Traffic jam created by Ruling party rally | ஆளுங்கட்சியின் பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆளுங்கட்சியின் பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல்

Updated : ஆக 16, 2012 | Added : ஆக 14, 2012 | கருத்துகள் (17)
Advertisement
ஆளுங்கட்சியின் பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல

திருவள்ளூர்: போக்குவரத்து அதிகம் உள்ள சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூரில், ஆளுங்கட்சியினர் நடத்திய பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 கி.மீ., தூரத்தைக் கடக்க, 2 மணி நேரம் ஆனதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

அ.தி.மு.க., மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை சார்பாக, உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுக்கூட்டம் திருவள்ளூர், சி.வி.நாயுடு-நேதாஜி சாலை சந்திப்பில் நேற்று நடந்தது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கார், வேன்களில் தொண்டர்கள் திரண்டனர். இவர்கள் வந்த வாகனங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகம் வரை, சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டன. பின், காமராஜர் சிலையில் இருந்து கூட்டம் நடைபெறும் இடம் வரை, பேரணி நடந்தது.

இதற்காக, பேரணி துவங்கும் இடமான காமராஜர் சிலை அருகில், தொண்டர்கள் காலை முதல் கூடினர். இதனால், திருத்தணியில் இருந்து, சென்னை வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையில் நின்றன.பேரணி துவங்கியதும் போலீசார், காமராஜர் சிலையில் இருந்து, சி.வி.நாயுடுசாலை-நேதாஜி சாலை சந்திப்பு வரை, ஒரு வழியில் போக்குவரத்தை நிறுத்தினர். பேரணிக்காக, சாலையின் இருபுறமும், "கட் அவுட்'கள் வைக்கப்பட்டிருந்தன.

பேரணி முடிந்ததும் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், ஒரே நேரத்தில் செல்லத் துவங்கியதால், நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. போலீசார் எவ்வளவு முயன்றும் போக்குவரத்தை சீர்படுத்த முடியவில்லை; வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன.ஏற்கனவே பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால், காமராஜர் சிலையில் இருந்து, ஆயில் மில் பஸ் நிறுத்தம் வரை, ஜே.என்.சாலையில், ஆங்காங்கே ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தினசரி இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், நேற்று ஆளுங்கட்சியினரால், கடும் நெரிசல் ஏற்பட்டது.இதனால், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, ஆயில் மில் நிறுத்தம் வரை, 3 கி.மீ., தூரத்தைக் கடக்க, 2 மணி நேரம் ஆனது. காலை நேரத்தில் ஏற்பட்ட நெரிசலால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samir - Trichy,இந்தியா
16-ஆக-201201:22:13 IST Report Abuse
Samir ஆளும் கட்சிஎன்றலே &39ஆளுவதற்கு&39 தானே. நாட்டை அல்ல. &39மக்களை&39. அதுவும் மம்மியுடைய ஆட்சி என்றால் கேட்கவா வேணும். மக்களுக்கு எப்படியெல்லாம் தொல்லை கொடுக்க முடியும் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
15-ஆக-201217:51:38 IST Report Abuse
ganapathy நீதி ஆளுக்கு ஆள் வேறு படகூடாது. முட்டாள்களின் கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
15-ஆக-201214:51:03 IST Report Abuse
maran வேலை இல்லாதவர்களே............உங்களுக்குத்தான் ஒன்றும் இல்லை ......உழைத்து வாழ நினைக்கும் மக்களையாவது ஏன் இடையூறு செய்றிங்க ...?போராட்டம் என சில பன்னிகளும் ,பேரணி என பல பன்னிகளும் நாட்டை சோம்பேறிகளாக்கி விட்ட கட்சிகளை தூர என்று எரிவார்களோ அன்று தான் உழைக்கும் மக்களுக்கு விடிவு ......நடக்குமா ?
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
15-ஆக-201208:34:27 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy அமெரிக்காவில போய் ஒழுங்கா வேலைய பாருங்க முடிஞ்சா இங்க வந்து குப்பை கொட்டுங்க பார்க்கலாம் அங்க போய் ஒபமவையோ இல்லைனா அந்த அரசாங்கத்தையோ கமெண்ட் அடிங்க பார்க்கலாம்? உடனே pack up தான் உங்களுக்கெல்லாம் எங்கள் நாட்டையோ அல்லது எங்கள் தலைவியையோ allathu எங்கள் ஆட்சியையோ கமெண்ட் அடிக்க யோகிதை இல்லை போய் ஒழுங்க ரெண்டு மூணு பார்ட் டைம் வேலையை பார் கலைஞர்னு அடைமொழி பேர்ல வைச்சுண்டு இந்த ஆட்சியை கமெண்ட் அடிக்காதே இந்த ஒன்றரை ஆண்டில் எதாவது மாநாடு நடத்தினார இல்லை ஊர் ஊரா நலத்திட்டங்கள் விழா nadathi அரசு பணத்தை வேஸ்ட் செய்தாரா? எங்கள் தலைவி இப்போது நடத்தும் ஆட்சி மக்களாட்சி நீ எங்கே போயிருந்தாய் அந்த காட்டாச்சி நடந்த போது? ஏதோ ஒரு ஊர்வலம் 2 மணிநேரம் டிராபிக் ஜாம் நடந்ததுக்கு கூப்பாடு போடும் நீங்கள் எங்கே போனீர்கள் இத்தனை ஆண்டுகள்? இங்கே இர்ருக்கரவரைக்கும் நம் நாட்டை பற்றி துளிகூட தெரியாத உனக்கெல்லாம் அங்கே போனபிறகு யநோதயம் வருதோ? என்னோட ஒரே மேடைல விவாதிக்க ரெடியா புட்டு புட்டு வச்சுடுவேன் நீ போயிருக்கிற இடத்துல என்ன எல்லாம் நடக்குதுன்னு எங்கள் தலைவிக்கு theriyum எப்படி ஆட்சிசெயயனும்னு? நீதான் எருமை கோர்ட்ல கண்டிஷன் போடலேன்னா டெசோ மாநாடால சென்னை என்ன கதி ஆகிருக்கும் தெரியுமா உனக்கு? என்ன அருமையான strategy ? இதே கண்டிஷன் போலீஸ் போட்டிருந்தால் கூப்பாடும் ஒப்பாரியும் மறியல் என்ன வசை பாடுதல் என்ன? உனக்கெல்லாம் எங்கள் ஆட்சியை பற்றி எழுத உரிமையில்லை சும்மா வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு எழுதாதே தப்புனா சுட்டிகாட்டு ஆனா உன்னோட முகம் தெளிவானதா இருக்கணும் எனக்கு எல்லாரும் சரி சமம் ஆனா இந்த முறை நாங்க பார்குற தலைவி முற்றிலும் மாறுபட்ட அரசியல்வாதி நிச்சயம் இவங்கள நம்பி தமிழ்நாடு இருக்கு மத்தியில ஆட்சில இவங்க Kai ஓங்கட்டும் பின்பு வா தமிழ்நாட்டுக்கு நம்மோட ஆட்சி அங்கு நடக்கணும்பார் தமிழனின் எதிர்காலத்தை
Rate this:
Share this comment
Cancel
K Jagatheesan - Vellore,இந்தியா
15-ஆக-201206:35:20 IST Report Abuse
K Jagatheesan அப்படி போடு...
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
15-ஆக-201206:10:26 IST Report Abuse
Thangairaja Y M C A மைதானத்துக்கு போக்குவரத்து பிரச்சினை ஏற்படுமென்று சொல்லி தான் டெசோவை தடை செய்ய சொன்னார்கள். ஹைகோர்ட் நம்பிக்கைபடி அங்கு பிரச்சினை ஏதுமில்லை. ஆளும்கட்சின்னா இப்படி பிரச்சினை ஏற்படுத்தலாம் போல, காவல்துறை கண்ணை மூடிக்கிட்டிருக்கு. இப்போதைய டி ஜி பி மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Thirunavukkarasu Uthayakumar - Al Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-201202:23:50 IST Report Abuse
Thirunavukkarasu Uthayakumar மருத்துவ அவசர ஊர்தியை வட்டமிட்டு காட்டவில்லையே ஏன்???
Rate this:
Share this comment
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
15-ஆக-201203:27:11 IST Report Abuse
குஞ்சுமணி சென்னைஇது எதோ சினிமா சூட்டிங் அதான் வட்டம் போட்டு காட்டல...
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
15-ஆக-201210:33:57 IST Report Abuse
மதுரை விருமாண்டிஇது தான் அல்லக்கைகளில் ஆர்ப்பாட்டம் ஆச்சே... அடி நொறுக்கி விடுவார்களோ என்ற கலக்கம் தான்......
Rate this:
Share this comment
Cancel
Akilan - washington, DC,யூ.எஸ்.ஏ
15-ஆக-201201:31:32 IST Report Abuse
Akilan நீங்க இப்படியே போனீர்கள் ஆனால் திமுக இல்லை, பாமாக வைவிட படு கேவலமாக அடுத்த தேர்தலில் தோற்று போவீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்?? உங்களுக்கு கூட்டம், பேரணி நடத்த நடு ரோடுதான் கிடைத்ததா? அப்படி எங்காவது ஊருக்கு ஒதுக்குபுறமாக போய் ஓடுங்கள், கத்துங்கள், கும்மி அடியுங்கள், எக்கேடு கேட்டாவது போங்கள்... உங்களால் ஒரு நயா பைசாவிற்கு மக்களுக்கு புரியோஜனம் இல்லை என்றாலும் அவர்களுக்கு உபத்திரவம் தராமல் இருங்கள் அதுவே போதும் உங்களால் அவதிப்பட்ட ஒவ்வொருவரும் உங்களையும், உங்கள் தலைவரையும் chennai செந்தமிழால் திட்டி தீர்ப்பர்களே என்பது உங்களுக்கு தெரியாதா.....எருமைகள் தான் அப்படி இருக்கும்...நீங்கள் மனிதர்கள் அல்லவா....அது என்னமோ தெரியவில்லை நாய்கள் அல்லது கழுதைகள் வாலில் பட்டாசு சரத்தை கட்டி கொளுத்தி விட்டால் எப்படி தறிக்கெட்டு ஓடுமோ அது போல் தான் உங்கள் கார்களில் கட்சி கொடி கட்டி விட்டால் போதும்....நீங்கள் எப்பொழுது ஆறறிவு படைத்த மனிதர்கள் என்பதை நிரூபிக்க போகிறீர்கள் மக்கள் முட்டாள்கள் இல்லை...உங்களின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்....மரண அடி விழும் முன் விழித்து கொள்ளுங்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Rajan - jeddah,சவுதி அரேபியா
15-ஆக-201201:18:27 IST Report Abuse
Rajan தினமலரா? கொக்கா? அதுக்குன்னு இம்புட்டு நடுநிலையா? தினமலர்ல தலைப்ப பாத்ததுக்கே கண்ண கட்டுதுடா சாமி.....
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
15-ஆக-201207:52:55 IST Report Abuse
villupuram jeevithanகருணா கூட்டத்தினரின் தில்லு முல்லுகளை வெளிப் படுத்தினால், அதிமுகவுக்கு ஆதரவு என்று நீங்கள் நினைப்பதால் தான் இந்த ஆச்சரியம் டீகடை பகுதி படியுங்கள், தற்போதுள்ள ஆட்சியினரின் குறைகளை காண....
Rate this:
Share this comment
Cancel
Rajan - jeddah,சவுதி அரேபியா
15-ஆக-201201:10:32 IST Report Abuse
Rajan என்ன? சார் பண்றது காசு கொடுத்தாலும் மக்கள் வரமாட்டேங்கறாங்க. பேரணி என்பது தொண்டர்களை முன்னிருத்தினால் தோல்வி அடையும் என்பது அம்மாவுக்கு தெரியாதா என்ன? பேரணி என்பதே நாங்க நெடுஞ்சாலை பயணிகளை நம்பித்தான் நடத்துறதே ஒரு கல் இரண்டு மாங்காய் என்னகொடும சார் இது. இன்னுமா புரியல? காசும் கொடுக்கவேண்டாம் கூட்டமும் சேக்கணும் அதன் சார்........... one stone two mango
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை