து, 364 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். தற்போது தமிழகத்தின் மின் தேவை, 11 ஆயிரத்து, 500 மெகாவாட் ஆக உள்ளது. இரண்டு மாதமாக காற்றாலைகளில் இருந்து, 3,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்ததால், தமிழகத்தில் மின்தடை நேரம் குறைந்தது.

தற்போது, தென்மேற்கு பருவகாற்று சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளதால், காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, அதற்கேற்ப, காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, 2,500 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று அதிகாலை, 2 மணியளவில், 1,500 மெகாவாட் ஆகவும், நேற்று காலை திடீரென, 500 மெகாவாட் ஆகவும் சரிந்தது.

மொத்தம், 2,970 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையங்களில் நேற்று, 2,400 மெகாவாட்; மொத்தம், 2,080 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையங்களில், 500 மெகாவாட் மின்சாரமே உற்பத்தியானது. இதுதவிர, மத்திய மின்தொகுப்பு, தனியார் மின் உற்பத்தி நிலையம்
என, அனைத்து மின் உற்பத்தி ஆதாரங்கள் மூலம், 7,500 மெகாவாட் மின்சாரமே வினியோகிக்கப்பட்டது. இதனால் நேற்று, 2,500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. பற்றாக்குறையைச் சமாளிக்க, தமிழகம் முழுவதும் நகரம் மற்றும் கிராமப் புறங்களில் பகலில் மட்டுமின்றி, இரவிலும், அடிக்கடி மின்தடை செய்யப்பட்டது. இரண்டு நாட்களாக குறைந்தபட்சம், 5 முதல், 7 மணிநேரம் மின்தடை செய்யப்பட்டதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வடகிழக்கு பருவமழை துவங்கும் வரை, இதே நிலை நீடிக்கும் என, மின்வாரிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீர்வு என்ன?ஆகஸ்ட் இறுதியில், தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்று சீசன் முடிந்து விடும் என்பதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி, மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரிக்கும். அதே நேரம், செப்டம்பரில் வடகிழக்கு பருவமழை
Advertisement
துவங்குவதால், விவசாயத்துக்கான மின் தேவை குறையும். இதனால், செப்டம்பர் முதல், டிசம்பர் வரை, உற்பத்தி குறைந்த போதிலும், விவசாயத்துக்கு பயன்படுத்தாத மின்சாரத்தை, வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கி, மின் பற்றாக்குறையை, மின் வாரியம் சமாளிக்கும்.
-நமது நிருபர்-



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (51)
Gnanasingh - Bangalore,இந்தியா
15-ஆக-201216:48:44 IST Report Abuse
Gnanasingh இந்த மின்பற்றா குறைக்கு தமிழக அரசின் கையாலகாத திறமையற்ற செயல் தான் காரணம். தமிழக அரசின் திறமையில்தான் பற்றாக்குறை இருக்கிறதே தவிர மின்சாரத்தில் இல்லை. கடந்த நாள்களில் ஜெயலலிதா மற்றவர்களை ஆள் காட்டி விரல் குற்றபடுத்துவார் ஆனால் மற்ற 3 விரல் தன்னையும் பெருவிரல் கடவுளையும் காண்பிக்கிறார் என்பது தெரியாது போலும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jayaraman - kumbakonam,இந்தியா
15-ஆக-201216:42:39 IST Report Abuse
jayaraman The thermal project at Mettur(600MW),North Madras(600MW)-both by the then TN govt. and at Tuticotin(500MW) by cental and state govt. nearly completed. The koodangulam automic power project also completed. The Tn govt persue this matter sportively and commission these power projects early and solve the power crisis. Thank you. Jayaraman
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
s.maria alphonse pandian - mettur,இந்தியா
15-ஆக-201216:11:17 IST Report Abuse
s.maria alphonse pandian ஜெயா நிர்வாகப்புலி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு....டெசோ மாநாட்டை தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிபோல இதற்கு பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெற முயற்சி எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
amarlal - madurai,இந்தியா
15-ஆக-201213:44:12 IST Report Abuse
amarlal புது புதிதாக தொழிற்சாலைகள் மற்றும் மின்சாரம் சம்பந்தமான தயாரிப்புகளை தயாரிக்கும் வெளிநாட்டு கம்பனிகளுக்கு தமிழ்நாடு அரசு இப்போதைக்கு தொடங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்போதுள்ள மின்சார தட்டுபாடிற்கு காரணம் எதற்கு முன்னால் நிறுவப்பட்ட வெளிநாட்டு கம்பனிகளிடம் எந்த தடையும் இல்லாமல் மின்சாரம் கொடுப்போம் என்று தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டு நன்றாக மாட்டிக்கொண்டது. இந்த வெளிநாட்டு கம்பனிகள் நிருவபடுவது தடுக்கப்படும் வரை தமிழகம் இருளில் மூழ்கிக் கொண்டே தான் இருக்கும். பாரதி இருந்திருந்தால் "என்று தணியுமொ இந்த மின்சார தாகம்" என்று பாடியிருப்பார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Raashid Ahamed - khobar,சவுதி அரேபியா
15-ஆக-201212:25:11 IST Report Abuse
Raashid Ahamed இதுக்கே இப்படி அலுத்துக்கிறீங்களே நம் வாரிசுகள் பாவம். ஏனென்றால் அவர்கள் காலத்தில் 1 வார மின் தடை 1 மாத மின் தடை சில இடங்களில் நிரந்தர மின் தடையெல்லாம் ஏற்படும். என்ன யோசிக்கிறீங்க. இது ஆரூடம் இல்லை. வருங்காலம் மிக மோசமானதாக இருக்கும். வடமாநிலங்களில் நடந்தது போல் மின் தொகுப்பு பாதிப்பு தென் மாநிலங்களிலும் நடக்கும். இதை சரிசெய்யவோ தீர்வு காணவோ முடியாது. எவ்வளவு உற்பத்தியானாலும் பற்றாக்குறை தான் இருக்கும். காரணம் மிக சுலபம். கண் மண் தெரியாமல் பெருகும் மக்கள் தொகை. மரங்கள் வெட்டியதால் வெப்பம் அதிகமாகி ஏசி மெஷின்களில் தேவை அதிகரிப்பு. மின் திருட்டு மின் சேதம், மின் கசிவு, வீண் விரயம், மின் தேவை மிக வேகமாக அதிகரித்தல் இவைதான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nathan - Singapore,சிங்கப்பூர்
15-ஆக-201212:10:21 IST Report Abuse
Nathan அப்போ எப்பதான் என் தாய் தமிழ்நாட்டை, சிங்கபூராக ஆக்குவது? "மீனை கொடுக்காதீர், மீன் பிடிக்க கற்று கொடுங்கள்" என்ற வரியைபோல் இலவசத்தை கொடுக்காதீர் குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு ஆளுக்கு அரசு வேலை என்று தேர்தல் வாக்குறுதி அளித்து, நிறைவேற்ற முயற்சி எடுங்கள்.-NKHnathan
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Dhanabal - Thoothukudi,இந்தியா
15-ஆக-201211:46:47 IST Report Abuse
Dhanabal ஜூன் மாதத்திலிருந்து மின் வெட்டு குறையும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.ஆனால் மின் வெட்டு நேரம் அதிகரித்துக்கொண்டே போவது கவலைக்குரியது.மின் தேவை மற்றும் மின் உற்பத்தி நிலவரம் குறித்து சரியான புள்ளி விவரங்களை அரசு பெறவில்லை என்றே கருத வேண்டியுள்ளது....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
christ - chennai,இந்தியா
15-ஆக-201211:04:41 IST Report Abuse
christ மின் பற்றாக்குறை நாட்டை ஆளுபவர்களின் கையலகததை காட்டுகிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rubasundar - chennai,இந்தியா
15-ஆக-201211:02:37 IST Report Abuse
rubasundar மின்சாரம் இல்லாத பழைய காலத்துக்கு நாம் போகாத வண்ணம் அரசு புதிய வழிமுறைகளை கையாள வேண்டும் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
15-ஆக-201210:29:53 IST Report Abuse
Raj Pu இரண்டு மாதமாக காற்றாலைகளில் இருந்து, 3,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்ததால், தமிழகத்தில் மின்தடை நேரம் குறைந்தது. ஆனால் கூடங்குளம் 1000 மெகாவாட் மின்சாரம் முதலீடு ஐயோ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.